சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Top 1 percent own more than half of world’s wealth

உலக செல்வவளத்தில் பாதிக்கும் அதிகமானதை மேல்மட்டதில் உள்ள 1 சதவீதத்தினர் கொண்டுள்ளனர்

By Patrick Martin
14 October 2015

Use this version to printSend feedback

சுவிஸ் வங்கி Credit Suisse வெளியிட்ட ஒரு புதிய அறிக்கை, உலகளாவிய செல்வவள சமத்துவத்துவமின்மை தொடர்ந்து மோசமடையுமென்றும், அதுவொரு ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாகவும், அத்துடன் உலக சொத்துக்களில் அதிகமானது அடியிலுள்ள ஒட்டுமொத்த 99 சதவீதத்தினரை விட மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினர் வசமிருப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

250 ட்ரில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்ட உலகளாவிய சொத்துக்களில், மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினர் ஏறத்தாழ 50 சதவீதம் கொண்டுள்ளனர். அதேவேளையில் மனிதயினத்தின் அடியிலுள்ள 50 சதவீதத்தினர் வசம் ஒட்டுமொத்தமாக 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மக்கள்தொகையில் அடியிலுள்ள 90 சதவீதத்தினரின் 12.3 சதவீதம் விடுத்து, உலக செல்வவளத்தில் 87.7 சதவீதம் மிகப்பணக்கார 10 சதவீதத்தினரிடம் உள்ளது.

அந்த Credit Suisse அறிக்கை மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினர் மீது அல்ல, மாறாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள வயதுவந்த 0.7 சதவீதத்தினரின் ஒரு மிகச் சிறிய குழுவின் மீது ஒருகுவிந்திருந்தது. இந்த தொகையில் வீடுகள், சிறு ணிகங்கள் மற்றும் ஏனைய ஸ்தூலமான சொத்துக்கள் போன்ற நிதியியல் சொத்துக்களும் மற்றும் நிஜமான சொத்துக்களும் இரண்டுமே உள்ளடங்கும்.

அந்த அறிக்கையின் கண்கவரும் "உலகளாவிய செல்வவள பிரமீடு" மனிதயினத்தை செல்வவளத்தின் அடிப்படையில் நான்கு வகைப்பாடுகளாக, அதாவது: 10,000டாலருக்கு குறைந்த நிகர சொத்துக்களைக் கொண்ட வயதுவந்த 3.4 பில்லியன் பேர்கள்; 10,000 டாலரில் இருந்து 100,000 டாலர் வரையில் நிகர சொத்துக்களைக் கொண்ட 1 பில்லியன் எண்ணிக்கையிலானவர்கள்; 100,000 டாலரில் இருந்து 1 மில்லியன் டாலர்கள் வரையில் நிகர சொத்துக்களைக் கொண்ட 349 மில்லியன் பேர்கள். மற்றும் 1 மில்லியன் டாலருக்கு அதிகமாக நிகர சொத்துக்களை கொண்ட 34 மில்லியன் பேர்கள் என பிரிக்கிறது.

 
உலக செல்வத்தின் பிரமிட்
வடிவம்

அனைத்து வயது வந்தவர்களில் 71 சதவீதத்தினரை மிகக்குறைந்த வகைப்பாடு உள்ளடக்கியுள்ளதுடன், மொத்த செல்வவளத்தில் வெறும் 3 சதவீதம் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அதற்கடுத்த வறிய பிரிவில் வயது வந்தவர்களில் 21 சதவீதத்தினர் உள்ளனர். செல்வவளத்தில் 12.5 சதவீதம் இவர்களுக்கு சொந்தமாகும். இதற்கு மேலே உள்ள ஒரு குழு பருவ வயதடைந்தவர்களில் 7.4 சதவீதத்தினரை உள்ளடக்கி உள்ளது. இவர்கள் மொத்த செல்வவளத்தில் 39.4 சதவீதத்தைக் கொண்டுள்ளனர். இறுதியாக மேல்மட்டத்தில் உள்ள அடுக்கு 0.7 சதவீத வயது வந்தவர்கள், மொத்த செல்வவளத்தில் 45.2 சதவீதத்தைக் கொண்டுள்ளனர்.

அந்த அறிக்கையால் "உயர்மட்ட-நிகர-மதிப்பு தனிநபர்கள்" என்று வரையறுக்கப்பட்ட மேல்மட்டத்தில்  உள்ள இந்த அடுக்கே கூட, இரண்டாவது பிரமீட்டில் காட்டப்படுவதைப் போல, மிகவும் சமநிலையின்றி பிளவுபட்டுள்ளது. 29.8 மில்லியன் பேர் 1 மில்லியன் டாலரில் இருந்து 5 மில்லியன் டாலர் வரையிலான சொத்துக்களுடனும்; 2.5 மில்லியன் பேர் 5 மில்லியன் டாலரிலிருந்து 10 மில்லியன் டாலர் வரையிலான சொத்துக்களுடனும்; 1.34 மில்லியன் பேர் 10 மில்லியன் டாலரில் இருந்து 50 மில்லியன் டாலர் வரையிலான சொத்துக்களுடனும்; மற்றும் இறுதியாக, 123,800 பேர் 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களுடனும் உள்ளனர்.

அந்த அறிக்கைமிக-உயர்மட்ட-நிகர-மதிப்பு தனிநபர்கள்" என்று குறிப்பிடும் இந்த 123,800 பேர் தான் நிஜமான உலகளாவிய நிதியியல் பிரபுத்துவமாக உள்ளனர், இவர்கள் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மீது மட்டுமல்ல, மாறாக அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மீதும் தீர்க்கமான அதிகாரம் செலுத்துகின்றனர். இவர்களில் அண்மித்தளவிற்கு 59,000 பேர், மொத்த நபர்களில் ஏறத்தாழ பாதி பேர், அமெரிக்காவில் வாழ்கின்றனர். மற்றொரு கால்வாசி பேர் ஐரோப்பாவில், பிரதானமாக பிரிட்டன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழ்கின்றனர், இவர்களைத் தொடர்ந்து சீனா மற்றும் அதையடுத்து ஜப்பான் உள்ளன.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னரில் இருந்து சமத்துவமின்மை குறிப்பாக வேகமாக உயர்ந்திருப்பமாக குறிப்பிடும் Credit Suisse அறிக்கை, புஷ் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட மற்றும் ஒபாமா நிர்வாகத்தால் பெரிதும் விரிவாக்கப்பட்ட வங்கிகளின் பிணையெடுப்பை அதற்கடுத்து ஏற்பட்ட பங்குச் சந்தை உயர்வுடன் நேரடியாக தொடர்புபடுத்துகிறது. அதில் ஒரு முக்கிய பந்தி பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“2008க்குப் பின்னரில் இருந்து செல்வவள சமத்துவமின்மை அதிகரித்திருப்பது மிகப் பெரும்பாலும் பங்கு விலையுயர்வுகளும், அமெரிக்கா மற்றும் ஏனைய சில பெரிய-செல்வந்த நாடுகளது நிதியியல் சொத்துக்களின் அளவு உயர்ந்திருப்பதுடன் சம்பந்தப்படுகிறது என சிந்திக்க பலமான காரணங்கள் உள்ளன. இவையிரண்டும் ஒன்றுசேர்ந்து சில பணக்கார நாடுகளின் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல பணக்காரர்களின் செல்வவளத்தையும் அதிகரித்துள்ளன. மேல்மட்டத்தினரது விகிதாசாரத்தின் (percentile) பங்கு இந்த ஆண்டு 50 சதவீத்திற்கு எகிறியிருப்பது, மேல்நோக்கிய போக்கிற்கான எவ்விதமான அடித்தளமாகவும் இருக்கலாம் என எதிர்பார்த்த உயர்வையும் தாண்டி சென்றுள்ளது. எவ்வாறாயினும், நிதியியல் சொத்துக்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கும் என்ற காரணம் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவமானதுடன் மற்றும் சர்வதேச தரமுறைகளில் மிக உயர்வாக உள்ள கடந்த ஆண்டின் போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு அமெரிக்காவில் செல்வவள சமத்துவமின்மையை ஏற்படுத்தியுள்ளது என்பதும் ஒட்டுமொத்த உலகளாவிய தோற்றத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்ற உண்மையோடு ஒத்திருக்கிறது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆழமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார சமத்துவமின்மை அனைத்திற்கும் மேலாக அமெரிக்க முதலாளித்துவத்தால் உந்தப்பட்டு வருகிறது, அத்துடன் அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தர்களைக் கொண்ட நாடாகவும் மற்றும் மிக மிக சமமற்ற நாடாகவும் இரண்டு விதமாகவும் இருந்து வருகிறது. அமெரிக்கா உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளது, ஆனால் உலக மில்லியனர்களில் மலைப்பூட்டுமளவிற்கு 46 சதவீதத்தினரைக் கொண்டுள்ளது.

 

நாடு வாரியாக டாலர் மில்லியனர்கள் எண்ணிக்கை வீதத்தில்

இது அமெரிக்க பொருளாதாரம் ஆரோக்கியமாக இருப்பதை காட்டவில்லை, பொருத்தமற்ற விகிதாச்சாரத்தில் மிகப்பெரும் பணக்காரர்களின் இந்த வளர்ச்சி, மரணகதியிலான விளைவுகளோடு ஒட்டுமொத்த சமூக உயிர்வாழ்வின் மீதும் ஒரு புற்றுநோய் வேகமாக பரவி வருவதற்கு ஒத்திருக்கிறது.

அமெரிக்காவில் செல்வந்தர்கள், 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் அவர்களது செல்வவளத்தை அதிகரித்த அளவிற்கு வேறொருபோதும் இந்தளவிற்கு வேகமாக அதிகரித்ததில்லை. ஆனால் முன்னர் சிந்தித்துபார்த்திராத தனிநபர் சொத்துக்களின் திரட்சியின் பக்கவாட்டிலேயே, அமெரிக்க உள்கட்டமைப்பு நொருங்கி வருகிறது, கல்வி, மருத்துவ கவனிப்பு மற்றும் ஏனைய சமூக சேவைகளுக்கான நிதித்தேவைகள் வறண்டு போயுள்ளன, பாரிய பெரும்பான்மை மக்களின், செல்வவளத்தை உருவாக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்கள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.

Credit Suisse இன் இந்த அறிக்கை, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் ஆகிய மூன்று முக்கிய பிராந்தியங்களில் பிரிந்துகிடக்கும் சொத்துக்கள் மீது ஒருங்குவிந்து, உலகளாவிய முதலாளித்துவ வடிவமைப்பிற்குள் நிலவும் குறிப்பிடத்தக்க பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மீதும் கவனம் செலுத்துமாறும் அழைப்புவிடுக்கிறது.

அந்த அறிக்கையின்படி, மொத்த உலகளாவிய செல்வவளம் 2015 இல் சற்றே வீழ்ச்சியடைந்தது, ஆனால் அது ஏனென்றால் வங்கி கணக்கீடுகள் அமெரிக்க டாலர்களில் இருந்தன என்பதனால் ஆகும். அதனால் யூரோ, ஜப்பானிய யென், ரஷ்ய ருபிள், கனேடிய டாலர் மற்றும் ஏனைய பல செலாவணிகள் அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்பிழந்ததால் பாதிக்கப்பட்டன.

ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிகப்பெரிய வீழ்ச்சிகளோடு சேர்ந்து உலகளவில் 12.7 ட்ரில்லியன் டாலர்களின் வீழ்ச்சி இருந்தபோதினும், அமெரிக்க செல்வவளமோ 4.6 ட்ரில்லியன் டாலர்களால் அதிகரித்தது, இது பெரும்பாலும் நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்ததனால் ஆகும். ஆஸ்திரேலியா மற்றும் கனடா அவற்றிற்கு இடையே 1.5 ட்ரில்லியன் டாலர்கள் செல்வவளத்தை இழந்தன, இது மூலவளங்களை பெறுவதில் பலமாக சார்ந்துள்ள நடுத்தர-அளவிலான அவ்விரு பொருளாதாரங்களுக்கும் ஒரு கணிசமான வீழ்ச்சியாகும்.

சீனா, இதன் நாணயம் டாலருடன் பலமின்றி பிணைந்துள்ள நிலையில், $1.5 ட்ரில்லியன் ஆதாயத்தைக் கண்டது. ஆனால் அந்த அறிக்கை ஜூன் 30, 2015 இறுதி வரையிலான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதால், அது அனேகமாக ஏற்கனவே ஆவியாகியிருக்கும், மேலும் அந்த அறிக்கையின் பின்குறிப்புகள் குறிப்பிடுவதைப் போல, அதற்குப் பின்னரில் இருந்து சீன நிதியியல் சந்தைகள் 25 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாடுகளுக்குள் அதிகரித்துவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, நாடுகளுக்கிடையிலான இந்த ஏற்றத்தாழ்வும் உலக அரசியலில் அளப்பரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. அதிகரித்தளவில் அவை சர்வதேச உறவுகளின் வெடிப்பார்ந்த குணாம்சத்தில், குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கும், பெரும் இயற்கை மற்றும் மனிதவளங்களுக்காக இலக்கில் வைக்கப்பட்டு வருகின்ற ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கும் இடையிலான மோதல்களில் ஒரு பிரதான காரணியாக உள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் அளப்பரிய இராணுவ நிலை மற்றும் உலகின் பிரதான மத்திய செலாவணியாக அதன் டாலர் வகிக்கும் பாத்திரம் இரண்டையுமே, அதன் பிரதான போட்டியாளர்களோடு ஒப்பிடுகையில் அதன் பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்வதற்கு ஆயுதங்களாக பாவிக்கிறது. உள்நாட்டில், உடையும் புள்ளிக்கு வந்து கொண்டிருக்கும் வர்க்க பதட்டங்களோடும் மற்றும் உலக அரசியலில் அது மிகவும் ஸ்திரமின்மைக்குட்படுத்தும் சக்தியாகவும் இருப்பதுடன், அதிகரித்தளவில் பொறுப்பற்றத்தன்மை மற்றும் இராணுவவாத நடைமுறைகளைக் கொண்டு உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் இடத்தைப் பேண முனைந்து வருகிற நிலையில், இரண்டு விதத்திலும் அமெரிக்கா ஒரு சமூக வெடி உலையாக உள்ளது.