சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Refugee crisis in Europe: Popular support for migrants confronts official inhumanity

ஐரோப்பாவில் அகதிகள் நெருக்கடி: புலம்பெயர்ந்தோருக்கான மக்கள் ஆதரவு உத்தியோகப்பூர்வ மனிதாபிமானமின்மையை எதிர்கொள்கிறது

Ulrich Rippert
9 September 2015

Use this version to printSend feedback

ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிற்கு வரும் அகதிகளுக்கு ஒற்றுமை மற்றும் ஆதரவின் ஒரு பலமான அலையைச் சமீபத்திய நாட்கள் கண்டுள்ளன. மத்தியத்தரைக்கடலில் மூழ்கி இறந்த அகதிகளின் கோரமான புகைப்படங்களும் மற்றும் ஆள்கடத்துபவர்களின் ஊர்திகளில் டஜன்கணக்கான புலம்பெயர்வோர் மூச்சுத்திணறி இறந்த செய்திகளாலும் எத்தனையோ மக்கள் ஆழமாக அதிர்ந்து போயுள்ளனர்.

சின்னஞ்சிறு குழந்தைகளோடு வெளியேறிவரும் குடும்பங்கள் சுருள்சுருளான-முள்வேலிகளை முகங்கொடுக்கும் காட்சிகளையும், போதிய உணவு மற்றும் கழிவறை வசதியின்றி நாட்கணக்கில் அவர்கள் காவல் முகாம்களில் மந்தைமந்தையாக அடைக்கப்படுவதையும் கண்டு மில்லியன் கணக்கானவர்கள் அதிர்ச்சியுடன் திகைத்துள்ளனர். ஹங்கேரிய பொலிஸ் நிராயுதபாணியான தஞ்சம் கோருவோர் மீது தடிகள், கையெறி குண்டுகள், கண்ணீர் புகைக்குண்டுகளைக் கொண்டு தாக்கிய போது ஐரோப்பா எங்கிலுமான மக்கள் கொதித்துப் போனார்கள்.

செக் நாட்டு அதிகாரிகள் அகதிகளின் முன்கைகளில் பதிவு எண்களை முத்திரைக் குத்தியமைக் கடந்த வாரம் வெளியானது, இது நாஜி சிறை முகாம் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட நடைமுறைகளை நினைவூட்டுகிறது. அச்செய்தி புயலென போராட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.

அதனையடுத்து, துணிகள், உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், குளியலறை சாதனங்கள், பொம்மைகள் மற்றும் ஏனைய பொருட்களைச் சேகரிப்பதற்காக, டஜன் கணக்கான நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் நல்லிணக்க கமிட்டிகள் முளைத்தன. இணைய வழியாக உதவி ஒருங்கிணைக்கப்பட்டது. மருத்துவர்களும் தாதிமார்களும் இலவச மருத்துவ சோதனைகள் மற்றும் கவனிப்புகளை வழங்கினர்.

ஒரு வேலைவாய்ப்பற்ற ஆசிரியர் அகதிகளுக்கு ஜேர்மன்-மொழி வகுப்புகள் மற்றும் ஏனைய திட்டங்களை ஒழுங்கமைக்க பேஸ்புக் வழியாக சக ஒத்துழைப்பாளர்களுக்கு அழைப்புவிடுத்த போது, அதற்கு பெரும் எண்ணிக்கையிலான சுய-ஆர்வலர்கள் முன்வந்தனர். ஓர் இணைய தளம் இப்போது அகதிகளுக்கு இருப்பிடம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியாவைக் கடந்து ஒரு நீண்ட பயணத்திற்குப் பின்னர் இருபதாயிரம் அகதிகள் கடந்த வாரம் முனிச் வந்தடைந்தனர், பின்னர் அவர்கள் இரயில் மற்றும் பேருந்து மூலமாக வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் தரையிறங்கிய போது, அவர்களுக்கு குடிநீர், மதிய உணவு மற்றும் பொம்மைகள் வினியோகிக்கவும், மொழிபெயர்ப்பு உதவிகள் மற்றும் ஏனைய உதவிகளுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்த கமிட்டிகளால் அவர்கள் வரவேற்கப்பட்டார்கள்.

இத்தகைய அசாதாரணமான சம்பவங்கள், அரசு கொள்கையை மற்றும் உத்தியோகப்பூர்வ பொதுக்கருத்தை உந்துகிற பிற்போக்குத்தனமான அலைக்கழிப்புகளுக்கும் மற்றும் பரந்த பெருந்திரளான மக்களின் உணர்வுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த பிளவை எடுத்துக்காட்டுகிறது. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அகதிகளுக்கு எதிராக வாரக்கணக்கில் விரோதத்தை வளர்க்க முனைந்திருந்தன. பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஹெர்பிரட் முன்ங்லெர் போன்ற வலதுசாரி பேராசிரியர்கள், அகதிகளால் மக்கள் பீதியடைந்திருப்பதாக வலியுறுத்தினர். முன்ங்லெர் "முறைதவறிய தார்மீக ஒழுக்கங்களுக்குக்" குழிபறிப்பதாக அறிவித்தார்.

ஜேர்மன் அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டாம் உலக போரின் கொடூரங்களையும் மற்றும் நாஜிசத்தையும் மறக்கடித்து மக்களைச் சமாதானப்படுத்த சளைக்காமல் வேலை செய்துள்ளன. ஜேர்மன் அதன் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய இராணுவ கட்டுப்பாட்டு கொள்கையைக் கைவிட்டு, அதன் தீர்மானங்களுக்கேற்ப இராணுவ படைகளுடன் ஓர் உலகளாவிய சக்தியாக அதன் இடத்தை ஏற்று, உலகெங்கிலும் படைகளைப் பிரயோகிக்க தயாராகி அதன் கடந்தகாலத்திற்குத் திரும்ப வேண்டுமென வலியுறுத்துவதில் ஏனைய உயரதிகாரிகளுடன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் உம் சேர்ந்து கொண்டார். இந்த கீழ்தரமான பிரச்சாரம், உழைக்கும் மக்களிடையே எந்தளவிற்கு குறைந்த ஆதரவை உருவாக்கியுள்ளது என்பதை தான் அகதிகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு எடுத்துக்காட்டுகிறது.

செக் நாட்டு அதிகாரிகளால் அவர்கள் மீது குத்தப்பட்ட பதிவு எண்ணைக் காட்டுவதற்காக அகதிகள் செய்தி கேமராக்களுக்கு முன்னால் கைகளைக் காட்டிய போது, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அவர்களால் இனியும் மவுனமாக இருக்க முடியாதென முடிவெடுத்தார்கள். நாஜி குற்றங்களுடான அந்த கொடூரமான தொடர்பே மிகவும் பிரமாண்டமானது.

அகதிகளின் வருகைக்காக இரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த ஒரு பெண்மணியிடம் அகதிகளை வரவேற்கும் குழுவில் அவர் ஏன் இணைந்தார் என கேட்ட போது, அந்த வயதான பெண்மணி இவ்வாறு பதிலளித்தார்: “தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டு கண்ணீரில் கிடப்பதை விட, இங்கே வந்து மிகவும்-அவதியோடு வரும் இந்த மக்களுக்கு உதவலாமென வந்தேன்,” என்றார்.

ஜேர்மன் சான்சிலர் அங்கெலா மேர்க்கெல் அவரது வழமையான கோடை நேர்காணலில், இந்த உணர்வை ஒரு தந்திரோபாயத்திற்காக பிடித்துக் கொண்டு, “ஜேர்மனியின் வரவேற்கும் கலாச்சாரம்" குறித்து பேசினார். இது கலப்படமற்றவொரு தந்திரம். ஜேர்மன் அரசாங்கம் தஞ்சம் கோருவோரின் உரிமையைத் தடுக்க மற்றும் பெரும்பாலான அகதிகளை சாத்தியமான அளவிற்கு விரைவில் திரும்ப அனுப்ப துடிப்புடன் இயங்கி வருகிறது.

ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன், கடந்த வெள்ளியன்று புரூசெல்ஸில் "அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்ற தோற்றத்தை நாம் அகதிகளுக்கு ஏற்படுத்துவோமாயின், அதுவொரு தார்மீக தோல்வியாக இருக்கும்,” என்று கூறிய போது, அவர் எல்லா ஐரோப்பிய அரசாங்கங்களுக்காகவும் பேசினார்.

அகதிகளுக்கு பரந்த மக்கள் அடுக்குகளின் அனுதாபமும் ஆதரவும் வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் அத்தகைய அடிப்படை ஒற்றுமையுணர்வை ஓர் அரசியல்ரீதியிலான நனவுப்பூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டியது அவசியமாகும். இதற்கு அகதி நெருக்கடியின் அடியிலுள்ள பிரச்சினைகளினூடாக இயங்க வேண்டியுள்ளது.

ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனியின் முடிவு மற்றும் பேர்லின் சுவரின் வீழ்ச்சி ஆகியவற்றிற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பா எங்கிலும் சுவர்களும் வேலிகளும் எழுப்பப்படுகின்றன, சுருள்சுருளான முள்வேலிகள் மற்றும் காவல் நாய்களைக் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன என்பதை எவ்வாறு விளங்கப்படுத்தலாம்? இரண்டாம் உலக போர் முடிந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர், ஏன் மக்கள் மீண்டுமொருமுறை அவர்களது வீடுகளை விட்டு துரத்தப்பட்டு, கைதிகளை அடைக்கும் சிறை முகாம்களைப் போன்ற முகாம்களுக்குள் மந்தைமந்தையாக அடைத்து கையாளப்படுகிறார்கள்?

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அமெரிக்க ஆளும் உயரடுக்கு தலைமையிலான பிரதான முதலாளித்துவ சக்திகள், சோவியத் ஒன்றியம் இருந்த போது அவர்கள் மீதிருந்த தடைகளிலிருந்து சுதந்திரமடைந்துவிட்டதாக உணர்ந்தன. அவற்றின் புவிசார்-மூலோபாய நோக்கங்களை எட்டுவதற்கு இராணுவ வன்முறை பிரயோகத்தை விரிவாக்கலாம் என்ற நம்பிக்கை அவை ஏற்படுத்திக் கொண்ட மத்திய தீர்மானங்களில் ஒன்றாக இருந்தது. எண்ணெய் வளம்மிகுந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளே அவற்றுக்கு முதலில் பலியாயின.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போலிச்சாக்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடத்தப்பட்ட தசாப்தகால போர்கள், அந்த நாடுகளைச் சீரழித்ததுடன் நூறு ஆயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது. இதை பின்தொடர்ந்து லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க/நேட்டோ போர் கொண்டு வரப்பட்டது, அது மௌம்மர் கடாபி அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து, அந்நாட்டை "தோல்வியுற்ற அரசாக" மாற்றி, எதிர்விரோத போராளிகள் குழுக்களுக்கு இடையிலான நிரந்த சண்டையால் அதை சின்னாபின்னமாக்கியது. பின்னர் சிரியாவினது உள்நாட்டு போர் வந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகள் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைப் பதவியிலிருந்து கீழிறக்கி, டமாஸ்கஸில் ஒரு மேற்கத்திய-சார்பு கைப்பாவை ஆட்சியை நிறுவும் நோக்கில் அதற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, நிதியுதவி அளிக்கப்பட்டு, அது இயக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

நூறாயிரக் கணக்கான மக்களை அவநம்பிக்கையோடு ஐரோப்பாவிற்கு தப்பியோட உந்திவரும் இந்த நிரந்தரமான மரண அச்சுறுத்தல் மற்றும் பேரழிவின் அச்சுறுத்தல், ஏகாதிபத்தியத்தின் அத்தகைய குற்றங்களின் விளைபொருளாகும். பயங்கரவாத போராளிகள் குழுவான ISIS இன் வளர்ச்சியும், ஈராக் மற்றும் சிரியாவில் போர்களும் அமெரிக்காவினால் ஈராக் சீரழிக்கப்பட்டதன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளால் சிரியாவில் ISIS மற்றும் அதேபோன்ற இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டதன் நேரடி விளைவுகளாகும்.

உள்நாட்டு விளைவுகள் இல்லாமலேயே, ஏகாதிபத்திய சக்திகளால் மத்திய கிழக்கில் காட்டுமிராண்டித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட முடியுமென்ற எந்தவொரு கருத்தையும் அகதிகள் நெருக்கடி தகர்த்துள்ளது. உலகம் நேருக்குநேர் ஒன்றோடொன்று ஒன்றிப்பிணைந்த பூகோளமயப்பட்ட நவீன சமூகமாகி வருகிறது. என்ன வெளிப்பட்டுள்ளதென்றால், உலகை தேசிய அரசுகளாக மற்றும் பணக்கார-ஏழை நாடுகளாக பிளவுபடுத்தும் ஒரு சர்வதேச முதலாளித்துவ அமைப்புமுறையின் பகுத்தறிவற்ற தன்மையே அம்பலப்பட்டுள்ளது.

அகதிகளின் பாதுகாப்புக்கு ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கெதிரான ஓர் அரசியல் போராட்டம் அவசியமாகும். ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு, சமூகத்தின் தலைவிதியை அதன் சொந்த கரங்களில் ஏற்க வேண்டும்.