சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Neo-Nazi attacks mayoral candidate in Cologne

கோலோனில் மேயர் வேட்பாளரை நவ-நாஜி தாக்கினார்

By Peter Schwarz
20 October 2015

Use this version to printSend feedback

கோலோன் நகர மேயர் வேட்பாளரான ஹென்றியெட்ட ரெக்கர் ஞாயிறன்று வாக்கெடுப்புக்கு முன்னதாக சனியன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, 44 வயது நவ-நாஜியான பிரான்க் S. அவரை படுகொலை செய்ய முயன்றார்.

தாக்குதல் நடத்தியவர் ஒரு குறுங்கத்தியைக் கொண்டு, ரெக்கரின் கழுத்து மற்றும் சுவாசக்குழாயில் குத்தினார், அவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அருகில் நின்ற நான்கு பேர் மீது தாக்குதல் நடத்தினார், அவர்களில் ஒருவரும் கடுமையாக காயப்பட்டார்.

வெளிநாட்டவர் விரோத போக்கால் S. உந்தப்பட்டிருந்தார் என்பதை ஆதாரங்கள் பலமாக எடுத்துக்காட்டுகின்றன. அந்த சம்பவத்தை விசாரித்து வரும் நடுவண் வழக்கறிஞர் அலுவலக தகவல்படி, “எதிர்கட்சிகளால் தான் ஜேர்மனி முன்பினும் அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்று வருகிறதென அவர் கருதியதால், எதிர்கட்சிகளுக்கு ஒரு சமிக்ஞை காட்ட" S. விரும்பினார்.

கோலோன் நகர துணை மேயரான 58 வயது ரெக்கர், அகதிகளுக்கான இடவசதியை ஒழுங்குசெய்ய பொறுப்பேற்றிருந்தார். பசுமைக் கட்சியின் ஒரு முன்மொழிவுக்கு ஏற்ப, எக்கட்சியையும் சாராத ஒரு வழக்கறிஞரான ரெக்கர், பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக சங்கம் (CDU) மற்றும் சுதந்திர சந்தை சுதந்திர ஜனநாயக கட்சி (FDP) இரண்டினது ஆதரவுடன் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். அப்பெண்மணியின் வேட்பாளர் நியமனம், கடந்த ஆறு ஆண்டுகளாக மேயர் பதவியைத் தக்கவைத்து வருகின்ற சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) அரசியல் மேலாளுமையை அகற்றுவதை நோக்கி இருந்தது.

தீவிர சிகிச்சையுடன் உணர்வற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த ரெக்கர், 53 சதவீத வாக்குகள் பெற்று ஏனைய ஆறு வேட்பாளர்களுக்கு எதிராக ஞாயிறன்று தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது SPD போட்டியாளர், Jochen Ott, வெறும் 32 சதவீத வாக்குகள் பெற்றார். படுகொலை முயற்சிக்கு முன்னர் ஏற்கனவே ரெக்கர் விருப்பத்திற்குரியவராக கருதப்பட்டிருந்தார்.

அப்பெண்மணி அபாயத்தைக் கடந்துவிட்டதாக அவரது மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் மற்றும் குணமானதும் அவர் மேயராக பதவியேற்பார் என்றும் அவரது கூட்டாளிகள் கருதுகின்றனர்.

இந்த கொலையைச் செய்யவிருந்த பிரான்ங்க் S., 1990களில், நவ-நாஜி சுதந்திர ஜேர்மன் தொழிலாளர் கட்சி (FAP) இன் ஆதரவாளராகவோ அல்லது அங்கத்தவராகவோ இருந்தார், பின்னர் அக்கட்சி தடை செய்யப்பட்டது. மிக சமீபத்தில், அவர் வெளிநாட்டவர் விரோத கருத்துரைகளோடு இணையத்தில் பிரசன்னமாகி இருந்தார்.

அந்த கத்தி தாக்குதலுக்குச் சற்று முன்னர், அவர், “உங்கள் குழந்தைகளுக்காக இதை நான் செய்கிறேன்,” என்று கூச்சலிட்டார். Spiegel Online செய்தியின்படி, அவரைக் கைது செய்த பொலிஸ் அதிகாரிகள், ஜேர்மனியில் விரைவில் ஷாரிய சட்டம் (Sharia law) நடைமுறைக்கு வருமென அவர் அஞ்சியதாக தெரிவித்தனர். “வெளிநாட்டவர்கள் நமது வேலைகளை எடுத்துக் கொள்கிறார்கள்" என்று அவர் தெரிவித்ததாகவும் பொலிஸ் குறிப்பிட்டது.

அத்தாக்குதலை S. மிகக் கவனமாக திட்டமிட்டிருந்ததைக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவரது வீட்டைச் சோதனையிட்ட பொலிஸ், அவரது கணினிகளிலிருந்து ஹார்டு டிஸ்கை அவர் எடுத்துவிட்டிருந்ததாக தெரிவித்தது. அதிகாரிகளால் அவரது வீட்டில் எந்த குறிப்புகளையோ, ஆவணங்களையோ அல்லது காகிதங்களையோ பெற முடியவில்லை.

உள்ளூர் அகதிகள் முகாம்களில் நிலவிய "மனிதாபிமானமற்ற" நிலைமைகளுக்காக ரெக்கர் மீண்டும் மீண்டும் கோலோன் அகதிகள் கவுன்சிலை விமர்சித்திருந்தார். அகதிகளை ஹார்டுவேர் கடைகளிலும், உடற்பயிற்சி கூடங்களிலும் மற்றும் முகாம்களிலும் தங்க வைக்க அப்பெண்மணி ஏற்பாடு செய்தார்.

ஆனால், உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர் மற்றும் பவேரிய பிரதம மந்திரி ஹோர்ஸ்ட் சீஹூபர் போன்ற கிறிஸ்துவ ஜனநாயக சங்கம்-கிறிஸ்துவ சமூக சங்கத்தின் முன்னணி அரசியல்வாதிகளைப் போலில்லாமல், அப்பெண்மணி, பகிரங்கமாக ஒரு "வரவேற்கும் கலாச்சாரத்திற்கு" அழைப்புவிடுக்கும் CDU சான்சிலர் அங்கேலா மேர்க்கெலைப் போன்ற அதே தொனியை ஏற்று, அகதிகளைக் குறைகூறுவதைத் தவிர்த்திருந்தார்.

அப்படுகொலை முயற்சிக்குப் பின்னர், எண்ணிறைந்த அரசியல்வாதிகள் வெளிநாட்டவர் விரோத அமைப்புகளுடன் சேர்ந்து, இணையத்தில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மீது பழி போட திரண்டனர். ஜேர்மன் நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD) பின்வருமாறு குறிப்பிட்டார்: “சொல்லைச் செயலில் காட்டுவதற்கு, பெஹிடா தடைகளைத் தாண்டி வருகிறது.” உள்துறை அமைச்சர் டு மஸியர் (CDU) அறிவிக்கையில், சகல வன்முறை வடிவங்களுக்கு எதிராகவும் ஒரு தெளிவான சேதியை அனுப்புவதற்கு ஒட்டுமொத்த சமூகமும் அழைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநாட்டவர் விரோத போக்கிற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்.

உண்மையில் இந்த தாக்குதலுக்கு பின்புலத்தை உருவாக்குகின்ற வெறுப்பார்ந்த சூழலுக்கு, அனைத்து ஸ்தாபக அரசியல் கட்சிகளே பொறுப்பாகின்றன.

கோலோனின் SPD வேட்பாளர் Jochen Ott கருத்துக்கணிப்புகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக உணர்ந்த போது, வெளிநாட்டவர் விரோத வன்மங்களைத் தூண்டிவிட பெரிதும் தயாரிப்புடன் இருந்தார். அக்டோபர் தொடக்கத்தில், அவர் விளையாட்டு அரங்கங்களில் அகதிகளைத் தங்க வைப்பதை நிறுத்துமாறு அழைப்புவிடுத்தார். “இந்த ஆண்டின் இறுதியில், விளையாட்டு மன்றங்களும் பாடசாலைகளும் மீண்டும் கிடைக்க செய்யப்படும்” என்று கூறினார்.

உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டமை, மன்றங்களின் நடவடிக்கைகள் மற்றும் பள்ளிக்கூட விளையாட்டு நிகழ்ச்சிகளில் கடுமையான தாக்கத்தைக் கொண்டிருப்பதாக அவர் அறிவித்தார். கவுன்சிலர் ஜோர்க் பிராங்க் (பசுமை கட்சி) “தேவையற்ற பயங்களைப்" பரப்புவதாகவும், மற்றும் "உள்ளூர் மக்களின் தேவைகளுக்கு எதிராக அகதிகளின் கதியைக் கொண்டு" விளையாடுவதாகவும் Ott ஐ குற்றஞ்சாட்டினார்.

SPD வேட்பாளரின் பிரச்சார தொனி ஆஸ்திரியாவில் தீவிர வலது FPÖ ஆல் பயன்படுத்தப்பட்ட வலதுசாரி ஜனரஞ்சகவாத வகையை எதிரொலித்தது.

நாடெங்கிலும், மூத்த அரசியல் பிரமுகர்களும் பிரபல பிரமுகர்களும் எல்லைகளைப் பலப்படுத்துமாறு கோரி வருகின்றனர். அகதிகளை சிறைமுகாம்களில் அடைத்து, விசாரித்து, திருப்பியனுப்ப எல்லைகளில் இடப்பெயர்வு மண்டலங்களை அமைக்க CDU மற்றும் CSU ஒப்புக் கொண்டுள்ளது.

ஜேர்மன் பொலிஸ் சங்கம் அகதிகளைத் தடுப்பதற்கு எல்லையோர முள்வேலிகளை ஏற்படுத்துமாறு பகிரங்கமாக அழைப்புவிடுத்துள்ளது. அதன் தலைவர் Rainer Wendt, ஜேர்மன் வேலி ஒரு சங்கிலித்தொடர் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்துமென கூறி அந்த முறையீட்டை Welt am Sonntag பத்திரிகையில் நியாயப்படுத்தினார். “இந்த பாதைகளில் நமது எல்லைகளை நாம் மூடினால், ஆஸ்திரியாவும் ஸ்லோவேனியா உடனான அதன் எல்லைகளை மூடிவிடும். இந்த துல்லியமான விளைவு தான் நமக்கு அவசியப்படுகிறது,” என்றவர் அறிவித்தார்.

துருக்கிய-ஐரோப்பிய எல்லையை மூடும் நோக்கில், எதேச்சதிகாரி துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் உடன் ஒரு இழிவார்ந்த உடன்படிக்கையை முடிவு செய்ய வாரயிறுதியில் சான்சிலர் மேர்க்கெல் அங்காரா பயணித்தார்.

தஞ்சம் கோருவதிலிருந்து அவர்களை அதைரியப்படுத்த, ஜேர்மனியின் ஏனைய பகுதிகளில், அகதிகள் அவமதிக்கப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது பழமைவாதிகள் ஆகட்டும் அல்லது "இடது" என்று கூறிக் கொள்பவை ஆகட்டும் அவற்றின் உள்ளாட்சி அரசாங்கங்களாலும் மற்றும் அரசாலும் இவ்வாறு நடத்தப்பட்டு வருகிறது. பேர்லின் மற்றும் ஹம்பேர்க்கில் அகதிகள் மீது திணிக்கப்பட்டுள்ள நிலைமைகள் சம அளவில் அதிர்ச்சியூட்டுகின்றன, அது புலம்பெயர்வோரைக் கையாளும் விதத்திற்கு எதிராக உதவி அமைப்புகள் மற்றும் மருத்துவ அமைப்புகளை கடுமையாக போராட தூண்டி வருகின்றன.

பெஹிடா போன்ற தீவிர வலது இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கு தொலைக்காட்சியிலும் மற்றும் ஏனைய ஊடகங்களிலும் பிரதான நேரம் ஒதுக்கப்படுகிறது, அதேவேளையில் நூறாயிரக் கணக்கான அகதிகளுக்கு ஆதரவான சுய-ஆர்வலர்கள் புறக்கணிக்கப்பட்டு, அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஞாயிறன்று புலம்பெயர்வோர்-விரோத ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) தலைவர் Björn Höcke, பிரதான நேரத்தில் ஒளிபரப்பாகும் “Günther Jauch” உரையாடல் நிகழ்ச்சியில் அவரது இனவாத வெறுப்பைப் பரப்புவதற்கு அவருக்கு சுதந்திரமாக கட்டுப்பாடு-தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தது.

“வாக்குவாதங்கள், கோபமூட்டல்கள், அச்சுறுத்தல்கள்— சமூகரீதியில் ஏற்கலாமா?” என்பதே அறிவிக்கப்பட்ட தலைப்பாக இருந்தது. “இறையாண்மை மற்றும் ஜேர்மனியின் அடையாளம் மேற்கொண்டும் அழிவதற்கு எதிரான எதிர்ப்பியக்கம்" என்ற ஒன்றுக்கு அழைப்புவிடுத்த ஒரு மனுவில் இவ்வாண்டின் மார்ச்சில் Höcke கையெழுத்திட்டிருந்தார்.

AfD ஸ்தாபக அங்கத்தவர் Alexander Gauland, பெஹிடாவின் முன்னாள் தலைவர் Kathrin Oertel மற்றும் CSU பொதுச் செயலாளர் Andreas Scheuer ஆகியோர் அகதிகளுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிட அந்த உரையாடல் நிகழ்ச்சியில் ஏற்கனவே தோன்றியிருந்தனர்.

ஜேர்மன் ஆளும் உயரடுக்கின் பிரதிநிதிகள், அகதிகளை மட்டுமல்ல, மாறாக மொத்த சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கு எதிராக ஒரு புதிய வலதுசாரி இயக்கத்தை திட்டமிட்டு ஸ்தாபிக்க முனைந்து வருகின்றனர்.

அமெரிக்காவினால் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு சேர்ந்து மத்திய கிழக்கில் தொடுக்கப்பட்ட இடைவிடாத போர்கள், அகதிகள் அலையோடு சேர்ந்து ஐரோப்பாவைத் திரும்ப தாக்கி வருகிறது. பயனுள்ள வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வதற்கு ஒரு இடம் உட்பட சகல சமூக உரிமைகளும் நூறாயிரக் கணக்கானவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி தீவிரப்படுகையில், அக்கண்டத்தின் ஆளும் உயரடுக்குகள், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளுக்காகவும் சேமிப்பு கிடங்கில் அதே கதியைத் தான் வைத்திருக்கின்றன என்பதையே கிரீஸில் திணிக்கப்பட்ட கடுமையான சிக்கனத்திட்டம் தெளிவுபடுத்துகிறது..