சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government adopts drastic measures to deter refugees

ஜேர்மன் அரசாங்கம் அகதிகளை அச்சுறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றது

By Peter Schwarz
19 September 2015

Use this version to printSend feedback

அகதிகளைப் பட்டினி கிடக்க விட்டு, அவர்களுக்கு எல்லா மருத்துவ உதவிகளையும் மறுப்பதன் மூலமாக, ஜேர்மன் அரசாங்கம் அகதிகளை விரட்டியடிக்க விரும்புகிறது. இந்நடவடிக்கைக்கான ஒரு வரைவு சட்டம், திங்கட்கிழமையிலிருந்து பல்வேறு அமைச்சகங்களின் விவாதத்தில் இருந்து வருவதுடன், அக்டோபரில் அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

அச்சட்டமசோதாவின் முழு தகவல்களையும் கண்டுள்ள, Süddeutscher Zeitung செய்தியின்படி, அது "போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் வரலாறில், அகதிகளுக்கு உதவுவதில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைப்" பிரதிநிதித்துவம் செய்கிறது. “டப்ளின் அகதிகள்" என்றழைக்கப்படுபவர்கள் கைச்செலவு உதவிப்பணம் பெறுவதற்கும், தங்குவதற்கான மற்றும் மருத்துவ உதவிகள் பெறுவதற்கும் உரிமை இருக்காது, ஆனால் திரும்பி செல்வதற்கான பயணச்சீட்டுடன் சில வசதிகள் மட்டும் வழங்கப்படும்.

இந்த "டப்ளின் அகதிகள்" என்பவர்கள் முன்னதாக ஏனைய ஐரோப்பிய நாடுகள் வழியாக பயணித்து ஜேர்மனியை வந்தடைபவர்களாவர். ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளில் அமைந்திருக்காததால், இது ஏறத்தாழ அந்நாட்டிற்கு தஞ்சம்கோரி வரும் அனைவருக்கும் பொருந்திவிடும். டப்ளின் உடன்படிக்கையின் கீழ், அகதி ஒருவர் எந்நாட்டில் முதலில் வந்திறங்குகிறாரோ அந்நாடே அவர்களையும், அவர்களது தஞ்சம்கோரும் விண்ணப்பத்தையும் ஏற்க பொறுப்பாகும்.

சென்ற வாரங்களில், சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு நிறைய எண்ணிக்கையிலான அகதிகள் தப்பியோடி வந்ததால் டப்ளின் உடன்படிக்கை பொறிந்துபோனது. தஞ்சம் கோருவோரது உரிமையை இறுக்குவதன் மூலமாக, ஜேர்மன் அரசாங்கம் தெளிவாக "டப்ளின் அமைப்புமுறையை மீண்டும் ஸ்திரப்படுத்த" விரும்புகிறது என்று Süddeutscher Zeitung குறிப்பிட்டது.

இக்கொள்கை மாற்றம், மிக மிக அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட அகதிகளின் முதுகுக்குப் பின்னால் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் பட்டினி மற்றும் வீடற்றநிலைமைகளால் பீதியூட்டப்பட்டு, கூறவியலாத நிலைமைகள் மேலோங்கிய மற்றும் தோற்றப்பாட்டளவில் காவல்முகாம்களில் அடைக்கப்படுகின்ற நாடுகளுக்கு கால்நடைகளைப் போல அவர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள்.

மூன்று வாரங்களுக்கு முன்னால், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஜேர்மன் மக்களின் நல்லிணக்க அலைக்கு விடையிறுக்கையில், மத்திய கிழக்கின் போர்-பாதித்த பகுதிகளிலிருந்து வரும் அகதிகளை அனுமதிக்க வாக்குறுதி அளித்திருந்தார், இதை அவர் நம்மால் அதை செய்ய முடியும்" என்ற வார்த்தைகளைக் கொண்டு அடிக்கோடிட்டார். அப்போதிருந்து, அவரது அரசாங்கம் ஜேர்மனியின் எல்லைகளை மூடுவதற்கு திட்டமிட்டு வேலை செய்துள்ளது, ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அதேவழியைப் பின்தொடர்கின்றன.

ஹங்கேரி மற்றும் சேர்பியாவிற்கு இடையிலான எல்லை, இதன் வழியாக தான் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனிக்கு எண்ணிறைந்த அகதிகள் கடந்த வாரம் வந்திருந்திருந்தனர் என்ற நிலையில், இப்போது மீட்டர் கணக்கில் உயரமான முறுக்கிய முள்கம்பி வேலியால் உள்நுழையவியலாதவாறு அடைக்கப்பட்டு, ஒரு பாரிய பொலிஸ்-இராணுவ படையைக் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரிய ஜனாதிபதி விக்டொர் ஓர்பன் அகதிகளை அவர் காட்டுமிராண்டித்தனமாக கையாள்வதற்காக, அதிகமான சர்வதேச விமர்சனங்களைப் பெற்றுள்ளார். ஆனால் அந்த எல்லையை மூடியதன் மூலமாக, அவர் ஜேர்மன் மற்றும் ஏனைய ஐரோப்பிய அரசாங்கங்களால் அவரிடம் என்ன கோரப்பட்டதோ அதை தான் செய்கிறார். தஞ்சம்கோரும் சட்டங்களை இறுக்குவதன் மூலமாக, ஓர்பனின் காட்டுமிராண்டத்தனமான அணுகுமுறைகளை ஜேர்மனியும் ஏற்று வருகிறது.

ஹங்கேரிய எல்லைமூடலை அடுத்து, பல அகதிகள் சேர்பியாவிலிருந்து குரோஷியா மற்றும் ஸ்லோவேனியா வழியாக ஆஸ்திரியாவிற்குப் பயணிக்க தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 11,000 அகதிகள் சேர்பிய-குரோஷிய எல்லையைக் கடந்துள்ளனர்.

குரோஷியா அவர்களுக்கு தோற்றப்பாட்டளவில் எந்த ஆதரவும் வழங்கவில்லை என்பதால், படுமோசமான காட்சிகள் நடந்தேறுகின்றன. வியாழனன்று டோவார்னிக் எல்லையைக் கடக்கையில், ஆயிரக் கணக்கான அகதிகள் உணவின்றி, குடிக்க நீரின்றி மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நடந்தே அவர்களது பயணத்தைத் தொடர முயன்ற போது, அவர்கள் பொலிஸால் தடுக்கப்பட்டனர்.

இதற்கிடையே குரோஷியா மற்றும் ஸ்லோவேனியா இரண்டுமே அவற்றின் எல்லைகளை மூடிவிட்டன. வியாழனன்று இரவு, ஷாக்ரெப் சேர்பியாவிற்கு செல்லும் எட்டில் ஏழு வழிகளை மூடியதுடன், அவசர தேவைக்காக பின்புலத்தில் இராணுவத்தையும் நிறுத்தியது. ஸ்லோவேனியா ஒரு இரயிலை நிறுத்தி, 150 அகதிகளை, அவர்களது ஆவணங்கள் செல்லாது என்று கூறி ஷாக்ரெப்பிற்கு திரும்ப அனுப்பியது. அவ்விரு நாடுகளுக்கு இடையிலான இரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில், ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கைகள் அவற்றின் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளன. அதில் அகதி கப்பல்கள் கண்காணிக்கப்படும் என்பது மட்டுமல்ல, மாறாக கைப்பற்றப்பட்டு, ஆள்கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு, படகுகள் மூழ்கடிக்கப்படும். இராணுவ நடவடிக்கைகளின் இத்தீவிரப்பாடு, அகதிகள் தப்பிச்செல்லும் பாதைகளை மூடுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

துருக்கியிலிருந்து கிரேக்க ஏகியன் தீவுகள் வழியாக செல்லும் அகதிகளுக்கான பாதைகளை மூடுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் அதிவேகமாக இயங்கி வருகிறது. இப்போது, சிரியாவிலிருந்து வந்த 2 மில்லியன் அகதிகள் துருக்கியில் உள்ளனர். 2002 உடன்படிக்கையின்படி, துருக்கிய அரசாங்கம் கிரீஸிலிருந்து வரும் "சட்டவிரோத" புலம்பெயர்வோரை திருப்பி ஏற்றுக்கொள்ள உறுதியளித்திருந்தது. ஆனால் இப்போது அது இந்த உடன்படிக்கைக்கு இணங்கி நடக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் இப்போது துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்டானுக்கு நிதியியல் ஊக்குவிப்புகள் வழங்குவதன் மூலமாக, நூறாயிரக் கணக்கான சிரிய அகதிகளை அங்கேயே உறுதிப்படுத்தி வைக்க விரும்புகிறது.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து தப்பியோடிவரும் அகதிகளைத் தடுக்க விரும்புவதுடன், தஞ்சம்கோரும் சட்டங்களை ஜேர்மனி இறுக்குவதென்பது வறிய பால்கன் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அகதிகள் வருவதைத் தடுப்பதற்காகவும் ஆகும்.

இதுவரையில், அல்பானியா, கொசோவோ மற்றும் மொண்டெனேக்ரோ ஆகியவை "பாதுகாப்பான நிலைமையுள்ள நாடுகளாக" அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு வேலை செய்யும் உரிமை வழங்கப்படாது, சட்டப்பூர்வ வசிப்பிட அந்தஸ்தைப் பெற ஒரு வேலை செய்யவேண்டியது அவசியமென்பதால், அதுவும் அவர்களுக்குக் கிடைக்காது. அனைத்திற்கும் மேலாக, அவர்கள் இப்போது மூன்று மாதங்களுக்குப் பதிலாக ஆறு மாதங்கள் தற்காலிக முகாம்களில் (reception camp) தங்கியிருக்க வேண்டும், அங்கே அவர்களுக்குப் பணம் வழங்கப்படாது, வெறும் பொருள் உதவிகளை மட்டுமே பெறுவார்கள்.