ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US SEP presidential candidate Jerry White to address Sri Lankan public meeting via Internet

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் இணைய வழியாக இலங்கை பொது கூட்டத்தில் உரையாற்றுவார்

21 October 2016

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் அக்டோபர் 30 அன்று ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகின்றன. "உலக யுத்த அச்சுறுத்தலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும்" என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்வில், சோசலிச சமத்துவக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட், இணைய வழியாக உரையாற்றுவார்.

ஒரே சோசலிச போர்-எதிர்ப்பு கட்சி என்ற வகையில், அமெரிக்க தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், தெற்காசியா மற்றும் சர்வதேச அளவிலும் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களும் பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கையும், இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய அனைத்து நாடுகள் போன்று, ஏற்கனவே "ஆசியாவில் முன்னிலை" என்று அழைக்கப்படும் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் ஏகாதிபத்திய போர் ஏற்பாடுகளுக்குள் இழுக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்க தேர்தல் சட்டங்களும் முதலாளித்துவ ஊடகங்களும், அமெரிக்க மக்கள் இரண்டு வலதுசாரி வேட்பாளர்களுக்கு இடையில் மட்டுமே ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியும் என காட்டுகின்றன -வோல் ஸ்ட்ரீட் மற்றும் பென்டகனின் தேர்வான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லாரி கிளின்டன், அல்லது பில்லியனரும் பாசிசவாதியுமான குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். ஜனாதிபதி போட்டியில் இந்த இரண்டு வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க யுத்த ஆத்திரமூட்டல்கள் தீவிரமாவதோடு சேர்த்து, உள்நாட்டு அரச அடக்குமுறை, சமூக சமத்துவமின்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையும் உக்கிரமடையும்.

கடந்த மாதம், பாக்கிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இராணுவத் தாக்குதல், இந்த இரண்டு அணு ஆயுத நாடுகளையும் போரின் விளிம்புக்கு கொண்டுவந்துள்ளது. இந்தியாவை அமெரிக்காவும், பாக்கிஸ்தானை சீனாவும் ஆதரிக்கும்போது, இந்தியத் துணைக் கண்டத்திலான போர் விரைவில் ஒரு உலக மோதலாக வெடிக்க முடியும். தொழிலாள வர்க்கம் மட்டுமே, சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தில் அணிதிரண்டு, இந்த ஆபத்தைத் தடுக்க முடியும்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் திசையமைவு சீனாவை நோக்கி இருந்ததனால், அவரை அகற்றுவதற்காக கடந்த ஆண்டு நடந்த ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அமெரிக்கா தலையிட்டிருந்தது என்பது ஒரு பகிரங்க இரகசியமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்கம், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் பூகோள மூலோபாய மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு ஒரு செயலூக்கமான பங்குதாரராக ஆதரவு கொடுத்து வருகின்றது.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒரு உண்மையான மாற்றீட்டை எதிர்பார்க்கும் அனைவரையும், கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்துக்கான போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றது. இந்திய துணை கண்டத்திலும் ஏனைய இடங்களிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முற்போக்கான மாற்றீடு இது மட்டுமே.

கூட்ட விபரங்கள்:

திகதி: அக்டோபர் 30

நேரம்: ஞாயிற்றுக்கிழமை, 3.00 மணி

இடம்: சவ்சிரிபாய, 123 விஜேராம மாவத்தை, கொழும்பு 07.