சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Another palace coup in Australia

ஆஸ்திரேலியாவில் மற்றொரு பிரதமர் மாளிகை பதவிக்கவிழ்ப்பு

Peter Symonds
16 September 2015

Use this version to printSend feedback

ஆளும் தாராளவாத கட்சிக்குள் நடந்த தலைமைக்கான பதவிக்கவிழ்ப்பில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போர்ட்டை நீக்கிவிட்டு மால்கோம் டர்ன்புல் பிரதியீடு செய்தமை, திங்கள்கிழமை முழுவதும் அடுத்தடுத்த மணித்தியாலங்களுக்கான விடயமாகி இருந்தது. சக்திவாய்ந்த பெருநிறுவன நலன்கள் சார்ந்த அதிகார தரகர்களது சிறிய சதிக்கூட்டங்களின் இழிந்த யோசனைகள் மற்றும் சதியாலோசனைகளின் விளைவாக, ஐந்தாண்டுகளில் மூன்றாவது முறையாக, ஆஸ்திரேலிய மக்கள், அவர்களின் முதுகுக்குப் பின்னால், அரசாங்கம் மாற்றப்படுவதை நேற்று கண்விழித்தபோது கண்டனர்.

ஜூன் 2010 இல், தொழிற் கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட் ஒரேயிரவில் உள்கட்சி பதவிக்கவிழ்ப்பு சதியில் நீக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அபோட்டை அதிகாரத்திற்கு கொண்டு வந்த 2013 தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், ரூட் அவரைப் பிரதியீடு செய்த ஜூலியா கில்லார்டுக்கு எதிராக அதேபோன்ற ஜனநாயக-விரோத நடைமுறைகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டார். ரூட் க்கு எதிரான பதவிக்கவிழ்ப்பு சதியின் விடயத்தில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க தந்திரங்களோடு அவர் முழுமையாக அணிசேராததற்காக வாஷிங்டனின் கோபத்தோடு, தொழிற் கட்சியின் சக்திவாய்ந்த கன்னைகளது நலன்கள் ஒத்திசைந்திருந்தன.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மாளிகை பதவிக்கவிழ்ப்பு சதிக்கான வேட்கை உத்தியோகபூர்வ கட்சிகளினதும் மற்றும் முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகளது துர்நாற்றத்தை பிரதிபலிக்கிறது. பாரிய பெரும்பான்மை மக்கள் பிரதான அரசியல் கட்சிகளான தாராளவாத கட்சி, தேசிய கட்சி, தொழிற் கட்சி மற்றும் பசுமை கட்சியிடமிருந்து ஆழமாக அன்னியப்பட்டிருப்பது, தசாப்தகாலமாக அவை தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், கூலிகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது நடத்திய தாக்குதல் மற்றும் ஒரு சிறிய சிறுபான்மையின் கரங்களில் செல்வவளம் அருவருப்பூட்டும் மட்டங்களில் திரண்டிருப்பதன் விளைபொருளாகும்.

இரண்டாம் உலக போருக்குப் பின்னரிலிருந்து ஆஸ்திரேலிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற தொழிற் கட்சி மற்றும் தாராளவாத கட்சிகள், அங்கத்துவ எண்ணிக்கை சரிந்துபோய், சுயசேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளால் மற்றும் அவர்களது பரிவார கோஷ்டிகளால் நியமிக்கப்பட்டவர்களோடு வெற்று கூடுகளாகி நிற்கின்றன. தொழிற் கட்சிக்கு சுமார் 54,000 மற்றும் தாராளவாத கட்சிக்கு சுமார் 70,000 என்ற அவர்களது பதிவுசெய்யப்பட்ட அங்கத்தவவர்களின் எண்ணிக்கைக்கும் அரசியல் நிகழ்ச்சிபோக்குகளில் பங்குபற்றும் அற்ப எண்ணிக்கைக்கும் எந்த தொடர்புமே கிடையாது.

இந்த நாற்றமெடுத்த மற்றும் மரணப்படுக்கையில் கிடக்கும் அரசியல் சூழலில் தான், தனிப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கன்னை அதிகார தரகர்களால், அவர்களது கட்சி பதவிகளிலிருந்து வரும் எதிர்ப்பைக் குறித்த பயமின்றி, தேசிய தேர்தல்களின் முடிவுகளுக்கு மதிப்பளிக்காமல், ஒரேயிரவில் ஒரு பிரதம மந்திரியின் பதவிநீக்கத்தை முடுக்கிவிட முடிந்திருக்கிறது. அதுபோன்ற அணுகுமுறைகளைப் புகலிடமாக நாடுவது, 2008 உலகளாவிய நிதிய நெருக்கடியை அடுத்து தீவிரப்பட்டு மட்டுமே உள்ளது. கிரீஸ் மற்றும் இத்தாலியில் கடந்த ஏழு ஆண்டுகளின் பல்வேறு காலக்கட்டங்களில், நிதியியல் மூலதனத்தின் சிக்கனத்திட்ட கட்டளைகளைத் திணிப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்படாத தொழில் உத்தியோகர்களை கொண்ட அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கனிமவள ஏற்றுமதி தேவைகளுக்காக சர்வதேச பொருளாதார முறிவின் முழு தாக்கத்திலிருந்து ஆஸ்திரேலியா சற்றே பாதிப்பின்றி இருந்தபோதினும், சீன வளர்ச்சிக்குறைவு மற்றும் வீழ்ச்சியடைந்துவரும் பண்டங்களின் விலைகள் இப்போது அதன் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்து வருகின்றன.

அபோட் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவர்களது சிக்கன நிகழ்ச்சிநிரலைத் திணிக்க தவறியதால் ஆழமாக அதிருப்தியடைந்த, சக்திவாய்ந்த பெருவணிக பிரிவுகள் அப்பணியை முன்னெடுப்பதற்கு டர்ன்புல் பக்கம் திரும்பியுள்ளன. ஒரு முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் வங்கியாளரான டர்ன்புல் நிதியியல் மூலதன நலன்களின் உருவடிவமாவார். தாராளவாத கட்சியின் பழமைவாத அணிக்கு அபோட் தலைமை கொடுத்து வந்த நிலையில், டர்ன்புல் தன்னைத்தானே ஒரு வலதுசாரி வெகுஜனவாதியாக காட்டிக்கொண்டு, ஓரின திருமணம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் போன்ற பிரச்சினைகளில் உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளிடம் அதிக "முற்போக்கான" கோரிக்கைகளை முன்வைக்க முனைகிறார்.

பிபிசி செய்தி நிறுவனம், நேற்று, ஆஸ்திரேலியாவை "ஜனநாயக உலகின் பதவிக்கவிழ்ப்பு தலைமையகம்" என்று சித்தரித்தது, சர்வதேச ஊடகங்கள் எங்கிலும் அதேபோன்ற விடையிறுப்பு ஒலித்தது, என்றபோதினும் பொருளாதார நெருக்கடியும் அரசியல் கொந்தளிப்பும் ஒவ்வொரு நாட்டிலும் வழமையானதாக மாறி வருகிறது. அதிகரித்தளவில், ஆளும் வர்க்கங்கள் எதிர்விரோத குழுக்களுக்கு எதிராக அவற்றினது கன்னை நலன்களை முன்னெடுக்க மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்கள் மீதான நாசகரமான தாக்குதலை ஆழப்படுத்த மிக பகிரங்கமாக ஜனநாயக-விரோத அணுகுமுறைகளை நாடுகின்றன.

இந்த விடயத்திற்கு, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் ஒரு எடுத்துக்காட்டாகும். அது பல கோடி மதிப்பிலான மில்லியனர் மற்றும் பில்லியனர்களது சிறிய குழுக்களால் விலைக்கு வாங்கப்பட்ட வேட்பாளர்களுக்கு இடையிலான ஒரு போட்டியாக சுருங்கியுள்ளது, அவர்கள் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் மனுவிற்காக போட்டியிடுவதற்கே பத்து மில்லியன் கணக்கான டாலர்களை வழங்குகின்றனர். பில்லியனர் டோனால்ட் ட்ரம்ப் விடயத்தில், அவர் ஓர் அரசியல் பினாமியைச் சார்ந்திருப்பதை விட தாமே போட்டியிட முடிவு செய்துள்ளார்.

மற்ற இடங்களில், நீண்டகால ஸ்தாபக கட்சிகளின் சீரழிவும் முற்றுமுதலான உருக்குலைவும் முதலாளித்துவ வர்க்கத்தை, அதன் தொழிலாள வர்க்க விரோத நிகழ்ச்சிநிரலைக் கொண்டு செல்வதற்காக, புதிய அரசியல் இயங்குமுறைகளுக்குத் திரும்ப நிர்பந்திக்கிறது. இது பிரான்சில் தேசிய முன்னணி போன்ற அதிதீவிர வலது மற்றும் கிரீஸில் சிரிசா போன்ற போலி இடது ஆகிய இரண்டினது புதிய அரசியல் உருவாக்கங்கள் மேலுயர இட்டுச் சென்றுள்ளது.

பிரிட்டனில், ஜெர்மி கோர்பைனை ஓர் "இடது" அரசியல் பாதுகாப்பு போக்கிடமாக ஊக்குவிப்பதும் மற்றும் தொழிற் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் உத்தியோகப்பூர்வ அரசியல் அழுகிப்போயிருப்பதை அம்பலப்படுத்துகிறது. கோர்பைனுக்கு கிடைத்த பெருகிய பிரமாண்ட வாக்குகளும் மற்றும் அந்த பதவிக்கு அவரது பிளேயரிச சந்தைசார் எதிர்பாளர்களின் மானக்கேடான தோல்வியும், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் மீதும் மற்றும் அதன் சிக்கன நிகழ்ச்சிநிரலுக்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் கொதித்துக் கொண்டிருக்கும் கோபத்தின் ஒரு குறிப்பை வழங்கின.

கான்பெர்ராவில் இவ்வார எழுச்சி, தொழிலாள வர்க்கம் சகல பெருவணிக கட்சிகளிலிருந்து விலகி அதன் அரசியல் சுயாதீனத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் அடிக்கோடிடுகிறது. தொழிற் கட்சி மற்றும் தாராளவாத நாடாளுமன்றவாதிகள் இருதரப்பினருமே, மிகவும் அடிப்படை ஜனநாயக விதிமுறைகளைக் கூட முற்றிலுமாக மதிக்காமல், அரசாங்கங்களை மறுஒழுங்கமைக்க இதுபோன்ற சூழ்ச்சிகள் மற்றும் சதியாலோசனைகளை நாட விருப்பமுடன் இருப்பது, ஓர் எச்சரிக்கையை உள்ளடக்கியுள்ளது. அதாவது பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கால் கோரப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வெட்டுக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் போராட முன்வருகையில், அது அதற்கெதிராக பயன்படுத்துவதற்கான ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை பற்றி முன்கூட்டியே எதிர்பார்க்கின்றது.

அதிகரிந்துவரும் சமூக சமத்துவமின்மை, ஒடுக்குமுறை மற்றும் போர் உந்துதலின் மூலகாரணங்களுக்கு, இலாபநோக்கு அமைப்புமுறைக்கே தீர்வாக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் இந்த ஒரேயொரு வழியில் மட்டுந்தான், அதன் சமூக தேவைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். அதுபோன்றவொரு வேலைத்திட்டத்திற்காக போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியாகும்.