சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Who is responsible for the refugee crisis in Europe?

ஐரோப்பாவில் அகதிகள் நெருக்கடிக்கு யார் பொறுப்பு?

Bill Van Auken
4 September 2015

Use this version to printSend feedback

துருக்கிய கடற்கரையில் ஒதுங்கிய மூன்று வயது சிரிய சிறுவனின் நிலைகுலைய வைக்கும் புகைப்படங்கள், மண்ணில் முகம் வைத்தவாறு கிடப்பதும், பின்னர் உயிரற்ற அச்சிறுவனின் உடலை ஒரு மீட்பு பணியாளர் சுமந்து செல்வதும், ஐரோப்பாவின் எல்லைகளில் கட்டவிழ்ந்துவரும் கடுமையான நெருக்கடியை உலகெங்கிலுமான மக்களின் வீடுகளுக்கு கொண்டு வந்துள்ளது.

அலன் குர்தி என்ற அந்த மழலையின் குடும்பம், ஏனைய நூறாயிரக் கணக்கானவர்களைப் போலவே கோபானியிலிருந்து தப்பிப்பிழைத்து வந்திருந்தது. ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசின் (ISIS) ஒரு நீடித்த முற்றுகை மற்றும் அமெரிக்காவின் கடுமையான குண்டுவீச்சு நடவடிக்கையும் அந்த வடக்கு சிரிய நகரத்தை இடிபாடுகளாக்கி விட்டதுடன், அங்கிருந்த வீடுகளையும், அத்துடன் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பையும் அழித்து நாசமாக்கின. கிரீஸிற்குத் தப்பிவரும் ஒரு முயற்சியில் மூழ்கிய 12 பேரில் இச்சிறுவனும் ஒருவன், இவனின் தாயாரும், ஐந்து வயது அண்ணனும் அதில் உள்ளடங்குவர். அக்குடும்பத்தில் உயிர்பிழைத்த ஒரேயொருவரான, நிலைகுலைந்து நின்ற அச்சிறுவனின் தந்தை, அவர்களது பிரேதங்களோடு சிரியாவிற்குத் திரும்பவிருப்பதாக தெரிவித்தார். அவர் தானும் சாக விரும்புவதாகவும், அவர்களோடே சேர்த்து புதைத்துவிடுமாறும் உறவினர்களிடம் கூறிக் கதறினார்.

இந்த மரணங்களுக்காக அங்கே நிறைய பழிகளை அடுக்கலாம், மத்திய தரைக்கடலைக் கடக்கும் முயற்சியில் உயிரிழந்த அல்லது காற்று வெளியேறாமல் சூடேறிய லாரிகளுக்குள் அடைத்து திணிக்கப்பட்டு மூச்சுமுட்டி உயிரிழந்த பல ஆயிரக் கணக்கானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்த மரணங்கள் உள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் அச்சிறுவனின் அத்தை, அலென் குடும்பத்திற்கு தஞ்சம் வழங்குமாறு கோரிய ஒரு விண்ணப்பத்தை கனடாவின் பழமைவாத கட்சி அரசாங்கம் நிராகரித்திருந்தது.

அகதிகளின் வருகையை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒடுக்கும் மற்றும் தடுக்கும் ஒரு விடயமாக கையாள்கின்றன. அவை புதிய முள்வேலிகளையும், பெருந்திரளானவர்களை அடைக்கும் முகாம்களையும் அமைக்கின்றன, மற்றும் ஐரோப்பாவை ஒரு கோட்டையாக உருவாக்கும் முயற்சியில் கலகம் ஒடுக்கும் பொலிஸை அனுப்புகின்றன, அவை அலென் குடும்பம் போன்ற மோசமான நிலைமையிலுள்ள குடும்பங்களை அங்கே நெருங்க முடியாதவாறு செய்வதுடன், பல்லாயிரக் கணக்கானவர்களின் மரணங்களையும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது.

ஆனால் அமெரிக்காவைப் பொறுத்த வரையில் என்ன? ஐரோப்பிய எல்லைகளில் கட்டவிழ்ந்துவரும் இந்த துயரத்தை உருவாக்குவதில் வாஷிங்டனின் மத்திய பாத்திரம் குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளும் மற்றும் அமெரிக்க ஊடகங்களும் வேண்டுமென்றே மவுனமாக உள்ளன.

சான்றாக, வாஷிங்டன் போஸ்ட் இவ்வார தொடக்கத்தில் பிரசுரித்த ஒரு தலையங்கத்தில், "ஆப்கானிஸ்தான், சூடான், லிபியா மற்றும் — அனைத்திற்கும் மேலாக — சிரியாவில் தோன்றுகிற ஒரு பிரச்சினையை" ஐரோப்பா "அது தானாகவே தீர்த்துக் கொள்ளுமென எதிர்பார்க்க முடியாது" என்றது. நியூ யோர்க் டைம்ஸூம் அதேபோன்றவொரு குறிப்பை ஒலித்து எழுதியது: “இந்த பேரழிவின் வேர்கள், ஐரோப்பிய ஒன்றியம் தனியாக இருந்து தீர்க்க முடியாத நெருக்கடிகளில் அமைந்துள்ளன: அதாவது சிரியா மற்றும் ஈராக் போர், லிபியாவின் குழப்பம்…"

ஆனால் இப்பேரழிவுகளை அதிகரித்துள்ள இந்நாட்டுகளது நெருக்கடியின் "வேர்கள்" தான் என்ன? இக்கேள்விக்கான விடை வெறுமனே குற்றகரமான மவுனமாக உள்ளது.

ஐரோப்பாவிற்கு அகதிகள் வருகை அதிகரிப்பதற்குப் பின்னாலிருப்பது என்ன என்பதைக் குறித்த எந்தவித தீவிர பரிசீலினையும், தப்பிக்கவியலாதவாறு அது வெறுமனே ஒரு துன்பகரமான சம்பவம் மட்டுமல்ல மாறாக அதுவொரு குற்ற நடவடிக்கையென்று தீர்மானிக்க இட்டுச் செல்கிறது. இன்னும் துல்லியமாக கூறுவதானால், அவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மற்றும் அதன் மேற்கத்திய ஐரோப்பிய கூட்டாளிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன், அண்மித்த ஒரு கால் நூற்றாண்டு போக்கினூடாக தடையின்றி பின்பற்றப்பட்ட ஆக்ரோஷ போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற தலையீடுகளுக்கான ஒரு குற்றகர கொள்கையின் துயரகரமான துணைவிளைவுகளாகும்.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும், அமெரிக்க ஆளும் உயரடுக்கு அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டுவதற்குரிய ஒரு வழிவகையாக, அமெரிக்காவின் சவால்செய்யமுடியாத இராணுவ பலத்தைப் பயன்படுத்த அது தடையின்றி இருப்பதாக முடிவுக்கு வந்தது. இராணுவ ஆக்ரோஷத்தின் வழிவகை மூலமாக, வாஷிங்டன் முக்கிய சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரவளங்கள் மீது அதன் மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் ஒரு மூலோபாயத்தை முன்னெடுத்தது, முதலும் முக்கியமுமாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எரிசக்தி வளம்மிக்க பகுதிகளிலிருந்து அது தொடங்கியது.

இந்த மூலோபாயம், 1991 இல் ஈராக்கிற்கு எதிரான முதல் போருக்குப் பின்னர், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலினால் முன்னெடுக்கப்பட்ட "படைபலமே வேலைக்காகும்" என்ற முழக்கத்தில் குரூரமாக தொகுத்தளிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட இக்கொள்கைகளின் விளைவுகளைத் தான், உலகம் இன்று பரிதாபகரமாக அகதிகள் ஐரோப்பாவை எட்ட முயற்சிக்கும் அலையில் காண்கிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் தசாப்தங்களாக நீண்ட போர்கள், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற சாக்கில் நடத்தப்பட்டதும் மற்றும் ஈராக்கில் "பேரழிவுகரமான ஆயுதங்கள்" உள்ளன என்ற இழிவார்ந்த பொய்களைக் கொண்டு நியாயப்படுத்தப்பட்டதுமான அவை, ஒட்டுமொத்த சமூகங்களையும் நாசமாக்குவதிலும் மற்றும் நூறாயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வதிலும் தான் வெற்றி பெற்றன.

அவற்றை தொடர்ந்து மௌம்மர் கடாபி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்த்த, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போர் வந்தது, அது லிபியாவை தோல்வியுற்ற அரசு என்றழைக்கப்பட்ட ஒன்றாக மாற்றியதோடு, எதிர்விரோத போராளிகள் குழுக்களுக்கு இடையிலான தொடர்ச்சியான சண்டைகளால் சீரழிக்கப்பட்டது. பின்னர் சிரிய உள்நாட்டு போர் வந்தது — இது பஷர் அல் அசாத்தைப் பதவியிலிருந்து கவிழ்த்து, டமாஸ்கஸில் மிகவும் வளைந்துகொடுக்கும் ஒரு மேற்கத்திய கைப்பாவை ஆட்சியை நிறுவும் நோக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளால் தூண்டிவிடப்பட்டு, இதற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, நிதியுதவியும் வழங்கப்பட்டது.

லிபியா மற்றும் சிரியாவில் செய்யப்பட்ட சூறையாடும் தலையீடுகள், "மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகம்" என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டன, இந்த அடித்தளம் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒட்டுமொத்த போலி-இடது அமைப்புகளது கூட்டத்தின் ஆதரவையும் பெற்றது — ஜேர்மனியில் இடது கட்சி, பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, அமெரிக்கா மற்றும் ஏனையவற்றில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு ஆகியவை. அவற்றில் சில சிஐஏ ஆல் ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்ட இஸ்லாமிய போராளிகள் குழுக்களின் நடவடிக்கைகளை "புரட்சிகள்" என்று புகழும் அளவிற்குச் சென்றன.

நூறாயிரக் கணக்கான மக்களை படுமோசமாக மற்றும் மரணகதியில் தப்பியோட செய்து வரும் இப்போதைய நிலைமையும் மற்றும் தாங்கொணா மரண மற்றும் சீரழிவின் இந்த அழுத்தமும், அத்தகைய ஏகாதிபத்திய குற்றங்களின் ஒட்டுமொத்த திரட்சியையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஈராக் மற்றும் சிரியா இரண்டிலும் ISIS இன் வளர்ச்சியும் மற்றும் நடந்து கொண்டிருக்கும் இரந்தந்தோய்ந்த வகுப்புவாத உள்நாட்டு போர்களும், அமெரிக்காவினால் ஈராக் சீரழிக்கப்பட்டதன் மற்றும் ISIS க்கும் மற்றும் அதைத் தொடர்ந்து சிரியாவிற்குள் இருந்த அதேபோன்ற இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கும் சிஐஏ மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பிராந்திய கூட்டாளிகளால் வழங்கப்பட்ட ஆதரவின் விளைபொருள்களாகும்.

இத்தகைய குற்றங்களுக்கு யாருமே கணக்கில் கொண்டு வரப்படவில்லை. பொய்களின் அடிப்படையில் ஈராக்கில் ஆக்கிரமிப்பு போர் தொடுத்த புஷ், ஷென்னி, ரம்ஸ்ஃபெல்டு, ரைஸ், பாவெல் மற்றும் முந்தைய நிர்வாகத்தில் இருந்த ஏனையவர்களும் முற்றிலுமாக சட்டவிலக்கை அனுபவிக்கின்றனர். தற்போதைய நிர்வாகத்தில் இருப்பவர்களும், ஒபாமாவிலிருந்து அவருக்கு கீழே இருப்பவர்களும், லிபியா மற்றும் சிரியா மீது அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள பேரழிவுகளுக்காக கணக்கில் கொண்டு வரப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கு உடந்தையாய் இருந்தவர்கள் பலர், போர் கொள்கைகளுக்கு ஒப்புதல் முத்திரை குத்திய அமெரிக்க காங்கிரஸில் இருந்து, பொய்களின் அடிப்படையில் திணிக்கப்பட்ட போர்களை அமெரிக்க மக்களின் மீது சுமத்த உதவிய அதனுடன் ஒன்றிபோயிருந்த ஊடகங்கள், மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் "மனிதாபிமான தலையீடுகளுக்கும்" ஒரு முற்போக்கான பாத்திரம் வழங்கியுள்ள போலி-இடதுகள் வரையில் அவர்களுக்கு உடந்தையாய் இருந்தனர்.

ஒரு துயரம் என்பதை விட அதிகமாக, ஐரோப்பிய எல்லைகளில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அதற்கு ஒன்றுசேர்ந்து பொறுப்பாகி உள்ள அவர்கள், ஒரு நீடித்த மற்றும் தொடர்ச்சியான போர் குற்றங்களின் பாகமாக உள்ளனர்.