சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU summit moves to seal Europe’s borders against refugees

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு அகதிகளுக்கு எதிராக ஐரோப்பிய எல்லைகளை மூடுவதற்கு நகர்கிறது

By Martin Kreickenbaum
17 October 2015

Use this version to printSend feedback

துருக்கியிலுள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதிலிருந்து தடுக்கும் நோக்கில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்டோகன் உடனான ஓர் உடன்படிக்கையின் மூலமாக, விழாயனன்று புருசெல்ஸில் நடந்த ஐரோப்பிய அரசாங்க தலைவர்களது உச்சிமாநாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளை மூடுவதற்கு நகர்ந்தது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டோனால்ட் டஸ்க், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு எழுதிய கடிதமொன்றில் புருசெல்ஸ் கூட்டத்தின் நோக்கங்களை விவரித்தார். "ஒரு விடயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்," அவர் எழுதினார், “விதிவிலக்காக ஐரோப்பாவிற்குள் எளிமையாக நுழைந்துவிடலாம் என்பது" ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அகதிகள் வருவதற்கான "பிரதான ஈர்ப்பு காரணிகளில் ஒன்றாக உள்ளது. “குளிர்காலத்தின் போது அகதிகளின் உள்வருகை குறைந்தாலும் கூட, இளவேனிற்காலத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் மற்றும் ஐரோப்பாவிற்குள் பாய்ந்துவரும் மிகப்பெரும் அலைகளின் அச்சுறுத்தலுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அகதிகளைத் துரத்தியடிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை கூடுதலான மரணங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதை இவ்வார இரண்டு சம்பவங்கள் தெளிவாக்கின. பல்கேரியாவில், ஆப்கானிய அகதி ஒருவர் எல்லை பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் மற்றும் கிரேக்க கடல் ரோந்துப்படை கப்பல், அகதிகள் படகில் மோதியதில், அது கவிழ்ந்து நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஏழு அகதிகள் லெஸ்போஸ் கிரேக்க தீவுக்கருகில் மூழ்கி இறந்தனர்.

புருசெல்ஸ் கூட்டத்தில் பல்கேரிய எல்லையில் நடந்த சம்பவங்களைக் குறித்து டஸ்க்கிடம் கேட்கப்பட்ட போது, உயிரிழப்புகள் குறித்த "ஒரு வாக்குவாதம் நமது இன்றிரவு விவாதத்திற்கு எந்தளவிற்கு முக்கியப்படுகிறது" என்று ஆத்திரமூட்டும் வகையில் தெரிவித்தார்.

அக்கூட்டத்திற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜுங்கர் அறிவிக்கையில், துருக்கிய அரசாங்கத்துடனான உடன்படிக்கையானது, துருக்கியில் உள்ள அகதிகள் துருக்கியிலேயே தங்கியிருக்க வழிவகுக்கிறது. கிரீஸ் மற்றும் பல்கேரியா உடனான அதன் எல்லைகளைப் பலப்படுத்துவதும், புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளுக்கு எதிராக இரக்கமின்றி நடந்து கொள்வது மற்றும் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணித்துள்ள அகதிகளைத் திரும்ப ஏற்பது ஆகியவை துருக்கியின் கடமைப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, துருக்கி "பாதுகாப்பான நாடுகளின்" (safe countries of origin) பட்டியலில் சேர்க்கப்படும் என்றவர் அறிவித்தார்.

இதற்கு கைமாறாக, ஐரோப்பிய ஒன்றியம் நுழைவனுமதி (விசா) அனுசரணைகள் மீதான பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்துவது, ஐரோப்பிய ஒன்றியத்தினுள் துருக்கிய அங்கத்துவம் குறித்து நின்றுபோயிருக்கும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது மற்றும் நிதியுதவி வழங்கல்களை வேகப்படுத்துவது ஆகியவற்றின் மீது துருக்கிய அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளிக்கிறது. எர்டோகனுடன் நேரடியாக பேரம்பேசுவதற்கு ஞாயிறன்று ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அங்காரா பயணிக்க உள்ளார்.

ஐரோப்பிய கொள்கையில் துருக்கியை நோக்கிய இந்த திருப்பத்தின் சிடுமூஞ்சித்தனம் மலைப்பூட்டுகிறது. துருக்கி உடனான சுமூகமான ஐரோப்பிய ஒன்றிய பேரல்பேசல்கள், அடிப்படை மனித உரிமைகளைக் கடைபிடிப்பது குறித்த குறிப்பிட்ட அக்கறைகளின் காரணமாக ஆண்டுக் கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. சான்சிலர் மேர்க்கெல் கொள்கைரீதியில் துருக்கி அங்கத்துவத்தை ஒதுக்கி வைத்து, வெறும் "கௌரவ பங்காண்மை" அந்தஸ்து என்ற முன்னோக்கையே கொண்டிருந்தார். சமீபத்திய மாதங்களில் கூட, ஐரோப்பிய ஒன்றியம், அனைத்திற்கும் மேலாக ஜேர்மன் அரசாங்கம், எர்டோகன் அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தது.

ஆனால் குர்தியர்களுக்கு ஆதரவான HDP கட்சியை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதற்காக, குர்திஷ் சிறுபான்மையினருக்கு எதிராக துருக்கி அரசாங்கம் மூர்க்கமாக இராணுவப் படையை பயன்படுத்தி வருகின்ற இந்த தருணத்தில், "ஐரோப்பிய கோட்டையை" பலப்படுத்துவதற்காக அதன் ஆதரவை உள்ளெடுக்க துருக்கிக்கு அனுசரணையாக ஐரோப்பிய ஒன்றியம் ஒழுங்கமைகிறது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் மார்ட்டின் சூல்ஸ் (சமூக ஜனநாயக கட்சி) கூறுகையில், “துருக்கியை கண்டிக்காதீர்கள், அவர்கள் நிஜமாகவே மிகச் சரியாக நடந்து கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கெஜி பூங்காவில் (Gezi Park) நடந்த காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை குறித்தோ, அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக ஆளும் AKP ஐ விசாரித்த டஜன் கணக்கான நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களை வேலையிலிருந்து நீக்கியமை மற்றும் கைது செய்தமை குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. பத்திரிகை சுதந்திரம் மீதான பாரிய தடை மற்றும் இதழாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள், மிக சமீபத்தில் அங்காரா குண்டுவீச்சுக்குப் பின்னர் நடந்தவை கூட, துருக்கிய அரசாங்கத்துடன் ஓர் உடன்படிக்கையை இறுதி செய்வதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தைத் தடுத்துவிடவில்லை.

இது துல்லியமாக ஏனெனில் இப்போது துருக்கியில் மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டை ஒரு முன்மாதிரியான பங்காளியாகவும், ஐரோப்பாவில் அதனதன் மூர்க்கமான தனித்தனி கொள்கையின் சககூட்டாளியாகவும் பார்க்கிறது. மொத்தம் இரண்டு மில்லியன் அகதிகளுக்கான ஆறு அகதி முகாம்கள் கட்டுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவிகள் வழங்க உள்ளது. அவரது தாராள அகதி கொள்கையாக கூறப்படுவதன் காரணமாக மேர்க்கெல் அவரது சொந்த கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினது அழுத்தத்தின் கீழ் இருப்பதால், இதற்காக 3 பில்லியன் யூரோவிற்கான அங்காராவின் கோரிக்கையை ஏற்க தயாராக உள்ளார்.

அப்பணம் அகதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ பராமரிப்பு வழங்கவும் மற்றும் பாடசாலைகளுக்காகவும் அம்முகாம்களில் பயன்படுத்தப்படும். இது துருக்கியில் அகதிகளின் வறிய நிலையை மட்டுப்படுத்தும் என்றும், ஐரோப்பாவிற்குத் தப்பியோடி வருவதற்கான அவர்களது விருப்பத்தைக் குறைக்குமென்றும் கூறப்படுகிறது. ஆனால், சிரிய உள்நாட்டு போரின் அகதிகள் துருக்கியில் "விருந்தினர்களாக" கருதப்பட்டாலும், நிஜமான பாதுகாப்பு அந்தஸ்து இன்றியும் மற்றும் எந்தவித சட்டபூர்வ வேலைவாய்ப்பை ஏற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இது மிகவும் சந்தேகத்திற்குரியதே. அவர்கள் சட்டவிரோத நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டு, பழிக்கஞ்சாத முதலாளிமார்களின் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்குப் பலியாவார்கள்.

இந்த பெருந்திரளான மக்கள் முகாம்களில் சொற்பமான உதவி வினியோக சூழல் மேம்பட்டாலும் கூட, அது அகதிகள் எதிர்கொண்டிருக்கும் நம்பிக்கையற்ற நிலையில் எதையும் மாற்றப் போவதில்லை. எவ்வாறிருப்பினும் ஐரோப்பாவிற்குள் அவர்கள் பயணிப்பதைத் தடுப்பதற்காக, துருக்கி அதன் கிரீஸ் மற்றும் பல்கேரிய எல்லைகளை மூடிவிடும். ஏகியன் கடற்பகுதியோ இன்னும் தீவிரமாக கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படும். கண்டுபிடிக்கப்படும் அகதி படகுகள் சுற்றிவளைக்கப்பட்டு துருக்கிக்கே திருப்பி அனுப்பப்படும்.

துருக்கியை “பாதுகாப்பான நாடாக" வகைப்படுத்தியமை குறித்து புருசெல்ஸில் விரிவாக விவாதிக்கப்படவில்லை. ஆனால் Süddeutsche Zeitung இதழின் செய்திப்படி, அதுபோன்றவொரு நகர்வுக்கு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடையே அங்கே ஏற்கனவே பெரும் ஆதரவு உள்ளது.

இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில், தஞ்சம் கோரும் மொத்த துருக்கிய பிரஜைகளில் 70 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்களின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்போது துருக்கி "பாதுகாப்பான நாடாக" வரையறுக்கப்பட்டால், எவ்வாறேனும், அத்தகைய தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை துரிதமான வழிவகைகளைக் கொண்டு நிராகரித்துவிட முடியும். இது பிரதானமாக, எர்டோகன் ஆட்சியால் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ள குர்தியர்களைக் கடுமையாக பாதிக்கும். அதற்கும் கூடுதலாக துருக்கி வழியாக நுழைந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படும் அகதிகளை ஏற்றுக் கொள்ளவும் துருக்கி பொறுப்பேற்றிருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு முகமை Frontexஐ பலப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர். அந்த அமைப்புக்கு கூடுதலாக 775 அதிகாரிகள் வழங்கப்படுவார்கள் என்பதுடன், அதன் சொந்த அதிகாரத்தின் கீழ் அகதிகளை நிராகரித்து திரும்ப அனுப்புவதற்கான அதிகாரமும் அதற்கு கொடுக்கப்பட உள்ளது, இத்தகையவொரு அதிகாரம் முன்னதாக தனித்தனி அங்கத்துவ நாடுகளிடம் மட்டுமே இருந்தது. இவ்விதத்தில் அகதிகளைத் திரும்ப அனுப்பும் திட்டங்களுக்கு எதிராக சட்டபூர்வ உதவி கோரும் சாத்தியக்கூறும் அகதிகளுக்கு மறுக்கப்படும். இன்னும் திட்டவட்டமாக ஒப்புக்கொள்ளப்படவில்லை என்றாலும், திட்டமிடப்பட்டுள்ள ஓர் ஐரோப்பிய எல்லையோர பொலிஸ் படை உருவாக்கத்திலும் Frontex க்கு ஒரு முன்னணி பாத்திரம் வழங்கப்படும்.

போலாந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு மற்றும் ஸ்லோவேகியா அரசாங்கங்களை உள்ளடக்கிய, ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள "Visegrad குழுமம்" என்பது அதன் சொந்த கூட்டு எல்லை பொலிஸ் படையை ஏற்படுத்தி உள்ளது, அப்படை அகதிகளைத் துரத்துவதற்காக ஹங்கேரிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் நடந்துவரும் இந்த இராணுவமயமாக்கலின் பாகமாக “Sophia” எனும் நடவடிக்கையும் உண்டு, இதன் கீழ், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் போர்கப்பல்கள் மத்தியத்தரைக்கடலின் லிபிய கடலோரத்தில் அகதி படகுகளைத் தடுத்து நிறுத்தி, அவற்றை அழிக்கும் அல்லது ஆபிரிக்க கடலோரத்திற்கு திரும்பிச் செல்ல அவர்களை நிர்பந்திக்கும். கடல் மீட்பு நடவடிக்கைகள் மீதான பேச்சுவார்த்தை, அதாவது நடவடிக்கைகளின் "இறுதி நோக்கம்" என்று உரக்க முன்வைக்கப்பட்ட அது, பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது.

ஐரோப்பிய வெளிப்புற எல்லையில், இத்தாலி, கிரீஸ் மற்றும் பல்கேரியாவில் உள்ள, “அகதிகள் வருகை பதிவு முகாம்கள்" என்று அறியப்படும், இந்த அகதிகள் வருகை முகாம்களுக்கு இதுவரையில் ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய அரசாங்கங்கள் மட்டுமே அவர்கள் வாக்குறுதியளித்த அளவிற்கு ஆட்களை அனுப்பியுள்ளன என்பதால் இனி கூடுதல் பணியாளர்கள் வழங்கப்படுவார்கள்.

இருப்பினும் அங்கே இன்னமும் அந்த "அகதிகள் வருகை பதிவு முகாம்களின்" நடவடிக்கை மீது கருத்து வேறுபாடு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட நாடுகள், அகதிகளை தேர்வு செய்வதற்கு முந்தைய பணியோடும் மற்றும் பதிவு செய்வதோடும் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ள விரும்புகின்ற நிலையில், குறிப்பாக ஜேர்மன் அரசாங்கம் அந்த "அகதிகள் வருகை பதிவு முகாம்களை" மிகப்பெரும் தடுப்புக்காவல் முகாம்களாக மாற்ற அழுத்தமளித்து வருகிறது, அங்கே அகதிகளை அடைத்து வைக்க முடியும் என்பதுடன், முடிந்தளவிற்கு விரைவாக மீண்டும் திருப்பியனுப்புதவற்காக அவர்களது தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும்.

ஜேர்மனியில் திட்டமிடப்பட்டுள்ள இடைக்கால பகுதிகள் (transit zones) மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியே எதிர்பார்க்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடனான அகதிகள் முகாம்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து, முக்கியமாக பின்னர் ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் கொள்கையால் எல்லைகளை மூடிவிட முடியும் என்பதோடு, போர் மற்றும் வறுமையால் தப்பியோடி வருபவர்களை அக்காவல் முகாம்களிலேயே அடைத்து வைக்க முடியும்.

பிபிசி இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையின்படி, ஐரோப்பிய ஒன்றியம் வரவிருக்கும் மாதங்களில் நிராகரிக்கப்பட்ட அகதிகளை அவர்களது தாயகத்திற்குத் திருப்பியனுப்புவதையும் மற்றும் தஞ்சம் கோரும் 400,000 பேரை மூர்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற்றுவதையும் தீவிரப்படுத்த விரும்புகிறது. பயண ஆவணங்களின்றி வரும் அகதிகளுக்கு, அவர்கள் எந்த நாடுகளிலிருந்து வந்ததாக கூறுகிறார்களோ, அவர்களை மீண்டும் அங்கே திரும்ப “செல்வதற்கு மட்டுமான ("laissez-passer”) ஒரு பத்திரம் வழங்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) மதிப்பீடுகள்படி, இந்தாண்டில் இதுவரையில் உலகின் 60 மில்லியன் அகதிகளில் சுமார் 600,000 பேர் ஐரோப்பாவிற்கு வந்துள்ளனர், அதில் 140,000 பேர் இத்தாலி வழியாகவும் மற்றும் 450,000 பேர் கிரீஸ் வழியாகவும் வந்துள்ளனர். குறைந்தபட்சம் 3,117 அகதிகள் தங்கள் உயிர் வாழ்க்கைக்காக கட்டணம் செலுத்தி ஐரோப்பாவிற்கு விமானம் ஏறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தாண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகளின் விகிதாசாரம், மொத்த அகதிகளில் வெறும் 0.1 சதவீதத்திற்கு சற்று அதிகமாகும். மறுபுறம், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் வறிய நாடுகளும் உலகளாவிய அகதிகள் நெருக்கடியின் சுமையைத் தாங்குகின்றன மற்றும் மொத்த அகதிகளில் 86 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை ஏற்றுள்ளன.

ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களைத்தாங்களே சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதாக காட்டிக்கொள்வது, ஓர் அரசியல் திவால்நிலை பிரகடனமாக உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து வரும் நூறாயிரக் கணக்கான அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ள ஜோர்டான் மற்றும் லெபனான் போன்ற நாடுகளுக்கு, ஒருசில வாரங்களுக்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்ட 2 பில்லியன் யூரோ மதிப்பிலான உதவிகளில் அந்நாடுகள் வெறும் 24.3 மில்லியன் யூரோ மட்டுமே பெற்றுள்ளன. அவற்றிற்கான பெரும்பாலான நிதியுதவிகள் நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லாத நாடுகளிலிருந்தே வருகின்றன.