சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Stalinist mayor orders the dismantling of Roma camp near Paris

ஸ்ராலினிச நகர முதல்வர் பாரீஸ் அருகிலுள்ள ரோமா முகாமைக் கலைக்க உத்தரவிடுகிறார்

By Kumaran Ira
9 September 2015

Use this version to printSend feedback

பாரீஸின் வடக்கு புறநகர் பகுதியான La Courneuve இன் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மேயர் Gilles Poux இன் வேண்டுகோளுக்கிணங்க, CRS கலகம் ஒடுக்கும் பொலிஸ் கடந்த வாரம் சுமார் 300 மக்கள் வசித்துவந்த ரோமா முகாமை தாக்கி கலைத்தது.

ஒரு தொழில்துறை பகுதியான La Courneuve இல் A86 நெடுஞ்சாலைக்கும் புறநகர் இரயில் தடத்திற்கும் இடையே அமைந்திருக்கும் Samaritan முகாமானது, பிரான்சின் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான திறந்தவெளி முகாம்களில் ஒன்றாகும். அது 2007 இல் அமைக்கப்பட்டது. நவம்பர் 30 இல் இருந்து டிசம்பர் 11 வரையில் Le Bourget கண்காட்சி மையத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு நடத்த தயாரிப்பு செய்வதற்காக, La Courneuve இன் PCF நகராட்சி 2013 இல் அம்முகாமில் இருந்து மக்களை வெளியேற கோரியது.

வெளியேற்றுவதற்கான ஆகஸ்ட் 15 நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கலகம் ஒடுக்கும் பொலிஸின் இரண்டு பிரிவுகள் அங்கிருந்த ரோமா மக்களைப் பலவந்தமாக வெளியேற்றியதோடு, எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி ஆகஸ்ட் 27 ல் அந்த திறந்தவெளி முகாம்களை அழித்தது. கொட்டும் மழையில், ரோமா மக்கள் ஒரு மணி நேரத்திற்குள் முகாம்களை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டார்கள். வேலை ஒப்பந்தங்கள் மற்றும் குழந்தைகளின் பாடசாலை சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் உட்பட அவர்களது உடைமைகளைக் கூட கைவிட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

அம்முகாமில் வாழ்ந்த 33 வயதான ஒருவர் பிரான்ஸ் தொலைக்காட்சிக்குக் கூறுகையில், “நான் வேலையிலிருந்த போது என் மனைவி தொலைபேசியில் அழைத்தார். அங்கே பொலிஸ் வந்திருப்பதாகவும், அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். 20 மாதமே ஆன எங்களின் மகளின் பொருட்களையும், எங்களது ஆவணங்களையும் மட்டுமே அவரது பையில் எடுத்துக்கொள்ள முடிந்தது.”

இலாப-நோக்கற்ற ஒரு மனிதாபிமான அமைப்பான உலக மருத்துவர்கள் அமைப்பின் (Doctors of the World) ஒரு பணியாளர் கூறுகையில், “அவர்களது பொருட்களைச் சேகரித்து வெளியேறுவதற்கு கூட அவர்களுக்கு நேரமளிக்கப்படவில்லை. அது மிகவும் பயங்கரமானது, இத்தகைய நிலைமைகளில் அவர்களிடமிருந்த ஒருசில அடையாள அட்டைகளையும் இழந்துவிட்டார்கள்,” என்றார்.

வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர், வெறும் 12 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களாக அடையாளங்காணப்பட்டு, ஒருசில நாட்களுக்கு அவசர முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டார்கள். இதில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் அதில் உள்ளடங்குவர். இதில் மொத்தம் அண்மித்தளவில் 60 நபர்களே இருந்தனர். இலாப-நோக்கமற்ற அமைப்பு பணியாளர்களின் விருந்தினர்களாக சிலர் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதினும், மற்றவர்கள் வீடற்றவர்களாக விடப்பட்டனர். பல குழந்தைகளுக்கு பாடசாலை இப்போது மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் அவர்கள் வகுப்புகளை தவறவிடும் அபாயம் உள்ளது.

அவரது அலுவலகத்திலிருந்து வெளியிட்ட ஒரு பொது அறிக்கையில் Poux “சிரமத்திற்குள்ளான ரோமா குடும்பங்களுக்காக" முதலைக்கண்ணீர் வடித்த அதேவேளையில், அவர் Le Parisien இன் பக்கங்களில் அந்த வெளியேற்றத்திற்கான உத்தரவை நியாயப்படுத்தினார். “53 சதவீத வீட்டு திட்டங்களை உள்ளடக்கியுள்ள நமது நகரம் போன்ற ஒன்றில், சேரிகள் இருப்பதை அனுமதிக்க முடியாது,” என்றவர் எழுதினார். “இதனால் தான் நான் இந்த வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடங்கினேன், இதைப் போல நான் ஏற்கனவே செய்துள்ளேன். சேரிகளைத் துடைத்தெறிய கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முறை பாதுகாப்பு படைகளை நாம் அழைத்திருந்தோம்,” என்றார்.

“Samaritan [சேரியில்] வசித்தவர்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து நகர மன்றத்தின் பூங்காக்களில் முகாமிட்டிருப்பதால்" அவருக்கு மனநிறைவாக இல்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்! "நமக்கு தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் ஓர் உலகளாவிய விடையிறுப்பு அவசியப்படுகிறது!”

இது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் இனவாத கொள்கைகளைப் பாதுகாப்பதற்கான வெற்றுத்தனமான நடிப்பாகும். ஐரோப்பாவெங்கிலும் உள்ள ஏனைய பிரதான நகரங்களைப் போலவே, பாரீஸிலும் நூறாயிரக் கணக்கானவர்களுக்குக் கண்ணியமான குறைந்தவிலை வீடுகள் கிடைப்பதில்லை. ரோமா மக்களை, ஊடக கண்டனத்திற்குள், பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் இனத்தூய்மைப்படுத்தலின் இலக்குகளுக்குள் திருப்பிவிடுவதன் மூலமாக சமூக கோபத்தைத் திசைதிருப்பிவிட முயலாமல் இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாதென, முதலாளித்துவ வர்க்கம், அதன் சொந்த பணத்தில் திளைத்துக் கொண்டு, வலியுறுத்துகிறது.

உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டத்தின் ஸ்ராலினிச நிராகரிப்பில் வேரூன்றிய பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, அதுவே பிரெஞ்சு தேசியவாதத்தை ஏற்று கொண்ட ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி  1930களின் இறுதியில் லியோன் புளும் (Léon Blum) உடனான மக்கள் முன்னணியில் தொடங்கி போருக்குப் பிந்தைய உடனடி காலகட்டத்தில் சார்லஸ் டு கோல் வரையில், பல்வேறு முதலாளித்துவ அரசியல்வாதிகளுடன் கூட்டணிக்குள் நுழைந்தது. சோசலிச புரட்சியை தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இத்தகைய கூட்டணிகள், பிரான்சின் காலனி நாடுகளில் அதன் மூர்க்கமான ஆட்சியை ஏற்றுக்கொண்டதையும் அடித்தளத்தில் கொண்டிருத்தன.

ஆனால் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, 1968 பொது வேலைநிறுத்தத்தின் போது ஒரு புரட்சியை தடுத்த பின்னர் மற்றும் 1970களில் பிரான்சின் தொழில்துறை வீழ்ச்சி தொடங்கிய பின்னர், அதன் கொள்கைகளின் இனவாத உள்நோக்கங்கள் முன்பினும் அதிகளவில் பட்டவர்த்தனமாக மாறியிருந்தது. இக்காலக்கட்டத்தில், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி சோசலிஸ்ட் கட்சியுடன் ஓர் அரசியல் கூட்டணி உருவாக்கியதுடன், சோவியத் ஒன்றியத்திற்குள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சியை ஆதரிக்க தயாரிப்பு செய்தது.

1981 ஜனாதிபதி தேர்தலின் போது, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோர்ஜ் மார்ஷே, தொழிலாள வர்க்கத்தை தேசிய வரையறையில் பிளவுபடுத்த புலம்பெயர்வோர்-எதிர்ப்பு பிரச்சாரமொன்றை நடத்தினார். அந்நேரத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தது. 1980 இல், பாரீஸின் தென்கிழக்கு புறநகரான Vitry-sur-Seine இல் புலம்பெயர்ந்த மாலி தொழிலாளர்களது ஒரு வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மேயரை மார்ஷே ஆதரித்தார்.

மற்றொரு ஸ்ராலினிச மேயரான ரோபர்ட் ஹூ, 1981 இல் Montigny-les-Cormeilles இல் ஒரு மொரோக்கன் குடும்பத்தின் வீட்டிற்கு முன்னே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார், அவர் பின்னர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலராக ஆகுமளவிற்கு மேலுயர்த்தப்பட்டார்.

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் கீழ் சோசலிஸ்ட் கட்சியின் நெருக்கடி தீவிரமடைந்து வருகிற நிலைமையுடன் இணைந்து இதே பிற்போக்குதனமான பாரம்பரியம், ரோமா மக்கள் மீதான Poux இன் நடவடிக்கையில் வெளிப்படுகிறது. சோசலிஸ்ட் கட்சி உள்நாட்டில் ஆழ்ந்த சமூக வெட்டுக்களைக் திணித்தும் மற்றும் வெளிநாடுகளில் மக்கள்விரோத போர்களைத் தொடுத்தும் வருகையில், அது அமைப்புரீதியில் திட்டமிட்டு புலம்பெயர்வோர்-விரோத தப்பெண்ணங்களைத் தூண்டிவிட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகிறது.

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் அரசாங்கம் 2012இல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, அது ரோமா மக்களின் முகாம்களைக் கலைத்தும் மற்றும் அவர்களை பிரான்சை விட்டு வெளியேற்றியும் அவர்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.

மனித உரிமைகள் கழகம் மற்றும் ஐரோப்பிய ரோமா உரிமைகள் மையத்தின் 2014 அறிக்கை ஒன்றின் தகவல்படி, சோசலிஸ்ட் கட்சி 2013 இல் சுமார் 20,000 ரோமா மக்களை வெளியேற்றியது, இது 2012 விட இரண்டு மடங்கு அதிகமாகும். அதே ஆய்வின் தகவல்படி, 2013 இல் "அதிகாரிகள் பிரான்சில் இருந்ததாக கூறப்பட்ட 400 முகாம்களில் 165 கலைத்து, 19,380 பேரை வெளியேற்றியது, இந்த எண்ணிக்கை 2014 இல் 9,404 ஆகவும் மற்றும் 2011 இல் 8,455 ஆகவும் இருந்தது.”

ரோமா முகாம்களைக் கலைப்பதை மற்றும் ரோமா மக்களை வெளியேற்றுவதை சோசலிஸ்ட் கட்சி பாதுகாக்கிறது. பிரதம மந்திரி மானுவல் வால்ஸ் அறிவிக்கையில், பிரான்ஸ் இனரீதியில் ரோமா மக்கள் இல்லாததாக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். 2013 இல், அவர் கூறுகையில், “ரோமா மக்கள் ரோமானியாவிற்கோ அல்லது பல்கேரியாவிற்கோ திரும்பி போய் அங்கே தங்கட்டும்,” என்றார்.