சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama at the United Nations
Washington prepares heightened aggression against Damascus and Moscow

ஐக்கிய நாடுகள் சபையில் ஒபாமா

டமாஸ்கஸ் மற்றும் மாஸ்கோவிற்கு எதிராக வாஷிங்டன் உக்கிரமான ஆக்கிரமிப்புக்குத் தயாராகிறது

Barry Grey
29 September 2015

Use this version to printSend feedback

திங்களன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் உரையாற்றுகையில், ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னைத்தானே மற்றும் அமெரிக்க அரசாங்கத்தையும் சர்வதேச சட்டம் மற்றும் இராஜாங்க விவகாரங்களின் தலையாய பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டார். அவர் மேற்பார்வை செய்துள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு போர்களின் பேரழிவுகரமான விளைவுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் யேமன் உட்பட ஒட்டுமொத்த நாடுகளையும் அழித்து நாசமாக்கியதிலிருந்து தப்பியோடும் அகதிகளின் அலையை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ள நிலையிலும், மற்றும் கிழக்கு ஐரோப்பாவை ரஷ்யாவிற்கு எதிராக சாத்தியமான போருக்கான ஓர் இராணுமயப்பட்ட பகுதியாக மாற்றுவதற்கு வாஷிங்டன் புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதற்கு இடையே, இவ்வாறு அவர் செய்கிறார்.

அவருக்கே உரிய பாசாங்குத்தனம் மற்றும் அவரது உரையைக் கேட்பவர்களின் அறிவை ஏளனப்படுத்தும் விதமாக, ஒபாமா "கூட்டுழைப்பின் மீது மோதலைக் கொண்டு வருபவர்கள் விலைகொடுக்குமாறு செய்யும் ஒரு சர்வதேச அமைப்புமுறையை" புகழ்ந்தார். அவர் "சிறிய நாடுகள் மீது பெரிய நாடுகள் அவற்றின் விருப்பத்தைத் திணிப்பதிலிருந்து அவற்றை தடுக்க உதவும் சர்வதேச கோட்பாடுகளுக்கு" அவரது ஆதரவை அறிவித்ததுடன், “பலமே சரியானதைச் செய்கிறது; பலமான நாடுகள் பலவீனமான ஒன்றின் மீது அவர்களது விருப்பத்தை திணிக்க வேண்டும்; மற்றும் வேகமான மாற்றத்தின் ஒரு காலகட்டத்தில், படைபலத்தைக் கொண்டு ஒழுங்குமுறையைக் கொண்டு வர வேண்டுமென" கருதுபவர்களை அவர் கண்டித்தார்.

இக்கருத்துக்கள் எல்லாம் எந்தவொரு மனிதரிடம் வருகிறதென்றால், எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கு மீதும் மற்றும் உலகின் ஏனைய பகுதிகள் மீதும் வாஷிங்டனின் மேலாதிக்க உந்துதலுக்கு விரோதமாக இருப்பதாக கருதப்படும் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது குழுவிற்கோ எதிராக "முன்கூட்டிய" போர்களை தொடங்குவதற்கு அவரது அரசாங்கத்திற்கு உரிமை இருப்பதாக வலியுறுத்தும்; டிரோன் ஏவுகணை படுகொலைகளில் கூறவியலாதவாறு ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றுள்ள; லிபியாவிற்கு எதிராக தூண்டுதலற்ற போர் நடத்தி அதன் தலைவர் கடாபியை படுகொலை செய்த; மற்றும் சிரியாவை கொடூரங்களின் கூடாரமாக திருப்பிய அல் கொய்தா இணைப்புபெற்ற கொலைகாரர்களை அதன் பினாமி படைகளாக பயன்படுத்தி ஒரு பிரிவினைவாத உள்நாட்டு போருக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கிய ஒருவரிடமிருந்து வருகின்றன.

ஒபாமாவினது கருத்துக்கள் பிரதானமாக சிரியா மீது ஒருங்குவிந்திருந்தன, சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை உடனடியாக நீக்குவதற்கான அவரது முந்தைய முறையீட்டிலிருந்து ஒபாமா பின்வாங்க தள்ளப்பட்டுள்ளார் என்று கூறுமளவிற்கு அங்கே அமெரிக்க கொள்கை தோல்வியடைந்துள்ளது. அவர், முடிவாக அசாத்தைப் பதவியிலிருந்து இறக்கி அதேவேளையில் தற்போதைய அரசாங்கத்தின் அம்சங்களை சாத்தியமானளவிற்கு பேணும் வகையில் ஒரு "சுமூகமான மாற்றம்" குறித்து அந்த பாதிஸ்ட் ஆட்சியின் பிரதான கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் ஈரானுடன் பேசுவதற்கு பரிந்துரைத்திருந்தார்.

திங்களன்று மாலை, ஒபாமா அந்த நான்கரை ஆண்டுகால போருக்கு அதுபோன்றவொரு தீர்வை வடிவமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து விவாதிப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை சந்தித்தார். 2013க்குப் பின்னர் அதுவே அவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் உத்தியோகபூர்வ நேருக்கு நேரான சந்திப்பாக இருந்தது, 2013இல் வாஷிங்டன் NSA இன் இரகசிய தகவல்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டனுக்கு தற்காலிகமாக தஞ்சம் வழங்குவதென்ற மாஸ்கோவின் முடிவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக புட்டின் உடனான கலந்துரையாடல்களை இரத்து செய்தது. அதை தொடர்ந்து, உக்ரேனின் ரஷ்ய-சார்பு ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சைத் தூக்கியெறிந்த அமெரிக்க ஆதரவிலான மற்றும் பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், சகல உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் முடக்கப்பட்டன. கியேவில் அது அதிதீவிர-தேசியவாத மற்றும் பாசிசவாத ஆட்சியை நிறுவிய பின்னரும், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகள் மீது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வாஷிங்டன் ஆதரித்துள்ளது, அதில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, ஒட்டுமொத்த நகரங்களையும் பேரழிவுகரமாக மாற்றியது.

வாஷிங்டனால் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளான சவூதி அரேபியா மற்றும் கட்டாரின் அரை-நிலபிரபுத்துவ ஷேக் ஆட்சிகள் மற்றும் துருக்கியால் தூண்டிவிடப்பட்ட பிரிவினைவாத உள்நாட்டு போரால் அந்நாட்டில் நடத்தப்பட்ட பாரிய படுகொலைகளுக்கு இடையே -23 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் 200,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாமென மதிப்பிடப்படுகிற நிலைமையில்- சிரியா மற்றும் அதன் எல்லையோர பிராந்தியத்தில் அமெரிக்கா அதன் அந்தஸ்து கடுமையாக பலவீனப்பட்டிருப்பதாக காண்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள இஸ்லாமிய அரசு படைகளுக்கு எதிரான சண்டையில் உளவுத்துறை தகவல்கள் பகிர்ந்து கொள்ள மற்றும் கூட்டு பாதுகாப்பினை உருவாக்க, சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் ஈராக் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருப்பதாக ஞாயிறன்று அது அறிவித்தமை அமெரிக்காவை ஆச்சரியப்படவைத்துள்ளது.

அதற்கு முன்னதாக, ISIS மற்றும் அசாத் இருதரப்பினரோடும் சண்டையிடுவதற்காக ஜிஹாதிகள்-அல்லாத ஒரு "மிதவாத" படையை வாஷிங்டன் உருவாக்க தவறியதை அம்பலப்படுத்தும் விதமாக, தொடர்ச்சியான பல அபிவிருத்திகள் இருந்தன. அதில் ISIS-எதிர்ப்பு போரின் உயர்மட்ட அமெரிக்க தளபதியின் இராஜினாமா; ஓராண்டுக்கும் அதிகமாக மற்றும் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவிட்டு, அமெரிக்கா "நான்கு அல்லது ஐந்து" போராளிகளுக்கே பயிற்சியளித்திருந்தது என்பதை ஒரு முன்னணி தளபதியே ஒப்புக்கொண்ட காங்கிரஸ் விளக்கவுரை; அமெரிக்க மற்றும் கூட்டணியின் மாதக் கணக்கான குண்டுவீச்சுக்களுக்கு இடையிலும் ISIS இன் பதவிகளில் உள்ள போராளிகளே எழுச்சியடைந்து வருகிறார்கள் என்ற செய்திகள்; மற்றும் துருக்கியில் அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட படைகள் அல் கொய்தாவின் சிரிய இணைப்பான அல்-நுஸ்ரா முன்னணிக்கு அவர்களது ஆயுதங்களை கொடுத்துள்ளமை குறித்த இதர செய்திகள் ஆகியவை உள்ளடங்கும்.

அனைத்திற்கும் மேலாக, அசாத் ஆட்சிக்கு ரஷ்ய இராணுவ ஆதரவின் அதிகரிப்பை சமீபத்திய வாரங்கள் கண்டுள்ளன, இதை வாஷிங்டனால் தடுக்க இயலவில்லை.

வாஷிங்டனின் பொறுப்பற்றத்தன்மை மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான மரணகதியிலான போர் ஆகியவற்றின் மொத்த விளைவு, அந்நாட்டை மற்றொரு புவிசார் அரசியல் வெடிப்புப்புள்ளியாக மாற்றியுள்ளது, அதில் அமெரிக்கா மற்றும் கூட்டு இராணுவ படைகள் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கின்றன, இது அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையே ஒரு பரந்த போராக வெடிப்பதற்கும் மற்றும் ஓர் ஆயுதமேந்திய மோதலின் மிக நிஜமான அபாயத்தையும் உயர்த்தி உள்ளது. ஐ.நா. கூட்டத்திற்கு முன்னதாக, பிரான்ஸ் அதன் சொந்த குண்டுவீச்சு நடவடிக்கையை சிரியாவில் தொடங்கியது, அது சாத்தியமான அளவிற்கு ரஷ்ய படைகளையும் உள்ளடக்கி அசாத்துடன் இணைந்த படைகளையும் அத்துடன் ISIS ஐயும் தாக்க தயாராக இருப்பதைத் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் அந்நாட்டின் மீது குண்டுவீச தொடங்க பிரிட்டனும் அணிவகுத்து நிற்கிறது.

ரஷ்யா மற்றும் ஈரானுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிப்பதால் அமெரிக்கா இராணுவ வன்முறையைப் பிரயோகிப்பதிலிருந்து பின்வாங்கி வருகிறதென நம்புவது ஓர் ஆபத்தான பிழையாக போய்விடும். அதற்கு எதிர்மறையாக, அதன் பொருளாதார மற்றும் இராஜாங்க நிலைப்பாடு பலவீனமடைந்து வருவதுடன் சேர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விடையிறுப்பு அதன் மிரட்டும் மற்றும் இராணுவ ஆக்ரோஷத்தை அதிகரிப்பதாக இருக்கும்.

இது ஒபாமாவின் உரையில் தெளிவாக இருந்தது. அவர் அசாத்தை ஒரு "சர்வாதிகாரியாக" குறிப்பிட்டும், ரஷ்யா உக்ரேனின் "இறையாண்மை மற்றும் தேச ஒருமைப்பாட்டை" மீறுகிறது என்று குற்றஞ்சாட்டியும் அமெரிக்க ஆக்ரோஷத்தின் பிரதான இலக்குகளைக் கண்டித்தார், அத்துடன் சீனா தென்சீனக் கடலில் "சுதந்திர கடல் போக்குவரத்து மற்றும் சுதந்திர வர்த்தக ஓட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை" தாக்கி வருவதாக சூசகமாக குறிப்பிட்டார் மற்றும் ஈரான் "அதன் நலன்களை முன்னெடுக்க வன்முறையான பினாமிகளைத்" தொடர்ந்து "பயன்படுத்தி" வருவதாக சுட்டிக்காட்டினார். உண்மையில் அமெரிக்காதான் மத்திய கிழக்கில் சர்வாதிகாரிகளின் தலைமை ஆதரவாளராக, உக்ரேனில் தேசிய இறையாண்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மீறுபவராக, கிழக்கு ஆசியாவில் கடல் போக்குவரத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக மற்றும் வன்முறையான பினாமிகளைப் பயன்படுத்துபவராக உள்ளது.

சர்வதேச சட்டம் மற்றும் இராஜாங்க விவகாரங்களுக்கான அவரது எரிச்சலூட்டும் துதிப்பாடல்களுக்கு இடையே, ஒபாமா அமெரிக்காவின் வழியில் குறுக்கே வரத்துணியும் எந்தவொரு நாடுக்கும் நேரடியாக அர்த்தப்படுத்தும் ஓர் அச்சுறுத்தலை வழங்கினார், அவர் அறிவித்தார்: “உலகம் இதுவரையில் அறிந்திராத மிக பலமான இராணுவத்திற்கு நான் தலைமை வகிக்கிறேன், தன்னிச்சையாகவும் சரி எங்கெல்லாம் அவசியப்படுகிறதோ அங்கே படைபலத்தைக் கொண்டும் சரி, எனது நாட்டையும் நமது கூட்டாளிகளையும் பாதுகாக்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்”, என்றார்.

சிரியா மற்றும் ரஷ்யா இரண்டுக்கும் எதிராக அமெரிக்க இராணுவ தீவிரப்படுத்தலுக்கான தயாரிப்புகள் அடியில் நடந்து வருகின்றன. கடந்த வாரம், வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் David Ignatius குறிப்பிடுகையில், தரையில் சண்டையிட்டுவரும் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவு (YPG) போராளிகளுக்கு நெருக்கமான வான்வழி ஆதரவு உட்பட சிரியாவில் வாஷிங்டன் அதன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க YPG தலைவர்கள் மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் மாநிலத்திற்குள் உள்ள சக்திவாய்ந்த கன்னைகள் ரஷ்யா அல்லது ஈரானுடனான எந்தவித பேச்சுவார்த்தைகளையும் எதிர்க்கின்றன, அத்துடன் சிரியாவில் அமெரிக்கா மற்றும் கூட்டு படைகளால் கண்காணிப்பின் கீழ் "பாதுகாப்பான இடங்கள்" என்றழைக்கப்படுவதை உருவாக்கவும் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான முற்றுமுதலான ஓர் உந்துதலுக்கும் கோரி வருகின்றன.

அதே நேரத்தில், பெண்டகனும் சிஐஏ உம் ரஷ்யாவிற்கு எதிராக அவர்களது போர் தயாரிப்புகளை அதிகரித்து வருகின்றன. வரவிருக்கின்ற அமெரிக்க-நேட்டோ Trident Juncture எனப்படும் 2015 போர் பயிற்சிகள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர் நடத்தப்படும் மிகப்பெரியதான இது, பால்டிக் பிராந்தியம் மற்றும் அதற்கப்பாலும் கூட்டு போர்முறை செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு மேற்கத்திய சக்திகளை தயார் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் Foreign Policy இதழில், “பெண்டகன் ரஷ்யாவிற்கு எதிரான பால்டிக் போருக்காக புதிய போர் திட்டங்களை தயாரிக்கிறது" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிட்டது. அக்கட்டுரை அறிவித்தது, “சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னரிலிருந்து முதல்முறையாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை ரஷ்யாவிற்கு எதிரான ஆயுதமேந்திய மோதலுக்கான அதன் அவ்வப்போதைய திட்டங்களை மீளாய்வு செய்து, முன்னேற்றி வருகிறது”.

இறுதியாக அணுஆயுதமேந்திய அதிநவீன B61-12 உடன் ஐரோப்பாவில் அதன் அணுஆயுத வான்வழி சக்தியை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது, இவை ஒவ்வொன்றும் ஹிரோஷிமாவில் 130,000 பேருக்கும் அதிகமானவர்களைக் கொன்ற ஓர் அணுகுண்டை விட மூன்று மடங்கு அதிகமாக சக்தி வாய்ந்தவையாகும்.

தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் இராணுவ மேலாதிக்கத்தில் தங்கியிருப்பதன் மூலமாக, அதன் உலகளாவிய பொருளாதார நிலைமையின் வீழ்ச்சியை தாண்டுவதற்கு முனைந்துள்ளது. மத்திய கிழக்கில் அதன் சமீபத்திய பின்னடைவுகளுக்கு விடையிறுப்பாக, இந்த போக்கு மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனம் மற்றும் பொறுப்பற்ற தன்மையோடு மட்டுமே வெளிப்படுத்தும்.