சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Air France postpones job cuts as anger rises among workers

தொழிலாளர்களிடையே கோபம் அதிகரிப்பதால், ஏர் பிரான்ஸ் வேலை வெட்டுக்களைத் தள்ளி வைக்கிறது

By Anthony Torres
22 October 2015

Use this version to printSend feedback

ஏர் பிரான்ஸ் நிர்வாகிகளும் தொழிற்சங்க அதிகாரிகளும், 2,900 தொழிலாளர்களின் பாரிய வேலைநீக்கம் குறித்து திட்டமிட்டு கொண்டிருந்த நிறுவன தொழிலாளர் கவுன்சில் (works council) கூட்டத்திற்குள் தொழிலாளர்கள் திடீரென நுழைந்து ஆக்கிரமித்த ஒரு வாரத்திற்குப் பின்னர், அந்த விமானச் சேவை நிறுவனம் திங்களன்று அடுத்த ஆண்டு வெறும் 1,000 வேலைகளே வெட்டப்படுமென்று அறிவித்தது. அரசாங்கம் மற்றும் விமான நிறுவனத்தின் இந்த பகுதியளவிலான பின்வாங்கல், தொழிலாள வர்க்கம் முழுவதிலும் பரவிவரும் சமூக கோபம் வெடிக்கக்கூடுமென்ற அதிகரித்த அவர்களது பயத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சமூக மாநாடு என்றழைக்கப்படும் இதற்கு முன்னதாக, அக்டோபர் 19 அன்று ஹோலாண்ட் கூறுகையில், ஊதிய செலவுகளை வெட்ட தொழிற்சங்கங்களும் மற்றும் ஏர் பிரான்ஸ் நிர்வாகமும் வேறு வழிகளைக் காண முடியுமென்றால், அவர் அந்த பாரிய வேலைநீக்கங்களை எதிர்ப்பதாக தெரிவித்திருந்தார்: “நம்மால் வேலைநீக்கங்களைத் தவிர்க்க முடியும். நிர்வாகமும் சமூக பங்காளிகளும் இரண்டு பேருமே இதற்கு பொறுப்பேற்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன். விமானிகள் அவசியமானதைச் செய்தால், நிர்வாகம் முடிவான முறையீடுகளை செய்தால், தரைச்சேவை பணியாளர்கள் குறிப்பிட்ட யதார்த்தத்தை குறித்து நனவுபூர்வமாக இருக்க முடிந்தால், வேலைநீக்கங்களை தவிர்க்க முடியும்,” என்றார்.

ஏர்பிரான்ஸ் நிறுவன தொழிலாளர் கவுன்சிலின் ஒரு புதிய கூட்டம் வியாழனன்று திட்டமிடப்பட்டுள்ளது; நிர்வாகம் அதன் தொழில்துறை மூலோபாயத்தையும் மற்றும் ஊழியர் மட்டங்களில் உண்டாகும் அதன் குறுகிய-கால விளைவுகளையும் வரைய திட்டமிட்டுள்ளது.

ஏர் பிரான்ஸ் மற்றும் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் இந்த பகுதியளவிலான பின்வாங்கல், தொழிலாளர்களை விலையாக கொடுத்து நிறுவனத்தை மறுசீரமைக்கும் அவர்களது திட்டங்களை அவர்கள் கைவிட்டுள்ளனர் என்பதை அர்த்தப்படுத்தாது. அந்நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு மறுசீரமைப்பு திட்டங்களைச் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏர் பிரான்ஸ் அதன் நொடிந்து போயிருக்கும் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக, ஒரு குறைந்த-செலவு துணை நிறுவனம் அமைத்து கணிசமானளவிற்குக் கூலி வெட்டுக்களை நிர்பந்திக்கும் திட்டம் ஒன்றை திணித்தது. இது விமானிகளின் ஒரு வேலைநிறுத்தத்தை தூண்டியது, அதைக் கண்டு அதிர்ந்துபோன ஏர் பிரான்ஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சி, தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் அதன் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டங்களில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பதைக் குறித்து பீதியுற்றன.

விமானிகள், நிறுவனத்தை நிதியியல்ரீதியில் அடிபணிய செய்து அதை பின்வாங்க நிர்பந்திக்கும் விளிம்பில் இருந்த நிலையில், அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க விமானிகளது தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டது. இது ஏர் பிரான்ஸை அதன் டிரான்சாவியா துணை நிறுவனங்களை விரிவாக்கவும் மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மதத்தோடு புதிய செலவு-வெட்டுக்களுக்குத் தயாரிப்பு செய்யவும் அதை அனுமதித்தது, தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் அந்த சூழ்ச்சிகளை நன்கு அறிந்திருந்தன.

கடந்த வாரம் ஒரு நூறு வேலைநிறுத்தக்காரர்கள் நிறுவன தொழிலாளர் கவுன்சில் கூட்டத்திற்குள் திடீரென நுழைந்த சம்பவத்திற்குப் பின்னர், அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வேலைநிறுத்தக்காரர்களை "குண்டர்கள்" என்று கண்டித்த ஒரு மிரட்சியூட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினர். ஐந்து ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் அதிகாலை 6 மணிக்கு அவர்களது வீட்டிலேயே கைது செய்யப்பட்டனர், ஆறாவதாக ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நீதித்துறை விசாரணையோடு சேர்ந்து, 18 ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன, அத்துடன் சுமார் 20 தொழிலாளர்கள் வேலை இழப்பை முகங்கொடுக்கிறார்கள். பிரான்சில் சமூக போராட்டத்தின் மீதான இதுபோன்ற முன்னுதாரணமற்ற ஒடுக்குமுறை ஏர் பிரான்ஸ் நிர்வாகம் பீதியுற்றிருப்பதையும் மற்றும் சோசலிஸ்ட் கட்சி தொழிலாளர்களிடமிருந்து அதிகரித்த கோரிக்கை எழுச்சி அலையை முகங்கொடுத்திருப்பதையும் பிரதிபலிக்கிறது. அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடுமையான சிக்கன கொள்கைகளைச் செயல்படுத்தி வருகின்ற நிலையில், அதன் பிற்போக்குத்தனமான  கொள்கைகளுக்கு அவர்களது எதிர்ப்பைக் காட்டும் தொழிலாளர்களை சிறையிலடைப்பதற்கு அப்பால் சோசலிஸ்ட் கட்சி வேறெந்த முன்னோக்கிய பாதையையும் காணவில்லை.

ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் திடீரென நிறுவன தொழிலாளர் கூட்டத்திற்குள் உள்புகுவதைக் காட்டும் ஒரு காணொளியில், 33 வயதான ஓர் இளம் விமானச்சேவை உதவியாளர் Erika Nguyen Van Vai கூறுகிறார்: “நாங்கள் தியாகம் செய்ய வேண்டுமென கோரினார்கள், அவற்றை செய்தோம், எங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்து நான்காண்டுகளாகி விட்டது, நாங்கள் வேறெதற்காக வேலை செய்கிறோம், மேலும் நாங்கள் தான் பணம் சம்பாதித்து அளிக்கிறோம். எனக்கு மாதத்திற்கு 1,800 யூரோ சம்பளம் கிடைக்கிறது, இது தானா பிரான்ஸை நாசமாக்கி விட்டது?”

எரிக்கா, தொழிலாளர் பொது சம்மேளனத்தின் ஓர் அங்கத்தவர் என்றாலும், அப்பெண்மணி அவர் அவ்வமைப்பில் இப்போது "தீவிரமாக" ஈடுபட்டிருக்கவில்லை என்றார். நிறுவன தொழிலாளர் கவுன்சிலில் அவரது தலையீடு குறித்து பின்னர் கேட்கப்பட்ட போது, அவர் தெரிவித்தார்: “நான் முதல்முறையாக ஒரு வேலைநிறுத்த இயக்கத்தில் பங்குபற்றினேன், இது எனது முதலாவது போர்க்குணம் மிக்க நடவடிக்கையாகும்,” என்றார்.

அந்த இளம் பெண்மணியின் கோபம் வெறுமனே ஏர் பிரான்ஸில் மட்டுமல்ல, மாறாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள மொத்த தொழில்துறை எங்கிலும் நிலவும் தொழிலாளர்களின் ஆழ்ந்த எதிர்ப்பை பிரதிபலிக்கிறது. எரிக்கா வயதில் உள்ள பெருந்திரளான தொழிலாளர்கள் சிக்கனத் திட்டங்கள் மற்றும் சமூக பின்னடைவுகளுக்கு அப்பாற்பட்டு இந்த சோசலிஸ்ட் கட்சியிடமிருந்தோ, அதன் அரசியல் கூட்டாளிகளிடமிருந்தோ, தொழிற்சங்க அதிகாரிகளிடமிருந்தோ வேறெதையும் காணவில்லை. அவரது தலையீடு ஐரோப்பா எங்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பிற்போக்குத்தனமான சிக்கன கொள்கைகளுக்கும் மற்றும் முதலாளிமார்களையும் தொழிற்சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் "சமூக பேச்சுவார்த்தைகளுக்கும்" பெருந்திரளான தொழிலாளர்களிடையே நிலவும் மிகப் பரந்த எதிர்ப்புக்கு குரல் கொடுக்கிறது.

ஏர் பிரான்ஸ் நிர்வாகம் அந்த காணொளியால் அதிர்ந்து போனது, அதில் கோபமான தொழிலாளர்கள், நிறுவன நிர்வாகிகளால் பதிலளிக்க முடியாத அரசியல் பிரச்சினைகளை உயர்த்தி இருந்தனர். பிரான்ஸை நாசமாக்கி வருவது 1,800 யூரோ மாத சம்பளமல்ல என்பதைச் சுட்டிக்காட்டியதன் மூலமாக, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் உடந்தையாக உள்ள முதலாளித்துவத்தின் கீழ் மிகப்பெரும் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்திருப்பதை தொழிலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இத்தகைய முறையீடுகள் "சமூக பேச்சுவார்த்தை" என்ற கட்டமைப்பையே கிழித்தெறிகிறது, அதில் வணிகங்களும், அரசும் மற்றும் தொழிற்சங்கங்களும் நிறுவனத்தின் நீண்டகால இலாபத்தை எவ்வாறு உயர்த்துவதென தங்களுக்குத் தாங்களே முடிவெடுத்து, தொழிலாளர்களை விலையாக கொடுத்து என்ன வடிவமைக்கிறார்களோ அது தான் தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது.

தொழிலாளர்களின் தீவிரப்பாடு சர்வதேச அளவிலானது. அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் UAW தொழிற்சங்கம் மற்றும் கிறைஸ்லர் அவர்கள் மீது திணிக்க விரும்பிய ஒரு புதிய ஒப்பந்தத்தைத் தோற்கடித்துள்ளனர், மற்றும் கிரேக்க தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் சிரிசா அரசாங்கம் அவர்கள் மீது திணித்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தீர்க்கமாக வாக்களித்துள்ளனர்.

கூர்மையான சமூக பதட்டங்களால் தொழிற்சங்கங்களும் பீதியுற்றுள்ளன, அவை தொழிலாளர்களின் போராட்ட குணத்தைக் கட்டுப்படுத்த அவர்களால் ஆனமட்டும் என்ன செய்ய முடியுமோ அதை பெரும் பிரயத்தனத்தோடு செய்து வருகின்றன, இது CGT இன் பொது செயலாளர் Philippe Martinez இன் கருத்துக்களில் எடுத்துக்காட்டப்படுகிறது.

“தொழிலாளர்களின் பெருங்கோபம்" அதிகரித்து வருவதைக் குறித்து அரசாங்கத்தை எச்சரித்திருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் மந்திரிமார்களைச் சந்திக்கையில், அவர் கூறினார், “நாங்கள் அவர்களிடம் 'கவனமாக இருங்கள், விடயங்கள் வெடிக்க போகின்றன' என்று கூறியிருந்தோம். தொழிலாளர்களை நாங்கள் சாந்தப்படுத்த வேண்டுமென அவர்கள் பதிலளித்தார்கள், ஆனால் நாங்கள் வெறுமனே தீயணைப்பு வீரர்கள் கிடையாது, எங்களால் முதலாளிமார்கள் அல்லது அரசாங்கத்தின் தவறுகளை சரிசெய்ய முடியாது,” என்றார்.

தொழிற்சங்கங்கள், அரசு மற்றும் முதலாளிமார்களின் தொழிலாளர்கள் மீதான விரக்தி, அரசியல் வாழ்க்கையின் மேற்புறத்திற்குப் பின்னால் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டுக்கு வெளியே, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த தீவிரப்படல் நிகழ்ந்து வருவதைக் குறித்த அவர்களின் புரிதலைப் பிரதிபலிக்கிறது. தொழிலாளர்களால் தொழிற்சங்கங்கள் மீது தங்கியிருக்க முடியாது, அவை முழுவதுமாக தொழிலிடங்களின் உள்ளிருக்கும் பெருநிறுவன பொலிஸ் அமைப்புகளாகும். தொழிற்சங்கங்களிடமிருந்து உடைத்துக் கொண்டு, சிக்கனத் திட்டம் மற்றும் பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் ஏனைய பிரிவுகளுடன் போராட்டத்தில் ஐக்கியப்படுவதன் மூலமாக மட்டுமே ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் அவர்களது கோரிக்கைகளுக்காக போராட முடியும், அது சோசலிஸ்ட் கட்சிக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தை உள்ளடக்கி உள்ளது.