சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A crisis of global dimensions

உலகளாவிய பரிமாணங்களில் ஒரு நெருக்கடி

Joseph Kishore
9 October 2015

Use this version to printSend feedback

2015 இன் தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு முன்னோக்கு கட்டுரையில், உலக சோசலிச வலைத் தளம் உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையை அதிர செய்துவரும் நெருக்கடிகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறித்து குறிப்பிட்டிருந்தது. “மிகப்பெரியபுவிசார் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் வெடிப்பதற்கு இடைப்பட்ட "சமாதான" காலங்கள் மிகவும் இடைவெளி குறைந்து போயுள்ளன, அவற்றை இடைவெளிகளாகவே கூட அரிதாக தான் கூற முடியும்,” என்று நாம் எழுதினோம். “மறுபுறம், நெருக்கடிகள் தனித்தனி காலகட்டங்களாக தென்படவில்லை, மாறாக கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சமகாலத்திய யதார்த்தத்தின் நிரந்தர அம்சங்களாக காணப்படுகின்றன.”

உலகம் 2015 இன் இறுதி மாதங்களுக்குள் நுழைகின்ற இந்தவேளையில், இடைவெளி மட்டுமல்ல, மாறாக நெருக்கடிகளின் தீவிரத்தன்மையும் ஒரு புதிய திரும்பும் புள்ளியை அடைந்துள்ளது. புரட்சிகர தலைமையின் நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய அவசியம் முன்பினும் அதி-அவசரமாக முன்வந்துள்ளது.

ஏழாண்டுகளுக்கு முன்னர் மேற்பரப்பில் வெடித்த முரண்பாடுகளிலேயே உலகளாவிய பொருளாதாரம் இன்னமும் சிக்குண்டுள்ளது. வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு விடையிறுத்த ஆளும் வர்க்கத்தின் கொள்கை ஒரு முட்டுச்சந்தை எட்டியுள்ளது. நிதியியல் சந்தைகளுக்குள் வெள்ளமென பணத்தைப் பாய்ச்சியமை சொத்துக் குமிழிகளை ஊதிப்பெருக்க செய்துள்ளதுடன், அதேவேளையில் அது எவ்விதத்திலும் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி இருக்கவில்லை. இருப்பினும் பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளின் மலிவு பணக் கொள்கைக்குக் கடிவாளமிடும் எந்தவொரு நகர்வும், 2008 இல் வெடித்ததை விட இன்னும் அதிக கடுமையான ஒரு நிதியியல் ஸ்தம்பிப்பைத் தூண்டிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

இவ்வாரம் சர்வதேச நாணய நிதியம் 2015 க்கான அதன் உலகளாவிய வளர்ச்சி முன்மதிப்பீட்டை வெறும் 3.1 சதவீதமாக வெட்டியது, இது 2009க்குப் பிந்தைய மிக குறைவான வளர்ச்சி விகிதமாகும். “உலக பொருளாதாரம் போருக்குப் பிந்தைய அதன் பரந்துபட்ட மற்றும் ஆழ்ந்த மந்தநிலைமையிலிருந்து எழுந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், துரிதமான மற்றும் ஒருமித்த உலகளாவிய விரிவாக்கத்திற்குத் திரும்புகிறது என்பது வெறும் நம்பிக்கையற்றதாகவே உள்ளது,” என்று சர்வதேச நாணய நிதிய பொருளாதார ஆலோசகர் மௌரீஸ் ஓப்ஸ்பெல்ட் (Maurice Obstfeld) அறிவித்தார்.

இது குறிப்பிடத்தக்களவிற்கு குறைமதிப்பீட்டு கருத்தாகும். மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலேயே, பலமான பரந்துபட்ட வேலைவாய்ப்பின்மை மற்றும் ஸ்தம்பித்த கூலிகள் அல்லது வீழ்ச்சியடைந்துவரும் கூலிகள் நிலவுகின்ற நிலையில், பொருளாதார வளர்ச்சி மந்தமாகி உள்ளது. இந்நிலைமை "எழுச்சிபெற்றுவரும் சந்தைகள்" என்றழைக்கப்படுவதில் இன்னும் மோசமாக உள்ளது.

ஜனாதிபதி கிளிண்டனின் கீழ் அமெரிக்க கருவூலத்துறை செயலராகவிருந்த லோரன்ஸ் சம்மர்ஸ், வியாழனன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியிட்ட ஒரு கருத்துரையில் ஆளும் வர்க்கங்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடியைச் சுட்டிக்காட்டினார். “உலகளாவிய பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது" என்ற தலைப்பின் கீழ், சம்மர்ஸ் எழுதுகையில், அபாயங்கள் "2008 லெஹ்மன் பிரதர்ஸ் திவால்நிலைமைக்குப் பிந்தைய எந்த நேரத்திலும் இருந்ததை விட மிகவும் பயங்கரமாக உள்ளன" என்று குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து எழுதினார்: “நீடித்த மந்தநிலை பிரச்சினை அதாவது மிக மிக இலகுவான நாணய கொள்கைகள் நிலவும் போதே கூட திருப்திகரமான விகிதங்களுக்கு உயரவியலாத தொழில்துறை உலகினது இலாயக்கற்றத்தன்மை சீனாவிலிருந்து தொடங்கி, மிகப் பெரியளவில் எழுச்சிபெற்றுவரும் சந்தைகளது பிரச்சினைகளோடு சேர்ந்து, படுமோசமாக அதிகரித்து வருகிறது.”

உலக பொருளாதாரம் "ஓர் உலகளவிலான வக்கிர சுழற்சியை" முகங்கொடுத்துள்ளது, இதில் "தொழில்துறை நாடுகளின் வளர்ச்சி குறைவானது, எழுச்சிபெற்றுவரும் சந்தைகளைப் பாதிக்கிறது, அவ்விதத்தில் மேற்கின் வளர்ச்சியை மேற்கொண்டும் மெதுவாக்குகிறது,” என்று அறிவித்த சம்மர்ஸ், தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஒரேசீரான வேகத்திற்கு கூடுதலாக மேலுயரவியலாத தொழில்துறைமயப்பட்ட நாடுகள், ஓர் உலகளாவிய எதிர்மறை அதிர்வைத் தாங்கவியலாது உள்ளன,” என்றார்.

பொருளாதார நெருக்கடி உடன்நிகழ்வாக தீவிரமடைந்துள்ளதுடன், அனைத்திற்கும் மேலாக ஈவிரக்கமின்றி பின்தொடர்ந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான முனைவால் உந்தப்பட்டு, அது அதிகரித்த புவிசார் அரசியல் நெருக்கடிகளாலும் மற்றும் சர்வதேச மோதல்களாலும் சூழப்பட்டுள்ளது. ஒரு கால் நூற்றாண்டு காலமாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் முன்பில்லா அளவில் பரந்த நிலப்பகுதிகளில் முடிவில்லா போர்களில் ஈடுபட்டுள்ளது. இரத்த ஆறு ஓடும் வன்முறையைக் கொண்டு மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை ஒழுங்கமைக்க, அமெரிக்க நிதியியல் பிரபுத்துவத்தால் பாவிக்கப்பட்ட சித்தாந்தரீதியிலான வடிவமைப்பான பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற முழக்கத்தின் கீழ், கடந்த பதினைந்து ஆண்டுகளாக இராணுவ தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, யேமன் என ஒரு நாடு மாற்றி ஒரு நாடு ஆட்சி மாற்றத்திற்காகவோ அல்லது அடிபணிய செய்வதற்காகவோ இலக்கில் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய போர்களால் தோற்றுவிக்கப்பட்ட மனிதவர்க்கப் படுகொலை, மத்திய கிழக்கு முழுவதிலும் நடைமுறையில் அரசு வடிவங்களே குலைவதற்கு இட்டுச் சென்றுள்ளதுடன், நிராதரவான அகதிகளை வெள்ளமென உருவாக்கியுள்ளது, ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களோ இவர்கள் மீது வன்முறை மற்றும் ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுத்துள்ளது.

இங்கேயும் கூட, நெருக்கடி ஒரு உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. மத்திய கிழக்கின் உள்நாட்டு போர்கள் அதிகரித்தளவில் பிரதான சக்திகளுக்கு இடையிலான ஒரு நேரடி மோதலுக்கு இட்டு சென்று கொண்டிருக்கின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு இவ்வாரம் அறிவிக்கையில், சிரியா மோதல் "ஒரு முழு போராக, நமது பிராந்தியங்களையும்" அதாவது ஐரோப்பாவை, "பாதிக்கக்கூடிய ஒரு போராக" பரவும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தார்.

அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களால் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவதற்கு இலக்கில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை, கடந்த வாரங்களில் ரஷ்ய ஆளும் வர்க்கம் மிக பகிரங்கமாக ஆதரித்ததன் மூலமாக சிரியாவில் அதன் நலன்களைப் பாதுகாக்க முயன்றுள்ளது. அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் அதிதீவிர விரோதத்துடன் அதற்கு விடையிறுத்துள்ளன.

வியாழனன்று புருசெல்ஸில் நேட்டோ பாதுகாப்புத்துறை மந்திரிமார் கூட்டம் ஒன்றில் பேசுகையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்டர், ரஷ்யாவினது நகர்வுகள் "மிகச் சரியாக தாக்குதல்கள் குறித்த அச்சத்தில் உள்ள ரஷ்யாவிற்கும் விளைவுகளைக் கொண்டிருக்கும். வரவிருக்கும் நாட்களில், ரஷ்யர்கள் உயிரிழப்புகளால் பாதிக்கப்பட இருக்கிறார்கள்,” என்று அச்சுறுத்தும்ரீதியில் பட்டவர்த்தனமாக எச்சரித்தார்.

ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா அதன் அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஆசியாவில் அதன் இராணுவ ஒத்திகைகளை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. ஊடக செய்திகளின்படி, அமெரிக்கா அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சீனா உரிமைகோரும் பிராந்திய கடல்எல்லைகளுக்குள் போர்கப்பல்களைக் கொண்டு செல்ல திட்டமிட்டு வருகிறது. இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) இறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நடக்கின்றன. அந்த உடன்படிக்கை குறிப்பாக அப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்க்கவும் மற்றும் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஏனைய ஆசிய பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒரு வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்பாட்டை முடிவு செய்தது.

உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்தும் ஒரே ஏகாதிபத்திய சக்தி அமெரிக்கா மட்டுமே அல்ல. தற்போது ஒபாமா நிர்வாகத்தின் ஊக்குவிப்புடன் சேர்ந்து, ஜப்பான் அதன் ஆயுத தொழில்துறையை விரிவாக்கி, மீள்இராணுவமயப்படுத்தி வருகிறது. ஜேர்மனி மீண்டுமொருமுறை ஐரோப்பிய கண்டத்தின் மீது அதன் மேலாதிக்க உரிமைகோரலை வலியுறுத்தி வருகிறது மற்றும் உலகளாவிய அபிலாஷைகளைக் கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலக போர்களில் அமெரிக்காவுடன் மோதலுக்கு வந்த ஜேர்மன் ஏகாதிபத்தியம், சிரியா, ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவில் அதன் சொந்த நலன்களைக் கொண்டுள்ளது.

பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் நெருக்கடியுடன் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் அதிதீவிர நெருக்கடியையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய அரசியல் அமைப்புகள், உடைந்து வருகின்றன அல்லது உருக்குலைந்து வருகின்றன. அமெரிக்காவில், பல்வேறு பில்லியனர்களுக்காக பேசுபவர்கள் மேலாளுமை கொண்டுள்ள ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே, இந்த அரசியல் அமைப்புமுறை அதிகரித்தளவில் செயலிழந்து போயுள்ளது.

ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபையின் தற்போதைய பெரும்பான்மை தலைவர் கெவின் மெக்கார்தே புதிய சபாநாயகர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து குழப்பத்திற்குள்ளானது. ஊடக செய்திகளின் படி, ஜனாதிபதி பதவிக்கு அடுத்து இரண்டாவது முக்கியமானதாக பார்க்கப்படும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க கூடியிருந்த பிரதிநிதிகள் "முற்றிலும் அதிர்ந்து" போயினர், கூட்டம் கலைந்தபோது சிலர் வெளியே கேட்கக்கூடியவாறு விம்மி அழுதனர்.

இந்த சகல நெருக்கடிகளும் மிகவும் ஆழமான வேறொன்றினது, அதாவது உலக முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடியினது, மேற்புறம் வெளிப்படும் வெளிப்பாடுகளாகும். இந்நெருக்கடி அதனோடு சேர்த்து உலக போர் அபாயத்தைக் கொண்டு வருவதுடன், காட்டுமிராண்டித்தனத்திற்குள் மூழ்குகிறது. அதேநேரத்தில் அது முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிவதற்கான புறநிலை அடித்தளத்தையும், அதாவது, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்க தீவிரப்பாட்டையும் தோற்றுவித்துள்ளது.

தசாப்தகால போர்கள், தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை சர்வதேச அளவில் பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நனவில் ஆழ்ந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளன. அடியில் நடந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்வுபோக்குகள் மேற்புறத்திற்கு உடைத்துக் கொண்டு வர தொடங்கியுள்ளன. அங்கே ஒவ்வொரு இடத்திலும் அமைதியின்மையும், சண்டையிடுவதற்கான விருப்பமும் அதிகரித்து வருகிறது.

நெருக்கடி காலக்கட்டம் ஒன்றில் தான், அரசியல் போக்குகளின் வர்க்க குணாம்சம் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. கிரீஸில், சிக்கன நடவடிக்கைக்கான எதிர்ப்பு இந்தாண்டின் தொடக்கத்தில் தீவிர இடது கூட்டணியை (சிரிசா) அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. அந்த அமைப்பு சகல விதத்திலும் போலி-சோசலிச மற்றும் போலி-இடது அமைப்புகளால் எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகவும் மற்றும் வங்கி-கட்டளைகளினால் வறுமைக்குட்படுத்தப்பட்ட கிரேக்க தொழிலாள வர்க்க மற்றும் இளைஞர்களுக்கு ஒரு மாற்றீடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

பத்து மாதங்களுக்குப் பின்னர், சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஒரு புதிய சுற்று ஐரோப்பிய ஒன்றிய ஆதரவிலான சிக்கன திட்டத்தைத் திணிக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை கொடுத்து வருகிறார். “இந்நாட்டிற்கு தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நம்பிக்கைகொண்டு" அரசாங்கத்தின் புதிய வரவுசெலவு திட்டத்தை அவர் வெளியிட்ட போது, இவ்வாரம் அவர் நாம் நமது இடுப்பு பட்டைகளை இறுக்க வேண்டியுள்ளது,” என்று அறிவித்தார். இதற்கிடையே தன்னைத்தானே "ஒழுங்குமுறையற்ற மார்க்சிஸ்ட்" என்று கூறிக்கொண்ட முன்னாள் சிரிசா நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ், மார்கரெட் தாட்சர் குறித்த அவரது புகழாரத்தை அறிவித்துள்ளார்.

நடுத்தர வர்க்கத்தின் மிகவும் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளுக்கான போலி-இடது பிரதிநிதிகள் கிரீஸில் சிக்கனத் திட்டத்திற்கு உடந்தையாளர்களாக அம்பலப்பட்டுள்ளார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளின் பாதுகாவலர்களாகவும் சேவையாற்றி உள்ளனர். சிரியாவில், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு மற்றும் இன்டர்நேஷனல் வியூபாயிண்ட் போன்ற குழுக்களும் மற்றும் பிரசுரங்களும் ஒரு பேரழிவுகரமான வகுப்புவாத உள்நாட்டு போரைத் தூண்டிவிடுவதன் மூலமாக அசாத் ஆட்சியைக் கீழே கொண்டு வரும் சிஐஏ முனைவுக்கு "மனித உரிமை" பற்றிய நியாயப்பாடுகளை வழங்கின. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிக வெறிபிடித்த இராணுவவாத கன்னைகள் கூறுவதையே அவர்களும் கூறிக்கொண்டு, அசாத்தைப் பதவியிலிருந்து நீக்க போதுமானளவிற்கு துரிதமாகவும் அல்லது ஆக்ரோஷமாகவும் செயல்படவில்லை என்பதற்காக ஒபாமா நிர்வாகத்தை விமர்சிக்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்கிற்கும் மற்றும் வேலைத்திட்டத்திற்கும், தொழிலாள வர்க்க போராட்டத்தின் மீள்எழுச்சிக்கும் இடையே அதிகரித்துவரும் ஒரு ஒன்றிணைப்பில் பிணைப்புகளில் தொடங்கி, ஓர் அரசியல் மறுஅணிசேர்க்கை நடக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் சுமத்திய மரணகதியிலான சுமையைப் புறக்கணிக்கவும் மற்றும் ஒரு சுயாதீனமான பாதையை எடுக்கவும் போராடிவருகிற வாகனத் தொழிலாளர்களது வளர்ந்துவரும் இயக்கத்தில் WSWS ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ளது. இது அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படல் மற்றும் அரசியல் நோக்குநிலை மாற்றத்திற்கு ஒரு முக்கிய அறிகுறியாகும்.

இந்த பரவிவரும் நெருக்கடியானது முதலாளித்துத்தின் வீழ்ச்சி முதிர்வடைந்திருப்பதற்கு ஓர் அறிகுறியாகும். எது மிக துரிதமாக அபிவிருத்தியடையும், காட்டிமிராண்டித்தனம் மற்றும் போருக்கான ஆளும் வர்க்கத்தின் முனைவா அல்லது உலக சோசலிச புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வா? என்பதே அடிப்படை கேள்வியாக உள்ளது.

இக்கேள்விக்கான பதில், மனிதயினத்தின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய கட்டத்தை திறந்துவிடும் விதத்தில் இருக்கப்போகிறது, புரட்சிகர தலைமையை, அதாவது, சோசலிச புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியமைப்பதன் ஊடாக தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச அரசியல் நனவின் அபிவிருத்தி இருக்க வேண்டும்.