சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Netanyahu’s apology for Hitler

ஹிட்லரை நெத்தன்யாஹூ பாதுகாக்கின்றார்

Jean Shaoul
23 October 2015

Use this version to printSend feedback

செவ்வாயன்று இஸ்ரேல் பிரதம மந்திரி பென்யமின் நெத்தன்யாஹூ, ஹிட்லரது இறுதி தீர்வுக்கு (Final Solution) பாலஸ்தீன தேசிய தலைமை மீது பழிச்சுமத்தினார். ஜெருசலேமில் 37வது உலக யூத மாநாட்டில் உரையாற்றுகையில், அவர் விஷவாயு கூடங்களில் நடத்தப்பட்டவை உட்பட ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்களின் படுகொலை ஹிட்லரின் யோசனை அல்ல, மாறாக அது ஜெருசலேமின் முஸ்லீம் பகுதிகளின் தலைவராக இருந்த அந்நகர தலைமை மதகுருமாரின் யோசனை என்று தெரிவித்தார்.

நெத்தன்யாஹ் பின்வருமாறு கூறினார், “அந்நேரத்தில் ஹிட்லர் யூதர்களைப் படுகொலை செய்ய விரும்பவில்லை, அவர் யூதர்களை வெளியேற்றவே விரும்பினார். ஆனால் ஹஜ் அமின் அல்-ஹூசைனி ஹிட்லரிடம் சென்று, 'நீங்கள் அவர்களை வெளியேற்றினால், அவர்கள் அனைவரும் இங்கே [பாலஸ்தீனத்திற்கு, அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது] வருவார்கள்,' என்றார். [அதற்கு ஹிட்லர் வினவினார்], 'அவ்வாறாயின் அவர்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?'. அதற்கு [ஹூசைனி] 'அவர்களை எரித்துவிடுங்கள்' என்றார்.”

ஹிட்லர் மற்றும் ஹூசைனிக்கு இடையிலான உரையாடலின் இந்த மொத்த விபரங்களும் பொய்யாகும்.

ஹூசைனி ஒரு முதலாளித்துவ தேசியவாத தலைவராவார், அவர் பிரிட்டிஷ்க்கு எதிராக ஜேர்மனியின் ஆதரவை நோக்கி திரும்பியிருந்தார். அதுவோ 1917 இல் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தாய்நாட்டை உருவாக்க சூளுரைத்திருந்தது. அவர் பாலஸ்தீனத்தில் யூத நாடு ஒன்றின் உருவாக்கத்தையும் மற்றும் பாலஸ்தீனத்திற்குள் யூதர்களின் புலம்பெயர்வு இரண்டையுமே எதிர்த்ததுடன், நவம்பர் 28, 1941 இல் ஹிட்லரைச் சந்தித்தார். ஆனால் அந்த சந்திப்பைக் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை அதுபோன்ற எந்த கருத்துக்களையும் குறிப்பிடவில்லை. உண்மையில் இறுதி தீர்வு பல ஆண்டுகளாக மூடிமறைக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்து அவர் அறிந்திருந்தாரா என்பதற்கே கூட அங்கே எந்த ஆதாரமும் இல்லை.

யூதர்களை நிர்மூலமாக்கும் திட்டம் ஹிட்லரின் திட்டமாகும். ஜனவரி 1939 இல், ஹூசைனி உடனான சந்திப்புக்கு இரண்டுக்கு அதிகமான ஆண்டுகளுக்கும் முன்னரே, ஹிட்லர் நாஜி ஜேர்மனியின் நாடாளுமன்றமான Reichstag இல் உரையாற்றுகையில், யூத இனத்தை இல்லாதொழிக்கும் அவரது உள்நோக்கம் குறித்து தெளிவாக பேசியிருந்தார்.

நெத்தன்யாஹூ கருத்துக்களுக்கு வரலாற்றாளர்கள், இஸ்ரேலின் இனப்படுகொலையில் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் சர்வதேச அரசியல்வாதிகளால் வெளியிடப்பட்ட கண்டனங்கள் அண்மித்தளவில் ஒரேமாதிரியாக இருந்தது. அவர் பகிரங்கமாக தன்னைதானே ஹிட்லருக்கு வக்காலத்துவாங்குபவர்களுடன் இணைத்துக் கொண்டுள்ளார். “ஹிட்லர் மனநோயாளி அல்ல, அவர் வக்கிரமானவரும் கிடையாது,” என்று அறிவித்த நாஜி ஆதரவாளரான ஏர்ன்ஸ்ட் நோல்டவிற்கு ஆதரவாக வந்துள்ள பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஐரோப்பிய வரலாற்று பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி போன்ற பிற்போக்குத்தனமான சக்திகளின் வரிசையில் அவர் அணிசேர்ந்துள்ளார். ஹிட்லரின் சமாதானமான உள்நோக்கங்கள் குறித்த இதுபோன்ற பொய்களானால், ஒவ்வொரு நவ-பாசிசவாதியும் இப்போது அவர்களது கண்ணோட்டங்களை முன்வைக்க சுதந்திரமுள்ளதாக உணர்வார்.

புதனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் நெத்தன்யாஹூவிற்கு அடுத்து நின்றிருந்த, தர்மசங்கடத்திற்கு ஆளான, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், யூதப்படுகொலைக்கு ஜேர்மனியர்களே பொறுப்பு என்றார். அவரது செய்தி தொடர்பாளர் ஸ்ரெபான் சைய்பேர்ட் கூறுகையில், “நாஜிக்களின் கொடூரமான இனவெறியின் வரலாறு எல்லா ஜேர்மனியர்களுக்கும் தெரியும், அந்த இனப்படுகொலை மனித நாகரீகத்தையே முறிவதற்கு இட்டுச் சென்றது…. மனிதயினத்திற்கு எதிரான இந்த குற்றத்திற்கு பொறுப்பு ஜேர்மன் தான், முற்றிலும் நாம் தான் இதற்கு பொறுப்பு என்பதை நாம் அறிவோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஹிட்லர் குறித்த நெத்தன்யாஹூவின் அனுதாபம் முன்னேற்பாடற்ற ஒரு கருத்தல்ல, மாறாக அது தயாரிக்கப்பட்ட ஓர் உரையின் பாகமாக இருந்தது. அதேபோல இந்த கருத்தை அவர் கூறுவது இது முதல் முறையும் அல்ல. ஹூசைனியை இறுதி தீர்வின் "முன்னணி வடிவமைப்பாளர்களில் ஒருவராக" குறிப்பிட்டு, 2012 இல் இதேபோன்றவொரு குற்றச்சாட்டை அவர் செய்திருந்ததும் அவரது கணக்கில் உள்ளது.

உண்மையில் நெத்தன்யாஹூவின் வரலாற்று திருத்தல்வாதத்தின் பிரதான இலக்கு அந்த தலைமை மதகுரு அல்ல. அவரது நோக்கம் நாஜிக்களது குற்றங்களைப் பாலஸ்தீனர்களின் மீது சுமத்துவதற்கு குறைவான ஒன்றுமில்லை.

அந்த இனப்படுகொலைகளுக்கான எவ்விதமான பொறுப்பும் பாலஸ்தீனர்களை சாராது. அது, இரண்டாம் உலக போர் வெடிப்பு நிலைமைகளின் கீழ், ஜேர்மன் ஏகாதிபத்தியம் முக்கியமாக பொறுப்புக்கூறவேண்டிய ஐரோப்பிய முதலாளித்துவ சமூக முரண்பாடுகளின் விளைபொருளாக இருந்தது. நாஜிக்களது இனப்படுகொலை காட்டுமிராண்டித்தனம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரண்டு நிகழ்வுபோக்குகளான சோசலிச தொழிலாளர் இயக்கம் குறித்த முதலாளித்துவ வர்க்கத்தின் அச்சங்கள், மற்றும் அரசியல்ரீதியில் யூத-எதிர்ப்புவாதத்திற்கு பரிணாமம் கொடுத்த ஐரோப்பிய யூத-வெறுப்பின் நீண்டகால மற்றும் நச்சுத்தன்மையான மரபியத்திலும் இருந்து எழுந்தது.

நெத்தன்யாஹூவின் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களின் அரசியல் நோக்கம் வெளிப்படையானது: இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன பிரஜைகளையும் மற்றும் குடியிருப்போரையும் நடைமுறையில் இராணுவ ஆட்சியின் கீழ் நிறுத்தும் முறைமைகளை அறிவித்திருப்பதுடன் சேர்ந்து, அவரது அரசாங்கம் இஸ்ரேலை ஓர் உள்நாட்டு போரில் காலூன்ற செய்துள்ள இந்த ஒருசில நாட்களுக்குப் பின்னர் தான் அக்கருத்துக்கள் வந்துள்ளன. நெத்தன்யாஹூவின் அடிப்படை பழிசுமத்தல் வலியுறுத்துவதைப் போல, அந்த இனப்படுகொலைக்கு பாலஸ்தீனர்கள் தான் பொறுப்பென்று ஆகிவிட்டால், பின்னர் அவர்களைத் தோற்கடிக்க நடந்துவரும் சண்டையில் "என்ன வேண்டுமானால் செய்யலாம்" என்றாகின்றது.

ஏற்கனவே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், காசாவில் குடியிருப்போருக்கு மருத்துவ கவனிப்பு, எரிபொருள் மற்றும் கட்டுமான பொருட்கள் உட்பட மிக அத்தியாவசிய பொருட்களைக் கூட மறுத்து, அதை வார்சோ சேரிகளைப் போலவே ஒரு திறந்த-வெளி சிறைச்சாலை என்பதற்கும் சற்று மோசமான நிலையில் வைத்து, காசா மீது எட்டாண்டுகால முற்றுகையைப் பேணுகின்றன. கடந்த ஆண்டு 2,000 க்கும் அதிகமான காசாவாசிகள் "Operation Protective Edge” எனும் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர், அந்த ஒட்டுமொத்த பகுதியையும் வெறும் இடிபாடுகளாக்கிவிட்ட ஒரு குண்டுவீச்சு நடவடிக்கையில் 11,000 பேர் காயமுற்றனர் மற்றும் 520,000 பேர் இடம்பெயர்த்தப்பட்டனர். நெத்தன்யாஹு அடுத்து என்ன பேரழிவை உருவாக்க உள்நோக்கம் கொள்கிறார் என்பதை ஒருவரால் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்.

நெத்தன்யாஹூவின் கண்ணோட்டங்கள் ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளன. ஜேர்மனி, இத்தாலி மற்றும் போலாந்தின் பாசிச ஆட்சிகளை முன்மாதிரியாக கொள்ள முயன்ற விளாடிமீர் ஜபோடின்ஸ்கி (Vladimir Jabotinsky) ஆல் 1920களில் பாலஸ்தீனத்தில் நிறுவப்பட்ட லிகுட் கட்சிக்கு (Likud party) அவர் தலைமை கொடுக்கிறார், ஹீருட் கட்சி (Herut party) மற்றும் அதிதீவிர வலது சாரி திருத்தல்வாத கட்சி (Revisionist party) ஆகியவை அதன் அரசியல் முன்னோடி அமைப்புகளாக இருந்தன. ஒரு திருத்தல்வாத கட்சியின் ஆதரவாளரான நெத்தன்யாஹூவின் தந்தை பின்னர் ஜபோடின்ஸ்கியின் அந்தரங்க காரியதரிசி ஆனார்.

சர்வாதிகாரிகளின் சகாப்தத்தில் யூத இனப்படுகொலை என்ற புத்தகத்தில் லென்னி பிரென்னர் மிகவும் விபரமாக விவரிப்பதைப் போல, திருத்தல்வாதிகள் ஐரோப்பிய யூதர்களின் படுகொலையை எதிர்த்து ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை, அதற்கு பதிலாக யூதத் திட்டத்தை நிலைத்திருக்கக்கூடியதாக செய்வதற்கு அவசியமான பாலஸ்தீனத்திற்குள்ளான பாரிய புலம்பெயர்வை நடத்துவதற்காக பாசிஸ்டுகளுக்கு ஒத்துழைத்தனர்.

இர்குன் (Irgun) மற்றும் ஸ்டெர்ன் (Stern) கும்பல்களைக் கொண்டு திருத்தல்வாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் அவற்றின் தலைவர்கள் Menachem Begin மற்றும் Yitzhak Shamir பின்னர் பிரதம மந்திரிகளானார்கள்அவற்றின் நடவடிக்கைகள் தொழிற்கட்சி யூதவாதிகளால் (Labour Zionists) ஒப்புதல் வழங்கப்பட்டன. Begin இழிபெயரெடுத்த டெர் யாசின் படுகொலைக்குத் தலைமை வகித்தார், அங்கே மொத்த கிராமங்களில் குடியிருந்த 254 பேர் கொல்லப்பட்டனர், அது இஸ்ரேல் அரசை ஸ்தாபிப்பதற்கு ஒரு இன்றியமையாத முன்நிபந்தனையாக, பாலஸ்தீனர்களை அவர்கள் வீட்டை மற்றும் நிலங்களை விட்டு வெளியேற்றுவதில் ஒரு பிரதான பாத்திரம் வகித்தது.

அந்த யூத அரசின் ஆரம்ப ஆண்டுகளில் அவை அரசியல்ரீதியில் மதிப்பிழந்த சக்தியாக இருந்தபோதினும், திருத்தல்வாதிகள், பின்னர் ஹீருட் என்றும் இறுதியில் லிகுட் என்றும் மாறிய அவர்கள், 1967 போரின் போது ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் தொழிற் கட்சியுடன் இணைந்தனர். 1977 தேர்தல்களில் தொழிற்கட்சியைத் தோற்கடித்ததற்கு பின்னர், அவற்றின் தலைவர்கள் கடந்த 38 இல் 32 ஆண்டுகள் (லிகுட் என்றோ அல்லது அதன் வழிதோன்றல் கதிமா என்றோ) அதிகாரத்தில் இருந்து வந்துள்ளனர்.

நெத்தன்யாஹூ அவரது தந்தைவழியில், பாலஸ்தீனத்தில் தற்போது குடியிருப்போரை வெளியேற்றி அல்லது நிர்மூலமாக்கி அதை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதற்காக, ஹிட்லரைக் குறித்து திருத்தல்வாதிகளால் அரிதாகவே மூடிமறைக்கப்பட்டிருந்த அவர்மீது கொண்டிருந்த மதிப்பையும் மற்றும் அவர்களது திட்டத்தையும் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறார். அவர் பிரதம மந்திரியாக இருந்த ஒன்பது ஆண்டுகளில், இஸ்ரேலிய அரசியலை முன்பினும் அதிகமாக வலதிற்கு நகர்த்தியுள்ளார், இது உச்சக்கட்டமாக அதிதீவிர தேசியவாத குடிபெயர்வு இயக்கம் மற்றும் மதவாத வெறியர்களை உருவாக்கி உள்ளது, பாலஸ்தீனர்கள் மீதான இவர்களது வன்முறை தாக்குதல்கள் பெரிதும் தண்டிக்கப்படாமலேயே போயுள்ளன.

அதுபோன்றவொரு மனிதர் இஸ்ரேல் தலைவராக இருந்து படைகளுக்குத் தலைமை கொடுக்கிறார் என்பது ஒரு நோயுற்றிருக்கும் சமூகத்தின் அடையாளமாகும். இது, ஐரோப்பாவில் யூத-எதிர்ப்புவாதம் மற்றும் படுகொலைகளில் பாதிக்கப்பட்ட யூதர்கள் அவற்றிலிருந்து விடுதலை காணலாம் என்றரீதியில், பாலஸ்தீனர்களைத் தொடர்ந்து படுகொலை செய்வதன் மூலமாக மற்றும் வெளியேற்றுவதன் மூலமாக, உலக யூதர்களுக்கான தாய்நாட்டை உருவாக்கும் இழிவார்ந்த யூதவாத முன்னோக்கின் தோல்வியால் உள்வெடிக்கும் புள்ளிக்கு உந்தப்பட்டுள்ளது.

அதன் மொத்த குடிமக்களுக்கான சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அர்த்தப்படுத்துவதற்கு மாறாக, இஸ்ரேல் என்பது, இனச்சுத்திகரிப்பு, போர் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கான ஒரு மூலச்சொல்லாக மாறியுள்ளது. அது ஆழமாக துண்டாடப்பட்ட சமூகமாகவும், அபிவிருத்தி அடைந்த உலகில் சமூகரீதியில் மிகவும் துருவமுனைப்பட்ட சமூகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. யூத அரசின் விளைபொருளாக உள்ள அதிதீவிர வலதுசாரி படைகளால் பாலஸ்தீனர்களின் படுகொலை மற்றும் அவர்களது சொத்துக்களைச் சீரழித்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான இனவாத தாக்குதல்கள் மற்றும் ஏனைய வன்முறை நடவடிக்கைகள் ஆகியவை ஐரோப்பிய யூதர்களின் முந்தைய தலைமுறை எதிலிருந்து தப்பியோடியதோ அதே சர்வாதிகாரம், சேரி பிரதேசங்கள், இனப்படுகொலைகள் மற்றும் உள்நாட்டு போர் ஆகியவற்றிற்கான நிலைமைகளை இஸ்ரேலுக்குள் மறுஸ்தாபிதம் ஆவதை மெய்ப்பிக்கிறது.

இஸ்ரேலிய சமூகத்தின் கொடிய முரண்பாடுகளிலிருந்து வெளியே வருவதற்கு அங்கே ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது. அது, அப்பிராந்தியத்தின் மக்களையும் மற்றும் பொருளாதாரங்களையும் பிளவுபடுத்தி வைத்திருக்கும் செயற்கையான எல்லைகளைக் கிழித்தெறிந்து ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதற்காக, அரபு மற்றும் யூத தொழிலாளர்களை முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதாகும். வெளிநாட்டு முதலாளிமார்கள் மற்றும் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் இலாபகர உந்துதலால் எரியூட்டப்பட்டுள்ள போர்கள் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து அப்பிராந்திய தொழிலாளர்கள், இவ்வழியில் மட்டுமே தங்களைத்தாங்களே விடுவிக்க முடியும்.

The author also recommends:

A critical review of Daniel Goldhagen's Hitler's Willing Executioners

The political dead end of Labour Zionism

Imperialism and the political economy of the Holocaust