சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government assassinates six of its own citizens in bombing raid in Syria

பிரெஞ்சு அரசாங்கம் சிரியா மீதான குண்டுவீச்சில் அதன் சொந்த குடிமக்களில் ஆறு பேரைப் படுகொலை செய்துள்ளது

By Stéphane Hugues
13 October 2015

Use this version to printSend feedback

சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) போராளிகள் குழுக்களின் பயிற்சி முகாம் மீது கடந்த வாரம் பிரான்ஸ் நடத்திய ஒரு குண்டுவீச்சில், மரண தண்டனைக்கு தடைவிதிக்கும் பிரெஞ்சு அரசியலமைப்பை அப்பட்டமாக மீறி, அது குறைந்தபட்சம் அதன் ஆறு குடிமக்கள் மீது நீதிநெறிமுறைகளுக்கு புறம்பான படுகொலையை நடத்தியுள்ளது.

கடந்த வியாழனன்று இரவு 11 மணிக்கு, இரண்டு பிரெஞ்சு ரஃபால் போர்விமான குழு IS கட்டுப்பாட்டிலுள்ள சிரியா பகுதியின் தலைநகரான ரக்காவிற்கு ஐந்து கிலோமீட்டர் தென்மேற்கில் உள்ள ISIS பயிற்சி முகாம் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த பிரெஞ்சு இளைஞர்கள் 100 ஏனைய வெளிநாட்டவர்களோடு சேர்ந்து அம்முகாமில் குற்றகரமாக பயிற்சி எடுத்து வந்ததாக கூறப்பட்டது. அந்த விமானங்கள் 250 கிலோ எடையுள்ள GPS-திறன்கொண்ட நுட்பமான குண்டுகளை அம்முகாம் மீது வீசின. இது ISIS பயிற்சி முகாம்கள் மீது வீசப்பட்ட சமீபத்திய பிரெஞ்சு குண்டுவீச்சு தாக்குதலாகும், இதற்கு முன்னர் செப்டம்பர் 27 இல் Deir Ezzor அருகில் மற்றொரு முகாம் மீதும் அது தாக்குதல் நடத்தியிருந்தது.

அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்தோ, அம்முகாமில் இருந்த நூற்றுக் கணக்கானவர்களில் காயப்பட்டவர்கள் குறித்தோ அல்லது அந்த இளைஞர்களைக் குறித்தோ ஒரு மதிப்பீட்டை அரசாங்கம் வெளியிடவில்லை. அதற்கு முந்தைய தாக்குதலில் 12 இராணுவ சிறுவர்கள் உள்ளடங்கலாக 30 இளைஞர்களுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவித்திருந்தன. இருப்பினும் சிரியாவிலுள்ள ஓர் அரசு-சாரா அமைப்பு குறிப்பிடுகையில், குறைந்தபட்சம் ஆறு பிரெஞ்சு குடிமக்கள் இச்சமீபத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக அறிவித்தது, இந்த எண்ணிக்கையை அநாமதேய பிரெஞ்சு அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியதுடன், அவர்களது அந்த குண்டுவீச்சு தாக்குதல் நனவுபூர்வமாக பிரெஞ்சு குடிமக்களைக் கொல்ல வடிவமைக்கப்பட்டிருந்ததையும் உறுதிப்படுத்தினர்.

அவர்கள் BFM-TVக்குத் தெரிவித்தனர், “பிரான்சிற்கு திரும்பி வந்து எங்களைத் தாக்குவதற்கு ஆயத்தப்படுத்தும், ISIS வெளிநாட்டு போராளிகளைக் கொண்ட ஒரு பயிற்சி முகாமை நாங்கள் இலக்கில் வைத்தோம். அவர்களில் பிரெஞ்சு குடிமக்களும் மற்றும் பிரெஞ்சு மொழி பேசுபவர்களும் இருந்தனர்".

முன்னர் பிடிபட்ட ISIS போராளிகளை விசாரித்ததில் ஏனைய வெளிநாட்டவர்களோடு, பிரெஞ்சு பிரஜைகளும் மற்றும் பிரெஞ்சு பேசும் இளைஞர்களும் இருப்பதை பிரெஞ்சு உளவுத்துறை கண்டறிந்திருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன. இவ்விதத்தில் அக்குண்டுவீச்சை தொடங்குவதற்கு முன்னரே அதில் பிரெஞ்சு பிரஜைகள் கொல்லப்படுவார்கள் என்பதை லு திரியோன், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் பிரெஞ்சு இராணுவம் அறிந்திருந்தனர்.

மத்திய கிழக்கில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் குறிப்பிடுகையில், பிரெஞ்சு குடிமக்களையும் அத்துடன் எவரொருவரையும் கொல்வதற்கு பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்திற்கு உரிமை இருப்பதாக தெளிவுபடுத்தினார். நடத்தப்பட்ட அந்த குண்டுவீச்சுக்களைக் குறித்து ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து பேசுகையில், "என்ன மூலத்தை கொண்டவர்களாக இருந்தாலும், எந்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்" அம்முகாமில் இருந்தவர்களைக் கொல்வதே அவற்றின் நோக்கமாக இருந்தன என்று அவர் வாதிட்டார். “நாங்கள் அவர்களது கடவுச்சீட்டைப் பொறுத்து இந்த அல்லது அந்த நபரை இலக்கில் வைக்கவில்லை. பிரான்ஸ் மீது பயங்கரவாத தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்யும் அனைவரையும் நாங்கள் தாக்கினோம்,” என்றார்.

சிரியாவில் IS இல் பயிற்சி பெற்றவர்கள் பிரான்சிற்குத் திரும்பி வந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அதன் “தற்காப்புக்கான" உரிமையைக் காட்டி அதன் சட்டவிரோத படுகொலையை நியாயப்படுத்த முயன்றது.

இது ஒரு வஞ்சகமான மற்றும் ஜனநாயக-விரோத முன்னுதாரணத்தை ஸ்தாபிக்கிறது: அதாவது சந்தேகத்திற்குரியவர் எதிர்காலத்தில் குற்றம் புரியலாம் என்று அது நம்புகிறது என்ற வலியுறுத்தலுக்கு மேலதிகமாக வேறெதுவுமின்றி, குற்றம் செய்திராத ஆனால் குற்றம் செய்யக்கூடியவர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்கூட்டியே ஒருவரைத் தண்டிக்க அரசிற்கு உரிமை இருப்பதாக அது ஸ்தாபிக்கிறது.

இந்த படுகொலைக்கு ஹோலாண்ட் தனிப்பட்டரீதியில் ஒப்புதல் வழங்கியுள்ளார் என ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைப் போலவே, ஹோலாண்டும் ஒரு "கொலைப்பட்டியலை" கொண்டுள்ளார் என்பது சமீபத்தில் வெளியானது, அத்தகைய கொலைப்பட்டியல் குறித்து அவர் லு திரியோன் மற்றும் ஏனைய ஒருசில உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகளுடன் மட்டுமே கலந்துரையாடுகிறார். பிரான்சின் சட்டவிரோத அரசு படுகொலை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, கடந்த காலத்தில் நடந்தவற்றிற்கு கூட, ஹோலாண்ட் எந்தவித விளக்கமோ அல்லது நியாயப்பாடோ பகிரங்கமாக வழங்கவில்லை.

அனைத்திற்கும் மேலாக சிரியாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டுவீச்சு, வெளிநாட்டவர்களோடு சேர்ந்து பிரெஞ்சு குடிமக்களும் "கொலை பட்டியலில்" வைக்கப்படுவார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இது, எந்த பொறுப்பேற்பும் இன்றி, துல்லியமாக குடிமக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை அனுமதிக்கிறது மற்றும் அவற்றை ஒழித்துக்கட்ட பிரெஞ்சு இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்கு உத்தரவிடுகிறது.

அரசு சட்டவிரோதத் தன்மைக்குள் பிரான்ஸ் சரிவதென்பது, சர்வதேச அளவில், பண்டைய ஜனநாயக பாரம்பரியங்கள் நிலவும் ஏகாதிபத்திய நாடுகளிலேயே கூட, அடிப்படை ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. தங்களின் சொந்த குடிமக்களையே நீதிமுறைக்கு அப்பாற்பட்டு படுகொலை செய்ய அதற்கு உரிமை இருப்பதாக பகிரங்கமாக வலியுறுத்தும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் பிரான்ஸூம் இணைகிறது—அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 2011 இல் அமெரிக்க பிரஜையான அன்வர் அல்-அவ்லாக்கியின் டிரோன் படுகொலைக்கு உத்தரவிட்டார், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் ரக்காவில் இரண்டு பிரிட்டிஷ் குடிமக்களைப் பிரிட்டிஷ் டிரோன்கள் படுகொலை செய்திருப்பதாக கடந்த மாதம் அறிவித்தார்.

அரசு படுகொலைகளை சோசலிஸ்ட் கட்சி முழுமூச்சாக ஆதரிப்பதென்பது, பிரெஞ்சு அரசியலில் ஒரு மிகப் பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது. அல்ஜீரிய சுதந்திரத்திற்கு எதிரான பிரான்சின் காலனித்துவ போரை எதிர்த்ததற்காக 1957 இல் Maurice Audin ஐ படுகொலை செய்ததைப் போல, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலத்தில் பிரெஞ்சு குடிமக்களைக் நீதிமுறைக்கு அப்பாற்பட்டு பிரெஞ்சு அரசு படுகொலை செய்துள்ள போதினும், இது எப்போதும் மறுக்கப்பட்டும், மூடிமறைக்கப்பட்டும் வந்துள்ளது. பிரெஞ்சு சிப்பாய்கள் Audin ஐ சித்திரவதை செய்து படுகொலை செய்தமை, டிசம்பர் 2013 இல் துணை இராணுவப்படை வீரரும் மற்றும் சித்திரவதையாளருமான தளபதி Paul Aussaresses இறந்த பின்னர் அவரது கோப்புகளைத் திறந்த போது, கடந்த ஆண்டு தான் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

சோசலிஸ்ட் கட்சி இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடான, வழக்கு விசாரணையின்றி பிரெஞ்சு குடிமக்களைப் படுகொலை செய்வதற்கான அதன் உரிமை, கடைசியாக நாஜி-ஆக்கிரமிப்பு பிரான்சில் பாசிச விச்சி ஆட்சியின் இராணுவம் பிரெஞ்சு எதிர்ப்பு போராளிகளை வேட்டையாடிய போதுதான், பிரெஞ்சு அரசு பகிரங்கமாக வலியுறுத்தி இருந்தது.

இந்த பரந்த அரசியல் மாற்றம் முற்றிலும் பாதுகாப்பு காரணங்களால் உந்தப்பட்டிருப்பதாக —அதாவது, சிரியாவில் உள்ள குரோதமான இஸ்லாமிய போராளிகள் பிரான்சில் நடத்தக்கூடிய பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதற்கு அது அக்கறை கொண்டிருப்பதாலேயே சோசலிஸ்ட் கட்சி முழுமையாக அரசு படுகொலையில் தங்கியுள்ளது என்று— சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் வாதிடுவது ஒரு அரசியல் பொய்யாகும். அது எண்ணற்ற முரண்பாடுகளால் உந்தப்பட்டுள்ளது.

முதலாவதாக உண்மையில் பிரான்ஸ், சிரியாவிலுள்ள இஸ்லாமியவாத எதிர்ப்பு போராளிகள் குழுக்களை ஆதரிக்கிறது, அவர்கள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சியை அழிக்க முனையும் சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைக்கு இணங்க சண்டையிட்டு வருகிறார்கள். சிரியா அரசாங்கத்தை மாற்றுவதற்கும் மற்றும் ISISக்கும் சவூதி அரேபியா போன்ற முக்கிய பிரெஞ்சு கூட்டாளிகளால் நிதியுதவி வழங்கப்பட்ட போது 2012 இல் ஹோலாண்ட் தான் பகிரங்கமாக இஸ்லாமியவாத எதிர்ப்பை அங்கீகரித்தார். பிரெஞ்சு உளவுத்துறை முகமைகளின் கண்காணிப்பின் கீழ், நூற்றுக் கணக்கான பிரெஞ்சுவாசிகள் சிரியாவிற்குள் பயணித்து ISISஆல் சேர்க்கப்பட்டார்கள்.

இஸ்லாமிய பயிற்சி வலையமைப்புகளில் செயலூக்கத்துடன் இருந்த பிரெஞ்சு போராளிகள் ஜனவரியில் பாரீஸில் சார்லி ஹெப்டோ மீதும் மற்றும் ஹைபர் காசெர் மீதும் தாக்குதல் நடத்தியதற்கு பின்னரும் கூட, சோசலிஸ்ட் கட்சி இஸ்லாமியவாத பயங்கரவாத நடவடிக்கையாளர்களை அதன் காலாட்படையினராக பயன்படுத்தி சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர் நடத்தும் அதன் கொள்கையைப் பேணி வந்தது.

அனைத்திற்கும் மேலாக, சிரியாவில் சோசலிஸ்ட் கட்சியால் அரசு படுகொலைக்காக இலக்கில் வைக்கப்பட்ட அதே பிரெஞ்சு இஸ்லாமியவாத போராளிகளை நியமித்துவரும் மற்றும் ஆயுதங்கள் வழங்கிவரும், பாதியளவில்-இரகசியமாக இயங்கிவரும் வலையமைப்புகள் உள்நாட்டில் பிரெஞ்சு அரசின் பாதுகாப்பைப் பெற்றுள்ளன. ஜனவரி தாக்குதல்தாரிகளில் குறைந்தபட்சம் ஒருவருக்கு, அமெடி குலிபாலிக்கு, ஆயுதங்கள் வழங்கிய பிரெஞ்சு பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிஸ் உளவாளிகள் மீது உத்தியோகபூர்வ விசாரணை நடத்துவதைத் தடுக்க, அரசு இரகசியங்கள் காக்கும் தனிச்சலுகைகளை சோசலிஸ்ட் கட்சி கையிலெடுத்துள்ளது கடந்த மாதம் வெளியானது.

பிரெஞ்சு குடிமக்கள் மீதான அரசு படுகொலைக் கொள்கையை சோசலிஸ்ட் கட்சி முன்னெடுக்கிறதென்றால், அது சிரிய போரிலிருந்து எழும் இஸ்லாமிய பயங்கரவாத அபாயத்தை எதிர்கொள்வதற்கு இருக்கும் ஒரேயொரு வழி என்பதற்காக மட்டுமல்ல. மாறாக பீதியூட்டும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளைப் பிரான்சில் திணிப்பதை தீவிரப்படுத்துவதற்கான ஒரு போலிக்காரணமாக, சிரியாவில் அதன் பொறுப்பற்ற போர்களால் தூண்டிவிடப்பட்டு தீவிரமடைந்துவரும் சீரழிவுகளை பாரீஸ் கைப்பற்றியுள்ளது.

இறுதியாக இந்த தாக்குதலின் பிரதான இலக்கு ISIS இணைப்புகொண்ட இஸ்லாமியவாதிகள் கிடையாது, உண்மையில் அவர்கள் பிரெஞ்சு வெளியுறவு கொள்கையின் உடைமைகளாக உள்ளனர், மாறாக சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன கொள்கைகளுக்கு மக்களின் எதிர்ப்பு, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்குள் உள்ள எதிர்ப்பே பிரதான இலக்காகும். இக்கொள்கைகள் ஹோலாண்டை இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரான்சின் மிக செல்வாக்கிழந்த ஜனாதிபதியாக ஆக்கியுள்ளன. அதனாலேயே கட்டுப்படுத்தவியலாத பிரான்சிற்குள் அதிகரித்துவரும் வர்க்க பதட்டங்களை அது முகங்கொடுத்துள்ளதுடன், அதற்கு எந்த முற்போக்கு தீர்வுகளும் இல்லாமல், சோசலிஸ்ட் கட்சி முன்பினும் அதிகமாக மக்களை அச்சுறுத்த மற்றும் பீதியூட்ட வடிவமைக்கப்பட்ட பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை சார்ந்துள்ளது.