சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

EU-Balkan summit seals off refugee escape routes

ஐரோப்பிய ஒன்றியம்-பால்கன் மாநாடு அகதிகள் தப்பிக்கும் வழிகளை மூடுகிறது

Peter Schwarz
27 October 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று புருசெல்ஸில், 10 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லாத மூன்று நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பாவிற்குள் அகதிகள் நுழைவதைத் தடுத்து அவர்களைத் திரும்ப அவர்களது சொந்த நாட்டிற்கே திரும்ப அனுப்புவதற்காக பால்கன் பாதைகள் என்றழைக்கப்படுவதில் அகதிகளின் நகர்வைக் கட்டுப்படுத்த 17 அம்ச திட்டம் ஒன்றுக்கு ஒப்புக் கொண்டனர்.

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் மேலாதிக்கம் மற்றும் சூறையாடலுக்காக நடத்தப்பட்ட மத்திய கிழக்கு போர்கள் உருவாக்கிய மனிதகுல பேரழிவுக்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் மூர்க்கமான விடையிறுப்பில் இந்த உடன்படிக்கை சமீபத்திய அத்தியாயமாகும். ஜனநாயக அரசாங்கங்கள் என்று கூறிக் கொள்ளும் இவை, பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்தவும், எல்லைகளை மூடவும், தடுப்புக்காவல் முகாம்களைக் கட்டமைக்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட அகதிகளை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அதே போர் பகுதிகளுக்குத் திரும்ப அனுப்பவும் நகர்ந்து வருகின்றன.

சமீபத்திய வாரங்களில் பால்கன் பாதைகளில் உள்ள அரசாங்கங்கள், அகதிகளை அதைரியப்படுத்தவும், அவர்கள் எல்லை கடந்து வருவதைத் தடுக்கவும் மற்றும் சாத்தியமான அளவற்கு விரைவாக அவர்களை அண்டைநாடுகளுக்குள் தள்ளவும் ஒன்று மாற்றி ஒன்றாக தடைகளைக் கட்டமைத்து வருகின்றன. சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களால் ஐரோப்பாவிற்குள் புகலிடம் கோரி மக்கள் வெள்ளமென வருவது குறையாத போது, ஐரோப்பிய அரசுகள் அவற்றின் எல்லைகளை மூடின, அல்லது, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவைப் போலவே, அவற்றின் எல்லை கட்டுப்பாடுகளை இறுக்கின, இதனால் தஞ்சம் கோரி வந்த பத்தாயிரக் கணக்கானோர் பேரழிவுகரமான நிலைமைகளின் கீழ் தவிக்க விடப்பட்டுள்ளனர்.

மிக பயங்கரமான காட்சிகள் கட்டவிழ்ந்தன. அகதிகள் பல நாட்களான நடைபயணத்தின் பின்னர் இறுதியில் மேற்கொண்டு முன்னேற இயலாதவாறு தடுக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பு படைகளால் அவமதிக்கப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டனர். முன்னேற அனுமதிக்கப்பட்டதும், அவர்கள் நூற்றுக் கணக்கான மைல்கள் நடந்தே செல்ல வேண்டி இருந்ததுடன், குளிர்தாங்கும் உடைகளோ அல்லது தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற பாதுகாப்போ இன்றி திறந்தவெளியிலேயே படுத்துறங்க வேண்டியிருந்தது. நீண்ட தூரத்திற்கு அவர்களோடு பயணித்ததுடன், புலம்பெயர்வோருக்கு உதவ மிகப்பெரும் தனிப்பட்ட தியாகங்களைச் செய்த சுய-ஆர்வலர்கள் அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.

சேர்பியாவிலிருந்து ஆஸ்திரியாவிற்கு பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் கடந்துவரும் வழியில் அமைந்துள்ள ஹங்கேரி செப்டம்பர் மத்தியில் அதன் எல்லைகளை உள்நுழையவியலாதவாறு மூடியபோது, அகதிகள் அவர்களது பயணத்தைக் குரோஷியா மற்றும் ஸ்லோவேனியா வழியாக தொடர முயன்றனர். அப்போதிருந்து சுமார் 230,000 புலம்பெயர்வோர் குரோஷியாவில் மட்டும் கணக்கிடப்பட்டுள்ளனர். கடந்த எட்டு நாட்களில், 62,000 பேர் ஸ்லோவேனியாவை எட்டியுள்ளனர்.

ஐரோப்பிய அரசாங்கங்கள் பரஸ்பர அவமதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கொண்டு அவற்றின் எல்லைகளை மூட விடையிறுத்துள்ளன. ஸ்லோவேனிய பிரதம மந்திரி மிரோ சிரார் கூறுகையில், ஏதேனும் பொதுவான தீர்வு காணவில்லை என்றால், "உள்ளது உள்ளவாறே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவே முடிந்து போகுமென" எச்சரிக்கும் அளவுக்கு அம்மோதல்கள் மிகவும் தீவிரமாக மாறியிருந்தன.

ஜேர்மனியால் அழுத்தமளிக்கப்பட்டு, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் அப்பதட்டங்களைத் தணிக்க புருசெல்ஸில் கூட்டத்தை ஒழுங்கமைத்தார். ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, லுக்சம்பேர்க் மற்றும் பால்கன் அரசுகளான ஸ்லோவேனியா, குரோஷியா, ஹங்கேரி, ரோமானியா, பல்கேரியா மற்றும் கிரீஸ் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தில் அல்லாத சேர்பியா, மசடோனியா மற்றும் அல்பானியாவும் அக்கூட்டத்தில் பங்குபற்றின.

மணிக் கணக்கிலான சூடான விவாதங்களுக்கு பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அகதிகள் முகங்கொடுக்கும் நிலைமையை இன்னும் படுமோசமாக்க கூடியதாகவும் மற்றும் தஞ்சம் கிடைப்பதற்கான அவர்களது வாய்ப்புகளைக் குறைப்பதாகவும் இருந்தன.

ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு முகமையான Frontex ஐ ஆயத்தப்படுத்துவதைக் கொண்டு எல்லா எல்லைகளும் இன்னும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட உள்ளன, ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து 400 எல்லையோர காவற்படையினர் இவ்வாரம் ஸ்லோவேனியாவிற்கு அனுப்பப்பட உள்ளனர். பெரும்பாலான அகதிகள் உள்நுழையும் பாதையான கிரேக்க-துருக்கிய எல்லைகளை ஒட்டி, அத்துடன் துருக்கிய-பல்கேரிய எல்லையோரத்திலும் கடல்ரோந்து படையினர் பலப்படுத்தப்பட உள்ளனர். மசடோனியா மற்றும் அல்பேனியா உடனான கிரேக்க எல்லை புதிய Frontex நடவடிக்கைகளைக் கொண்டு பாதுகாக்கப்பட உள்ளது.

யூரோபோல் மற்றும் இன்டர்போல் இரண்டும் பால்கன் பகுதியில் ஈடுபடுத்தப்பட உள்ளன என்பதுடன், “ஆட்கடத்துபவர்களை" எதிர்கொள்ள பயன்படுத்தப்படும்.

எதிர்காலத்தில், சகல அகதிகளும் மற்றொரு நாட்டிற்கு தொடர்ந்து செல்வதற்கு முன்னதாக அவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டி இருக்கும். “பதிவு செய்யவில்லை என்றால், உரிமைகள் கிடையாது,” என்று ஜூங்கர் தெரிவித்தார்.

இது நீண்டகால விளைவுகளைக் கொண்டுள்ளது. இது ஜேர்மனி மற்றும் ஏனைய மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுக்கு எந்நேரத்திலும் அகதிகளை வெளியேற்ற வசதியான நிலைமைகளை உருவாக்குகின்றன. புலம்பெயர்வோர்கள், அவர்கள் முதலில் எந்நாட்டில் பதிவு செய்கிறார்களோ அங்கேயே தஞ்சம் கோரி தங்குவதற்குமான உரிமை உண்டு. அகதிகளின் பெரும் எண்ணிக்கையின் காரணமாக இவ்விதி தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றாலும், இப்போதும் அதுவொரு சட்டமாக உள்ளது.

பதிவு செய்வதற்காக, பால்கன் வரும் பாதை எங்கிலும் அகதிகளுக்காக 100,000 பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன, அவற்றில் பாதி கிரீஸில் அமைக்கப்படும். இத்தகைய இடங்கள் நாசூக்காக "ஓய்வு பகுதிகள்" என்றழைக்கப்படுகின்றன, ஆனால் உண்மையில் அவை மிகப்பெரும் முகாம்களாகும், அகதிகள் அங்கே பதிவு செய்யப்படும் வரையில் அல்லது திருப்பி அனுப்பப்படும் வரையில் அங்கேயே தடுத்து வைக்கப்படுவார்கள். கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் இந்தாண்டின் இறுதிக்குள் அதுபோன்ற ஐந்து வரவேற்பு மையங்களை ("அகதிகளின் எல்லைப்புற முகாம்களை") அமைக்க உறுதியளித்துள்ளார்.

நிறைய அகதிகளைத் திருப்பியனுப்புவதற்காக, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவும் ஜேர்மன் அரசாங்கமும் ஆப்கானிஸ்தானுடன் திருப்பியனுப்பும் உடன்படிக்கை ஒன்றை முடிவு செய்ய விரும்புகின்றன. பால்கன் பாதைகளில் வரும் நான்கு அகதிகளில் ஒருவர் இந்நாட்டிலிருந்து வருகிறார்.

ஆகஸ்ட் தொடக்கத்தில், 124,000 ஆப்கானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தனர், இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர் கமிஷனர் தெரிவித்தார். அமெரிக்காவும் ஜேர்மனியும் சமீபத்தில் அவற்றின் இராணுவ இருப்பை விரிவாக்கியுள்ள ஒரு நாட்டின் போரிலிருந்து அவர்கள் தப்பியோடி வருகின்றனர். இப்போது அவர்களில் பலர், எங்கிருந்து அவர்கள் வந்தார்களோ அதே போர் பகுதிகளுக்கு திரும்ப அனுப்பப்பட உள்ளனர்.

அகதிகளின் கதிக்கு ஐரோப்பிய ஆளும் வட்டாரங்கள் காட்டும் பிரதிபலிப்பில் உள்ள ஈவிரக்கமற்றத்தன்மையை, ஒரு பரந்த அரசியல் உள்ளடக்கத்தினுள் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இது, பரந்த மக்கள் பிரிவுகளில், தஞ்சம் கோருவர் மீது செயலூக்கமான அனுதாபம் மற்றும் நல்லிணக்கத்துடன் கூர்மையாக முரண்பட்டு நிற்கிறது.

நாம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதினோம், “அகதிகளுக்கான ஆதரவு மட்டம், அடிப்படை மனிதத்தன்மையின் ஒரு வெளிப்பாடு மட்டுமல்ல.” “அகதிகள் ஒரு சமூக அமைப்புமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், அதே அமைப்புமுறை தான் அவர்களின் சொந்த வாழ்க்கையையும் அச்சுறுத்துகிறது என்பதை பலர் உள்ளுணர்வாக உணர்ந்துள்ளனர்.”

இது அதற்குப் பின்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது. அகதிகள் அலைக்கு ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவின் ஏகாதிபத்திய போர்களே பிரதான காரணம் என்பது வெளிப்படையாக இருந்தாலும், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் அப்பிராந்தியத்தில் அவர்களது இராணுவ தலையீட்டை தீவிரப்படுத்தி வருகின்றன. அகதிகள் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்படுவது, பரந்த பெரும்பான்மை மக்களுக்கு போர், ஒடுக்குமுறை மற்றும் வறுமையைத் தவிர இனி வழங்குவதற்கு வேறொன்றையும் கொண்டிராத ஒரு சமூக அமைப்பு நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடாகும்.

அகதிகளுக்கான ஆதரவு, போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டம், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் பாதுகாப்பு ஆகியவை பிரிக்கவியலாதவாறு ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. என்ன அவசியப்படுகிறதென்றால் சோசலிசத்தைக் கொண்டு முதலாளித்துவ இலாப அமைப்புமுறையை பிரதியீடு செய்ய, உழைக்கும் மக்களை சகல எல்லைகளையும் கடந்து ஐக்கியப்படுத்தும் ஓர் அரசியல் வேலைத்திட்டமாகும்.