சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Fiat Chrysler workers sending UAW-backed deal to defeat

பியட் கிறைஸ்லர் தொழிலாளர்கள் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கம் ஆதரவளிக்கும் உடன்படிக்கையை தோற்கடிக்கின்றனர்

By Jerry White 
28 September 2015

Use this version to printSend feedback

ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தால் (UAW) முன்கொண்டுவரப்படுகின்ற ஒரு நான்காண்டுகால தொழிலாளர் உடன்படிக்கையை, பியட் கிறிஸ்லைர் வாகன உற்பத்தி நிறுவனத்தின் அமெரிக்க தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர், இதில் அந்நிறுவனத்தின் பல்வேறு மிகப்பெரிய உற்பத்தியாலை தொழிலாளர்களும் உள்ளடங்குவார்கள். பியட் கிறைஸ்லர் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு விகித தொழிலாளர்கள் அந்த ஒப்பந்தம் மீது ஏற்கனவே வாக்களித்துள்ள நிலையில், எஞ்சிய இடங்களில் அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ள வாக்கெடுப்புகளில் UAW தில்லுமுல்லு செய்ய தன்னாலான அனைத்தும் செய்து வருகின்ற போதினும், அதுவொரு மிக பிரமாண்டமான தோல்வியை நோக்கி செல்வதாக தெரிகிறது.

அந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான தொழிற்சங்கங்களது முயற்சிகளில் விழுந்த சமீபத்திய அடியாக, UAW உள்ளூர் பிரிவு 7, ஞாயிறன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கையில், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய டெட்ராய்ட் ஆலையான ஜேஃபர்சன் வடக்கு உற்பத்தி ஆலையில், உற்பத்தி தொழிலாளர்களில் 66 சதவீதத்தினர் மற்றும் தொழில்திறன்சார் தொழிலாளர்களில் (skilled workers) 77 சதவீதத்தினர் "வேண்டாமென" வாக்களித்திருப்பதாக அறிவித்தது. அதுவொரு பிரமாண்ட நிராகரிப்பு அலையை தூண்டிவிடுமென அஞ்சி, வெள்ளியன்று வாக்கெடுப்பு முடிவுகளைக் காலந்தாழ்த்தி வெளியிடுமாறு உள்ளூர் பிரிவிற்கு சர்வதேச UAW உத்தரவிட்டது.

எவ்வாறிருந்தபோதினும் ஞாயிறன்று இரவு ஜேஃபர்சன் வாக்குகள் மொத்தமும் அறிவிக்கப்பட்ட பின்னர், வாகனத்துறை நிறுவனங்களுக்கான ஓர் ஊதுகுழலான Detroit Free Press, “தோல்விக்கான வாக்கு வித்தியாசம் அதிகரித்து வருவதற்காக" குறைகூறியது. கடந்த வெள்ளியன்று, இண்டியானாவின் கொகோமோவில் (Kokomo) சுமார் 5,000 பேர் வேலை செய்கின்ற அந்நிறுவன மின்பிரிவு ஆலைகளில் (transmission plants), உற்பத்தி தொழிலாளர்களில் 77 சதவீதத்தினர் மற்றும் தொழில்திறன்சார் தொழிலாளர்களில் 65 சதவீதத்தினர் அந்த உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். டெட்ராய்ட் புறநகர் பகுதியில் உள்ள டிரென்டன் இன்ஜின் (Trenton Engine) ஆலை; ஓகியோ பெர்ரிஸ்பர்க்கில் உள்ள டொலிடோ மெஷினிங் (Toledo Machining) ஆலை; டெட்ராய்டுக்கு வெளியே உள்ள ஸ்டெர்லிங் ஸ்டாம்பிங் (Sterling Stamping) ஆலை; மிச்சிகன் சென்டர்லைனில் உள்ள மோபர் பாகங்கள் (Mopar parts) தயாரிப்பு ஆலை மற்றும் அட்லாண்டாவின் லோஸ் ஏஞ்சல்ஸில் மற்றும் கொலோராடோவின் அரோராவில் உள்ள பாகங்கள் தயாரிப்பாலை ஆகியவற்றிலும் அந்த உடன்படிக்கை தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் வேண்டாமென" வாக்களித்ததன் மூலமாக, UAW, நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்களின் பிரச்சாரத்திற்குப் பணிய மறுக்கிறார்கள், அவை அனைத்துமே தொழிலாளர்களுக்கு ஒரு முற்போக்கானது என்று இந்த விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையை பூசிமெழுக முயல்கின்றன. தொழிலாள வர்க்கம் நீண்டகாலமாக UAW மற்றும் ஏனைய நிறுவன-ஆதரவிலான தொழிற்சங்கங்களால் ஒடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், வாகனத்துறை தொழிலாளர்களால் எடுக்கப்பட்டு வருகின்ற இந்த நிலைப்பாடு தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகும்.

பியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (FCA) தொழிலாளர்கள் வெறுமனே வாகனத்துறை தொழிலாளர்களுக்காக மட்டுமல்ல, மாறாக பெருமந்த நிலைமைக்குப் பின்னரிலிருந்து மிகநீண்டகாலமாக ஊதிய அதிகரிப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்காக பேசுகிறார்கள், ஆனால் அதேவேளையில் பொருளாதார மீட்சி என்றழைக்கப்பட்ட காலத்தில் பெருநிறுவன இலாபங்கள், தலைமை நிர்வாக அதிகாரிகளது சம்பளங்கள் மற்றும் பங்குச்சந்தைகள் சாதனையளவிற்கு உயர்ந்துள்ளன.

வாகனத்துறை தொழிலாளர்கள் ஒரேயொரு முறை மட்டுந்தான் UAW ஆல் ஆதரிக்கப்பட்ட ஒரு தேசிய உடன்படிக்கையை தோற்கடித்துள்ளனர். வாகன தொழில்துறையில் நிர்வாகங்களின் கூலி-வெட்டு மறுசீரமைப்பின்போது, ஜிஎம் மற்றும் கிறைஸ்லர் தொழிலாளர்கள் மீது ஒபாமா திணித்த அதே நிபந்தனைகளை, ஃபோர்ட் தொழிலாளர்கள் மீதும் திணிப்பதற்கான UAW இன் முயற்சிகளை அவர்கள் 2009 இல் நிராகரித்தார்கள். 2011 இல் FCA இன் தொழில்திறன்சார் வர்த்தக தொழிலாளர்கள், UAW அதன் சொந்த துணை விதிகளைக் கைவிட்டு, ஏதோவொரு வழியில் அந்த ஒப்பந்தத்தைத் திணிப்பதற்காக மட்டுமே அப்போதைய உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்தார்கள்.

அந்த உடன்படிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமானால் பியட் கிறைஸ்லர் வாகனத்துறையின் 37,000 தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் அதற்கு உடன்பட வேண்டும், இந்த நிலைமை அதிகளவில் சாத்தியமாவதாக தெரியவில்லை. ஆனாலும் ஞாயிறன்று தொழிலாளர்களின் ஒரு கூட்டத்திற்கு முன்னதாக UAW துணை தலைவர் நோர்வுட் ஜெவெல் டொலிடோ ஜீப் உற்பத்தியாலையிலிருந்து Detroit News க்கு கூறுகையில், UAW இன்னமும் அதன் கரங்களில் பல தந்திரங்களை வைத்திருக்கிறது என்றவொரு நம்பகரமற்ற அறிவுறுத்தலோடு, அந்த உடன்படிக்கை நிறைவேற இன்னமும் அங்கேயொரு "கணக்கு முறையிலான" வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

வாகனத்துறை தொழிலாளர்கள் மீது அவரது வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக ஜெவெல் தெரிவிக்கையில், “இப்போது என்னுடைய வேலை விடயங்களை விவரிப்பதும், அவர்களது எல்லா கேள்விகளுக்கு பதிலளிப்பதும் மற்றும் அவற்றின் சிலவற்றை வெளிப்படுத்திக்காட்டுவதுமாகும்,” என்றார்.

ஜீப் தொழிலாளர்களில் பாரிய பெரும்பான்மையினர் ஞாயிறன்று கூட்டத்தைப் புறக்கணித்தனர், அவர்கள் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதும், தொழிற்சங்க அதிகாரிகளிடமிருந்து கூடுதலாக இரட்டை-பேச்சுக்களையோ பொய்களையோ கேட்கும் நிலையிலோ இல்லை என்பதும் ஏற்கனவே வெளிப்படையாக இருந்தது. அந்த விற்றுத்தள்ளலின் ஒரு பிரதான வடிவமைப்பாளரான ஜெவெல்லை நூற்றுக் கணக்கானவர்கள் வேண்டாவெறுப்போடு வரவேற்று, கோபமான கேள்விகளோடு அவரை வறுத்தெடுத்தனர்.

அந்த உடன்படிக்கையின் சிக்கல்களைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ளவில்லையென ஜெவெல் வாதிட்டார். தொழிலாளர்களிடையே பரந்தளவில் பின்தொடரப்பட்டு வருகின்ற WSWS வாகனத்துறை சஞ்சிகையை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில், அவர், சமூக ஊடகங்களால் அந்த உடன்படிக்கைக்கு எதிராக தப்பெண்ணங்கள் புகுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த உடன்படிக்கை என்ன செய்யுமென்பதைத் தொழிலாளர்கள் துல்லியமாக புரிந்து வைத்துள்ளனர். மூத்த, முதல்-நிலை தொழிலாளர்கள், பணவீக்க விகிதத்திற்கும் குறைவாக, ஆண்டுக்கு சராசரியாக 1.5 சதவீத உயர்வைப் பெறுவார்கள். இத்தொழிலாளர்களுக்கு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் உயர்வே கிடைத்திருக்கவில்லை, இதன் விளைவாக நிஜமான கூலிகளில் 22 சதவீத இழப்பு உள்ளது. வெறுப்புக்குரிய இரட்டை-அடுக்கு ஊதிய முறை UAW ஆல் முதலில் 2007 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது, 17,000 FCA தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் சலுகைகள் உபயோகத்திற்குப் பயனின்றி தரம் குறைக்கப்பட்டதுடன், 2022 க்கு வாக்கில் நிரந்தரமாக புதிய கூலியாக குறைந்தளவில் 25.35 டாலர் கூலி வழங்கப்படும் என்பது வெற்று வாக்குறுதியாக இருந்து வருகிறது. மொபர் மற்றும் ஆக்சில் தொழிலாளர்கள் இன்னும் குறைந்த கூலியினால் மூடிமறைக்கப்படுவார்கள்.

இரண்டாம்-நிலை தொழிலாளர்களின் ஒரு பகுதியினருக்கு வரம்பு 25 சதவீதம் மீட்டமைக்கப்படும் என்று 2011 இல் UAW அளித்த வாக்குறுதியை அது அப்பட்டமாக புறக்கணித்ததை ஜெவெல் நியாயப்படுத்த முயன்றார். “அவர்கள் உங்களுக்கு என்ன கூறினார்களோ அதற்கு நான் உதவ முடியாது,” என்று கடந்த வெள்ளியன்று கொகோமோ தொழிலாளர்களிடம் தெரிவித்தார். அதன் 2011 ஒப்பந்த "சிறப்பு கூறுகளில்" உள்ளடங்கிய, UAW இன் வரம்புகளை மீட்டமைக்கும் வாக்குறுதி ஓர் "எழுத்துப்பிழையாக" இருக்கலாமென ஜெவெல் வாதிட்டார்.

7,000 இரண்டாம் நிலை தொழிலாளர்கள் ஒரு மணிதியாலத்திற்கு 10 டாலர் என ஊதிய உயர்வு பெற முதல் நிலை தொழிலாளர்களாக மாற்றப்பட வேண்டியுள்ள நிலையில், UAW சர்வசாதாரணமாக இந்த கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டது. அதற்கு பதிலாக நிறுவனமும் மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமும் கடுமையான வேலை துரிதப்படுத்தல் மற்றும் அந்த உடன்படிக்கையில் உள்ளடங்கிய வேலைநீக்கங்கள் மற்றும் முன்கூட்டிய ஓய்வூதிய திட்டங்களுக்கு உதவக்கூடிய வேலைக்கு வராதிருப்பது தொடர்பான கொள்கை ஆகியவற்றை இணைத்துக் கொண்டு, உயர்-ஊதிய தொழில்துறை வாகனத்தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும் மற்றும் ஒரு புதிய, நிரந்தரமான, குறைந்த சம்பள ஊதிய வரம்பை ஸ்தாபிக்கவும் முயன்று வருகின்றன.

இது அத்தொழில்துறை வலைத்தளமான Automotive News சனியன்று எழுதுகையில் குறிப்பிடப்பட்டது, “சில ஆண்டுகளில், அங்கே டெட்ராய்டு 3 இல் UAW அங்கத்தவர்களுக்குஅவர்கள் கோரியவாறேஒரேயொரு ஊதிய முறை இருக்கும்.

ஆனால் அது அவர்கள் விரும்பியதாக இருக்காது. பியட் கிறைஸ்லர் உடனான தொழிற்சங்கத்தின் வெள்ளோட்ட ஒப்பந்தம், கீழே உள்ள அடுக்கு தான் (இரண்டாம் அடுக்கு) பிழைத்திருக்கும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது: செழிப்பான, பாரம்பரிய வேலைகள் கூடுதல் நேர வேலையாக (over time) மாற்றப்பட்டு, இன்று உயர்-சம்பளத்தில் இருப்பவர்களை விட கூலிகள் மற்றும் சலுகைகளில் குறைந்திருக்கும் வாகனத்துறை தொழிலாளர்களின் ஒரு வகையினரைக் கொண்டு பிரதியீடு செய்யப்படும்,” என்றது குறிப்பிட்டது.

அதற்கு பதிலாக, “co-op” என்றழைக்கப்படுவதை விரிவாக்குவதன் மூலமாக மருத்துவ சலுகைகளுக்கான வகைமுறையின் மீது UAW இற்கு கட்டுப்பாட்டை வழங்கி வருகிறது, இவற்றின் விபரங்கள் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படக் கூட இல்லை. இந்த “co-op” என்பது 60 பில்லியன் டாலர் ஓய்வூதியதாரர் மருத்துவ உதவிகளுக்கான, தொழிலாளர் நிவாரண தன்னார்வ அமைப்பு (VEBA) என்பதன் மாதிரியில் அமைக்கப்படும். இந்த கையூட்டல்வழங்கும் நிதியின் விரிவாக்கமானது, மருத்துவ பராமரிப்பு செலவுகளைத் தொழிலாளர்கள் மீது திணிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் நோக்கத்திற்குப் பொருந்திய விதத்தில் சலுகைகள் வெட்டு மற்றும் துணை-செலவுகளை, சம்பள பிடித்தங்களை மற்றும் ஏனைய கைச்செலவுகளை உயர்த்துதல் ஆகியவற்றிற்காக UAW நிர்வாகிகள் மற்றும் அவர்களது வோல் ஸ்ட்ரீட் ஆலோசகர்களுக்குக் கூடுதல் ஊக்கத்தொகைகளை வழங்கும்.

இந்நிலைமையில், "வேண்டுமென்ற" வாக்குகள் வென்றதாக அறிவிக்கப்பட்டால், அது UAW பாகத்தில் நடத்தப்பட்ட பாரிய மோசடியின் காரணமாக மட்டுமே இருக்க முடியும். இந்த ஒப்பந்தத்தின் சாத்தியமான தோல்வி, மொத்த வாகனத்தொழில்துறைத் தொழிலாளர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. ஜிஎம் மற்றும் ஃபோர்ட் தொழிலாளர்கள், அந்நிறுவனம் மற்றும் தொழிற்சங்கத்திற்கு எதிராக நிற்பதற்காக அவர்களது சகோதர சகோதரிகளைப் பாராட்டி உள்ளனர். இருந்தாலும், UAW தனது நிலையை மாற்றிக்கொண்டு, ஒரு நல்ல பரிந்துரையைக் கோருமென நம்புவது பேராபத்தான பிழையாகிவிடும்.

தொழிலாளர்களது எதிர்ப்பால் அவர்கள் அதிர்ந்து போனாலும், தொழிற்சங்க மற்றும் நிறுவன நிர்வாகிகள், ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகளோடு சேர்ந்து, தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, எதிர்ப்பை உடைத்து, பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டின் கட்டளைகளைத் திணிக்கும் முயற்சியில் வேறொரு மூலோபாயத்தை ஏற்கனவே தயாரித்து கொண்டிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழிலாளர்களை அச்சுறுத்தி அடிபணிய செய்ய ஆலைமூடல் மற்றும் பாரிய வேலைநீக்கங்களின் அச்சுறுத்தல்களும் அனேகமாக இதில் உள்ளடங்கி இருக்கும்.

UAW ஒப்பந்தத்தைக் காலவரையின்றி நீடிப்பதன் மூலமாகவும் சர்வசாதாரணமாக விடயங்களை இழுத்தடிக்கலாம். Detroit Free Press குறிப்பிட்டதைப் போல, “இன்னும் அதிக செலவுமிகுந்த ஒப்பந்தத்தை உட்கார்ந்து பேசி தீர்க்க ஏன் தலைமை நிர்வாக அதிகாரி சேர்ஜியோ மார்சியோனி அவசரப்படுகிறார்? மார்சியோனி அழுத்தத்தை எவ்வாறு உந்துசக்தியாக பயன்படுத்துவது என்பதை அறிந்த ஒரு குதர்க்கமான மத்தியஸ்தராக பரவலாக அறியப்பட்டவர்.”

தற்போதைய ஒப்பந்தம் நீடிக்கப்பட்டால், UAW, மிச்சிகன் மற்றும் இண்டியானா தொழிலாளர்களிடமிருந்து தொழிற்சங்க சந்தா வசூலிப்பதையும் தொடரும், ஏனென்றால் "வேலை செய்வதற்கான உரிமை" விதிமுறைகளில் உள்ள நிபந்தனைகள் தற்போதைய ஒப்பந்தம் காலாவதியாகும் வரையில் நடைமுறையிலேயே இருக்குமென குறிப்பிடுகின்றன.

தொழிலாளர்களின் போராடும் ஆற்றலைப் பலவீனப்படுத்த, திசைதிருப்ப, மற்றொரு விற்றுத்தள்ளலைத் திணிப்பதற்காக, UAW 2007 இல் செய்ததைப் போலவே ஒரு போலி வேலைநிறுத்தத்திற்கும் கூட அழைப்புவிடுக்கலாம். அழுத்தமளிக்கப்பட்டால் UAW வேறொரு நல்ல ஒப்பந்தத்துடன் திரும்பிவருமென்ற நப்பாசைகளை ஊக்குவித்து வருகின்ற பல்வேறு நிர்வாக அதிருப்தியாளர்களின் கருத்துக்களை ஏற்கனவே ஊடகங்கள் மேற்கோளிட்டுள்ளன.

தொழிலாளர்கள் அதுபோன்ற வாதங்களை நிராகரிக்க வேண்டும். UAW சாமானிய தொழிலாளர்களுக்குப் பதில்கூற கடமைப்பட்ட ஒரு தொழிலாளர் அமைப்பல்ல, மாறாக அது தொழிலாள வர்க்கத்திற்கு நேரெதிரான நலன்களைக் கொண்ட பல பில்லியன் டாலர் வணிகத்திற்கான அமைப்பாக உள்ளது.

வேண்டாமென்ற" வாக்குகளில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வு இப்போது சுயாதீன அமைப்பு வடிவத்தை ஏற்க வேண்டும். சாமானிய தொழிலாளர்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற, UAW மற்றும் நிறுவன தொழிற்சங்கங்களின் சர்வாதிகார கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரப்பட்ட, வாகனத்துறை தொழிலாளர்களின் சுயாதீனமான அமைப்புகளை ஸ்தாபிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் அழைப்புவிடுக்கிறது.

பேரம்பேசல்கள் மற்றும் போராட்டம் நடத்தும் அதிகாரம் ஒட்டுமொத்தமாக UAW இன் கரங்களிலிருந்து பறிக்கப்பட வேண்டும். சாமானிய தொழிலாளர் குழுக்கள் இரகசிய பேரம்பேசல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், UAW மற்றும் நிறுவனத்தின் பரிந்துரைகள் மற்றும் எதிர்-பரிந்துரைகளை முழுமையாக பகிரங்கப்படுத்துவதற்கும் கோர வேண்டும்.

அத்தகைய சாமானிய நடவடிக்கை குழுக்கள், அமெரிக்கா மற்றும் அனைத்துலகிலும் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஒரு பொதுவான போராட்டத்திற்கு தயாரிப்பு செய்ய, ஜிஎம் மற்றும் ஃபோர்டு தொழிலாளர்களுடன் பியட் கிறைஸ்லர் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு அடித்தளத்தை உருவாக்கும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரை:

UAW’s Norwood Jewell denounces autoworkers at Toledo meeting
[28 September 2015]