சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza’s Tsipras and Independent Greeks finalise new austerity coalition

சிரிசாவின் சிப்ராஸ் மற்றும் சுதந்திர கிரேக்கர்கள் புதிய சிக்கன நடவடிக்கைகளுக்கான கூட்டணி பற்றி முடிவெடுக்கின்றனர்

By Robert Stevens
22 September 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று நடந்த கிரேக்க தேர்தல்களில் சிரிசாவின் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சி தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் திங்களன்று மாலை பிரதம மந்திரியாக பதவியேற்றார்.

இறுதி முடிவின்படி, சிரிசா 35.47 சதவீத வாக்குகளோடு 145 ஆசனங்களை வென்றது, பழமைவாத புதிய ஜனநாயகம் 28.09 சதவீத வாக்குகள் மற்றும் 75 ஆசனங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. புதிய நாடாளுமன்றத்தில் சிரிசாவிற்கு முன்பிலிருந்து நான்கு ஆசனங்கள் குறைந்துள்ள நிலையில், புதிய ஜனநாயகம் ஒரு ஆசனத்தை இழந்துள்ளது.

300 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், சிரிசாவிற்கு அறுதி பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்கவில்லை. ஜனவரியில் போலவே, சிரிசா வலதுசாரி வெளிநாட்டவர் விரோத சுதந்திர கிரேக்கர் கட்சியுடனான (ANEL) ஒரு கூட்டணியில் ஆட்சி அமைக்க உள்ளது. சுதந்திர கிரேக்கர்கள் கட்சிக்கு 10 ஆசனங்கள் உள்ள நிலையில், புதிய அரசாங்கம் மொத்தம் 155 ஆசனங்களைக் கொண்டிருக்கும், இது ஜனவரியில் இருந்த 162 விட குறைவாகும். அது வெறும் நான்கு ஆசனங்களுடன் நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுகிறது.

சிரிசாவிற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் அவரது கட்சி சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் மீண்டும் அதிகாரமேற்குமென சிப்ராஸ் முன்கூட்டியே கூறியிருந்தார். திங்களன்று காலை, புதிய மந்திரிசபை அமைப்பது குறித்து பேசுவதற்கு அவர் சுதந்திர கிரேக்கர்கள் கட்சி தலைவர் பேனொஸ் கமெனொஸைச் சிரிசாவின் தலைமையகத்தில் சந்தித்தார். புதிய அரசாங்கம் புதன்கிழமை காலை பதவியேற்குமென செய்திகள் தெரிவித்தன.

மொத்தம் எட்டு கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றன. பாசிசவாத கோல்டன் டௌன் 6.99 சதவீதம் மற்றும் 18 ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சமூக ஜனநாயக பாசொக் (PASOK) மற்றும் சிரிசாவிலிருந்து பிரிந்து சென்ற ஜனநாயக இடது ஆகியவற்றின் கூட்டணி 6.28 சதவீத வாக்குகளை (17 ஆசனங்களை) வென்றது. கிரீஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (KKE) 5.55 சதவீத வாக்குகளுடன் 15 ஆசனங்களைப் பெற்றது. To Potami (ஓடை) கட்சிக்கு கிடைத்த வாக்கு விகிதம் ஜனவரியை விட குறைந்தது. அது 4.09 சதவீதம் வென்று, 17 ஆசனங்களிலிருந்து குறைந்து, 11 ஆசனங்களை பெற்றது.

சுதந்திர கிரேக்கர்கள் கட்சி, 13 ஆசனங்களிலிருந்து சரிந்து, வெறுமனே 200,420 வாக்குகளுடன் 10 ஆசனங்களை வென்றது. நாடாளுமன்றத்திற்குள் நுழைய தேவைப்படும் 3 சதவீதத்திற்கு சற்று அதிகமாக, அது வெறும் 3.69 சதவீத வாக்குகளைப் பெற்றது.

உண்மையில் 1992 இல் பாசோக்கின் முன்னாள் ஸ்தாபக அங்கத்தவரும் மற்றும் அதன் நாடாளுமன்ற அங்கத்தவருமான வாசிலிஸ் லெவென்டிஸால் (Vassilis Leventis) நிறுவப்பட்டதான, சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான மத்தியவாதிகளின் ஒன்றியம் (Union of Centrists) நாடாளுமன்றத்திற்குள் எட்டாவது கட்சியாக உள்நுழைகிறது.

சிரிசாவிலிருந்து பிரிந்து வந்து இடது அரங்கம் கன்னையால் நிறுவப்பட்ட போலி-இடது குழுவான மக்கள் ஐக்கியம் (Popular Unity), 3 சதவீத குறைந்தபட்ச உச்சவரம்பை கூட எட்ட தவறி, வெறும் 155,240 வாக்குகளைப் (2.86 சதவீதம்) பெற்றது. ஒரு சிறிய போலி-இடது உருவாக்கமான, சவாஸ் மிக்கெல்-மட்சாஸ் (Savas Michael-Matsas) தலைமையிலான அன்டார்ஸ்யா (Antarsya), தொழிலாளர் புரட்சி கட்சி (EEK) உடன் கூட்டு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது, அது 46,094 வாக்குகளைப் (0.85 சதவீதம்) பெற்றது.

சிப்ராஸ் மீண்டும் ஒய்கிலேடெஸ் சக்காலோடோஸ் இனை நிதி மந்திரியாக நியமிப்பாரென செய்திகள் குறிப்பிடுகின்றன. Times of Change வலைத் தளம் குறிப்பிட்டது: “சக்காலோட்டோஸ் வேலை செய்வதற்கான ஒரு நல்ல ஒத்துணர்வையும், கடன்வழங்குனர்களிடையே நம்பிக்கை மட்டத்தையும் உருவாக்கினார், மேலும் புதிய பிணையெடுப்பு புரிந்துணர்வைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையாக அந்த மறுநியமனம் பார்க்கப்படும்.”

சிரிசாவின் Nikos Kotzias வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஒரு முன்னாள் ஜனநாயக இடது செயலாளரான Giannis Panousis பொது ஒழுங்குத்துறை மந்திரியாக நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் ஒரு கூட்டணிக்கான முன்நிபந்தனையாக ANEL ஆல் கோரப்பட்ட முக்கிய பதவியான பாதுகாப்பு செயலர் பதவியை, ANEL தலைவர் கமெனொஸ் தக்க வைத்துக் கொள்வாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுதந்திர கிரேக்கர்கள் கட்சிக்கு இதர சில மந்திரிசபை பதவிகளும் வழங்கப்படக்கூடும்.

பாரியளவில் வாக்குகள் இடப்படவில்லை என்பதே கிரேக்க தேர்தலின் முக்கிய அம்சமாகும்.

சிரிசாவின் தேர்தல் வேலைத்திட்டம் கிட்டத்தட்ட முழுமையாக புதிய ஜனநாயகத்தினது வேலைத்திட்டத்தை ஒத்திருந்தது, இரண்டுமே முக்கூட்டுடன் (ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம்) ஜூலையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பேரழிவுகரமான வெட்டுகள் திட்டத்தைத் திணிக்க பொறுப்பேற்றிருந்தன. ஒரு மதிப்பீட்டின்படி, 300 ஆசன புதிய நாடாளுமன்றத்தில் 89 சதவீதத்தினர் முக்கூட்டின் சிக்கனத்திட்டத்தை உத்தியோகப்பூர்வமாக ஆதரிக்கின்றனர்.

பிரிட்டனின் Economist இதழ் இவ்வாறு குறிப்பிட்டது, “[பல] எந்தவொரு சிரிசா வாக்காளரும் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் அவரது வாக்குறுதியிலிருந்து திரு. சிப்ராஸ் பின்வாங்கியதால் தாம் காட்டிக்கொடுக்கப்பட்டதாக உணர்கின்றனர். மற்றொரு கட்சிக்கு மாறுவதற்கு பதிலாக, அவர்கள் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டார்கள்.”

வாக்களிப்பது கட்டாயம் என்ற போதினும், அண்மித்த பாதியளவிலான வாக்காளர்கள் (44.46 சதவீதம்) அதிருப்தியோடு வாக்களிப்பைப் புறக்கணித்து, வாக்குச்சாவடிகளிலிருந்து விலகி இருந்தனர். ஒரு கட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை சாத்தியமா என நிச்சயமற்று போகுமளவிற்கு அது மிகவும் குறைந்திருந்தது.

வாக்களிக்க தகுதிபெற்ற 9,836,997 வாக்காளர்களில், வெறும் 5,562,820 வாக்காளர்களே வாக்களித்தனர். இது 1974 பாசிசவாத இராணுவ ஆட்சி வீழ்ந்து கிரீஸில் ஜனநாயகம் மீட்டமைக்கப்பட்டதற்குப் பிந்தைய மிகக்குறைந்த வாக்குப்பதிவாகும்.

சிக்கனத்திட்டத்திற்கு ஒரு எதிர்ப்பாளராக காட்டிக்கொள்ளும் கோல்டன் டௌன், சிரிசாவின் காட்டுக்கொடுப்பைச் சாதகமாக்கி, அதன் வாக்குகளைச் சற்றே அதிகரித்து கொண்டது. “வேலைவாய்ப்பற்றவர்கள் மற்றும் அகதிகள் நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரேக்க தீவுகளில் வசிப்போரிடையே" பாசிசவாதிகளுக்கு "ஓரளவிற்கு வாக்குகள் கிடைத்தன" என்று Bloomberg News குறிப்பிட்டது.

கோல்டன் டௌன் செய்தி தொடர்பாளர் இலியாஸ் காசிடியாரிஸ் வாக்குகளைக் குறித்து கருத்துரைக்கையில், சிரிசாவின் சிக்கனத்திட்டம் சார்ந்த கொள்கைகள், அத்துடன் சேர்ந்து புலம்பெயர்வோர்-விரோத பேரினவாதத்தை எதிர்க்க மறுத்தமை மற்றும் சுதந்திர கிரேக்கர்கள் கட்சி உடனான அதன் கூட்டணி ஆகியவற்றோடு பாசிசவாதிகள் பலம் பெறுவதற்கு சிரிசாவே முழு பொறுப்பாகிறது என்பதைத் தெளிவுபடுத்தினார். கிரேக்க மக்கள் "[பிணையெடுப்புக்கான] புரிந்துணர்வு அல்லது சட்டவிரோத புலம்பெயர்வின் மிகமோசமான விளைவுகளை இன்னும் அனுபவிக்கவில்லை" என்றுரைத்த அவர், “அது நடக்கும் போது, கோல்டன் டௌனின் ஆதரவில் ஒரு தீவிரமான அதிகரிப்பை நீங்கள் காண்பீர்கள்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றோடு நேரடியாக கலந்தாலோசித்தே, தேர்தலுக்கு அழைப்புவிடுக்கும் முடிவை சிப்ராஸ் எடுத்தார். புதிய அரசாங்கம் அதன் வெற்றியை, ஐந்தாண்டுகளில் மூன்றாவது கடுமையான சிக்கன புரிந்துணர்வைத் துரிதமாக திணிப்பதற்கு அதற்களிக்கப்பட்ட கட்டளையாக அறிவிக்குமா என்பதே தேர்தலுக்குப் பின்னர் ஐரோப்பிய நிதியியல் உயரடுக்கின் அமைப்புகளின் ஒரே முக்கிய கவனமாக இருந்தது.

ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜங்கர் சிப்ராஸிற்கு அனுப்பிய ஒரு குறிப்பில், “நம் முன்னால் நிறைய வேலை இருக்கின்றன, சிறிதும் நேரமில்லை,” என்று குறிப்பிட்டதுடன், “புதிய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்போம்" என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

யூரோகுழும நிதி மந்திரிமார்களின் டச் தலைவர் ஜெரொன் டிஜிஸ்செல்புளோம் ட்வீட்டரில் எழுதிய குறிப்பில், இந்த அமைப்பு "கிரீஸின் இலட்சிய சீர்திருத்த முயற்சிகளில் அதனுடன் தொடர்ந்து உடனிருக்குமென" அறிவித்தார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்ரெபன் செய்பேர்ட் கூறுகையில், “மூன்றாவது பிணையெடுப்பு திட்டம் தேர்தல் நாளுக்குப் பின்னரும் செல்லுபடித்தன்மையோடு நடப்பில் உள்ளது,” என்றார்.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் டோனால்டு டஸ்க் சிப்ராஸிற்கு எழுதுகையில், “பொருளாதார சீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உங்களது அர்பணிப்பும் தலைமையும் மிக முக்கியமாகும்…" என்றார்.

சிரிசா மீதான வணிக உணர்வுகளை எடுத்துக்காட்டும் வகையில், லிஸ்பனில் உள்ள X-Trade Brokers DM SA இன் ஒரு தரகர் கூறினார், “அவசியமான சீர்திருத்தங்களைச் செயற்படுத்த இவ்விதத்தில் சிப்ராஸ் சட்டபூர்வதன்மையைப் பெறுகிறார்”.

பழமைவாத நாளிதழ் Kathimerini நேற்று குறிப்பிட்டது, கிரீஸின் பத்தாண்டுகால பத்திரங்கள் "கடந்த நான்கு வாரங்களில்" உயர்ந்துள்ளன, “தேர்தல் முடிவு கிரீஸின் சர்வதேச பிணையெடுப்பைத் தடம் புரட்டாது என்ற அனுமானத்திற்கு இடையே, 2015 இழப்புக்களை குறைந்த மட்டத்திற்கு இட்டுச்சென்றன." அப்பத்திரிகை தொடர்ந்து, “இது ஜனவரியில் முந்தைய வாக்கெடுப்பின் போதிருந்ததற்கு நேரெதிராக உள்ளது, சிக்கன-விரோத சிரிசா கட்சி முதலில் அதிகாரத்திற்கு வந்தபோது, பத்திரங்கள் விற்றுத்தள்ளப்பட்டன...”

திங்கட்கிழமை பத்திரிகை செய்திகளில், சிப்ராஸூம் கமெனொஸூம் சிரிக்கிற, கேலி செய்கிற மற்றும் அவர்கள் பேசுவதற்கு முன்னதாக ஒருவரையொருவர் தட்டிக்கொடுக்கிற புகைப்படங்கள் நிரம்பி வழிந்தன. அதற்கு முன்னதாக, ஞாயிறன்று மாலை க்ளேத்மனோஸ் சதுக்கத்தில், கமெனோஸ் உடன் கைகோர்த்திருத்த சிப்ராஸ் அவரது வெற்றி உரையை வழங்கிய பின்னர், சிரிசா செயல்பாட்டாளர்களும் மற்றும் ஆதரவாளர்களும் நடனமாடிய புகைப்படங்களால் அவை நிரம்பியிருந்தன.

இந்த குதூகல காட்சிக்கும் கிரீஸின் வறிய பெரும்பான்மை மக்கள் முகங்கொடுக்கும் நிராதரவான நிலைமைக்கும் இடையிலான ஒரு கூர்மையான முரண்பாடை ஒருவரால் கற்பனை செய்யவும் முடியாது. அவரது கோடை விடுமுறையை ஒரு முன்னணி கப்பல்துறை தொழிலதிபருக்கு சொந்தமான ஒரு சொகுசுவீட்டில் செலவிடுவதற்கும் மற்றும் கிரீஸின் மிக உயரடுக்கு தனியார் பாடசாலைகளில் ஒன்றில் அவரது மூத்த மகனை சேர்ப்பதற்கும் அவர் எடுத்த முடிவைப் போலவே, நிச்சயமாக அதேயளவிற்கு, இந்த விசித்திரமான பொதுக்காட்சிப்படுத்தலும் சிப்ராஸின் வலதுசாரி வணிகம் சார்ந்த பாரம்பரியத்திற்கு ஆதாரமாகும்.

சிப்ராஸ் ஆட்சி சிக்கன நடவடிக்கைகளை ஆழ்ந்த மட்டங்களில் கட்டவிழ்த்துவிட தொடங்குகையில், புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்பும் சமூக கிளர்ச்சிகளும் உண்டாகுமென பல விமர்சகர்கள் எச்சரித்தனர். வெள்ளியன்று Daily Telegraph அதன் விமர்சன கருத்துரையில் குறிப்பிட்டது, “மிக மிக கடுமையான சிக்கன திட்டத்தை நடத்துகின்ற மற்றும் வரலாற்றில் எந்தவொரு யூரோ மண்டல கடன்பெறுநராலும் நடத்தப்படாதளவிற்கு பொருளாதார செப்பனிடலை செய்யும் அரசாங்கமாக மாற வேண்டிய பணியை அவர்கள் முகங்கொடுக்கின்ற நிலையில், சிரிசாவின் இந்த வெற்றி ஆரவாரமெல்லாம் குறுகிய காலத்திற்கே இருக்கும்.”

சிட்டிக்குழுமத்தின் பொருளாதார நிபுணரான Guillaume Menuet எச்சரித்தார், “யூரோ பகுதி பங்களிப்பாளராக இருப்பதற்கு வலிநிறைந்த வரவுசெலவு திட்ட வெட்டுக்களும் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களும் கட்டாய நிபந்தனைகளாகும் என்ற கருத்தைக் கிரேக்க வாக்காளர்கள் இன்னமும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ என்று சந்தேகமாக உள்ளது, 2015இன் இரண்டாம் பாதியில் பொருளாதாரத்தின் புதிய சீரழிவு அனேகமாக அவர்களது நிலைப்பாட்டை மேற்கொண்டு இறுக்கமடைய செய்யக்கூடும்.”