ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

PHILOSOPHIE UND POLITIK IN ZEITEN VON KRIEG UND REVOLUTION

தத்துவமும், அரசியலும்

போருக்கும், புரட்சிக்குமான காலகட்டத்தில்

“எப்படி தத்துவம் பாட்டாளி வர்க்கத்தில் பொருளை காண்கின்றதோ, அதே முறையில் பாட்டாளி வர்க்கம் தத்துவத்தில் தனது அறிவுசார் ஆயுதத்தினை காண்கின்றது […]  [மனிதர்களின்] விடுதலையின் தலை தத்துவம், அதனது இதயம் தொழிலாள வர்க்கம்“ கார்ல் மார்க்ஸ்

வியப்பூட்டும் வேகத்தில் கூர்மையடையும் சர்வதேச நெருக்கடி நிலைமைகளில் போரும், இராணுவவாதமும் மீண்டும் பயமுறுத்தும் போது தத்துவத்திற்கும், அரசியல் நோக்குநிலைக்குமுள்ள உள்ள உறவு பாரிய முக்கியத்துவத்தினை கொண்டது. தனது புதிய புத்தகத்தின் அடித்தளத்தில் டேவிட் நோர்த் Frankfurt நகரில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ரோசா லுக்செம்பேர்க், லெனின், ட்ரொட்ஸ்கியினால் அபிவிருத்தி செய்யப்பட்ட சோசலிச முன்னோக்கின் இன்றைய அவசியம் தொடர்பாக பேசுகின்றார். விஞ்ஞானபூர்வமாக வரலாற்றினை விளங்கிக்கொள்வதையும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தினையும் தீவிரமாக நிராகரிக்கும் பிராங்ஃபேர்ட் பள்ளி (Frankfurt School), பின் நவீனத்துவ கருத்தாக்கங்களை முழுமையாக எதிர்த்து மரபுவழி மார்க்சிசம் தன்னை வரையறுத்து கொள்கின்றது.

கடந்த நாற்பது வருடங்களாக நோர்த், சர்வதேச சோசலிச இயக்கத்தில் ஒரு தலைமைப் பாத்திரத்தினை வகிக்கின்றார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைமை ஆசிரியரும், அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தலைவருமாவர். அவர் பல நூல்களை பிரசுரித்திருக்கின்றார், அவற்றுள் நாம் காக்கும் மரபியம், அமெரிக்க ஜனநாயகம் நெருக்கடியில், லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பிற்காக, ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் என்பன அடங்குகின்றன.

அவரது சமீபத்திய நூலின் ஜேர்மன் மொழிபெயர்ப்பு "கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016" தயாரிப்பில் உள்ளது.

சனிக்கிழமை, 22.10.2016, மாலை 6 மணி

Campus Westend
Hörsaalzentrum (Hörsaal HZ 3)
Theodor-W.-Adorno-Platz 5
60323 Frankfurt