சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The strange death of the antiwar movement

போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வினோத மரணம்

Bill Van Auken
14 October 2015

Use this version to printSend feedback

பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை, மனிதாபிமான தலையீடு மற்றும் "ஜனநாயகத்தை" முன்கொண்டுசெல்வது என்ற பெயரில் 14 ஆண்டுகளாக முடிவில்லா அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களை நடத்தியதற்குப் பின்னர், அமெரிக்க இராணுவவாத வெடிப்பால் மனித இனத்திற்கு முன்நிறுத்தப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் ஒருபோதும் இந்தளவிற்கு அப்பட்டமாக இருந்தது கிடையாது.

சிரியாவில், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு ஆதரவாக மற்றும் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு எதிராக ரஷ்யா தலையீடு செய்திருப்பதற்கு வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஆக்ரோஷமான எச்சரிக்கைகளோடும் மற்றும் மோதலுக்குள் புதிய ஆயுதங்களை உட்புகுத்தியும் விடையிறுத்துள்ளன. அப்போர் ஒரு பிராந்திய போர் என்பதிலிருந்து உலகின் இரண்டு மிகப் பெரிய அணுஆயுத சக்திகளை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தும் உலக மோதலாகவே கூட திரும்புவதற்கான சாத்தியக்கூறு குறித்து பரவலாக குறிப்பிடப்படுகின்றன. சிரியா மோதல் "ஒரு முழு போராக”, மேற்கு ஐரோப்பாவை அர்த்தப்படுத்தும் வகையில், "நமது பிராந்தியங்களையும் பாதிக்கும் ஒரு போர்" அபாயமாக முன்நிற்கிறதென பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட்கடந்த வாரம் எச்சரித்தார்.

ஆசியாவில் சீன வளர்ச்சிக்குச் சவால்விடுக்கும் நோக்கில் அதிகரித்தளவில் ஆத்திரமூட்டும் இராணுவ ஒத்திகை பயிற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது, அத்துடன் பெய்ஜிங் உரிமைகோரும் கடல்எல்லைகளுக்குள் அமெரிக்க போர்கப்பல்களை அனுப்ப உள்ளது.

ஜனாதிபதி பராக் ஒபாமா அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், முடிவுக்குக் கொண்டு வருவதாக சூளுரைத்திருந்த இரண்டு நவகாலனித்துவ போர்களிலும் அமெரிக்க துருப்புகள் இப்போதும் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. ஈராக்கிற்கு துருப்புகள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளன, அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் கைப்பாவை ஆப்கான் இராணுவம் தாலிபானின் குண்டூஸ் நகர தாக்குதல்களில் தோற்றுபோன நிலையில், அமெரிக்க படைகளை திரும்பபெறும் திட்டங்கள் கைவிடப்பட்டு வருகிறது.

இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க படைகள், குண்டூஸ் நகரிலிருந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவமனை மீது அமெரிக்க AC-130 ரக போர்விமானம் கொண்டு தாக்கி, மீண்டுமொருமுறை ஒரு போர் குற்றத்தை நடத்தியது, அதில் 22 மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் கொல்லப்பட்டனர்.

இப்பூமியிலுள்ள எல்லா மக்களைப் போலவே அமெரிக்க மக்களில் பாரிய பெரும்பான்மையினர், போரை எதிர்க்கின்றனர். இருப்பினும் இந்த ஆழ்ந்த உணர்வுகள் தற்போதைய அரசியலமைப்புக்குள் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு முன்னதாக, பெப்ரவரி 2003 இல் ஒரு பலமான பூகோள சக்தியாக எழுந்த பத்து மில்லியன் கணக்கான போர்-எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழவேயில்லை. மேலும் படையெடுப்புக்குப் பின்னர் நடந்த மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட போர்எதிர்ப்பு போராட்டங்களும் இல்லாது போய் நீண்டகாலமாகிவிட்டது.

இந்த போர்-எதிர்ப்பு இயக்கம் மறைந்து போனதை எவ்வாறு விளங்கப்படுத்துவது? இது உழைக்கும் மக்களிடையே போர் எதிர்ப்பு குறைந்து வருவதன் ஒரு பிரதிபலிப்பு அல்ல. மாறாக அத்தகைய போர் எதிர்ப்பு இயக்கங்களின் மரணத்திற்கு, அத்தகைய போராட்ட இயக்கங்களுக்கு முன்னர் தலைமை கொடுத்த போலி இடது அரசியல் போக்குகள் தம்மிடம் அவ்வாறான ஒன்று இல்லாதபோதிலும் தமது அரசியலை தீவிர ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு என்று காட்டிக்கொண்ட நடவடிக்கைகளின் மீது தான் காரணமாக காட்டமுடியும்.

அமெரிக்காவில் இத்தகைய போக்குகள், போர்எதிர்ப்பு உணர்வைத் திட்டமிட்டு, அமெரிக்க நிதியியல் மூலதனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜனநாயக கட்சிக்குப் பின்னால் திருப்பிவிட வேலை செய்தன. அவை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் போராட்டங்களைச் சிதைத்தன, பின்னர் ஒபாமா வெள்ளை மாளிகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒட்டுமொத்தமாக கைவிட்டுவிட்டன.

இது, அந்த அமெரிக்க ஜனாதிபதிக்கு அரசியல் ஒப்புதல் வழங்கும் ஒரு விடயம் மட்டுமல்ல, மாறாக, மிக முக்கியமாக, போலி-இடது போக்குகளின் ஓர் அரசியல் சம்பந்தமான விடயமுமாகும்.

இந்த குழுக்கள் பெரும்பாலும் 1960கள் மற்றும் 1970களில் வியட்நாம் போருக்கு எதிரான பாரிய போராட்டங்களிலிருந்து எழுந்தவையாகும், அந்த இயக்கம் நடுத்தர வர்க்க பிரிவுகளால் மேலாதிக்கம் பெற்றிருந்ததுடன், அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறப்பட்டதும் மற்றும் அமெரிக்காவில் கட்டாய இராணுவச்சேவை முடிவுக்கு வந்ததும் விரைவிலேயே பின்வாங்கின.

அவற்றின் அடுத்தடுத்த வலதுசாரி பரிணாமத்தை ஆளும் வர்க்கமும் கூட பின்தொடர்ந்தது. செழிப்பான மத்தியதட்டு அடுக்குகளின் சடரீதியிலான வர்க்க நலன்களில் திடமாக வேரூன்றியதாக அவர்களது அரசியல் மாறியிருந்தது. இத்தகைய சமூக அடுக்குகளின் தனிநபர் செல்வவளம், நிதியியல் ஒட்டுண்ணித்தன வளர்ச்சியின் விளைபொருளாக, பங்குச் சந்தை மற்றும் வீடு/நிலம் விலைகளோடு சேர்ந்து உயர்ந்தன. அது அவ்விதத்தில் அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய வெடிப்புடன் பிணைந்திருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த புதிய ஆதரவுத்தளம், 1990களில் யூகோஸ்லாவியாவை உடைத்த மேற்கினால்-தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு போர்களின் போது பால்கன்களில் ஏகாதிபத்திய தலையீட்டை ஆதரிக்க, “மனிதாபிமான உரிமைகள்" என்ற எரிச்சலூட்டும் பதாகையின் கீழ், இடதுகளின் பாரிய அடுக்குகள் திரும்பியதில் இருந்து வெளிப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவுக்கும், உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தாராளவாத அடுக்குகள், கல்வியாளர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றுக்கும் இணங்கிய விதத்தில், அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO), அதன் உள்நாட்டு கொள்கைகளில் ஒருவிதமான இடது சீர்திருத்தவாதத்தை முன்வைக்கிறது.

அதேவேளையில் அதன் வெளியுறவு கொள்கையில், அதன் வர்க்க இயல்பு மிகவும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இங்கே அது, இராணுவ தீவிரப்படுத்தலுக்கு மிக ஆக்ரோஷமாக அழுத்தமளித்துவரும் சிஐஏ, பெண்டகன் மற்றும் அரசு கன்னைகளுடன் புறநிலைரீதியாக அணிசேர்ந்து, போருக்காக மிகவும் வெறிபிடித்து வக்காலத்துவாங்குபவர்களில் ஒன்றாக உள்ளது.

பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் ஜேர்மன் இடது கட்சி போன்ற அமைப்புகளான அதன் ஐரோப்பிய சமதரப்பினரோடு சேர்ந்து, அது மனித உரிமைகள் எனும் போலிக்காரணத்தில் லிபியாவிலும் இப்போது சிரியாவிலும் ஆட்சி-மாற்றத்திற்கான ஏகாதிபத்திய போர்களை ஆதரித்துள்ளது. அது மத்திய கிழக்கில் உள்ள மிகவும் பிற்போக்குத்தனமான ஆட்சிகளான சவுதி அரேபியா, துருக்கி, கட்டாரும் மற்றும் அமெரிக்காவும் ஆதரித்துவரும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களது இராணுவ நடவடிக்கைகளை "புரட்சிகள்" என்று சித்தரிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. அதேபோல உக்ரேனில் வாஷிங்டனால் முடுக்கிவிடப்பட்ட மற்றும் பாசிசவாத குண்டர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கும் அதேபோன்ற விளக்கத்தை வழங்கியுள்ளது.

இந்த நோக்குநிலை பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் ஜேர்மன் இடது கட்சியில் திட்டவட்டமாக கூர்மையாக வெளிப்படுகிறது. கல்வியாளர் ஜில்பேர் அஷ்கார் NPAக்காக பேசுகையில், லிபிய இராணுவம் பெங்காசியின் கிழக்கத்திய நகரில் ஒரு படுகொலையை தொடங்குவதன் விளிம்பில் இருந்தது என்றும், ஓர் ஏகாதிபத்திய போர் மட்டுமே அதை தடுக்க முடியுமென்றும், எந்தவித புறநிலை அடித்தளமும் இன்றி வலியுறுத்தி, லிபியாவில் அமெரிக்க-நேட்டோ போர்களை நியாயப்படுத்தினார். “அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை ஏகாதிபத்திய-எதிர்ப்பு கோட்பாடுகளின் பெயரில் நீங்கள் எதிர்க்க முடியாது,” என்றவர் வலியுறுத்தினார். அவர் ஊக்குவித்த அந்த அமெரிக்க-நேட்டோ போரில் சுமார் 30,000 பேர் உயிரிழந்தார்கள்.

அஷ்கார் அதற்கடுத்து, நேரடியான ஏகாதிபத்திய தலையீட்டைக் கொண்டு வர மற்றும் அதற்கு எழும் மக்கள் எதிர்ப்பை ஒடுக்க, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு உளவுத்துறை உடைமைகளது ஒரு கலவையான சிரிய தேசிய கவுன்சில் (SNC) அதிகாரிகளுக்கு சிறந்த மூலோபாயங்களைக் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அவர்களைச் சந்தித்தார்.

ஓர் ஈராக்கிய போர் விமர்சகர் என்ற தனது வீண்பெருமைக்குரிய மதிப்பை லிபியாவில் போரை ஊக்குவிப்பதற்காக வியாபாரம் செய்த ஜூவான் கோல் போன்ற கல்வித்துறைசார் அயோக்கியர்களோடு சேர்ந்து, இந்த போக்குகள், அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களை சட்டபூர்வமாக்குவதில் மத்திய பங்கு வகித்தன.

ரஷ்யாவின் தலையீட்டை அடுத்து அதன் சிரிய கொள்கையில் ஒபாமா நிர்வாகம் ஆழமாக பிளவுபட்டிருந்த நிலைமைகளின் கீழ், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு பலமான இராணுவ தீவிரப்பாட்டின் தரப்பிற்கு வந்திருந்தது. நிர்வாகத்திற்குள் மிகவும் போர்வெறிகொண்ட கூறுபாடுகளில் ஒருவராக இருந்தவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சமந்தா பௌவர் என்பது ஒன்றும் தற்செயலானதல்ல. அவரது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கான "மனித உரிமை" நியாயப்பாடுகள், மிகக் கச்சிதமாக போலி-இடதின் அரசியல் உணர்வுகளோடு பொருந்தியிருந்தன.

அதன் Socialist Worker வலைத் தளத்தில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, போதுமானளவிற்கு ஒபாமா ஆக்ரோஷமாக இல்லை என்பதற்காக விமர்சனம் செய்கிறது. “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களிடமிருந்து வாக்குறுதி அளிக்கப்பட்ட இராணுவ உதவிகளில், விமானத்தகர்ப்பு குண்டுவீசிகள் போன்ற கனரக ஆயுதங்கள் ஒருபோதும் உள்ளடங்கி இல்லை என்றும், அவை சிரிய இராணுவத்தையும் மற்றும் இப்போது ரஷ்ய போர்விமானங்களை எதிர்ப்பதற்கு அவர்களுக்கு உதவுமென்றும் கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர்,” என்று குறிப்பிடுகிறது.

ரஷ்யாவை பொய்யாக "ஏகாதிபத்தியம்" என்று குணாம்சப்படுத்துவதன் மூலமாக, அது வலிந்துதாக்கும் அமெரிக்காவை சட்டபூர்வமாக்க முயல்கிறது. விளாடிமீர் புட்டின் அரசாங்கம் அது பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவவாதிகள் மற்றும் செல்வந்த தட்டு அடுக்குகளது நலன்களின் அடிப்படையில் சிரியாவில் ஒரு பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலை பின்தொடர்கிறது என்றாலும், ரஷ்யா மேற்கத்திய ஏகாதிபத்தியத்தால் சுற்றிவளைக்கப்பட்ட மற்றும் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற, அதில் தங்கியிருக்கும் ஒரு பொருளாதாரமாகும்.

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பைப் பொறுத்த வரையில், ஓர் ஏகாதிபத்திய சக்தியாக ரஷ்யாவை வரையறுப்பது அந்நாட்டின் வரலாற்று பரிணாமத்தைக் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையிலோ அல்லது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து எழுந்துள்ள சமூக இயல்பிலிருந்தோ அல்ல. மாறாக, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க-தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்க அதனை அது அனுமதிக்கிறது என்றவொரு, நிலைமைக்குகந்த வார்த்தை பிரயோகமாக கையாள்கிறது. இவ்விதத்தில், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையே ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலாக கூறப்படுவதில், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு தீர்க்கமாக முந்தையதற்கு சார்பாக கீழிறங்கி வருகிறது.

உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்பு சதி விடயத்தில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள உண்மையான மார்க்சிஸ்டுகளால் கடைப்பிடிக்கப்படும், உள்நாட்டில் உள்ள ஏகாதிபத்தியமே பிரதான எதிரி என்று வலியுறுத்துவதற்காக "அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இடதில் இருந்த சிலரை" இவ்வமைப்பு கண்டித்தது. அவ்வாறு செய்வது, ரஷ்ய எல்லையோரங்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர அமெரிக்கா முடுக்கிவிட்ட "மக்கள் எழுச்சிகளை கைவிடுவதற்கு" ஒப்பானதாகும் என்று அது குறிப்பிட்டது.

ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை ஊக்குவிப்பதிலிருந்து வெகுதூரம் நிற்பதுடன், அத்தகைய அமைப்புகள் சர்வதேச அளவில் அரசியல்ரீதியில் முக்கிய போர்-ஆதரவு கன்னையாக மாறியுள்ளன. ஸ்தாபக அமைப்புகளிடமிருந்து கிடைக்கும் செழிப்பான நிதியுதவிகளோடு, ஜனநாயகக் கட்சியின் முன்னணி பிரபலங்களுடனான நெருங்கிய தொடர்புடன், எந்தவொரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்திற்கும் முற்றிலும் விரோதமாக இருந்து கொண்டு சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு முதலாளித்துவ அரசின் ஒரு நீட்சியாக, அதாவது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு ஒரு "இடது" மூடிமறைப்பை வழங்கும் பணியை மேற்கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட விதமான அரசு-சாரா நிறுவனமாக பரிணமித்துள்ளது.

அத்தகைய அமைப்புகளை அம்பலப்படுத்த மற்றும் அவற்றினது செல்வாக்கை அழிக்க, போருக்கான ஆதாரமாக விளங்கும் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒன்றுதிரட்டுவதற்கான போராட்டத்தின் ஓர் இன்றியமையாத பாகமாக ஒரு சளைக்காத போராட்டத்திலிருந்து மட்டுமே ஒரு நிஜமான போர்-எதிர்ப்பு இயக்கம் எழ முடியும்.