சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Volkswagen emissions scandal

வோல்ஸ்வாகனின் மாசுவெளியேற்ற அளவீடுகளில் மோசடி

Peter Schwarz
23 September 2015

Use this version to printSend feedback

வோல்ஸ்வாகன் (VW) அதன் அமெரிக்க வாகனங்களில் மாசுவெளியேற்ற அளவீடுகளில் செய்த மோசடியானது, அந்நிறுவனத்தை ஒரு மிகப்பெரிய நெருக்கடியில் மூழ்கடித்துள்ளது. டொயோட்டாவைப்போல் உலகின் மிகப்பெரிய வாகனத்துறை உற்பத்தியாளரான அந்நிறுவனம், $18 பில்லியன் அபராதம், அதனுடன் சேர்ந்து ஏறத்தாழ அரை மில்லியன் வாகனங்களைத் திரும்பப்பெறுவது மீதான பாரிய செலவுகள் மற்றும் மிகப்பெரிய நஷ்டஈடு கோரிக்கைகளின் அச்சுறுத்தலை முகங்கொடுத்துள்ளது. அமெரிக்க நீதித்துறை ஒரு குற்றப் புலனாய்வை தொடங்கியுள்ளதுடன், காங்கிரஸ் குழு ஒன்று அம்முறைகேடு மீதான ஒரு விசாரணைக்கு திட்டங்களை அறிவித்துள்ளது.

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் குற்றச்சாட்டுக்களை ஏற்கனவே வோல்ஸ்வாகன் ஒப்புக்கொண்டதுடன், அது திட்டமிட்டே அமெரிக்க வாடிக்கையாளர்களை மற்றும் அரசு அதிகாரிகளை ஏமாற்றியதையும் ஏற்றுக்கொண்டது.

எங்கள் நிறுவனம் ஏமாற்றியதை தெளிவுபடுத்திவிடுகிறேன்,” என்று வோல்ஸ்வாகனின் அமெரிக்க தலைவர் மிக்கெல் ஹார்ன் நியூ யோர்க்கில் புதிய பசாட் (Passat) ரக காரை வெளியிடுகையில் தெரிவித்தார்.

ஒரு கணக்கிட்ட விதத்தில் மாசுவெளியேற்ற அளவீடுகளைக் கையாள்வதற்காக வோல்ஸ்வாகன் சட்டத்தை மீறியது. அமெரிக்காவில் விற்கப்பட்ட டீசல் ரக கார்களில், அந்த வாகனங்களை பரிசோதிக்கும் போது மாசுவெளியீடுகளை குறைத்துக் காட்டும் ஒரு நிலைக்கு தானாகவே மாறி, அவ்விதமாக தீர்மானிக்க உதவுகிற பிரத்தியேக மென்பொருளை அந்நிறுவனம் அவற்றில் நிறுவியிருந்தது. பரிசோதனைக்குப் பின்னர், அவ்வாகனங்கள் தானாகவே வழமையான நிலைக்கு மாறிவிடும், அப்போது அவற்றிலிருந்து வெளியாகும் நச்சு ஆக்சைடுகள் 10 இல் இருந்து 40 மடங்கு அதிகமாக இருக்கும்.

வோல்ஸ்வாகன் தனது வாகனங்களை அமெரிக்க சந்தையில் விற்பதற்காக குறைந்த மாசு வெளியீட்டு விகிதங்களை பயன்படுத்தியது. அங்கே டீசல் கார்கள் மொத்த விற்பனையில் வெறும் ஒரு சதவீதமேயாகும், இது ஐரோப்பாவை விட மிக மிக குறைந்த சதவீதமாகும். ஆசிய உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் குறைந்த மாசு வெளியீட்டு விகிதங்களைக் கொண்ட ஆனால் கையாள்வதற்கு சிக்கலான இரு-எரிபொருள் பயன்பாட்டு வாகனங்களில் இருந்து வேறுபட்டு, ஜேர்மன் ரகங்கள் இரண்டுவிதத்திலும், சுற்றுச்சூழலுக்கு பொருந்தியதாகவும் மற்றும் சௌகரியமாக இருப்பதாக கருதியதால், பல அமெரிக்க வாடிக்கையாளர்கள் வோல்ஸ்வாகன் அல்லது அவுடியிடமிருந்து (Audi) டீசல் கார்களை வாங்க முடிவெடுத்தனர்.

அந்த மோசடியின் முழு அளவும் இன்னும் தெரியவில்லை. வோல்ஸ்வாகன் மாசுக்கட்டுப்பாடு அளவின் புள்ளிவிபரங்களில் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஏனைய சந்தைகளிலும் முறைகேடு செய்திருக்குமென்ற ஐயம் நிலவுகிறது. ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா ஆகிய அனைத்தும் டீசல் கார் முறைகேடு குறித்து ஆய்வு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளன.

முன்னதாக கருதப்பட்டதையும் விடவும் நிறைய வாகனங்களில் அம்மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாக வோல்ஸ்வாகன் செவ்வாயன்று அறிவித்தது. உலகெங்கிலும் மொத்தம் 11 மில்லியன் வாகனங்கள் EA189 என்ஜின் மாதிரியைக் கொண்டுள்ளன, அவற்றின் மாசு வெளியீடு வழமையான பயன்பாட்டின் போது இருப்பதை விட பரிசோதனைகளின் போது கணிசமான அளவிற்கு குறைவாக இருக்கும்.

திங்களன்று 20 சதவீதம் சரிந்த வோல்ஸ்வாகனின் பங்கு, செவ்வாயன்று மேற்கொண்டு 23 சதவீதம் வீழ்ந்தது. இது மோசடி வெளியாக தொடங்கியதிலிருந்து அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பின் இழப்பை 27 பில்லியன் யூரோவிற்குக் கொண்டு வந்துள்ளது.

மாசுக்கட்டுப்பாடு அளவீடுகளில் மற்ற நிறுவனங்களும் முறைகேடு செய்கின்றனவோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அம்மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள அதேமாதிரியான வாகனங்களை, வோல்ஸ்வாகனுடன் சேர்ந்து, பி.எம்.டபிள்யூ., மென்சிடெஸ் -BMW, Mercedes -மற்றும் ஏனைய பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நிறுவனங்களும் விற்கின்றன. “பரந்தளவில் ஜேர்மன் வாகனத்தொழில்துறையின் அழிவைக் குறித்த அச்சம் திங்களன்று எங்கும் பரவியது. வோல்ஸ்வாகன் மட்டுமா? அல்லது அம்பலப்பட இருப்பவைகளில் இது முதலில் வந்திருக்கிறதா?” என்று Süddeutsche Zeitung ஆச்சரியப்பட்டது.

வோல்ஸ்வாகன் முறைகேடு ஜேர்மனியில் பெரும் வேலை இழப்புகளுக்கு இட்டுச் செல்லுமென வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். அந்நாட்டிற்குள், ஏழு வேலைகளில் ஒன்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாகனத்துறையைச் சார்ந்துள்ளது. ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த ஜேர்மன் வாகனங்கள், அவற்றின் தொழில்நுட்ப தரம் மற்றும் நம்பகத்தன்மை மீதான நன்மதிப்பிற்காகவே உலக சந்தையில் அவற்றிற்குரிய இடத்தைப் பெற்றிருந்தன. இப்போது அந்த நன்மதிப்பு ஆபத்திற்குள்ளாகி உள்ளது.

இந்த மோசடி குறித்து யாருக்கெல்லாம் தெரியுமென்பது தெளிவாக தெரியவில்லை. 2007 இல் இருந்து அந்நிறுவனத் தலைமையில் உள்ள வோல்ஸ்வாகனின் தலைமை செயலதிகாரி மார்ட்டின் வின்டர்கோனுக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பேயில்லையென சில விமர்சகர்கள் கருதுகின்றனர். அவருக்கு முந்தைய இரண்டு தலைவர்களான பெர்ன்ட் பெஸெட்ரீடர்  மற்றும் போர்ஷேயின் பேரன் பேர்டினாட் பீச் ஆகியோரைப் போலவே, வின்டர்கோனும் ஒரு தொழில்நுட்ப வல்லுனராவார், ஒரு நிதியியல் மேலாளர் அல்ல. அவர் வோல்ஸ்வாகன் வாகனங்களின் தொழில்நுட்ப அம்சங்களைக் குறித்து விரிவாக விபரமறிந்தவரென செய்திகள் குறிப்பிடுகின்றன.

2002க்குப் பின்னரிலிருந்து வோல்ஸ்வாகன் மேற்பார்வை குழுவின் தலைவராக இருந்து வந்த பீச், வின்டர்கோனை நீக்க முயன்று வந்த நிலையில், இவ்வாண்டின் தொடக்கத்தில் பீச் ஆல் தூண்டிவிடப்பட்ட ஓர் அதிகார சண்டையில், வின்டர்கோன் பீச்சை தோற்கடித்தார். அதை தொடர்ந்து நிர்வாகசபையிலிருந்து பீச் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

வின்டர்கோனின் ஒப்பந்தம் இந்த வெள்ளியன்று ஒரு பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட இருந்தது. இது இப்போது சந்தேகத்திற்கிடமாகி உள்ளதுடன், அந்நிறுவனம் அதன் உயர்மட்டத்தில் மற்றொரு அதிகார சண்டையை எதிர்கொள்கிறது.

வாடிக்கையாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஏமாற்றியதில் வோல்ஸ்வாகனின் துணிவை, பல விமர்சகர்கள், குற்றகரமாக மட்டுமல்ல, மாறாக முட்டாள்தனமானது என்றும் விமர்சித்துள்ளனர். இந்த சூழ்ச்சி தவிர்க்கவியலாமல் அம்பலப்பட்டு, அந்நிறுவனத்தின் நிதிகளுக்கு மட்டுமல்ல, மாறாக அதன் அந்தஸ்திற்குமே கூட ஒரு பாரிய அடியாக இருக்குமென முன்கூட்டியே உணர்வதொன்றும் பெரிய விடயமில்லையே என பலர் வாதிடுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் வோல்ஸ்வாகன் சம்பவம் ஒரு தனித்த ஒன்றல்ல. சமீபத்திய ஆண்டுகள் பல தொடர்ச்சியான மோசடிகளைக் கண்டுள்ளன, அதில் வாகனத்துறை நிறுவனங்கள் ஒட்டுமொத்த அலட்சியத்தையோ அல்லது விதிமீறல்களையோ மூடிமறைத்து, பொது மக்களையும் அரசு கட்டுப்பாட்டு அதிகாரிகளையும் ஏமாற்றி உள்ளன. ஏறத்தாழ ஒரு தசாப்தமாக, ஜெனரல் மோட்டார்ஸ் எரியூட்டும் (இக்னிஷன்) கருவிகளில் இருந்த ஒரு பிரச்சினையை மூடிமறைத்து வந்தது, அக்கோளாறு ஸ்டீரிங் இயங்குமுறைகளையும் அத்துடன் உயிர்காப்பு காற்றுப்பைகள் இயங்குவதையும் சிக்கலுக்குள்ளாக்கி, என்ஜின் செயல்பாட்டை நிறுத்தியது. அப்பிரச்சினையால் விபத்துக்களில் குறைந்தபட்சம் 124 பேர் உயிரிழந்து, 275 பேர் காயமுறும் வரையில் அப்பிரச்சினை கொண்ட 2.6 மில்லியன் வாகனங்களை அது திரும்ப பெற தொடங்கவில்லை.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நிச்சயமாக குற்றகர தண்டனைகளுக்கு உள்ளாகாதவாறு, கடந்த வாரம் ஒபாமா நிர்வாகம், $900 மில்லியன் முன்கூட்டிய அபராதம் விதித்து கணக்கைத் தீர்த்து வைத்தது. அந்த உடன்பாட்டில் ஒரேயொரு நிறுவன அதிகாரியின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை.

உலகெங்கிலுமான பத்து மில்லியன் கணக்கான வாகனங்களில் குறைபாடான உயிர்காப்பு காற்றுப்பைகளைப் பொருத்தியதற்காக அமெரிக்க நீதித்துறையால் ஜப்பானிய வினியோகஸ்தர் டகாடா (Takata) நிறுவனம் இலக்கில் வைக்கப்பட்டது. காற்றுப்பைகள் வெடித்ததால் குறைந்தபட்சம் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கு மேற்பட்டோர் காயமுற்றனர்.

டொயோட்டா நிறுவனம் அமெரிக்காவில் $1.2 பில்லியன் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது, மற்றும் தானாவே விரைவுபடுத்திய தவறை கொண்ட மில்லியன் கணக்கான வாகனங்களை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. அக்கோளாறின் விளைவாக குறைந்தபட்சம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

வாகனத்துறையில் சமீபத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப அபிவிருத்திகள் நடந்துள்ளன. புதிய தொழில்நுட்பங்களும் மற்றும் டிஜிட்டல் ஸ்டீரிங்கும் கணிசமான அளவிற்கு கார்களின் பாதுகாப்பையும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தத்தன்மைகளையும் அதிகரித்துள்ளன. தானியங்கி மின்சார கார்களுமே கூட இப்போது ஒரு கற்பனை அல்ல. ஆனால் அதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றமானது, நிதியியல் பிரபுத்துவத்தின் இலாபகர உந்துதலுக்கு வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அடிபணிய செய்கிற ஒரு பகுத்தறிவற்ற சமூக அமைப்புமுறையுடன், நிரந்தரமாக முரண்படுகிறது.

உலகளாவிய சந்தை பங்குக்கான போட்டியில் வோல்ஸ்வாகன் மற்றும் ஏனைய வாகன உற்பத்தியாளர்களின் பழிக்கஞ்சாதத்தன்மையும் மற்றும் குற்றகரத்தன்மையும், முதலாளித்துவ அமைப்புமுறையின் உள்ளார்ந்த முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. இந்த அமைப்புமுறை மனித உற்பத்தி சக்தியின் பகுத்தறிவார்ந்த மற்றும் சமூகரீதியில் முற்போக்கான அபிவிருத்தியைச் சாத்தியமில்லாததாக்குகிறது. சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி கருவிகளது தனிசொத்துடைமைக்கும் இடையிலான, அத்துடன் பூகோளமயப்பட்ட பொருளாதாரத்திற்கும் எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான, இந்த அடிப்படை முரண்பாடுகள், ஒட்டுமொத்த நாடுகளையும் நாசமாக்கி பத்து மில்லியன் கணக்கான மக்களை நிராதரவான அகதிகளாக மாற்றி, தங்களின் செல்வாக்கெல்லையை மற்றும் சந்தை கட்டுப்பாடுகளை விரிவாக்குவதற்காக, வல்லரசுகளால் தொடுக்கப்படும் போர்களில் அவற்றின் அரசியல் பிரதிபலிப்பைக் காண்கின்றன.

பெருநிறுவன குற்றகரத்தன்மையின் மறுபக்கத்தில், தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல் உள்ளது. சர்வதேச அளவில் போட்டித்தன்மையோடு இருப்பதற்கு இவை அவசியப்படுகின்றன என்ற வாதத்தைக் கொண்டு இவையெல்லாம் நியாயப்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் பணவீக்கத்திற்கேற்ப முறைப்படுத்தப்படும் பல வாகனத்துறை தொழிலாளர்களது நிஜமான கூலிகள், கடந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஹென்றி போர்டின் "நாளொன்றுக்கு ஐந்து டாலர்" எனும் முறையின் கீழ் மேலோங்கியிருந்த மட்டங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில், உற்பத்தியைக் குறைந்த-கூலி கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒப்பந்த சேவையில் வழங்கியதன் மூலமாகவும், பகுதிநேர வேலை மற்றும் ஒப்பந்த வேலைவாய்ப்பை அதிகரித்ததன் மூலமாகவும் கூலி வெட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டன.

தொழிலாளர்களைத் தாக்குவதில் வாகனத்துறை நிறுவனங்களின் நெருங்கிய கூட்டாளிகள் தொழிற்சங்கங்களாகும், நிர்வாகத்தைப் போலவே, சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக தங்கள் நிறுவனத்தின் போட்டித்தன்மையைப் பாதுகாப்பதே அவற்றின் பிரதான இலட்சியமாகும்.

இதில் வோல்ஸ்வாகன் முன்னிலை எடுத்துள்ளது. அந்நிறுவனம் "சமூக பங்காண்மையின்" பிரத்யேக ஜேர்மன் வடிவத்தை எடுத்துக்காட்டி உள்ளது. பங்குதாரர்கள், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சகவாழ்வு வேறெங்கும் இந்தளவிற்கு நெருக்கமாக இருக்காது. வின்டர்கோன் தான் பதவிக்கு வருவதற்கு வோல்ஸ்வாகனின் தொழிற்சாலை தொழிற்சங்க தலைவர், பெர்ன்ட் ஓஸ்ரலோ மற்றும் IG Metall தொழிற்சங்கத்திற்கும் பெரும் நன்றியை செலுத்தவேண்டும். IG Metall தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் பேர்தோல்ட் ஹூபர் (Berthold Huber) ஒருசில நாட்களுக்கு முன்னர் வரையில் வோல்ஸ்வாகனின் பொதுக்குழுவிற்குத் தலைவராக இருந்தார்.

அமெரிக்காவில், வாகனத்துறை தொழிலாளர்கள் வாகன உற்பத்தியாளர்களது தாக்குதல்களுக்கு எதிராக போராட தொடங்கி உள்ளதுடன், ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்துடன் (UAW) கூர்மையான மோதலுக்குள் வந்துள்ளனர். வோல்ஸ்வாகன் தொழிலாளர்கள் அவர்களது அமெரிக்க சகோதர மற்றும் சகோதரிகளுடன் அவர்களது ஐக்கியத்தை அறிவிக்க வேண்டும். சோசலிசத்திற்கான, அதாவது தனியார் இலாப உந்துதலுக்காக அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் சமூக மறுஒழுங்கமைப்பதற்கான ஓர் ஐக்கியப்பட்ட சர்வதேச போராட்டத்தின் மூலமாக மட்டுமே, நிறுவனங்களின் குற்றகர நடவடிக்கைகளையும், தொழிலாளர்களது வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் அழிக்கப்படுவதையும் தடுக்க முடியும்.