சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Serving UK general threatens mutiny against a future Corbyn government

சேவையிலுள்ள இங்கிலாந்து தளபதி ஒரு எதிர்கால கோர்பின் அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சிசதிக்கு அச்சுறுத்துகின்றார்.

By Chris Marsden
23 September 2015

Use this version to printSend feedback

பிரிட்டிஷ் தளபதியாக சேவையாற்றிவரும் ஒரு மூத்த அதிகாரி, ஜெர்மி கோர்பின் தலைமையிலான எதிர்கால தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் படைகளின் "நேரடி நடவடிக்கை" இருக்குமென அச்சுறுத்தியுள்ளார்.

சண்டே டைம்ஸிடம் பேசுகையில், பெயர் வெளியிடாத அந்த அதிகாரி, கோர்பின் அதிகாரத்திற்கு வந்தால்எல்லா மட்டத்திலும் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்யப்படும், முழுமையான ஒரு ஆட்சிசதியாக இருக்கக்கூடிய ஒரு சம்பவம் ஏற்படக்கூடிய நிஜமான சூழலை நீங்கள் முகங்கொடுப்பீர்கள்...

நேட்டோவிலிருந்து அணுவாயுத வசதிகளை பின்வாங்குதல், ஆயுதப் படைகளின் அளவைக் குறைப்பதற்கும் பலவீனப்படுத்துவதற்குமான ஏதேனும் திட்டங்கள் போன்ற அதிமுக்கிய கொள்கை முடிவுகள் மீது மூத்த தளபதிகள் நேரடியாகவும் பகிரங்கமாகவும் கோர்பினுக்குச் சவால்விடுத்து, அத்தீர்மானம் பெரிதும் முறிவதை நீங்கள் காண்பீர்கள். இராணுவம் அந்த அரசாங்கத்திற்குத் துணை நிற்காது. ஒரு பிரதம மந்திரி இந்நாட்டின் பாதுகாப்பை ஆபத்திற்குள்ளாக்குவதை படைத்துறை அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள், அதை தடுப்பதற்காக அவர்கள் எந்தவொரு சாத்தியமான, நியாயமான அல்லது தவறான வழிவகையையும் பயன்படுத்துவார்கள் என்றே நான் நினைக்கிறேன்,” என்றார்.

அத்தளபதி "1980கள் மற்றும் 1990களில் வடக்கு அயர்லாந்து சேவையில்" இருந்தவரென்று சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது.

இவை அசாதாரண கருத்துக்களாகும். அனைத்திற்கும் மேலாக, “கோர்பின் சில பயங்கரவாதிகள் மீது அனுதாபம் கொண்டிருப்பதால், அவருக்கு நிகழும் நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை சேவைகள் தகவல்கள் அளிக்க மறுக்கும்" என்றுஉளவுத்துறை தலைவர்கள்" கூறியிருந்ததாக சண்டே டைம்ஸ் வெளியிட்ட ஒரு வலியுறுத்தலும் அக்கருத்துக்களோடு சேர்ந்திருந்தன.

பாதுகாப்பு சேவைகள் அல்லது பயங்கரவாத-எதிர்ப்பு பொலிஸ் தலைவர்கள் குறித்து நாம் பேசுகிறோம் என்றால், உளவுத்துறை அமைப்பு எதுவுமே, அவை கொடுக்க விரும்பாத தகவல்களை கோர்பினுக்கோ அல்லது அவரது மந்திரிசபைக்கோ வழங்காது. மேலும் அவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்ட எந்தவொரு தகவலுமே கூட தடுக்கப்பட்டு, படைத்துறை அதிகாரிகளின் கட்டளைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு, பிரிட்டனின் பாதுகாப்பு சேவைகளிலிருந்து கோர்பினுக்கு முற்றிலும் மறைக்கப்பட்ட பின்னணியிலேயே வழங்கப்படும்" இதையொரு மூத்த உளவுத்துறை ஆதாரநபர் கூறியதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது.

இக்கருத்துக்கள், பழமைவாத அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் தொழிற் கட்சி தலைமையின் பெரும் பிரிவுகளால் தொடர்ந்து ஒன்றுகூடி நடத்தப்பட்டு வருகின்ற சீர்குலைப்பு அரசியல் பிரச்சாரத்தின் பாகமாக உள்ளன. ரூபேர்ட் முர்டோச் ஆல் பதிப்பிக்கப்படும் சண்டே டைம்ஸ், கோர்பினின் நிழல் அமைச்சரவையில் (shadow cabinet) உள்ள பாதி பேர் சிரியா மீதான அடுத்த மாத விமானப்படை தாக்குதல்களுக்காக அவர்களது புதிய கட்சி தலைவரை எதிர்த்து பழமைவாத பிரதம மந்திரி டேவிட் கேமரூனுக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராகி உள்ளதாக குறிப்பிட்ட ஒரு கட்டுரையில் தான், அந்த அநாமதேய தளபதியின் கருத்துக்களையும் வெளியிட்டிருந்தது. “நிழல் அமைச்சரவையின் மூத்த அங்கத்தவர்கள் ஏற்கனவே சிரியாவில், ISIS இலக்குகள் மீது குண்டுவீசுவதற்கு ஆதரவைச் சூளுரைத்துள்ளதுடன், டோரி மந்திரிமார்களுடனும் பேசியுள்ளனர்,” என்று அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.

சண்டே டைம்ஸ் அக்கட்சியின் ஐந்து பலமான வெளியுறவுத்துறை குழுவினரில் நால்வரை சுட்டிக்காட்டியது, அதில் நிழல் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி பென்னும் உள்ளடங்குவார்; குறைந்தபட்சம் இரண்டு பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர்கள்; துணை தொழிற் கட்சி தலைவர் டோம் வாட்சன்; ஏனைய நான்கு நிழல் அமைச்சரவை அங்கத்தவர்கள் மற்றும் மூன்று பாராளுமன்ற பிரிவு அங்கத்தவர்களும் சிரியாவில் நடவடிக்கையை ஆதரிக்க தயாராக உள்ளனர்.

தொழிற் கட்சியின் உத்தியோகபூர்வ விடையிறுப்பு மிகவும் மௌனமாக இருப்பது பெரியதாகவொன்றும் ஆச்சரியமூட்டவில்லை. ஒரு மூத்த தொழிற் கட்சி ஆதாரநபர் மேலோட்டமாக The Independentக்கு கூறுகையில், “அதுவொன்றும் ஓர் அசாதாரண அறிக்கையாக தெரியவில்லையே,” என்றார். பென் தன்னைத்தானே இராணுவ தயவுக்கு ஆளாக்கிக் கொள்ள முயலும் வகையில் விடையிறுத்தார். அவர் ஞாயிறன்று, அணுவாயுத வசதிகளை பின்வாங்குதல் மற்றும் நேட்டோவிலிருந்து வெளியேறுவது குறித்து BBC One இன் ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சிக்குக் கூறுகையில், “அப்படி எதுவும் நடக்குமென நான் நினைக்கவில்லை,” என்றார்.

நேட்டோ "நமது பாதுகாப்பிற்கான ஆதாரக்கல்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சேவையிலுள்ள ஒரு அதிகாரி சாத்தியமான ஒரு "எதிர்கால அரசாங்கம்" குறித்து அரசியல் கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென பாதுகாப்புத்துறை அமைச்சக ஆதாரநபர் ஒருவர் தெரிவித்த போதினும், விசாரிப்பதானால் அங்கே பெரும் எண்ணிக்கையிலான தளபதிகளை விசாரிக்க வேண்டியதிருக்கும் என்பதால், அந்த குற்றகர நபர் யாரென அடையாளங்காண எந்த விசாரணையும் அது தொடங்கப் போவதில்லை என்பதையும் சேர்த்துக் கொண்டது. உண்மையில் பிரிட்டிஷ் இராணுவத்தில் அங்கே தற்போது சுமார் ஒரு நூறு தளபதிகள் தான் சேவையில் இருக்கிறார்கள், அதுவும் தெளிவாக அவர்களில் அனைவருமே 1980கள் மற்றும் 1990களின் போது வடக்கு அயர்லாந்தில் சேவையில் இருந்தவர்கள் இல்லை. அனைத்திற்கும் மேலாக, எட்வார்ட் ஸ்னோவ்டெனால் வெளியிடப்பட்ட பரந்த அரசு உளவுத்தகவல்கள் உள்ள நிலையில், யார் அந்த தளபதி என்பது பாதுகாப்பு சேவைகளுக்குத் தெரிந்திருக்கும் என்பதை யாராலும் சந்தேகிக்க முடியாது.

கார்டியனின் Ewen MacAskill, கோர்பினுக்கு எதிரான "ஓர் இராணுவ கிளர்ச்சி குறித்த கருத்தைப்" "பெரிதும் ஒரு சூழ்ச்சி" என்பதாக உதறித்தள்ளி விடையிறுத்தார். அதற்கு முன்னதாக அவர் தெரிவித்திருந்தார், “கடந்த வாரம் இலண்டனின் சிந்தனைக்குழாம் Chatham House இல் பாதுகாப்புத்துறை தலைமை தளபதி சர் நிகோலஸ் ஹௌடன் உரையாற்றுகையில், நாடாளுமன்ற ஒப்புதல் பெறும் 'கவலைக்குரிய கட்டுப்பாடுகள்' குறித்து பேசினார், அவர் ஜனநாயகத்திற்கு சவால்விடுக்கவில்லை. அவர் ஈராக்கிற்குப் பிந்தைய இராணுவ தலையீடுகளை நாடாளுமன்ற அங்கத்தவர்கள் ஆதரிக்க தயங்குவதன் மீது தான் கவலையை வெளிப்படுத்தியிருந்தார்: இது, இங்கிலாந்தின் சாத்தியமான எதிரிகளின் பார்வையில், இராணுவத்தின் அச்சுறுத்தும் மதிப்பைப் பலவீனப்படுத்தக்கூடுமென அவர் அஞ்சுகிறார்”.

ஹௌடனை MacAskill மேற்கோளிட்டுக் காட்டுவது முக்கியமானதாகும். உண்மையில் ஹௌடன் Chatham House இல் உரையாற்றுகையில், "படைகளைப் பிரயோகிப்பதன் மீது" மிகவும் "கவலைக்குரிய கட்டுப்பாடுகளானது, சமூக ஆதரவு, நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் அதனினும் அதிகமாக சட்டப்பூர்வ சவால்களின் பகுதியில் உள்ளனஇங்கே என்னுடைய கருத்து என்னவென்றால் தேச உயிர்பிழைப்பின் முன்னால் மட்டுமே ஒரு தேசம் படைகளைப் பிரயோகிக்க வேண்டுமென கொண்டால், பின்னர் திரித்தல்வாத அரசுகளையும் (revisionist states) மற்றும் அவற்றின் சொந்த அபிலாஷைகளையும் தடுப்பதற்கு மாறாக, நாம் அவற்றை ஊக்கப்படுத்தவே செய்கிறோம்,” என்று குறைப்பட்டு கொண்டார்.

ஹௌடன் வடக்கு அயர்லாந்தில் இயந்திரமயமாக்கப்பட்ட மற்றும் விமானநகர்வு பிரிவின் (Mechanised and Air Mobile Roles) முதல் துணைப்படையின் படைத்துறை தளபதியாக (Company Commander) மற்றும் கட்டளை அதிகாரியாக இருந்தவராவார். அவரது படைப்பிரிவு பொறுப்புகளுக்குப் (Regimental duty) பின்னர், அவர் 1998 புனித வெள்ளி உடன்படிக்கைக்கு இட்டுச்சென்ற காலப்பகுதியின் போது பெல்பாஸ்டில் 39வது தரைப்படையைக் (Infantry Brigade) கட்டுப்பாட்டில் கொண்டிருந்தார்.

அவருக்கெதிரான அந்த அச்சுறுத்தலுக்கு கோர்பினின் அசட்டையான விடையிறுப்பு இன்னும் அதிகமாக அரசியல்ரீதியில் அம்பலப்படுகிறது. அநாமதேயரின் கருத்துக்கெல்லாம் அவர் கருத்துரைக்க மாட்டாரென அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த அறிக்கை, போர் நிறுத்தும் கூட்டணி அமைப்பின் (Stop the War Coalition) தலைவர் பதவியிலிருந்து கோர்பின் இராஜினாமா செய்ததற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்டது. “தொழிற் கட்சியை வழிநடத்துவதே இப்போது எனது பணி, சமாதானம் மற்றும் சர்வதேச நீதிக்கான போராட்டம் அதில் உள்ளடங்கும், இதற்கு எனது ஒருமுகப்பட்ட கவனம் தேவைப்படுகிறது,” என்று குறிப்பிட்டு அவர் அக்குழுவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கும் கூடுதலாக, பிரிட்டன் "அணு ஆயுதங்களைப் புதுப்பிப்பதை" தனிப்பட்டரீதியில் அவர் விரும்பவில்லை என்றாலும், "...இதற்காக ஒரு கட்சியாக நாம் நம்மைநாமே பிளவுபடுத்திக் கொள்ளவோ மற்றும் அழித்துக் கொள்ளவோ போவதில்லை" என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

அங்கே தொழிற் கட்சிக்குள்ளும் மற்றும் நாடாளுமன்றத்திலும்சீர்திருத்தங்களுக்கான கோர்பினின் அடக்கவொடுக்கமான பரிந்துரைகளுக்கும், ஆளும் வர்க்கம் அதன் வெளியுறவு மற்றும் உள்நாட்டு கொள்கையின் போக்கை உறுதிப்படுத்தி பேணுவதற்காக அது பிரயோகிக்க தயாரிப்பு செய்துவரும் அணுகுமுறைகளுக்கும் இடையிலான முரண்பாட்டிற்கு இதைவிட ஒரு தெளிவான சான்று இருக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கும் குறைவாக தான் கோர்பின் தொழிற் கட்சி தலைவர் பதவியில் இருக்கிறார் என்றாலும், தொழிற் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் வலதுசாரி, வணிக-ஆதரவிலான பரிவாரங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத எதையும் அவர் செய்யப் போவதில்லை என்பதை, அவர் மீண்டும் மீண்டும் எல்லா கவலைகளுக்குமான மறுஉத்தரவாதமாக வழங்கியுள்ளார். அவருக்கு எதிராக இப்போது கேமரூனுடன் பகிரங்கமாக கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ள நபர்களை அவரது மந்திரிசபையில் வைத்துக் கொள்வதும் இதில் உள்ளடங்கும். எவ்வாறிருப்பினும் ஆயுத படைகளின் கலகம் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு மீதான பேச்சுகள் ஏற்கனவே இருந்தன.

போரை எதிர்ப்பதற்கு கோர்பின் தீவிரமாக இருந்தார் என்றால், அவர் உடனடியாக அக்கருத்துக்களை வெளியிட்ட தளபதியை அடையாளங்காண கோரியிருப்பார், அவரைப் பணிநீக்கம் செய்து தேசவிரோத நடவடிக்கையைத் தூண்டிய குற்றச்சாட்டுக்களுக்காக நீதிமன்றங்களுக்கு முன்னால் கொண்டு வந்திருப்பார்.

அதற்கும் கூடுதலாக, இக்கருத்துக்கள் நிஜத்தில் எந்த முக்கியத்துவமும் கொண்டவையல்ல என்ற எல்லா வாதங்களையும் இழிவாக நிராகரிக்குமாறு அவர் தொழிலாளர்களுக்கும் அழைப்புவிடுத்திருப்பார்.

கோர்பின் 1970கள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட்டவர். அக்காலக்கட்டத்தின் போது தான், 1974 இல் எட்வர்டு ஹீத்தின் பழமைவாத அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்கிய அதிகரித்த தொழில்துறை போர்குணத்திற்கு எதிராக, படைத்துறைசாரா சேவை, பொலிஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இரகசியமாக எச்சரிக்கை செய்யப்பட்டு, ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் ஏனைய மூலோபாய இடங்களில் இராணுவ சதிகள் நடத்தப்பட்டன. சால்வாடோர் அலெண்டுக்கு (Salvador Allende) எதிராக 1973 சிஐஏ ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி, எந்த தலைமுறைக்கு ஒரு ஆரம்ப அனுபவமாக இருந்ததோ, கோர்பினும் அந்த தலைமுறையைச் சேர்ந்தவர் தான்.

அனைத்திற்கும் மேலாக, இன்றைய சூழல் இன்னும் அதிக அபாயங்களைக் கருவில் கொண்டிருக்கிறது. அவரது அமெரிக்க எதிர்பலமான பராக் ஒபாமா செய்ததைப் போலவே, கேமரூனும் டிரோன்களைக் கொண்டு பிரிட்டிஷ் பிரஜைகளை படுகொலை செய்ததை நாடாளுமன்றத்திலேயே பெருமை பீற்றினார். பின்னர் காலதாமதமாக கோர்பின் அது "சட்டப்பூர்மாக விசாரணைகுரியது" என்று கூறியதைத் தவிர, வேறெந்தவொரு எதிர்ப்பு முணுமுணுப்பு கூட அங்கே இருக்கவில்லை. அவர்களது கரங்களில் ஜோன் சார்லஸ் டு மெனெஜிஸின் இரத்தக்கறையைக் கொண்டுள்ள மகாநகர பொலிஸ் உள்ளடங்கலாக இந்த படைபலத்தைக் கொண்டு பாரியளவில் ஆழ்ந்து ஊடுறுவும் மற்றும் ஆத்திரமூட்டும் பயங்கரவாத-எதிர்ப்பு நுட்பங்கள், இப்போது வழமையாக அமைதியான உள்நாட்டு எதிர்ப்பு குழுக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதில், நிதியியல் செல்வந்த தட்டுக்களால் தற்போது ஏகபோகமாக்கப்பட்டுள்ள ட்ரில்லியன் கணக்கான பவுண்டுகளைப் பறிமுதல் செய்வது, பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுப்பது, அத்தியாவசிய சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்தியை மறுஒழுங்கமைப்பு செய்வதும் உள்ளடங்குகிறது. பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு எதிராகவும் மற்றும் அவற்றை பாதுகாக்கும் அரசு எந்திரங்களுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அரசியல்ரீதியில் ஒன்றுதிரள்வதே அவசியப்படுகிறது.