சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The refugee crisis, war and socialism

அகதிகள் நெருக்கடி, போர் மற்றும் சோசலிசம்

Peter Schwarz
21 October 2015

Use this version to printSend feedback

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் 14 ஆண்டுகளாக மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் இடைவிடாத போரை நடத்தி வந்துள்ளன. அவையும் மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள அவற்றினது வாடிக்கையாளர் அரசுகளும், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் யேமனை பெருமளவிற்கு அழித்துவிட்டன. மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; பத்து மில்லியன் கணக்கானவர்கள் துரத்தப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய போர்கள் பொய்களைக் கொண்டு நியாயப்படுத்தப்படுகின்றன. அவை "பயங்கரவாதத்திற்கு எதிரான போராக", “பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களுக்கு" எதிரான ஒரு சண்டையாக, “இனப்படுகொலைக்கு" ஒரு விடையிறுப்பாக, “மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகத்திற்கான" சிலுவைப்போராக முன்வைக்கப்படுகின்றன. போலி-இடதுகளும் மற்றும் முன்னாள் அமைதிவாதிகளும் ஏகாதிபத்திய போர்களை ஆதரிப்பதற்கான முன்பினும்-புதிய நியாயப்பாடுகளைக் கலந்தாலோசிப்பதிலும் மற்றும் அவற்றை மனிதாபிமான முயற்சிகளாக பெருமைப்படுத்துவதிலும் ஒருவரையொருவர் விஞ்சி நிற்கின்றனர். நிராயுதபாணியான நகர்புறங்கள் மற்றும் கிராமங்கள் மீது குண்டுவீசுவதை நியாயப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை, “பாதுகாப்பதற்கான கடமைப்பாடு" என்ற ஒரு புதிய கொள்கை விளக்கத்தைக் கண்டுபிடித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் ஏகாதிபத்தியம் உருவாக்கியுள்ள நரக வாழ்க்கையிலிருந்து தப்பிக்க முயலும் அகதிகளின் உள்வரவோடு சேர்ந்து, அப்போரின் யதார்த்தம் ஐரோப்பாவின் மையத்தை எட்டியுள்ளது. ஒரு ஐரோப்பிய நாடு மாற்றி ஒன்று என, இத்தகைய அவலநிலையில் உள்ளவர்கள் மீது அரசு கையாளும் ஈவிரக்கமற்றத்தன்மையும் காட்டுமிராண்டித்தனமும் இம்முறை ஒரேயடியாக மனிதாபிமானத்தன்மையின் முகத்திரையைக் கிழித்தெறிந்துள்ளது. நூறாயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உத்தியோகப்பூர்வமாக கையாளப்படும் விதத்தைக் கண்டு ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் சீற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

அக்கடல் நடுவே அபாயகரமான பயணத்தில் உயிர்பிழைப்பவர்கள், வாரக் கணக்கில் வலிநிறைந்த கொடூர அனுபவத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும்: மீண்டும் மீண்டும், மூடிய எல்லைகள், சுருள்சுருளான முள்கம்பிகள் மற்றும் பாதுகாப்புப்படைகளின் வசைமொழிகளைத் தாண்டி, Kafkaesque அதிகாரத்துவத்தின் கரங்களில் எதேச்சதிகார முறைகள் மற்றும் பெரும்பாலும் வன்முறையாக கையாளப்படுவதைச் சகித்து, நூற்றுக் கணக்கான மைல்கள் நடையாக நாட்கணக்கில் நடந்து வந்து முடிவில், குறைந்தபட்ச சுகாதார தரங்கள் கூட இல்லாமல் தடுப்புக்காவல் முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

இரண்டாம் உலக போர் முடிவிற்குப் பின்னர் ஐரோப்பாவில் பார்த்திராத உத்தியோகப்பூர்வ இரக்கமற்ற கடுமையும் மற்றும் தாங்கொணா மனித அவல காட்சிகளும் திரும்ப திரும்ப ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன: ஆயிரக் கணக்கானவர்கள் குளிரிலும் மழையிலும் நடந்து வருகின்றனர்; கைக்குழந்தைகளோடு குடும்பங்கள் எல்லைகளில் தவிர்க்கின்றனர், அந்த தரப்பிடமின்றி உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்காமல் சேற்றில் நிற்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

மேற்கு ஐரோப்பாவின் செல்வசெழிப்பான நாடுகளில் கூட இந்த கொடூரமான அனுபவங்கள் தொடர்கின்றன. இங்கிலாந்து அதன் எல்லைகளை மூடி வருகிறது, அது அடுத்த ஐந்தாண்டுகளில் வெறுமனே 20,000 அகதிகளைஅதாவது ஆண்டுக்கு அதிகபட்சம் 4,000 நபர்களைஉள்ளெடுக்கும்.

1945 மற்றும் 1950க்கு இடையே போரால் சீரழிக்கப்பட்டிருந்த ஜேர்மனி 12 இல் இருந்து 14 மில்லியன் அகதிகளை ஏற்றுக் கொண்டது, ஏறத்தாழ அவர்களில் பாதி பேர் முன்னாள் கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்தவர்கள். இன்றோ, மிகப் பணக்கார நாடுகள் என்று கருதப்படுபவை கூட, இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து வந்துள்ள 600,000 இல் இருந்து 800,000 அகதிகளை ஏற்பதை மிக அதிகளவாக கூறிக் கொள்கின்றன.

ஜேர்மன் நகரங்களில் உள்ள அகதி முகாம்களில் மிகவும் நாசகரமான நிலைமைகள் மேலோங்கியுள்ளன. ஹம்பேர்க்கிலும் மற்றும் பல ஏனைய நகரங்களிலும், ஆயிரக் கணக்கானவர்கள் வெப்பமூட்டாத, குளிர்ச்சியான மற்றும் அசௌகரியமான கூடாரங்களில் வாழ்கின்றனர். பேர்லினில், போதிய ஒத்துழைப்பின்றி அவர்கள் பதிவு செய்வதற்காக வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. போர் மற்றும் குழப்பங்களால் நாட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கு உதவுவதற்காக, மனிதர்கள் மீது கொண்ட இரக்கவுணர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தால் உந்தப்பட்ட சுயஆர்வலர்களை, அதிகாரிகள் அதைரியமூட்டி பலவீனப்படுத்துகின்றனர்.

அகதிகளை முறைகேடாக நடத்துவதென்பது ஓர் அணுகுமுறையாகும், இது முதலாளித்துவத்தின் உண்மையான முகத்தை எடுத்துக்காட்டுகிறது. நலிந்துபோன வங்கிகளை மீட்டெடுக்க ஒரேயிரவில் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களைச் செலவிடும் ஒரு சமூகம், அதுவும் அதிலிருந்து பில்லியனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், அகதிகளை ஏற்கவும் மற்றும் அவர்களுக்குக் கண்ணியமான நிலைமைகளை வழங்கவும் ஆதார வளங்கள் இல்லை என்று கூறுகிறது. இணையம், உலகளாவிய விமானச் சேவை மற்றும் பூகோளமயப்பட்ட பொருளாதார சகாப்தத்தில், இடம்பெயர்ந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு இருக்க இடம், உணவு, வேலைவாய்ப்பு அல்லது வாழ்வதற்கே உரிமையில்லாமல் உள்ளது.

முன்னணி ஐரோப்பிய அரசியல்வாதிகளும் மற்றும் பிரபல பிரமுகர்களும் ஒரு வலது-சாரி இயக்கத்தை ஸ்தாபிக்க சமூகத்தின் கசடுகளை ஒன்றுதிரட்டுவதற்காக அகதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் சமூகத்தின் அரசியல்ரீதியில் முற்போக்கான ஒட்டுமொத்த கூறுபாடுகளுக்கும் எதிராக திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர்.

அவர்கள் அகதிகளுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கங்களைப் பரப்புகின்றனர் (ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன்), சட்டவிதிமுறைகளுக்கு அப்பால் "அவசர கால நடவடிக்கைகளைக்" கொண்டு அச்சுறுத்துகின்றனர் (பவேரிய பிரதம மந்திரி ஹோர்ஸ்ட் சீஹோபெர்), “திமிர் பிடித்திருப்பதாக" அகதிகளைக் கண்டிக்கின்றனர் (ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர்), மற்றும் அன்னிய கலாச்சாரங்களால் சமூகத்தின் அடித்தளம் சீரழிக்கப்படுவது குறித்து அச்சுறுத்துகின்றனர் (ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி).

அவர்களது வாய்ஜம்பம் 1938 இவியான் (Evian) அகதி மாநாட்டை நினைவூட்டுகிறது, அங்கே 32 நாடுகளின் பிரதிநிதிகள் நாஜி ஜேர்மனியிலிருந்து வெளியேறிய யூதர்களைக் கையாள்வது குறித்து விவாதிக்க ஒன்றுகூடினர். முக்கியமாக அவர்கள் தங்களின் எல்லைகளை மூடியதோடு, மக்கள் நெரிசல், அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் அவர்களது சொந்த எல்லைக்குள் கலாச்சார மற்றும் இன ஸ்திரப்பாட்டைப் பேணுவதற்கான அவசியம் குறித்து காரணம் காட்டி அவர்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்தினர். இந்த முடிவுக்காக விரைவிலேயே மில்லியன் கணக்கான யூதர்கள் அவர்களின் வாழ்வை விலையாக கொடுக்க வேண்டியிருந்தது.

முதலாளித்துவ அமைப்புமுறையின் எதிர்காலம், சகல உழைக்கும் மக்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் வழங்க இருப்பதை அகதிகளின் கதி முன்கூட்டியே எடுத்துக்காட்டுகிறது: அதாவது ஒடுக்குமுறை, வறுமை மற்றும் போர். இது ஏற்கனவே கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களை அழித்துள்ள கடுமையான சிக்கன திட்டங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ஜூலை 2014 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பிரசுரித்த "சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்" எனும் அறிக்கை, ஏகாதிபத்திய சக்திகள் உலகை மறுபங்கீடு செய்வதற்கான அவற்றின் சூறையாடும் பாய்ச்சலைத் தீவிரப்படுத்தியதன் மூலமாக 2008 உலகளாவிய நிதியியல் உடைவுக்கு விடையிறுத்திருப்பதைக் குறித்து எச்சரித்தது.

ICFI எழுதியது: “நேரத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் அவை மனித அவலங்கள் மீது அவர்களின் அலட்சியத்தை நிரூபித்துள்ளன. இப்போது, ஏகாதிபத்திய நெருக்கடியில் பண்புரீதியிலான ஒரு புதிய கட்டம் வந்துள்ளதுஇதில் பிரதான சக்திகள் அணுஆயுத மோதலை உயர்த்தி வருகின்றன...

உலகளாவிய மட்டத்தில் ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை பகுத்தறிவுடனான ஒரு அடிப்படையில் ஒருங்கிணைப்பதும், இவ்வாறாய் உற்பத்தி சக்திகளின் ஒத்திசைவான அபிவிருத்தியை உறுதி செய்வதும், முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியமற்றது என்பதையே ஏகாதிபத்திய மற்றும் தேசிய அரசு நலன்களிடையிலான மோதல் வெளிப்படுத்துகிறது. எப்படியிருப்பினும், ஏகாதிபத்தியத்தை  அதன் முடிவின் எல்லைக்கு இட்டுச்செல்லும் அதே முரண்பாடுகள் தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலையான உத்வேகத்தையும் வழங்குகின்றது. உற்பத்தியின் உலகமயமாக்கமானது தொழிலாள வர்க்கத்தின் பாரியதொரு பெருக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. எந்த தேசத்திற்கும்  விசுவாசத்திற்கான கடமைப்பாடற்ற இந்த சமூக சக்தி மட்டுமே போருக்கு மூலகாரணமாய் திகழும் இலாப அமைப்புமுறைக்கு ஒரு முடிவு கட்டத் திறன்படைத்ததாகும்.”

அகதிகளின் தலைவிதி இந்த மதிப்பீட்டை உறுதி செய்துள்ளது. மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய போர்களின் விளைவுகள் ஐரோப்பாவை எட்டியுள்ளன. ஆளும் உயரடுக்குகள் கூர்மையாக வலதிற்கு நகர்வதன் மூலமாகவும், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அவற்றின் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதன் மூலமாகவும் விடையிறுக்கின்றன.

அகதிகளின் பாதுகாப்பு என்பது பிரிக்கவியலாதவாறு போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. ICFI அறிக்கை அறிவித்ததைப் போல: “சமூக ஏற்றத்தாழ்வு பெருகுவது, எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களில் சென்றுமுடிவது என தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற அத்தனை மிகப்பெரும் பிரச்சினைகளுமே இந்தப் போராட்டத்தின் பிரிக்கவியலாத பாகங்களே ஆகும். போருக்கு எதிரானதொரு போராட்டமில்லாமல் சோசலிசத்திற்கான எந்தப் போராட்டமும் இருக்க முடியாது, சோசலிசத்துக்கான போராட்டமில்லாமல் போருக்கு எதிரான எந்தப் போராட்டமும் இருக்க முடியாது.”