சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK Labour leader Corbyn, addressing Trades Union Congress, makes first policy speech

இங்கிலாந்து தொழிற் கட்சி தலைவர் கோர்பைன், முதல் கொள்கை உரையை தொழிற்சங்க கூட்டமைப்பில் பேசுகையில் வழங்குகிறார்

By Chris Marsden
16 September 2015

Use this version to printSend feedback

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பைன், அவரது முதல் பிரதான கொள்கை உரையை செவ்வாயன்று தொழிற்சங்க கூட்டமைப்பின் (TUC) வருடாந்த கூட்டத்தில் வழங்கினார்.

சமூகநல திட்ட வெட்டுக்கள், சமூகநல உதவி உச்சவரம்பு, பழமைவாத கட்சியின் புதிய வேலைநிறுத்த-எதிர்ப்பு சட்டமசோதா ஆகியவற்றிற்கு எதிர்ப்பை சூளுரைக்கின்ற மற்றும் சிக்கனத்திட்டத்தை கண்டிக்கின்ற அவரது அறிக்கைகள், அவருக்கு முன்பிருந்தவர்களான டோனி பிளேயர் மற்றும் ஜோர்டன் பிரௌன் ஆகியோரால் அவர்களது புதிய வலதுசாரி கொள்கைகளை அறிவிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்ட கருத்துக்களுக்கு முற்றிலும் எதிர்முரணாக இருந்தன.

கோர்பைன் 15 நிமிடங்களுக்கு சற்று அதிகமாக பேசினார். அரசாங்கம் "வறுமை புறக்கணிப்பாளர்களாக" (poverty deniers) இருந்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார், “இந்த அரசாங்கம் ஏற்றுள்ள சிக்கனத்திட்டம் உண்மையில் ஓர் அரசியல் விருப்பத்தெரிவாகும், அதை அவர்கள் ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மீது திணித்து வருகின்றனர்”. இலண்டனில் 23,000 பவுண்டு மற்றும் இங்கிலாந்தின் ஏனைய இடங்களிலும் மற்றும் வேல்ஸிலும் 20,000 பவுண்டு என்ற டோரிக்களின் சமூகநலவாழ்வு உதவித்தொகை உச்சவரம்பை மற்றும் திட்டமிடப்பட்டுள்ள குழந்தை வரிச்சலுகை வெட்டு ஆகியவற்றை தொழிற் கட்சி நீக்க முயலுமென அவர் தெரிவித்தார்.

அவர் தொழிற்சங்க சட்டவரைவையும் எதிர்க்க சூளுரைத்தார். அது, வேலைநிறுத்தத்திற்கு அழைப்பிடும் வாக்கெடுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பங்களிப்பு வரம்பு மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகளை உள்ளடக்கிய வேலைநிறுத்தங்களுக்கு குறைந்தபட்சம் 40 சதவீத பங்களிப்பு வரம்பு இருக்க வேண்டுமென நிர்பந்திக்கும், இதை அவர் "ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் மீதான போர்" அறிவிப்பாக கண்டித்தார். தொழிற் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் அது அச்சட்டத்தைத் திரும்பபெறுமென அறிவித்தார்.

அவரது உரையில் அரசியல்ரீதியில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் சிக்கன-எதிர்ப்பு, டோரி-எதிர்ப்பு நிகழ்ச்சிநிரலின் மத்திய அச்சாக தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கூட்டணியை புதுப்பிப்பதின் மீது அவர் அதிககவனத்தை செலுத்தியிருந்தார். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஒரு விசுவாசமான சேவகராக இருப்பதை நிரூபிப்பதற்கு, தொழிற் கட்சி தொழிற்சங்கங்களிடமிருந்து "சுயாதீனமாக" இருக்க வேண்டுமென பிளேயர் பிரபலமாக வலியுறுத்தி இருந்தார். ஆனால் கோர்பைன் 2020 பொது தேர்தல் வெற்றியை அதிகரிப்பதற்கு அவற்றிற்கிடையிலான ஒரு புதுப்பிக்கப்பட்ட கூட்டணிக்காக அவரே அறைகூவல் விடுக்கிறார்.

இப்போது செயலிழந்து போயுள்ள தேசிய பொது பணியாளர் சங்கத்தில் ஒரு நிர்வாகியாக அவர் வகித்த கடந்தகால பாத்திரத்தை மேற்கோளிட்டு தொடங்கிய அவர், தன்னைத்தானே வாழ்நாள் தொழிற்சங்கவாதியாக வர்ணித்தார். கொள்கை வகுப்பதில் தொழிற்சங்கங்களின் கருத்தை ஏற்க விரும்புவதாக தெரிவித்த அவர், “விடயங்களை வித்தியாசமாக செய்வோம், ஆனால் ஒன்றுசேர்ந்து செய்வோம்,” என்று அறிவித்தார். "ஒரு சிறந்த சமூகத்திற்கான" ஓர் தொலைநோக்கு பார்வையைத் தொழிற் கட்சி அமைக்க வேண்டியுள்ளது, அதை தொழிற்சங்கங்களுடனான "பெருமைமிகு நடவடிக்கைகளைக்" கொண்டு தான் முன்னெடுக்கப்பட முடியும் என்றார்.

ஒரு தொழிற் கட்சி தலைவர் தொழிற்சங்க கூட்டமைப்பு மாநாட்டில் எப்போதும் உரையாற்ற வேண்டுமென கூறிய அவர், ஏனென்றால் "அதையொரு இயல்பாகவே அமைந்துள்ள உறவாக நான் பார்க்கிறேன்என்றார். “மனதை மாற்றவும், அரசியலை மாற்றவும்" தொழிற் கட்சி தொழிற்சங்கங்களோடு இணைந்து இயங்க வேண்டுமென வலியுறுத்தினார். தொழிற்சங்கத்தோடு கூட்டு ஏதோ "கடந்தகால விடயம்" அல்ல, தொழிற்சங்கங்களின் செல்வாக்கு வெறுமனே வேலையிடங்களில் மட்டும் உணரப்பட வேண்டியதல்ல, மாறாக ஒட்டுமொத்த சமூகத்திலும் உணரப்பட வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

தொழிற்சங்கங்களுக்கு கோர்பைன் இதுபோன்றவொரு முற்போக்கான பாத்திரம் வழங்குவது, ஏறத்தாழ இரண்டு தலைமுறை தொழிலாளர்கள் அனுபவித்துவரும் அரசியல் யதார்த்தங்களின் முன்னால் காற்றில் பறக்கிறது. இங்கிலாந்தில், 1984-85 சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்குப் பின்னரில் இருந்து, தொழிற்சங்கங்கள், ஓர் உடைவில்லா தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகள் மற்றும் தோற்கடிப்புகளுக்கு தலைமை தாங்கியுள்ளன, அவை வலதைநோக்கி வணிகம்-சார்பாக சாய்ந்த தொழிற் கட்சியோடு அடியொற்றி அணிவகுத்ததால் அவற்றின் அங்கத்துவ எண்ணிக்கையில் சுமார் பாதியை இழந்தன. இக்காரணத்தினால் தான் தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கை நிலைமைகளில் இந்தளவிற்கு ஒரு நாசகரமான வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

Unison இன் டேவ் ப்ரென்டிஸ், GMB இன் சேர் பௌல் கென்னி, இரயில்வழி, கடல்வழி மற்றும் தரைவழி போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மிக் கேஷ், தீயணைப்பு தொழிற்சங்கத்தின் மேட் விரேக் அனைவரும் கோர்பைனின் உரையைப் புகழ்ந்தனர். கடைசி இரண்டு அமைப்புகளும், தொழிற் கட்சி தொழிற்சங்கங்களை அலட்சியப்படுத்தி, தனியார்மயமாக்கலைத் தழுவியதை எதிர்த்து அதிலிருந்து பிரிந்து சென்றவையாகும். அவை இரண்டுமே அடுத்த ஆண்டு அவர்களது கூட்டத்தில் மீண்டும் ஒருங்கிணையும் நடவடிக்கைகளை பரிசீலிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கோர்பைன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சாரத்தில் சில நூறு ஆயிர பவுண்டுகளை வழங்கிய தொழிற்சங்கங்களில் அத்தொழிற்சங்கங்களும் உள்ளடங்கும்.

இவர்களும் மற்றும் ஏனைய தொழிற்சங்க தலைவர்களும் ஒரு புதுப்பிக்கப்பட்ட அரசியல் கூட்டணிக்கு கோர்பைன் முன்வந்திருப்பதில் ஆதாயமிருப்பதாக காண்கிறார்கள் என்றால், அது சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைப்பாட்டிலிருந்து அல்ல, மாறாக வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களுக்கான தொழில்துறை பொலிஸ்காரர்களாக அவர்கள் வரலாற்றுரீதியில் வகித்த பாத்திரத்தை பாதுகாக்கும் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கிறார்கள். கோர்பைனின் வெற்றி மூலம் வெளிப்பட்ட சமூக  மற்றும் அரசியல் எதிர்ப்பினை கருத்தில் கொண்டே இப்பணி உழைக்கும் மக்களின் கதியைக் குறித்து கவலை கொண்ட வாய்சவடால் வாக்குறுதிகளை இலகுவாக்குகின்றதே தவிர, ஆளும் வர்க்கத்திற்கு எதிரான உண்மையான தொழில்துறை மற்றும் அரசியல் எதிர்ப்பு ஒழுங்கமைப்பதை இது எவ்வகையிலும் அர்த்தப்படவில்லை.

தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள ஏனையவை கோர்பைனின் வெற்றிக்கு அவற்றின் அசௌகரியத்தையோ அல்லது நேரடியான எதிர்ப்பையோ தெளிவுபடுத்தினார்கள். கோர்பைனின் வெற்றியை அவர்கள் அவர்களது அங்கத்தவர்களிடையே அவர்களை கட்டுப்படுத்த சிரம்பப்படும் ஒரு போராட்டம் எழுவதற்கான சந்தர்ப்பமாகலாம் என பார்க்கிறார்கள், அத்தகையவர்களை கட்டுப்படுத்துவதற்கும் அவர்கள் சிரமப்படுவார்கள். ஜோன் மெக்டொனெல் கோர்பைன் கருவூல சான்சிலராக நியமித்ததற்கு, சிலர், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அநாமதேயராக இருந்து, அவர்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். ஒரு "மூத்த தொழிற்சங்க நிர்வாகி", அவரொரு "மோசமான தேர்வு", “மிகவும் கடுமையான கடந்தகால போக்கின் மிச்சசொச்சம் .. அது தவறான சேதியைத் தான் அனுப்புகிறது,” என்று BuzzFeed குறிப்பிட்டதாக மேற்கோளிட்டார்.

மற்றொரு தொழிற்சங்க நிர்வாகி, கோர்பைனின் உரை குறித்து கருத்துரைக்க Daily Telegraphக்கு கூறுகையில், “அது படுமோசமான பரிதாபம் (f..cking awful). கோதுமை அறுவடைகள் மற்றும் டிராக்டர் உற்பத்தி மீதான புள்ளிவிபரங்கள் மட்டுந்தான் விடுபட்டுள்ளன,” என்றார்.

தொழிற்சங்க கூட்டமைப்பின் பொது செயலாளர் பிரான்சிஸ் 'கிராடி மாநாட்டின் அவரது தொடக்க உரையில் கூறிய கருத்துக்கள் மிக முக்கியமானவை. கோர்பனைனின் பிரச்சாரத்திற்கு உண்டான ஆதரவை கேலி செய்து, அதில் நூறாயிரக் கணக்கானவர்களைத் தொழிற்கட்சியில் சேர்த்துள்ளனர் அல்லது பதிவுசெய்துள்ளனர் என்பதால், அப்பெண்மணி அறிவித்தார், “ஓர் அரசியல் கட்சி என்பது இரசிகர் மன்றத்தை விட மேலதிகமான ஒரு உடன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்”, அது, "அதன் சொந்த மட்டங்களை கடந்து நாட்டின் பெரும்பகுதிகளுக்கு கோரிக்கைவிட வேண்டும்,” என்றார்.

அவரது தொனி வேண்டுமென்றே வலதுசாரி கூற்றான, அதாவது கோர்பைனின் கொள்கைகள் தொழிற்கட்சியின் நெருக்கமான சுற்றுவட்டத்திற்கு வெளியே செல்வாக்கிழந்தவை என்பதை எதிரொலித்தது. அது அதனுடன் சேர்ந்து, கோர்பைன் "அங்கத்துவ ஐக்கியம்" (அதாவது வலது சாரி உடன் ஐக்கியத்தைப்) பேணுகிறார் மற்றும் தொழிற்கட்சி "எந்தவொரு தனிநபர், அல்லது எந்தவொருவரின் வாக்காளரின் நலனுக்கு அப்பாற்பட்டு ஓர் உயர்ந்த கூட்டு நோக்கத்தைக்" கொண்டுள்ளதை உறுதிப்படுத்துகிறார் என்ற வலியுறுத்தலையும் இணைத்திருந்தது, இவற்றைக் கொண்டு அப்பெண்மணி அது பெரு வணிகங்களுக்கு விசுவாசமானதென்று அர்த்தப்படுத்தினார்.

பிளேயரின் தொனியை எதிரொலிக்கும் வகையில், “தொழிற் கட்சியின் நோக்கம் மிகத் தெளிவானது, செல்வவளம் மற்றும் வாய்ப்புகளை ஒருசிலருக்கு அல்ல, பலருக்கு கிடைக்க செய்ய வேண்டும். ஆனால் அதன் அர்த்தம் ஒரு பொது தேர்தலில் வென்றாக வேண்டும் என்பதாகும்,” இதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

2010-2015 டோரி-தாராளவாத ஜனநாயக கூட்டணியில் முன்னாள் வியாபாரத்துறை செயலராக இருந்த வின்சி கேபிளுடன் சேர்ந்து கூட்டாக செப்டம்பர் 10 அன்று கார்டியனுக்காக தலையங்க-பக்க கட்டுரை எழுதியதே, புதிய வேலைநிறுத்த-எதிர்ப்பு சட்டவரைவுக்கு 'கிராடி இன் விடையிறுப்பாக இருந்தது.

அக்கட்டுரையில் அவர்கள், "1990கள் மற்றும் 2000களில்" எவ்வாறு "வேலைநிறுத்தங்கள் ஆண்டுக்கு ஒரு மில்லியன் நாட்களுக்கு கீழ் வந்தது" என்பதை பெருமை பீற்றினார்கள், அதற்கு தொழிற்சங்கங்களுக்குத் தான் நன்றி கூற வேண்டும். அவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டார்கள்: “சம்பளம், ஓய்வூதியங்கள் மற்றும் பாரிய வேலைநீக்கங்கள் மீதிருந்த பலமான உடன்பாடின்மைக்கு இடையிலும், கூட்டணியின்கீழ் அதே போக்கு தொடர்ந்தது. ஒரு தொழிற்சங்கத்தை சேர்ந்த 6.5 மில்லியன் பிரிட்டிஷ் மக்கள் இது தொழிலாளர் சக்தியில் ஒரு கால்பகுதிக்கு சற்று அதிகம் மற்றும் பொதுத்துறை தொழிலாளர்களில் பாதிக்கும் சற்று அதிகம் என்ற நிலையில்சராசரியாக 15 ஆண்டுகளுக்கு அவர்களது ஒரு நாள் உழைப்பை வழங்க மறுத்தனர். எந்தவொரு தரமுறையிலும், ஏனைய ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அல்லது வரலாற்றுரீதியில், பிரிட்டன் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேலைநிறுத்தம் இல்லாது உள்ளதுஎன்றனர்.

தொழிற்சங்க சட்டவரைவானது "ஆழமாக உணரப்பட்ட மற்றும் பரந்தளவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட துயரங்கள் இருக்கையில், அதனை தொடர்ந்த நடவடிக்கை அதை தீர்க்கும் குறைந்த விருப்பத்துடன் மிகவும் கசப்பானதாகவும் நீடித்ததாகவுமே இருக்கும்" என்பதே பிரதான அபாயமாகும்.

அவர்கள் தொடர்ந்து குறிப்பிடுகையில், தற்போது "வேலைநிறுத்தத்திற்கான ஐந்து வாக்கெடுப்பில் ஒன்றுக்கும் குறைவானதே வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக உள்ளது" என்றனர். “தொழிற்சங்கங்களுடன் இணைந்து இயங்கும்" ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட வேண்டாமென டோரிக்களுக்கு அவ்விருவரும் முறையிட்டனர். “பல நல்ல முதலாளிமார்கள், தனியார் துறையிலும் சரி பொதுத்துறையிலும் சரி, உற்பத்தித்திறனை அதிகரிக்க தொழிற்சங்கங்களுடன் ஆக்கப்பூர்வமாக இணைந்து இயங்குகின்றனர்...” என்றனர்.

முதலாளிகளுக்கு எதிரான பாதுகாப்பு அமைப்புகளாக செயல்பட்டு வந்த, அப்போதைய கடந்தகால பொற்காலம் என்று கூறப்படுவதைக் குறித்த கோர்பைனின் சூசகமான சகல கருத்துக்களை விட, 'கிராடி இன் கருத்துக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அரசியல் விசுவாசங்களை மற்றும் தொழிலாள வர்க்கத்துடனான அவர்களது விரோத உறவுகளை மிகவும் உண்மையாக பேசுகின்றன.