சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The resurrection of borders in Europe

ஐரோப்பாவில் எல்லைகள் மீளகட்டியெழுப்பபடுகின்றது

Peter Schwarz
18 September 2015

Use this version to printSend feedback

ஜூன் 27, 1989 இல், ஹங்கேரியிலிருந்து ஒரு புகைப்படம் உலகெங்கிலும் பரவியது. ஒரு நாடகபாணியிலான ஊடக விளம்பரமாக அது, ஹங்கேரிய வெளியுறவுத்துறை மந்திரி க்யூலா ஹார்னும் மற்றும் அவரது ஆஸ்திரிய எதிர்பலம் அலொய்ஸ் மோக்கும் கிழக்கு மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவைப் பிரிக்கும் முறுக்கிய கம்பிவேலிகளின் ஒரு பகுதியை வெட்டுவதைப் போன்ற காட்சியைக் காட்டியது. ஹங்கேரிய எல்லையைத் திறந்துவிட்டமை ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவு மற்றும் கிழக்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மீட்சிக்கு பெருமளவில் பங்களித்தது.

இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்து, உலக பத்திரிகைகளின் முதல் பக்கங்கள் மீண்டுமொருமுறை ஹங்கேரியிலிருந்து புகைப்படங்களை ஏந்தியுள்ளன. அவை கனரக ஆயுதமேந்திய பொலிஸால் பாதுகாக்கப்பட்ட கூர்மையான முறுக்கு கம்பிவேலியைக் காட்சிப்படுத்துகின்றன. நிராதரவான அகதிகள் எல்லை கடந்து வருவதைத் தடுப்பதற்காக, அப்பொலிஸ் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளோடு அவர்களைத் தாக்கி வருகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகள் ஹங்கேரியில் இறுக்கமாக மூடப்பட்டுள்ள நிலையில், அதன் உள்எல்லைகளுக்கோ மீண்டும் உயிரூட்டப்பட்டு வருகின்றன. 1995 சென்கென் உடன்படிக்கையால் கைவிடப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் வருகின்றன. இதுவரையில் ஜேர்மனி, ஆஸ்திரியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா மற்றும் ஏனைய நாடுகளும் ஆயிரக் கணக்கான எல்லை பொலிஸ் மற்றும் படையினரை அணிதிரட்டியுள்ளன.

உத்தியோகப்பூர்வமாக அதுவொரு தற்காலிக நடைமுறைதான். அகதிகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்காகவும் மற்றும் உள்வரவு குறைந்தவுடன் எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படுமென்றும் அர்த்தப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒருமுறை ஏற்படுத்தப்பட்ட தடுப்புகள் விரைவிலேயே குறைக்கப்படுமென்பதை யாரும் நம்ப மாட்டார்கள். வியாபார வட்டாரங்களில், "அகதிகள் நெருக்கடிக்கு ஒரு பொதுவான பொறுப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே விரைவில் ஓர் உடன்பாடு எட்டப்படவில்லையானால், அதுவே ஒரு விதியாக மாறிவிடும் என்ற அதிகரித்த கவலை" நிலவுவதாக நிதியியல் நாளிதழ் Handelsblatt எழுதுகிறது.

எவ்வாறாயினும், ஹங்கேரிய எல்லையில் முள்வேலி முற்றாக உருவாக்கப்படுகின்றது. சேர்பிய எல்லை மூடப்பட்டதற்குப் பின்னர், சேர்பியா போலில்லாமல் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளான ரோமானியா மற்றும் குரோஷியா உடனான எல்லைகளுக்காக மற்ற வேலிகள் திட்டமிடப்படுகின்றன.

ஹங்கேரிய எல்லையைத் திறந்துவிடும் படங்களும் மற்றும் 1989 இல் பேர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் படங்களும் பிரச்சார நோக்கத்தை உச்சியில் வைக்க சாதகமாக பயன்படுத்தப்பட்டன. அவை முக்கியமாக முதலாளித்துவ "சுதந்திரத்தின்" மறுஅறிமுகமாக கருதக்கூடிய அடையாளங்களாக நின்றன.

ஏற்கனவே அந்நேரத்திலேயே, அதுவொரு பொய்யாக இருந்தது. அரசுக்கு சொந்தமான உடைமைகளைக் கொள்ளையடித்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட ஆளும் உயரடுக்கை, முதலாளித்துவம் எந்தவொரு சமூக கடமைப்பாட்டிலிருந்தும் "விடுவித்தது". அது தொழிலாள வர்க்கத்தை அவர்களது வேலைகளிலிருந்து "விடுவித்தது", அவர்கள் அவர்களது சமூக பாதுகாப்பு வலையத்தை இழந்தார்கள். இன்றைய நாள் வரையில் நீடித்துள்ள அற்ப கூலிகள் மற்றும் அற்ப ஓய்வூதியங்களுக்கு இடையே, பெரும்பான்மையினருக்கு, பயணம் செய்வதற்கான சுதந்திரமே பெரிதும் கருதுகோளாக மிஞ்சியுள்ளன.

எவ்வாறிருப்பினும் இப்போது அக்கண்டம் முழுவதிலும் எல்லைக்கோடுகளை மீண்டும் உயிர்பிப்பது ஓர் அரசியல் திருப்புமுனையாகும். ஐரோப்பாவில் தேசிய மற்றும் சமூக பதட்டங்கள், கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளால் பயன்படுத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை விட அதிகமான வழிவகையைக் கொண்டு மட்டுமே ஒடுக்கப்பட முடியும் என்றளவிற்கு தீவிரமடைந்துள்ளன. எல்லைமூடல்களின் உடனடி இலக்கு அகதிகள் என்றாலும், நீண்டகால கட்டத்தில் அவை ஒட்டுமொத்த ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீதான ஓர் போர் பிரகடனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

வெள்ளமென அகதிகள் வருவதே கூட மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் ஏகாதிபத்திய போர்களின் மற்றும், ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு எதிராக பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஒரு சமூக எதிர்புரட்சியின் விளைவாகும். நூறு ஆயிரக் கணக்கானவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவிலிருந்து தப்பியோடி வருகிறார்கள், ஏனென்றால் அங்கே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இராணுவ தலையீடுகள் அவர்கள் உயிர்தப்பியிருப்தையே சாத்தியமற்றதாக்கிவிட்டன. ஆனால் பால்கன்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் கூடுதலாக பத்தாயிரக் கணக்கானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் புருசெல்ஸின் சிக்கனத்திட்ட கட்டளைகளும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெற்ற உயரடுக்குகளின் ஊழல்களும் அவர்கள் அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறையே அழித்துவிட்டுள்ளன.

இந்த பேரிடருக்கான ஆழ்ந்த காரணம் உலக முதலாளித்துவ நெருக்கடியாகும். நிதி மற்றும் உற்பத்தியின் பூகோளமயமாக்கல், முதலாளித்துவ ஆட்சி எதன் அடித்தளத்தில் அமைந்துள்ளதோ அந்த தேசிய அரசுடன் பொருத்தமற்றுள்ளது. படைபலத்தைக் கொண்டு மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பதன் மூலமாக, ஏகாதிபத்தியம் இந்த முரண்பாட்டைத் தீர்க்க முனைகிறது.

1915 இல் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஏகாதிபத்தியம் என்பது முற்போக்கான பொருளாதார அபிவிருத்தி போக்கில் முதலாளித்துவ சூறையாடும் வெளிப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்திகின்றது. அது தன்னை தனது தேசம் மற்றும் அரசு என்னும் தளைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள பொருளாதாரத்தை உலகளவில் ஒழுங்கமைக்கின்றது.

உலக பொருளாதாரம் மற்றும் தேசிய அரசுக்கு இடையிலான முரண்பாட்டை முதலாளித்துவ வழிவகைகளைக் கொண்டு தீர்க்கும் முயற்சி பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டுள்ளது. வாழ்வதற்கான அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு, சர்வதேசரீதியில், அண்மித்த 60 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய சக்திகள் ஐரோப்பாவை ஒரு கோட்டையாக மாற்றியும் மற்றும் அக்கண்டத்திற்குள்ளே பழைய எல்லைகளை மீண்டும் உயிர்ப்பித்தும் அவர்களது சொந்த வழியில் இந்த பேரழிவுக்கு எதிர்வினையாற்றுகின்றன.

ஐரோப்பாவிற்குள் இந்த மோதல்கள் மிகவும் கூர்மையாக வளர்கிறது. கிட்டத்தட்ட 2010 தொடக்கத்தில், உலக சோசலிச வலைத்தள முன்னோக்கு கட்டுரையில் நாம் பின்வருமாறு எச்சரித்தோம்: “யூரோவின் முறிவு என்பது வெறுமனே ஒரு செலாவணியின் முடிவை அர்த்தப்படுத்தாது. அது ஒரு பேரழிவுகரமான மற்றும் சாத்தியமானளவிற்கு ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலான அரசியல் உறவுகளின் இரத்தந்தோய்ந்த முறிவை குறித்து அச்சுறுத்துகிறது.”

இது இன்று அகதிகள் நெருக்கடியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பத்தாயிரக் கணக்கான அகதிகளின் உள்வரவு, ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையே கூர்மையான மோதல்களைத் தூண்டிவிட்டுள்ளன மற்றும் அவமரியாதையான வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன.

ஆஸ்திரிய சான்சிலர் வெர்னெர் ஃபேமன் ஹங்கேரி உடனான அதன் எல்லையில் படைகளை நிறுத்துகிறார், அவர் ஹங்கேரிய சான்சிலர் விக்டொர் ஓர்பனை நாஜிகளோடு ஒப்பிடுகிறார். கிரீஸ் மற்றும் இத்தாலியில் அகதிகள் தவித்துக் கொண்டிருக்கையில் அவர்களை ஏதேனும் விதத்தில் மறுபகிர்வு செய்வதை நிராகரிக்கின்ற ஜேர்மனி, அதேவேளையில் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலம்பெயர்வோர்களை ஏற்க மறுத்தால் அவற்றிற்கு அபராதங்கள் விதிக்க இப்போது அச்சுறுத்துகிறது. பல கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள், இனவாதம் மற்றும் கதோலிக்க வெறித்தனத்தின் கலவையாக முஸ்லீம் அகதிகளை ஏற்க மறுக்கின்றன.

பல பத்திரிகை விமர்சனங்கள், அகதிகள் பிரச்சினையை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒரு பரிசோதனையாக பேசுகின்றன. அதைக் கையாள்வது "வெறுமனே மனிதாபிமான விடயமல்ல,” என்று Handelsblatt எழுதுகிறது. “மாறாக அது ஐரோப்பாவின் அஸ்திவாரங்களையே அசைத்துக் கொண்டிருக்கிறது.” அங்கே உடனடியாக ஓர் உடன்படிக்கை ஏற்படாவிட்டால், “கணிப்பிடமுடியாத அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளோடு மொத்த ஐரோப்பாவிற்கும்சென்கென் உயிரற்றதாகிவிடும்," என்று அது எச்சரிக்கிறது.

பின்னர் வெவ்வேறு நாடுகளின் சிப்பாய்களுக்கு முன்னால், அது நேரம் சார்ந்த ஒரு விடயமாகிவிடும். ஓர் அன்னிய படையெடுப்பு படையைப் போல இப்போது வெவ்வேறு எல்லைகளில் அகதிகளை விரட்டியடித்து வரும் அவர்கள், ஒருவரையொருவர் சுட்டுத்தள்ள தொடங்குவார்கள். இது பலரால் நினைத்தும் பார்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அது தவிர்க்கவியலாத அரசியல் நிகழ்வுகளின் தர்க்கத்திலிருந்து எழுகிறது.

கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய வல்லரசுகள், கட்டுப்படுத்தவியலாத அரசியல் மற்றும் பொருளாதார மோதல்களினால், இரண்டு முறை ஒன்றோடொன்று போர் நடத்தின. இரண்டாம் உலக போருக்குப் பின்னர், அமெரிக்க பாதுகாப்பின் கீழ், அவை மோதல் புதுப்பிக்கப்படுவதைச் சாத்தியமில்லாததாக ஆக்கும் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளை உருவாக்க முயன்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒரு பொதுவான செலாவணியின் அறிமுகம் ஆகியவை அத்தகைய முயற்சிகளால் விளைந்தவையாகும்.

அவை எதிர்மாறான விளைவையே உண்டாக்கியுள்ளன. முதலாளித்துவ அடித்தளத்தில் ஐரோப்பிய ஐக்கியமென்பது சாத்தியமே இல்லை. அரசியல், தேசிய மற்றும் சமூக முரண்பாடுகளைக் குறைப்பதற்கு மாறாக, அது அவற்றை தீவிரப்படுத்தி உள்ளது.

அரசியல் நிகழ்வுகளில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக தலையீடு செய்யவில்லை என்றால் மற்றொரு பேரிடர் தவிர்க்கவியலாததாகும். அது ஐரோப்பாவெங்கிலும் ஐக்கியப்பட்டு, ஆளும் உயரடுக்குகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஒரு சமரசமற்ற போராட்டத்துடன், ஐரோப்பாவை ஒரு சோசலிச அடித்தளத்தில் ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளாக மறுஒழுங்கமைப்பு செய்ய வேண்டும்.