சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Chinas economic downturn raises concerns about political instability

சீனாவின கீழ்நோக்கிய பொருளாதார சரிவு அரசியல் ஸ்திரமின்மை மீதான கவலைகளை எழுப்புகிறது

By Peter Symonds
28 August 2015

Use this version to printSend feedback

தொடர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய பங்குச்சந்தை கொந்தளிப்பிற்கிடையே, சீனப் பங்குச்சந்தைகளின் இயக்கம் மற்றும் மிகப் பரந்தளவில் சீனப் பொருளாதார நிலையை உலகெங்கிலுமான நிதியியல் உயரடுக்கு கருத்தூன்றி கவனித்து வருகிறது. அடுத்தடுத்து ஆறு வணிக அமர்வுகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அளவுகோலாக விளங்கும் ஷங்காய் காம்போசிட் குறியீட்டின் நேற்றைய உயர்வு, கிட்டத்தட்ட கேட்கக்கூடியளவிற்கு மீட்சி அறிகுறியை உருவாக்கியதுடன், அது சர்வதேச அளவில் பிரதான சந்தைகளின் பங்குவிலை உயர்வில் பிரதிபலித்தது.

சீனப் பொருளாதாரம் குறித்த ஊடக வர்ணனை பிரளயம், உலக பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக எந்தளவிற்குச் சீனாவின் தொடர்ச்சியான வளர்ச்சியைச் சார்ந்துள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது. நேற்றிரவு ஆஸ்திரேலிய ஒளிபரப்பு ஸ்தாபனத்தின் "லேட்லைன்" நிகழ்ச்சியில் பேசிய ஸ்டார்ஃபோர்டு ஹோல்டிங்ஸ் நிறுவன தலைவர் கொன் கோர்டிஸ், இந்த ஆண்டு மொத்த உலக வளர்ச்சியில் 30 இல் இருந்து 40 சதவீதம் சீனாவிலிருந்து வருமென நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்பதைக் குறிப்பிட்டார். அது நடக்கவில்லையென்றால், பின்னர் நாம் நிஜமான பிரச்சினையை எதிர்கொள்வோம்.

சீனப் பொருளாதார வளர்ச்சிக்குறைவு அரசியல் ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்லும் என்ற ஆளும் வட்டாரங்களின் கவலைகள், பைனான்சியல் டைம்ஸில் "சீன சந்தை கொந்தளிப்பிற்கு இடையே லீ கெகியாங்கின் எதிர்காலம் குறித்த பிரச்சினைகள்" என்று தலைப்பிட்டு வெளியான செவ்வாய்கிழமை கட்டுரை ஒன்றில் வெளிப்படையாக இருந்தது. 2007 தொடக்கத்திற்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக, ஷங்காய் காம்போசிட் குறியீடு திங்களன்று 8.5 சதவீத அளவிற்கு சரிந்ததும், பைனான்சியல் டைம்ஸிடம் பேசிய பகுப்பாய்வாளர்களும் கட்சிக்குள் இருப்பவர்களும் சீன பிரதமர் "அவரது அரசியல் எதிர்காலத்திற்காக போராடுகிறார்" என்று தெரிவித்தனர்.

ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழக பகுப்பாய்வாளர் வில்லி லாம் பத்திரிகைக்கு கூறுகையில், தற்போதைய நெருக்கடியின் விளைவாக பிரதமர் லீ இன் நிலைமை நிச்சயமாக மிகவும் மோசமாகி உள்ளது. நிலைமை மோசமடைந்தால் மற்றும் [ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு] உண்மையிலேயே ஒரு பலிக்கடா தேவைப்படுகின்ற ஒரு நிலைமை வந்தால், பின்னர் லீ தான் அதற்கு சரியாக பொருந்துவார், என்று குறிப்பிட்டது.

சரிந்து கொண்டிருந்த பங்குச்சந்தைகளின் வீழ்ச்சியைத் தடுக்கும் ஜூலை மாத ஆரம்ப முயற்சிகளில் லீ மற்றும் துணை பிரதமர் மா கைய் நெருக்கமாக தொடர்புபட்டிருந்தனர், குறுகியகால விற்பனை மற்றும் புதிய பங்கு வெளியீடு மற்றும் பெரும் முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனைகள் மீதான ஒரு தடை ஆகியவை அதில் உள்ளடங்கும். பைனான்சியல் டைம்ஸ் தகவல்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், கடந்த வாரம் முழுவதும் சரிவை மட்டுமே கண்டு வந்த பங்குச்சந்தைக்குள் $200 பில்லியன் என மதிப்பிடப்பட்ட தொகையைப் பாய்ச்சின.

சீனத் தலைமை மிகப் பரந்தளவில் நீக்கப்படுவதற்குரியதாகி உள்ளது. கடந்த வாரயிறுதியில் நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு நீண்ட கட்டுரை செய்தியின்படி, அவரது ஊழல்-எதிர்ப்பு முனைவில் கவனத்தைக் குறைத்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை மீட்டமைப்பதின் மீது அதிகமாக கவனம் செலுத்துமாறு சக்திவாய்ந்த கட்சி மூத்தவர்கள் ஜி க்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஜி அதிகாரத்தில் அவரது பிடியை வைத்திருக்கவும், அவரது அரசாங்கத்தின் தீவிர சந்தைசார் சீர்திருத்தம் மற்றும் மேற்கொண்டு முதலீட்டிற்கு திறந்துவிடுவதை விமர்சனபூர்வமாக பார்க்கும் அணிகளை மிரட்டவும் மற்றும் போட்டியாளர்கள் அல்லது சவால்விடுக்கும் முக்கியஸ்தர்களை சிறையிலடைக்கவும், உயர்மட்ட ஊழல்-ஒழிப்பு வழக்குகளைச் சுரண்டுகிறார். சுருங்கிவரும் பொருளாதாரம் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கடுமையான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சிக்குள் பதட்டங்களையும் புதிய கோஷ்டி உட்பூசல்களின் சாத்தியக்கூறையும் மட்டுமே தூண்டிவிடும்.

கிட்டத்தட்ட முழுமையாக அதன் சோசலிச தோரணையைக் கைவிட்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, தொடர்ச்சியான உயர்ந்தளவிலான பொருளாதார வளர்ச்சியின் மீது அதன் சட்டபூர்வத்தன்மைக்காக சார்ந்துள்ளது. அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மை, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடையே, அதுவும் இப்போது அது 400 மில்லியன் எண்ணிக்கையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், சமூக கிளர்ச்சியைத் தூண்டிவிடும் என்பதே பெய்ஜிங் மற்றும் உலகெங்கிலுமான பிரதான நிதியியல் மையங்களின் பயமாகும்.

உத்தியோகபூர்வ வளர்ச்சி புள்ளிவிபரங்கள் இந்த ஆண்டு 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது இது நீண்டகாலத்திற்கு முன்னரே சமூக ஸ்திரப்பாட்டுக்கு குறைந்தபட்ச தேவையாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருதிய 8 சதவீத மட்டத்தை விட குறைவாகும். ஆனால் பல பகுப்பாய்வாளர்கள், இந்த 7 சதவீதமே கூட உண்மையான வளர்ச்சியைக் கணிசமான அளவிற்கு அதிகப்படுத்தி இருப்பதாக நினைக்கிறார்கள். பதினொரு பொருளாதார வல்லுனர்களின் சமீபத்திய புளூம்பேர்க் ஆய்வு ஒன்று சீன வளர்ச்சியின் நடுநிலையான மதிப்பீட்டை 6.3 சதவீதத்தில் காட்டுகிறது.

ஏனையவர்களோ புள்ளிவிபரங்களை அதைவிட குறைத்துக் காட்டுகிறார்கள். பகுப்பாய்வாளர் கோர்டன் சாங் Diplomat வலைத் தளத்திற்கு கூறுகையில், பெய்ஜிங்கின் முக்கியஸ்தர்கள்" சீனப் பொருளாதாரம் 2.2 சதவீதத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாக தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றனர்" என்றார். அவர் வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதார நடவடிக்கையின் மற்ற அறிகுறிகளையும் சுட்டிக்காட்டினார்: இரயில்வழி சரக்கு கையாளுகை (2015 இன் முதல் இரண்டு காலாண்டுகளில் 10.1 சதவீதம் சரிந்துள்ளது), வியாபார அளவு (6.9 சதவீதத்திற்கு சரிந்துள்ளது) நிலக் கட்டுமானம் (15.8 சதவீதம் குறைந்துள்ளது) மற்றும் மின்சார பயன்பாடு (வெறுமனே 1.3 சதவீதம் உயர்ந்துள்ளது).

பொருளாதாரத்தை உயர்த்த பெய்ஜிங் தலைமை அழுத்தத்தின் கீழ் இருக்கிறது என்றாலும், சீன வளர்ச்சிக்குறைவு பரந்த உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியுடன் பிணைந்துள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் சீனாவில் முதலாளித்துவ மீட்சி அந்நாட்டை ஒரு மிகப்பெரிய மலிவு உழைப்பு உற்பத்தி தளமாக மாற்றியிருப்பதுடன், மிக பலமாக பிரதான பொருளாதாரங்களுக்கான ஏற்றுமதிகளைச் சார்ந்திருக்குமாறு அதை செய்துள்ளது.

உலக வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், கென் கோர்டிஸ் நேற்றைய "லேட்லைன்" நிகழ்ச்சியில் கூறுகையில், ஜப்பான் சுருங்கி வருகிறது அல்லது இன்னமும் சிரமத்தில் இருக்கிறது, அமெரிக்கா 2 அல்லது 2.25 சதவீதத்தில் வளர்ந்து வருகிறது, [மற்றும்] ஐரோப்பா 1.5, 1 சதவீத அளவில் ஸ்தம்பித்துள்ளது, என்றார். ஆனால் இத்தகைய பொருளாதாரங்களின் சந்தைகளைத் தான் முற்றுமுதலாக சீனா சார்ந்திருக்கிறது. ஜூலை மாத சமீபத்திய புள்ளிவிபரங்கள் ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கான ஏற்றுமதிகள் 4 சதவீதம் குறைந்ததுடன் சேர்ந்து, ஆண்டுக்கு-ஆண்டு 8.3 சதவீத அளவிற்கு ஏற்றுமதிகள் குறைந்திருப்பதைக் காட்டின, பகுதியாக இது அமெரிக்காவிற்கான 7 சதவீத உயர்வால் ஈடு செய்யப்பட்டது.

2008 நிதியியல் நெருக்கடியை தொடர்ந்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை பாரியளவிலான ஊக்கப்பொதி மற்றும் கடன் வழங்குவதை விரிவாக்கியதன் மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சியைப் பேணியது. ஆனால், ஏற்றுமதிகள் மற்றும் தொழில்துறை உற்பத்தி மந்தமான போது, உள்கட்டமைப்பு செலவினங்கள் மற்றும் சொத்து ஊகவணிகத்திற்குள், அத்துடன் மிக சமீபத்தில், பங்குச்சந்தை ஊகவணிகத்திற்குள்ளும் பணம் பாய்ச்சப்பட்டது. கடன் வழங்குவதை எளிதாக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கு விடையிறுப்பாக அவ்வபோது உயர்வுகள் இருந்தபோதினும், கடந்த ஆண்டின் சொத்து விலை வீழ்ச்சி, இப்போது பங்குவிலைகள் வீழ்ச்சியடைந்து வருவது ஆகியவை இத்தகைய ஊகக் குமிழிகள் நிரந்தரமானவையல்ல என்ற உண்மையை அடிக்கோடிடுகின்றன.

சீன ஆட்சி அதன் சந்தைசார் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலைத் தீவிரப்படுத்த சர்வதேச அழுத்ததின் கீழ் உள்ளது, அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது (SOEs) மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் புதிய இலாபகர வாய்ப்புகளைத் திறந்துவிடுவதற்காக நிதியியல் துறையை கூடுதலாக தாராளமயமாக்குவது ஆகியவையும் அதில் உள்ளடங்கும். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமூக இடைவெளியை அதிகரித்து, பரந்த சமூக கிளர்ச்சியைத் தூண்டிவிடும். சீனாவில் கடைசியாக நடந்த தனியார்மயமாக்கல்களில் விளைவாக பத்து மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டன.

சீன மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் ஒரு சிறிய அடுக்கின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெய்ஜிங் ஆட்சி, தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் மேலெழுந்துவிடுமோ என்ற ஆழ்ந்த அச்சத்திலுள்ளது. பிரதம மந்திரி லீ கெகியாங்க்கின் எதிர்காலம் குறித்து கேள்விகள் அதிகரித்து வருகிறது என்ற உண்மை, நிதியியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்பு மோசமடைந்து நூறு மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கையில், தற்போதைய கூர்மையான பதட்டங்களைத் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும் என்பதற்கு ஓர் அறிகுறியாகும்.