சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

US launches South China Sea military provocation against China

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக தென்சீனக் கடலில் இராணுவ ஆத்திரமூட்டலைத் தொடங்குகிறது

By Nick Beams
27 October 2015

Use this version to printSend feedback

தென்சீனக் கடலில் சீனா உரிமைக்கோரும் தீவுகளைச் சுற்றி 12 மைல் கடல்தூரத்திற்குள் ஒரு கடற்படை கப்பலை அனுப்பியதன் மூலமாக, அமெரிக்கா சீனாவிற்கு எதிராக ஒரு பொறுப்பற்ற இராணுவ ஆத்திரமூட்டலைத் தொடங்கி உள்ளது.

உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலையில், ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல் USS லாசென் (Lassen) சீனா ஆக்கிரமித்துள்ளதும் உரிமைகோரியுள்ளதுமான ஸ்பார்ட்லி தீவுக்கூட்டங்களில் சுபி (Subi) மற்றும் மிஸ்சீஃப் (Mischief) கடல்குன்றுகள் உள்ளடங்கிய தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து. சீனா அக்கடலின் நிலத்தை மீள்உரிமைகோரி, அக்கடல் குன்றுகளில் இராணுவத் தளங்களை கட்டமைத்தது. USS Lassen போர்கப்பல், ஒரு P-8A உளவுபார்ப்பு விமானம் மற்றும் ஒரு P-3 உளவுபார்ப்பு போர்விமானத்தையும் தாங்கியிருந்தது. சீனாவிற்கு அதுகுறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்றும், எவ்விதமான சம்பவமும் நிகழவில்லை என்றும் அமெரிக்க ஆதார தகவல்கள் தெரிவித்தன.

அமெரிக்காவிற்கு எதிராக சீனா எவ்விதமான இராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற உண்மை, அந்நடவடிக்கையின் ஆணவமான மற்றும் ஆக்ரோஷமான குணாம்சத்தை எடுத்துக்காட்டுகின்றது. அதற்கு மாறாக, அது சீன ஆட்சியை அவமதிக்கும் நோக்கில் ஒரு முன்கூட்டிய தாக்குதல் வடிவத்தை ஏற்பதுடன், ஒன்று அமெரிக்க கடற்படையை எதிர்கொள்ள வேண்டும் அல்லது மூலோபாயம் மிக்க தென்சீனக் கடலில் சீனாவின் தசாப்தகால பழமையான எல்லை உரிமைகோரல்களை வாஷிங்டன் நிராகரிப்பதற்கு அடிபணிய வேண்டும் என்றவொரு நிலைமைக்கு அதை கொண்டு வந்து நிறுத்துகிறது. தற்செயலாக அன்றி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பொருளாதார கொள்கையைப் பரிசீலிப்பதற்காக ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவினது ஒரு பிரதான கூட்டம் கூடிய போது அந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.

இது USS லாசெனை அனுப்பியதுடன் முடிந்துவிடப் போவதில்லை, மாறாக ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் தொடக்கமாகும் என்று அந்நடவடிக்கை குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஓர் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி சுருக்கமாக விளக்கமளித்தார்.

அமெரிக்க நடவடிக்கைகள், பாரியளவில் சீனாவுடனான ஓர் இராணுவ மோதல் அச்சுறுத்தலையும், அப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள ஒவ்வொரு நாட்டையும் உள்ளிழுக்கும் அணு-ஆயுத நாடுகளுக்கிடையிலான ஒரு போர் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இம்மாத தொடக்கத்தில் ஒரு மூத்த சீனக் கடற்படை அதிகாரி அறிவிக்கையில், சீன இறையாண்மையை மீறும் எந்த சக்தியாக இருந்தாலும் "நேரடியான தாக்குதலை" சந்திக்க வேண்டியிருக்குமென குறிப்பிட்டார். அக்டோபர் 9 அன்று, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிடுகையில், “கடற்போக்குவரத்து மற்றும் விமானம் பறப்பதற்கான சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக என்ற பெயரில், ஸ்பார்ட்லி தீவுகளில் சீனாவின் கடல் எல்லையையோ அல்லது வான்எல்லையையோ மீறுவதற்கு" சீனா "எந்த நாட்டையும் ஒருபோதும் அனுமதிக்காது" என்று எச்சரித்தார்.

அப்பிராந்தியத்திற்குள் அமெரிக்க ஊடுருவலானது, அமெரிக்க இராணுவத்தின்கடற்போக்குவரத்துக்கான சுதந்திரம்" என்ற போலி முழக்கத்தின் கீழ் நடக்கும் ஒரு நீடித்த பிரச்சாரத்தின் விளைவாகும், அத்துடன் கடல்சார் சட்டம் (UNCLOS) மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை வாஷிங்டன் தாங்கி நிற்கிறது என்ற பொய்களும் சேர்க்கப்படுகின்றன. இந்த வலியுறுத்தலின் முழுமையான பாசாங்குத்தனம், அமெரிக்காவே UNCLOS ஐ அங்கீகரிக்கவில்லை என்ற உண்மையால் அம்பலப்படுகிறது.

கடற்படையின் நடவடிக்கைகள் குறித்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஸ் எர்ன்ஸ்ட் பதிலளிக்க மறுத்தார். அவை பெண்டகனால் கையாளப்படுகின்றன என்று தெரிவித்த அவர், தென் சீனக் கடலில் கடற்போக்குவரத்து சுதந்திரம் மீதான முக்கியத்துவம் குறித்து அமெரிக்கா சீனாவிற்குத் தெளிவுபடுத்தி இருக்கிறது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

உலகில் அப்பிராந்தியத்தினூடாக பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்து வருகிறது. சுதந்திர வர்த்தகம் நடப்பதை உறுதிப்படுத்துவதுபூகோள பொருளாதாரத்திற்கே முக்கியமாகும்,” என்றார்.

2003 இல் ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட "பேரழிவுகரமான ஆயுதங்கள்" குறித்த வாதங்கள், மற்றும் 2011 இல் லிபியாவில் கடாபி ஆட்சியைத் தூக்கியெறிவதைப் பின்னின்று தூண்டிவிட அமெரிக்காவினால் பாவிக்கப்பட்ட "மனிதாபிமான" கவலைகள் போன்ற "மிகப் பெரிய பொய்யுடன்" எர்ன்ஸ்ட் இன் கருத்துக்கள் பொருந்தி உள்ளன.

தென் சீனக் கடலில் சீனாவின் எல்லை உரிமைகோரல்களும் மற்றும் அங்கே சமீபத்திய காலத்திய சீரமைப்பு திட்டங்களும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருப்பதாக வலியுறுத்துவது முற்றிலும் அர்த்தமற்றது. அப்பிராந்தியத்தில் பண்டங்களின் சுதந்திரப் போக்குவரத்தைத் தடுப்பதில் சாத்தியமானளவிற்கு சீனாவிற்கு எந்த ஆர்வமும் இருக்க முடியாது, ஏனென்றால் அதன் பொருளாதாரம் சார்ந்துள்ள அதன் ஜீவ-நாடியே அது தான்.

கடந்த மூன்று தசாப்தங்களில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது வாஷிங்டனின் பூகோள மேலாதிக்கத்திற்கு இப்போது மிக முக்கிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற ஏகாதிபத்திய கணக்கீடுகளாலேயே அமெரிக்காவின் இந்த ஆத்திரமூட்டல் உந்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஆளும் உயரடுக்கால் பொருளாதாரரீதியில் எந்த முன்னோக்கிய பாதையும் வழங்க இயலவில்லைஅதன் சொந்த பொருளாதாரமே அதிகரித்தளவில் ஒரு மிகப்பெரிய காசினோ சூதாட்டத்திற்கு ஒத்துள்ளது, அதில் உற்பத்தி நடவடிக்கையைக் காட்டிலும் ஊக வணிக மற்றும் நிதியியல் ஒட்டுண்ணித்தனமே இலாப திரட்சியை ஆதிக்கம்செலுத்தும் வடிவங்களாக உள்ளன. பூகோள மேலாதிக்கத்தை தக்க வைக்கும் முயற்சியில் வாஷிங்டன் பெருகிய அதன் இராணுவ பலத்தை பிரயோகிக்க தீர்மானகரமாக உள்ளது.

அமெரிக்க நடவடிக்கைகளை உந்துகிற சக்திகளின் ஒரு சித்திரம் போன்ற வெளிப்பாடு, அமெரிக்க குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பென் கார்சன் சமீபத்தில் ட்வீட்டரில் வெளியிட்ட கருத்தில் உள்ளடங்கி உள்ளது. அது ஓர் அமெரிக்க போர்விமானத்தின் புகைப்படம், “சீனாவுடன் போட்டியிட இது தான் வழி" என்ற வாசகத்தைத் தாங்கியிருந்தது.

அந்நடவடிக்கைக்கான நிஜமான காரணம் கடல்கள் மற்றும் வான்தடங்களில் சுதந்திரத்தைப் பாதுகாப்பதல்ல, மாறாக சீனாவின் பெருநிலத்திலும் மற்றும் தெற்கு ஹைனன் தீவிலும் உள்ள முக்கிய சீனப் பாதுகாப்பு மற்றும் இராணுவ தளங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்வதாகும்.

அதற்கும் மேலான ஒரு பரந்த அரசியல் நிகழ்ச்சி நிரலும் உண்டு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அபின் போர்கள் (Opium Wars) மற்றும் ஜப்பானுக்கு "வழி வகுத்த" அமெரிக்க அட்மிரல் பெர்ரியின் கரும்படகுகள் உட்பட, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆயுதப்படகு இராஜாங்க அணுகுமுறையை நினைவூட்டும் வகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால மூலோபாயம் மீண்டுமொருமுறை சீனாவை ஓர் அரைக் காலனித்துவ அந்தஸ்திற்கு குறைப்பதாகும்.

அந்நடவடிக்கையானது, ஆசிய-பசிபிக் மற்றும் அதற்கு இன்னும் பரந்துபட்ட பகுதி எங்கிலும் அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு அதன் இராணுவ பலத்தைப் பிரயோகிக்க தீர்மானகரமாக உள்ளதை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, அந்நாடுகளின் பொருளாதார உறவுகள் சீனாவுடன் என்னவாக இருந்தாலும், அதை எடுத்துக்காட்ட விரும்புகிறது.

பிரிட்டனுக்கான சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விஜயத்தை அடுத்து உடனடியாக, அங்கே அவருக்கு கேமரூன் அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் அரசால் "மிகவும் சிறப்பான சிவப்பு கம்பள மரியாதை" வழங்கப்பட்ட நிலையில், இந்நடவடிக்கையானது அவசியமானால் அமெரிக்க நோக்கங்களுக்கான எதிர்ப்பு இராணுவ வழிவகைகளைக் கொண்டும் தடுக்கப்படும் என்று ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஒரு தெளிவான சமிக்ஞை அனுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இராணுவத்தின் பல மாதகால அழுத்தத்திற்குப் பின்னர், ஒபாமா நிர்வாகம் ஜி இன் கடந்த மாத அமெரிக்க விஜயத்திற்குப் பின்னர் இந்நடவடிக்கையை நடத்தியுள்ளது. ஒபாமா உடனான அவரது இரகசிய பேச்சுவார்த்தைகளின் போதும் மற்றும் பகிரங்கமாகவும், ஜி தொடர்ந்து அப்பிராந்தியத்தில் சீனாவின் உரிமைகோரலையும், தீவுகள் மற்றும் கடல்குன்றுகளில் கட்டமைப்புகளைச் செய்வதற்கான அதன் உரிமையையும் இந்நடைமுறை பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உட்பட அந்த சர்ச்சைக்குரிய எல்லைகளில் உரிமைகோரும் ஏனையவைகளாலும் நடத்தப்படுகின்ற நிலையில்வலியுறுத்தி இருந்தார். அதேநேரத்தில், அப்பிராந்தியத்தில் சீனக் கட்டமைப்பு "எந்தவொரு நாட்டையும் இலக்கில் கொண்டதோ அல்லது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கோ" இல்லை என்றும், சீனா இராணுவமயமாக்கலைப் பின்தொடர விரும்பவில்லை" என்றும் அறிவித்தார்.

இராணுவ தளங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு நோக்கங்களுக்கு அவை அவசியப்படுகின்றன என்பதே உத்தியோகபூர்வ சீன நிலைப்பாடாக உள்ளது. அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படை அன்றாடம் அப்பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிலைமைகளின் கீழ் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் வான்வழி/கடல்வழி போர் திட்டம் சீனப் பெருநிலத்தின் மீது ஒரு பாரிய தாக்குதலைத் தொடுக்க தென் சீனக் கடலில் நடவடிக்கை எடுப்பதற்கான அதன் தகைமையைப் பாவிக்க எதிர்நோக்கி வருகின்ற நிலைமையின் கீழ் சீனா அந்நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

ஜி யை அவரது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கசெய்ய முடியாமல் போனால், அமெரிக்கா "சர்வதேச சட்டம் அனுமதிக்கும் எந்தவொரு இடத்திலும் கப்பல்களைச் செலுத்தும், விமானங்களைப் பறக்கவிடும் மற்றும் செயல்பாடுகளைத் தொடருமென" ஒபாமா ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். Nikkei Asian Review இல் வெளியான ஒரு செய்தியின்படி, அக்கூட்டத்திற்குப் பின்னர் உடனடியாக "சினமுற்ற ஒபாமா, அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவர் ஹாரி ஹாரீஸைத் தொடர்புகொள்ள ஒரு நெருக்கமான உதவியாளருக்கு உத்தரவிட்டார்" மற்றும் "தென் சீனக் கடலில் ஒரு நடவடிக்கையை முன்னுக்கு நகர்த்த அமெரிக்க கடற்படைக்கு அனுமதியளித்தார்,” இதற்குத் தான் கடற்படை குறைந்தபட்சம் கடந்த ஜூனில் இருந்து அழுத்தமளித்து வருகிறது.

ஒரு நீண்டகால உள்ளடக்கத்திற்குள் பார்க்கையில், தென் சீனக் கடல் ஆத்திரமூட்டல் கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க இராணுவவாதம் பின்பற்றியுள்ள வடிவத்தைப் பின்தொடர்கிறது. பூகோள மேலாதிக்கத்தில் அமெரிக்கா அதன் இடத்தைப் பேணுவதற்கு, ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளால் தடுக்கப்பட்ட உலகின் பரந்த பகுதிகளை வெற்றி கொண்டு மறுகாலனித்துவப்படுத்த வேண்டியிருக்கும் என்பதை, 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவுக்குப் பின்னர் அமெரிக்கா உணர்ந்தது.

வாஷிங்டனின் இராணுவவாத உந்துதல் ஒரு பேரழிவு மாற்றி ஒரு பேரழிவை உண்டாக்கியுள்ளது, அவற்றிற்காக அது அடுத்தடுத்து போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைத் தொடங்கி விடையிறுத்துள்ளது. அதன் மத்திய கிழக்கு கொள்கையின் அதிகரித்துவரும் தோல்விக்கு இடையே, அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனா உடனான ஒரு போரை நோக்கிய பாதை அமைத்து பிரதிபலிப்பு காட்டியுள்ளது.

இந்த முட்டாள்த்தனம் தனிப்பட்ட ஏகாதிபத்திய அரசியல்வாதிகளின் குழம்பிய மனநிலையின் விளைபொருளல்ல. மாறாக, ஏகாதிபத்திய புவிசார்-அரசியலானது உலக முதலாளித்துவ அமைப்புமுறை பித்துப்பிடித்து போயிருப்பதன் ஒரு வெளிப்பாடாகும். அது, பூகோள பொருளாதார அபிவிருத்திக்கும், எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் மற்றும் வல்லரசுகளுக்குள் உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முன்பினும் ஆழமடைந்துவரும் முரண்பாடுகளிலிருந்து எழுகிறது.

வாஷிங்டனின் அச்சுறுத்தல்களுக்கு பெய்ஜிங் ஆட்சியின் விடையிறுப்பு ஆழமாக பிற்போக்குத்தனமானது. அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்-அச்சுறுத்தல்களைக் கொண்டும், ஓர் இராணுவ ஆயத்தப்படுத்தல் மற்றும் சீனத் தேசியவாதத்தை ஊக்குவிப்பதைக் கொண்டும் பதிலளிக்க முயல்கிறது. சீன முதலாளித்துவ வர்க்க செல்வந்த தட்டுக்களின் பிரதிநிதித்துவமாக உள்ள அது, போர் அபாயங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி ஒன்றுதிரட்டும் எந்தவித முயற்சிக்கும் விரோதமாக உள்ளது.

தென் சீனக் கடலில் தற்போதைய சம்பவங்கள் உடனடியாக கட்டவிழ்பவை என்னவாக இருந்தாலும், அவை ஐயத்திற்கிடமின்றி மூன்றாம் உலக போருக்கான பாதையில் மற்றொரு படியைக் குறிக்கின்றன. தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடித்தளத்தில், ஓர் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தின் அபிவிருத்தியைக் கொண்டு விடையிறுக்க வேண்டும்.