சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian trade unions shut down Kerala plantation workers’ strike

இந்திய தொழிற்சங்கங்கள் கேரள தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தன

அருண் குமார்
27
அக்டோபர்
2015

Use this version to printSend feedback

தென் இந்தியாவிலுள்ள  கேரள மாநிலத்தில் இந்திய தோட்டத் தொழிற்சங்கங்களின் ஒரு கூட்டு சபை (ஜெசிடியு), அக்டோபர் 14 ல் மாநில அரசாங்கம் மற்றும் பணியளிப்பவர்களுடன் ஒரு காட்டிக்கொடுப்பு சம்பள ஒப்பந்தத்தை செய்த பிறகு, 300,000 தேயிலை, காபி, ரப்பர் மற்றும் ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய 17 நாள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தன.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் 232 ரூபாவிலிருந்து  500 ரூபாவாக (7.55 அமெரிக்க டாலர்)  இரண்டு மடங்காக இருக்க வேண்டும் மற்றும் வருடாந்த போனஸ் அவர்களது கூலியில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக  உயர்த்தப்பட வேண்டும் என்று தோட்டத் தொழிற்சங்கங்கள் முதலில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஒரு அற்ப 69 ரூபா சம்பள உயர்வை பேரம்பேசிய பிறகு  அவர்கள் வேலைநிறுத்தத்தை முடித்தனர்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், மாநில அரசாங்க அதிகாரிகள் மற்றும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு அமைப்பான தோட்ட தொழிலாளர் குழுவின் (பிஎல்சி), மூடிய கதவுகளுக்குள் நடைபெற்ற ஆறு சுற்று  பேச்சுவார்த்தைகளில் சம்பள ஒப்பந்தம் வகுக்கப்பட்டது.

இந்து  பத்திரிகையின் அக்டோபர் 16 ஆசிரியர் கட்டுரை உடன்பாட்டை  பாராட்டியதுதோட்டத் தொழிலாளர்களின் அன்றாட கூலி, "ஒரு நியாயமான அளவு" அதிகரித்துள்ளது என்றும்  வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டது என்பது  "நலிந்த  [தோட்டத்] துறைக்கு ஒரு வரவேற்பு  நிவாரணமாக வரும்." என்றும் கூறியது.

JCTU ல் ஈடுபட்டுள்ளவற்றில் அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு), இவை  முறையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது  சிபிஎம் உடன் இணைந்தவை, மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இந்து மத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) கட்டுப்பாட்டிலுள்ள  பாரதிய மஸ்தூர் சபா (பிஎம்எஸ்) உள்ளடங்கும்.

ஆரம்பத்தில் இருந்தே, கேரளாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அரசாங்கம் தோட்ட நிறுவனங்களை ஆதரித்தது. தோட்ட உரிமையாளர்களின் கூற்றுக்களை கேரள முதல்வர் ஓமன் சாண்டி திருப்பிக் கூறினார், அதாவது தோட்ட நிர்வாகம் ஒரு 100 சதவீத தினசரி ஊதிய உயர்வு வழங்குமாயின் மாநில தோட்டத்துறை  மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து சம்பள ஒப்பந்தம் ஒரு "நல்ல முடிவு" என்று சாண்டி பாராட்டினார் ஏனெனில் அது தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் தோட்ட உரிமையாளர்களினால் வழங்கக் கூடியதாகவும் உள்ளது என்றார். மாநில அரசாங்கத்துடன் ஒத்துழைத்ததற்காக தொழிற்சங்கங்களை சாண்டி பாராட்டினார்.

நவம்பர் தொடக்கத்தில் உள்ளூர் தேர்தலையும் மற்றும் மே 2016 ல் ஒரு மாநிலத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி நிர்வாகம், தோட்ட உரிமையாளர்களுடன்  அவர்களது கவலைகள் குறித்து பேச பிஎல்சி கூட்டங்கள்  நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான  தோட்ட தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்துடன் திருப்தியாக உள்ளனர் என்றும் போனஸ் உட்பட ஏனைய கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள்  தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சிஐடியு மாவட்ட தலைவர் பி ககாரின்  சிடுமூஞ்சித்தனமாக கூறினார். தோட்ட உரிமையாளர்கள் 16.5 சதவீத போனஸ் வழங்க முன் வந்திருப்பதாகவும் நவம்பர் மாத  பிஎல்சி கூட்டத்தில் ஒரு சாதகமான முடிவை அவர் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

3,00,000 தோட்ட தொழிலாளர்களின் வெளிநடப்பு பரந்த மக்கள் ஆதரவைப் பெற்று  தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டையும் மீறி, மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுடன் ஒரு அரசியல் மோதலுக்குள் செல்லும் என்று பயந்து, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை  நிறுத்த ஆர்வமாக இருந்தது.

கடந்த மாதம், மூணாறு கண்ணன் தேவன் ஹில்ஸ் லிமிடெட்டில் வேலை செய்யும் சுமார் 6,000 தோட்டத் தொழிலாளர்கள் ஒன்பது நாட்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களது நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்கவும் வருடாந்த போனஸ்களை  ஊதியத்தில் 20 சதவீதமாகவும்  உயர்த்தும்படி கோரினர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்  வெளிப்படையாகவே  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புக்களுக்கும் விரோதமாக இருந்தனர். அவர்கள் சங்க அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர் மற்றும் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் எதுவும் செய்யக்கூடாது என்று தடை செய்தனர்.

தோட்டத் தொழிற்சங்கங்கள் பலவிதமாக இந்திய அரசு ஸ்தாபனத்தின்   கட்சிகளுடன் இணைந்துள்ளன, அவை இந்திய பெரு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனம் கோரும் சுதந்திர சந்தை பொருளாதார திட்டங்கள் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளை  இரக்கமின்றி திணித்தன.

சிபிஐ ஒரு பங்காளியாக இருக்கும் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்), தற்போது கேரள உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருக்கிறது. அது பதவியில் இருக்கும் போது அதே பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தியது.

தென் இந்திய ஐக்கிய தோட்டக்காரர்கள் சங்க தலைவர் என் தர்மராஜ் சம்பள ஒப்பந்தம் ‘’இயற்கைக்கு மாறானது மற்றும் செயல்படுத்த முடியாதது’’ என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்தோட்டத்துறை உற்பத்திச் செலவுகளில் 60 சதவிகிதம் தொழிலாளர்களுக்கே செல்கிறது என்று கூறினார். முதல்வர் சாண்டி தோட்டத்தில் ஒரு தனி நபர் கமிஷன் நிறுவுவதாக வாக்குறுதி அளித்தார்.  மாநில அரசாங்கம் நிறுவனங்களுக்கு குறைந்த தோட்ட மற்றும் விவசாய வருமானவரி வழங்கியிருப்பதாக இந்து  தெரிவித்தது.

கேரள மாநில அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள்  வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த விஷயத்தில் தம்மைத் தாமே பாராட்டும் அதே வேளை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கொடிய வறுமையில் வாழ்கின்றனர், அத்துடன் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைக்கின்றனர்.

சராசரி  அன்றாட ஊதியம் சுமார் 230 ரூபாய். இது உள்ளடக்குவது 20 கிலோவுக்கு 83 ரூபாய் என்ற அடிப்படை சம்பளம் மற்றும் கூடுதலாக உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட "ஊக்கத்தொகைகள்ஆகும். உண்மையில் 230 ரூபாய், பெறுவதற்கு தேயிலை இலை பறிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 60-70 கிலோ  வரை அறுவடை செய்ய வேண்டும், இதற்காக நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

தோட்டத்துறையை கட்டுப்படுத்தும் இலாப பசி கொண்ட நிறுவனங்கள் வீழ்ச்சி காணும் ஏற்றுமதி சந்தைகள் மற்றும் தேயிலை விலை சரிவுகளை எதிர்கொண்டுள்ளன, உலக சந்தையை பாதிக்கும் மந்தநிலைப் போக்குகள் தேயிலைத்துறையை தாக்கியுள்ளது. ஏனைய  தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் போல், இந்த நெருக்கடி தொழிலாளர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று தோட்ட நிறுவனங்கள் வலியுறுத்துகின்றனர். இலங்கையில், தோட்டத் தொழிலாளர்களின் எந்த ஒரு சம்பள உயர்வையும் தோட்டஉரிமையாளர்கள் திட்டவட்டமாக எதிர்க்கின்றனர்.

அதிக ஊதியம் மற்றும் நல்ல வாழ்க்கைத் தரங்களுக்கான கேரள தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்தது என்பது தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிடமிருந்து முறித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது, அவை பெருநிறுவன உயரடுக்கு மற்றும் அரச இயந்திரத்தின் தொழிற்துறை போலீஸ் படையாகும். அவர்கள் இந்தியா, இலங்கை மற்றும் துணை கண்டம் முழுவதும் உள்ள தோட்ட தொழிலாளர்களை அணிதிரட்ட தமது சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

இந்த கேரள மாநில நிர்வாகம் மற்றும் பிஜேபி தலைமையிலான  புது தில்லி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நேரடியான அரசியல் போராட்டத்தை ஈடுபடுத்துகிறது, இவை தனியார்மயமாக்கல் மற்றும் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான பெரும் தாக்குதல்கள் உட்பட பெரும் வணிகர்களின் கோரிக்கைகளை திணிக்கின்றன.

வேறு வார்த்தைகளில் சொன்னால், இது முதலாளித்துவ இலாப முறைக்கே எதிரான மற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கங்கங்கள் மற்றும் சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தோட்டங்களை தேசியமயமாக்குவதை உள்ளடக்கியது.  அதாவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக இந்தியாவில் சோசலிச சமத்துவக் கட்சியை  கட்டுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர தலைமையை கட்டுவது தேவைப்படுகிறது.