ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds of Neo-Nazis riot in Leipzig, Germany

ஜேர்மனி, லைப்சிக்கில் நூற்றுக்கணக்கான நவ-நாஜிக்கள் கலகம்

By Christoph Dreier
13 January 2016

திங்கள் அன்று லைப்சிக் நகரில் இடதுசாரிகள் கூடும் இடமான ஒரு துருக்கி சிற்றுண்டி விடுதி, மற்றும் வீடுகள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வலதுசாரி தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர். நகரில் அதி-வலது பெகிடா இயக்கத்தின் உறுப்பினர்கள்  ஆர்ப்பாட்டத்தை நடத்தியவேளை இந்த பாசிச பயங்கரவாதம் இடம்பெற்றது.

கொலோன் நகரில் ஞாயிறு அன்று வெளிநாட்டுக்காரர்களின் நான்கு குழுக்கள் தாக்கப்பட்ட மறுநாள் லைப்சிக்கில் கலவரம் இடம்பெற்றது என போலீஸ் கூறியது. புத்தாண்டு நிகழ்வின்போது கொலோனில் புலம்பெயர்ந்தோரால் பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் செய்யப்பட்ட இனவாத வெறித்தன பிதற்றல்களின் ஒரு அலைக்கு மத்தியில் இந்த அதி-வலது வன்முறை இடம்பெற்றது.

பலமாணவர்களும் இடதுசாரிகளும் வசிக்கும் லைப்சிக்கின் புறநகர்ப்பகுதியான கொன்னிவிட்ஸ் இல் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதை, ஒழுங்கமைக்கப்பட்ட இனஅழிப்பு என்றுதான் விவரிக்க முடியும். குறைந்தபட்சம் 250 நவ-நாஜிக்கள் சாக்சோனி மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காரில் பயணம்செய்து மாவட்டத்திற்கு வந்தனர். புலனாய்வாளர்களின்படி அவர்கள் பல்வேறு இடங்களில் கார்களை நிறுத்தி இருந்தனர், பின்னர் புறநகர்ப்பகுதியில் ஒன்று கூடினர்.

Leipziger Volkszeitung (LVZ) ஆல் மேற்கோள் காட்டப்பட்ட நேரில் காட்சியை கண்டவர், நவ-நாஜிக்களின் “அணி-நடை” நடந்த கூட்டம் மாவட்டத்தினூடாக வந்து, வொல்ஃப்காங்-ஹைய்ன்ஸ தெருவின் மூலையில் வன்முறையை கட்டவிழ்க்க தொடங்கினர் என்று தெரிவித்தார். “அவர்கள் பெருங்கற்களைக் கொண்டுவந்தார்கள், அவற்றை கூடவே கொண்டுவந்திருந்ததுபோல தெரிந்தது. அவர்களுக்கு நிச்சயமாக தலைவர் ஒருவர் இருந்து சமிக்கை கொடுத்திருந்ததைப் போல இருந்தது” என்று LVZ இடம் கண்ணால் கண்ட இன்னொரு சாட்சி ஸ்டெஃபான் கூறினார்.

நேரில் கண்ட இன்னொருவர், கும்பலானது பேஸ்பால் மட்டைகள் மற்றும் கோடரிகளை ஆயுதமாகக் கொண்டிருந்தனர் என்றார். அவர்கள் பல கதவுகளை உடைத்தனர், துருக்கிய சிற்றுண்டி விடுதிக்குள் திபுதிபு என புகுந்தனர், மேசை கதிரைகளை ஜன்னல்கள் வழியாக தூக்கி எறிந்தனர்.

கொன்னிவிட்ஸில் டசின் கணக்கான ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன, வெடிகள் கொளுத்திப் போடப்பட்டன மற்றும் கார்கள் தீவைக்கப்பட்டன. அழிவானது திட்டமிட்டப்பட்டதாகவே தெளிவாகத் தெரிந்தது. இடதுசாரி ஆதரவாளர்களுடனான உள்ளூர் கால்பந்து மன்றமான “Roter Stern Leipzig” ஜன்னல்கள் மற்றும் அநேக பல மதுபான கடைகள் அடித்து நொருக்கப்பட்டன. போலீஸ் அதில் பங்கேற்ற 211 பேரை கைது செய்தது மற்றும் பல தனிநபர்கள் தாக்குதல் நடத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்.

1990 களில் இடதுகள் மீது நாஜிக்களால் நடத்தப்பட்ட பல வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றன, ஆனால் LVZ-ல் உள்ள வரலாற்றாசிரியர் சாஸ்சா லாங்க (Sascha Lange) இன்படி சமீபத்திய கலவரங்கள் வரலாற்றுரீதியாக எண்ணிப்பார்க்க வேண்டியவை. “1938-ன் நவம்பர் இனஅழிப்புக்கு பின்னர் இருந்து லைப்சிக்கில் கடைகள் மற்றும் வீடுகள் மீதாக வலதுசாரி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாக இது இருந்தது என நாம் கருத வேண்டி இருக்கிறது.” லாங்க மூன்றாம் ரைய்க்கில் (Third Reich) உள்ள எதிர்ப்புக் குழுக்கள் பற்றியதில் ஒரு வல்லுநர் ஆவார்.

சமூக வலைத் தளங்களில் லைப்சிக்கில் நவ-நாஜிக்களால் ஆன தாக்குதலை “லைப்சிக்கில் பதட்டம்” என முன்கூட்டியே அறிவித்திருந்தது மற்றும் அது தெளிவாகவே உயர் மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கையாக, சேதங்கள் விளைவிக்கப்பட்ட பின்னரே போலீஸ் தலையிட்டதாக தெரிவித்தது. போலீஸ் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபொழுதும், அவர்கள் வந்தபொழுது நவ-நாஜிக்கள் எதிர்ப்பின்றி சரணடைந்தனர்.

அதிவலதிற்கும் அரசு எந்திரத்திற்கும் இடையிலான தொடர்புகள் சாக்சோனியில் குறிப்பாக கவனிக்கத்தக்கதாக இருந்தது. கடந்த ஆண்டு பெகிடா இயக்கத்தின் வலதுசாரி தீவிரத்தை மற்றும் அந்நியக் கலாச்சாரம் குறித்த வெறுப்பை கட்டியெழுப்பியதில் அரசியல் கல்விக்கான அரசு அலுவலகம் ஒரு பாத்திரத்தை ஆற்றியது. சாக்சோனியில் அநேக முன்னணி நவ-நாஜிக்கள் இரகசிய உளவு சேவையின் சம்பளப் பட்டியலில் இருந்தனர் மற்றும் தொடர்ந்து இருக்கின்றனர். திங்கள் அன்று பாசிச NPD கட்சி லைப்சிக் போலீசில் அதன் சொந்த தகவலாளியைக் கொண்டிருக்கிறது என அறிவிக்கப்பட்டது. அக்கட்சியானது பெயர்கள் மற்றும் முகவரிகள் உட்பட்ட இடதுசாரி செயல்பாட்டாளர்களின் போலீஸ் ஆவணங்களை வெளியிட்டது.

கொன்னிவிட்ஸில் நடந்த கலவரங்களுக்கான பின்புலத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால் அவர்கள் பாதுகாப்பு  படைகளுக்கு தெரிந்தே செய்தனர் அல்லது அவர்களால் துவக்கி கூட வைக்கப்பட்டது என்பதை புறந்தள்ளிவிட முடியாது.

அதேவேளை கொலோன் மத்திய புகையிரத நிலையத்தில் நடந்த புத்தாண்டு சம்பவங்களை தொடர்ந்து, ஜேர்மன் அரசியல் கட்சிகளாலும் ஊடகங்களாலும் முன்னிலைப்படுத்தப்பட்ட இனவெறிப் பிரச்சாரத்திற்கு நவ-நாஜிக்கள் பதில்கொடுத்தனர். கிட்டத்தட்ட இருவாரகால உத்தியோகபூர்வ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அந்நியர் கலாச்சாரம் மீதான வெறுப்பை தொடர்ந்து, அதிவலதுகள் தங்கள் பக்கம் காற்று வீசுவதாக உணர்ந்தனர்.

கலவரங்களை தொடர்ந்து அடுத்தடுத்து இடம்பெற்ற லெகிடா (Legida) ஆர்ப்பாட்டத்தில் இது தெளிவாக இருந்தது. பெகிடாவின் (Pegida) புதிய கிளையான லெகிடாவின் தீவிரவாதிகள் திங்கட்கிழமை மாலையில் தமது இயக்கத்தின் முதலாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடினர். லைப்சிக்கில் ஊர்வலத்தில் பங்கேற்க பெகிடா தமது ஆதரவாளர்களில் சிலரை டிரெஸ்டனில் (Dresden) இருந்து அனுப்பியது, ஏனையோர் செம்னிட்ஸிலிருந்து (Chemnitz) வந்தனர். அதில் கலந்துகொண்டார் மொத்தம் 3,000 பேர் ஆவர்.

புத்தாண்டு நிகழ்வின்போதான சம்பவங்களைக் குறிப்பிட்டு, பெகிடா தலைவர் Tatjana Festerling, “ஆபிரிக்க-அரபு பாலியல் பயங்கரவாதிகள்” ஆல் “பொன்நிறம், வெள்ளை நிறம் கொண்ட ஜேர்மன் பெண்கள்மீது நடத்தப்பட்ட பரந்தளவிலான பயங்கரவாத தாக்குதல்” என நச்சுப்பேச்சை வழங்கினார். இதற்கான குற்றம், புலம்பெயர்பவர்களை நாட்டுக்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் ஜேர்மன் மக்களை பாதுகாப்பற்றவர்களாக ஆக்கிவிட்ட ஜேர்மன் அரசியல்வாதிகளையே சேரும் என்றார்.

வெளிநாட்டினர், அகதிகள் மீதான சூனியவேட்டை, சமீபகாலங்களில் ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்துடன் நேரடியாக தொடர்புடைது. ஜேர்மனியின் மிகவும் பரவலாக வாசிக்கப்படும் செய்தித்தாளான Süddeutsche Zeitung, வெள்ளைப் பெண்ணின் பிறப்புறுப்பில் கெட்டியாகப் பற்றும் கறுப்புநிறக் கையைப்போட்டு கேலிச்சித்திரம் தீட்டி வெளியிட்டது. Focus இதழானது, நிர்வாணமான வெள்ளைப் பெண்ணின் மீது கறுப்பு கைத்தடங்கள் பதிந்த படத்தை அட்டையில் வெளியிட்டது. Die Zeit “கெட்ட கனவு- ஜேர்மன் பெண்ணை பாலியல் நாட்டத்துடன் தொடும் அரபுகள்” என்று தலைப்பிட்டு வெளியிட்டது.

இந்தப் பிரச்சாரம் திட்டமிட்டே ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் இன அழிப்பு சூழலை உருவாக்கி, வலதுசாரி தீவிரவாதத்தை ஊக்குவித்தது. ஆளும் செல்வந்த தட்டானது, எந்தவிதமான ஜனநாயக வழிமுறையுமற்ற, யுத்தம் மற்றும் சமூக தாக்குதல்கள் கொள்கையினை மக்கள் மீது திணிப்பதற்கு அனுமதிக்கும் பொருட்டு மக்கள்தொகை அச்சுறுத்தப்படவிருக்கிறது மற்றும் ஆத்திரமூட்டப்பட விருக்கிறது.

இதே நோக்கத்திற்கு, வலதுசாரி இயக்கமான பெகிடா அலுவலக மற்றும் ஊடக வட்டாரங்களால் தொடர்ச்சியாக முன்னிலைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த இயக்கங்களின் மகுடமாக பாசிச அலங்காரப் பேச்சாளர்களுக்கு தொலைக்காட்சி உரையாடல் காட்சியில் பிரதான இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது, அவர்கள் அரசியல் கல்வியூட்டலுக்காக அரசு அலுவலக வளாகத்தைப் பெற்றனர் மற்றும் அனைத்து முன்னணி அரசியல்கட்சிகளிடமிருந்து வந்த அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்க அழைப்பிதழ்கள் பெற்றனர்.

லைப்சிக்கில் இடம்பெற்ற இந்தவார கலவரங்கள், அரசியல்  நிறுவனம் மற்றும் ஊடகங்களால் இனவெறி, மதவாதம் மற்றும் திவிர தேசியவாத அரசியல் ஆகியன ஏற்றகத்தக்கதாக ஆக்கப்பட்டதன் ஒரு நேரடிவிளைபயனாக இருக்கின்றன.