சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political issues posed by Corbyn’s election as UK Labour Party leader

இங்கிலாந்து தொழிற் கட்சி தலைவராக கோபைன் தேர்ந்தேடுக்கப்பட்டதால் எழுந்துள்ள அரசியல் பிரச்சினைகள்

Julie Hyland
14 September 2015

Use this version to printSend feedback

பிரிட்டிஷ் தொழிற்கட்சி தலைவராக ஜெர்மி கோர்பைன் தேர்ந்தெடுக்கப்பட்டமை, பாரிய சமூக கோபத்தையும் மற்றும் பிரிட்டிஷ் சமூகத்தின் அழுகிய நிலை மீதான வெறுப்பையும் எடுத்துக்காட்டுகிற ஒரு குறிப்பாகும். ஒரு துளி மனசாட்சியில்லாத ஒருவர் மட்டுந்தான், அல்லது கணிசமானளவிற்கு தனிப்பட்ட செல்வவள ஆதாரங்களைக் வைத்திருக்கும் ஒருவர் மட்டுந்தான், அதுபோன்ற உணர்வுகளோடு தன்னைத்தானே ஒன்றிணைத்துக் கொள்ள முடியாதவராக இருப்பார்.

உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் இரண்டிலுமே பிரிட்டனின் உயர்மட்ட அடுக்குகளின் பாகத்தில் நிதியியல் ஒட்டுண்ணித்தனம் மற்றும் குற்றகரதன்மையும், ஏனைய ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த சமூக வறுமையும் என்பதில் மார்கரெட் தாட்சர் மற்றும் டோனி பிளேயரின் அரசியல் பாரம்பரியமும் ஒன்றாக உள்ளது.

ஆனால் அரசியல் பகுப்பாய்வை நெறிப்படுத்தும் கோட்பாட்டுரீதியிலான பரிசீலினைகள் உள்ளன. போர்பைன் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சூழல் மாற்றத்தின் ஆரம்ப பயனாளி என்கிற நிலையில், அவரும் மற்றும் அவர் இப்போது தலைமையேற்றுள்ள கட்சியும் அரசின் தற்போதைய நிலைமைகளுக்கு பொறுப்பேற்காமல் தப்பித்துக் கொள்ள முடியாது, அதை மாற்றுவதற்குரிய வழிவகைகளைக் கூட அவர்கள் குறைவாகவே வழங்குகின்றனர்.

அத்தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டதன் விளைவைப் பற்றி மதிப்பிட்டால், ஒன்றோடொன்று பிணைந்த பல காரணிகளைக் கருத்தில் ஏற்க வேண்டியுள்ளது. மே பொது தேர்தலில் தொழிற்கட்சியின் படுதோல்விக்குப் பின்னர் அதன் புத்திக்கு எட்டியது என்னவென்றால், இன்னும் அதிக செலவின வெட்டுக்கள், இன்னும் அதிக புலம்பெயர்வோர்-விரோத முறைமைகள், இராணுவ செலவின அதிகரிப்பு ஆகியவற்றிற்கு ஆதரவான பொதுமக்களின் கருத்தொற்றுமையுடன் அதன் "மிதமான-சிக்கனத்திட்ட" நிகழ்ச்சிநிரல் முரண்பட்டிருந்ததாலேயே அது தோல்வியடைந்ததாம்.

தொழிற் கட்சி மேற்கொண்டு வலதிற்கு திரும்பியிருப்பதை மூடிமறைப்பதையே தலைமைக்கான போட்டி நோக்கமாக கொண்டிருந்தது, இது தற்காலிக தலைவர் ஹாரியத் ஹார்மேனின் வலியுறுத்தலில் அடிக்கோடிடப்பட்டது. அவர் வலியுறுத்தினார், தொழிற்கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர்கள் பழமைவாத கட்சி அரசாங்கத்தின் சுகாதாரநல சட்டமசோதாவில் (Welfare Bill) கலந்து கொள்ளவில்லை, அது மேற்கொண்டும் மில்லியன் கணக்கானவர்களை வறுமைப்படுத்தும். அதற்கு மாறாக அத்திட்டத்தைத் தொந்தரவுக்குள்ளாக்கும் வகையில், அதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க பிரிவுகளுக்குள் நிலவும் கோபத்தைச் சூசகமாக எடுத்துக்காட்ட, இப்போட்டி போதுமானளவிற்கு பரந்தவொரு பாதையை உண்டாக்கியதாக தெரிவித்தார்.

சிக்கன நடவடிக்கைக்கு எதிரான வேட்பாளராக களமிறங்கிய, மூத்த "இடது" தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோபைன், அவருக்கு எதிரான மற்ற அனைத்து மூன்று எதிர்ப்பாளர்களின் ஒருங்கிணைந்த வாக்குகளை விட அதிகமாக 59.5 சதவீத வாக்குகள் பெற்றார்அண்டே பர்ன்ஹாம் (19 சதவீதம்), யுவெட் கூப்பர் (17 சதவீதம்) மற்றும் லிஜ் கென்டால் (4.5 சதவீதம்).

பகுதியாகவோ, அல்லது, முற்றிலுமாகவோ, டோனி பிளேயர் அவரது "பாரம்பரியத்தின்" தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக மீண்டும் மீண்டும் தலையீடு செய்ததற்கு இடையிலும், இந்த வாக்குகள் கிடைத்தன. அவரது வியப்புரைகள், மிக மிக பிளேயரிய வேட்பாளரான கென்டாலின் இழிவார்ந்த படுதோல்வியை உறுதிசெய்வதாக இருந்தது. தொழிற்கட்சியின் சுருங்கிய கூட்டுக்குள்ளேயே கூட, தொழிற்கட்சியினது புதிய வலதுசாரி உதிரித்திட்டங்களுக்கு கணிசமான ஆதரவுவட்டம் இல்லையென்பது வர்க்க உறவுகளின் நிலையை மிகவும் பரந்துபட்டரீதியில் பிரதிபலிக்கிறது.

ஆனால் இதுவொன்றும் வெறுமனே ஒரு பிரிட்டிஷ் சம்பவம் அல்ல. 2008 நிதியியல் பொறிவினது உலகளாவிய மாற்றத்தின் தாக்கங்கள், துர்நாற்றமெடுத்த உத்தியோகப்பூர்வ அரசியலின் மேலோட்டை உடைத்து கொண்டு ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுகிறது. உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும்பொருளாதார, சமூக, புவி-அரசியல்பொது நெருக்கடி, சமூக மற்றும் அரசியல் அதிருப்திகளுக்கு எரியூட்டுவதுடன், முதலாளித்துவ அரசியலை எழுச்சி மற்றும் இடைவிடாத குழப்ப நிலைக்குள் தூக்கிவீசி, பாரம்பரிய இயங்குமுறை விதிகளை நிலைகுலைத்து வருகிறது.

அதன் அரசியல் அடித்தளத்தை மீண்டுபெறும் முயற்சியில், முதலாளித்துவ வர்க்கம் ஓர் அரசியல் மறுசீரமைப்பைக் கொண்டு வர முயன்று வருவதால், இது அதன் கட்டுப்பாட்டிலிருந்து உடைத்துக் கொள்ளவும், அதன் ஆட்சிக்கு ஓர் ஆழ்ந்த சவாலை நிலைநிறுத்தவும் அதிகரித்துவரும் அமைதிகுலைந்த தொழிலாள வர்க்கத்தைத் தடுக்கிறது. அது ஒருபுறம் பிரான்சில் உள்ள தேசிய முன்னணி போன்ற பாசிசவாத மற்றும் வெளிநாட்டவர் விரோத சக்திகளை முன்னுக்குக் கொண்டு வருகிறது, மறுபுறம், கிரீஸில் சிரிசா, அமெரிக்காவில் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் பிரிட்டனில் கோர்பைன் போன்ற "இடது" சக்திகளைப் பகடைகாய்களாக கொண்டு விளையாடுகிறது.

கோர்பைனின் வெற்றியை மதிப்பிடுகையில், சில விமர்சகர்கள், Telegraph இதழின் முன்னாள் ஆசிரியர் சார்லஸ் மூர் இன் வார்த்தைகளில் கூறுவதானால், "அமைப்புமுறை மீதான அடுத்த அதிர்வு" போல்ஷிவிசத்தின் தாடிவைத்த போர்போனுக்கு... ஒரு தேர்தல் சந்தையை" உருவாக்கும் என்பதாக சிந்திக்கிறார்கள். கார்டியனின் ஆண்ட்ரூ ஸ்பாரோவ், ஏதோவொருவித பொருளாதார பேரிடரின்" வெடிப்பு "...பண்டிதர்களுக்கு பணியமறுத்து கோர்பைன் தலைமையிலான தொழிற் கட்சிக்கு இட்டுச்சென்று, கிரீஸில் சிரிசா அதிகாரத்தைப் பிடித்ததைப் போல அதிகாரத்தில் அமர்த்தும்" என்பதை "எவ்விதத்திலும் சிந்திக்காமல் இருக்க முடியாது" என்று அவரது அபிப்பிராயத்தை வெளியிட்டார்.

உழைக்கும் மக்கள், அதுபோன்ற கணக்கீடுகளிலிருந்து ஒரு கூர்மையான எச்சரிக்கையைப் பெற வேண்டும். கிரீஸில் சிரிசா மானக்கேடாக அடிபணிந்ததன் படிப்பினைகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும், ஏனென்றால் தவிர்க்கவியலாதவாறு கோர்பைன் வெற்றி பெற்றாலும் அதற்குப்பிந்தைய சதியாலோசனைகள், சமரசங்கள் மற்றும் காட்டிக்கொடுப்புகளை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியும்.

அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களில் உள்ள சிலர், பிரிட்டனின் அரசியல் பரப்பெல்லையையே மாற்றக்கூடிய ஒரு தேர்தல் "பூகம்பத்தின்" பயங்கரம் குறித்து இப்போது பேசுகிறார்கள் என்றால், அவர்களை பதட்டத்திற்குள்ளாக்குவது கோர்பைன் அல்ல, மாறாக அபிவிருத்தி அடைந்துவரும் பாரிய மக்கள் இயக்கம், அதை அவரால் கட்டுப்படுத்தவியலாதென அவர்கள் அஞ்சுகிறார்கள்.

கோர்பைனின் சொந்த வரலாறே சந்தர்ப்பவாத குட்டி-முதலாளித்துவ அரசியலில் வேரூன்றியுள்ளது. தொழிற் கட்சி கொள்கை அம்சங்களுக்கு எதிராக அவருக்குக் கிடைத்துள்ள சகல வாக்குகளைப் பொறுத்த வரையில், அவரது 32 ஆண்டுகாலமும் கட்சியின் ஒரு விசுவாசமான பாதுகாவலராக அவர் தொழிற் கட்சியின் பின்னிருக்கைகளில் இருந்துள்ளார்.

பெயரில் இல்லையே தவிர, அதன் அரசியல் மற்றும் அமைப்புமுறையில் மற்றும் அதன் எந்திரத்தினது சமூக சேர்க்கையில் டோரியாக உள்ள இக்கட்சியை, தொழிலாள வர்க்க போராட்டத்தின் ஒரு கருவியாக மாற்றிவிடலாமென்று யாராலும் தீவிரமாக முன்மொழிய முடியாது. பிரிட்டிஷ் தொழிற் கட்சி பிளேயரில் இருந்து தொடங்கவில்லை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நிலைத்து நின்றிருக்கும் அக்கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கருவியாகவும் மற்றும் அதன் அரசு இயந்திரமாகவும் முயற்சிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட  ஒரு முதலாளித்துவ கட்சியாகும். கிளிமெண்ட் அட்லி தலைமையில் இருக்கட்டும், அல்லது ஜேம்ஸ் கலஹன் அல்லது ஜெரிமி கோர்பைன் தலைமையில் ஆகட்டும், அதன் சாராம்சம் மாற்றமின்றி நிலைத்துள்ளது.

கோர்பைன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் இந்த நிலைப்புள்ளியிலிருந்து தான் அவர் வலியுறுத்தினார், அதாவது அனைத்திற்கும் மேலாக கட்சியுடனான ஒற்றுமையே முக்கியமாகும், இது இல்லையென்பதால் தான் நேரத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் பிரிட்டனில் சோசலிசத்தின் பிரதான அரசியல் எதிர்ப்பாளராக தன்னைத்தானே நிரூபித்துள்ள ஒரு அமைப்புடனான ஐக்கிய பிரகடனமாகி விடுகிறது.

அதேபோல, கோர்பைன் தலைமையிலான தொழிற் கட்சிக்கு உண்மையாக இருக்க, சோசலிச தொழிலாளர் கட்சியும் மற்றும் சோசலிஸ்ட் கட்சி போன்ற பிரிட்டிஷ் போலி-இடது குழுக்களும் வாக்கெடுப்புக்கு பின்னர் உடனடியாக அறிவித்தன. கிரீஸில் சிரிசாவின் காட்டிக்கொடுப்புக்கு ஒத்துழைப்பதிலும் மற்றும் பின்னர் அதை மூடிமறைப்பதிலும் பாத்திரம் வகித்துவிட்டு புத்துணர்ச்சியோடு, இப்போது அவை தாங்கள் உரிமைகோரும் "அடிமட்ட, நாடாளுமன்றத்திற்கு வெளியே நடக்கும்" இயக்கத்துடன் புதிய தொழிற் கட்சி தலைவர் முன்னெடுப்பதை இணைக்க வேண்டுமென்ற போர்வையில், ஒரு புதிய காட்டிக்கொடுப்புக்குத் தயாரிப்பு செய்கின்றன.

உண்மையை எடுத்துக்காட்டும் வகையில், கோர்பைன் தேர்ந்தெடுக்கப்பட்டமை பரந்த சமூக சீற்றத்தின் ஒரு பிரதிபலிப்பு எனும் அளவிற்கு, ஒரு புரட்சிகர மாற்றீட்டைக் கட்டமைப்பது சாத்தியமில்லையென்ற போலி-இடதின் வலியுறுத்தலை அது மறுத்தளிக்கிறது.

மிக அடிப்படையாக, தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் பிரச்சினை வெறுமனே கோர்பைனின் அல்லது தொழிற் கட்சியோடு மட்டுப்படவில்லை. அதற்கடியில் இருப்பது இப்போதைய சமூக உறவுகளின் யதார்த்தமாகும்.

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வாழ்வின் மீது நிதியியல் உயரடுக்கின் பலமான பிடியை உடைப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சமூக போராட்டம் இல்லாமலேயே, செல்வவளத்தின் மறுபகிர்மானத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியுமென எவரேனும் தீவிரமாக வாதிட முடியுமாஅதுவும் குறிப்பாக கிரீஸ் சம்பவங்களுக்குப் பின்னர்? சமீபத்திய வாரங்களில் பிளேயர் மற்றும் அவரது அரசியல் வகையறாக்களின் அறிக்கைகள், கொள்கையளவிலான எந்தவொரு மாற்றத்தையும் ஆளும் வர்க்கம் மூர்க்கமாக எதிர்க்கிறது என்பதற்கு ஓர் அப்பட்டமான வெளிப்பாடு மட்டுமேயாகும்.

ஓர் உண்மையான சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தின் அபிவிருத்தியே முக்கிய காரணியாக இருக்கும். இது பிரிட்டனில் சோசலிச சமத்துவ கட்சியால் மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது. நிலைமைகளின் புறநிலை தர்க்கத்தின் அடிப்படையில், சோசலிச புரட்சிக்கான ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர, சோசலிச சமத்துவ கட்சி தவிர்க்கவியலாது வரவிருக்கின்ற சமூக போராட்டத்திற்குத் தயாரிப்பு செய்யும்.