ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German media demands military buildup in response to US election

அமெரிக்க தேர்தலுக்கு பதிலிறுக்கும் வகையில் ஜேர்மன் ஊடகம் இராணுவத்தைக் கட்டி எழுப்பக் கோரிக்கை

By Peter Schwarz
11 November 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் விளைவாக வெளியுறவுக் கொள்கை பற்றிய ஜேர்மனியின் கருத்துரைப்புக்களில் பின்வரும் மையக் கருத்து வெளிப்பட்டது. அது டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வோடு, அமெரிக்காவானது மேற்குலக அரசியல் மற்றும் மதிப்புக்களிலிருந்து விலக்கிக்கொண்டுவிட்டது, ஆகையால் ஜேர்மனி தன்னை இராணுவரீதியாய் கட்டி எழுப்ப வேண்டும், அதன் தலைமையில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த வேண்டும், மற்றும் “மேற்கின் மதிப்புக்களின்” பாதுகாப்பிற்காக தான் சர்வதேசப் பொறுப்பை எடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்த நூல்தான் ஒவ்வொரு அரசியல் முகாம்களின் ஊடாகவும் இழையோடுகிறது. பழமைவாத ஊடகங்களில் உள்ள சிலர் ட்ரம்ப்பின் கீழ் அமெரிக்காவோடு நெருங்கிய உறவுகளைப் பேணவேண்டும் என்று விரும்பும் அதேவேளை, இராணுவக் கட்டி எழுப்பல் மற்றும் ஒரு பொது ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கையோடு இதனை சேர்க்கின்றனர்.

Welt செய்தித்தாளின் வெளியீட்டாளரான தோமாஸ் ஷ்மித், ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஒன்றாய் சேர்ந்தது என்று கூறிக்கொண்டு, இப்பொழுது அமெரிக்காவிற்கு பிரியாவிடை பெறுவது” கவலையீனமானது  என கருதினார். “அதேவேளை ஐரோப்பா உலகில் தன்னையே உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினால், சிலவேளை தடுமாறும் அமெரிக்காவின் பக்கத்தில், அது ஒரு மாபெரும் சக்தி போல ஏதோஒன்றாக அது ஆகவேண்டும் கட்டாயம் மாறவேண்டும்” என்று மேலும் கூறினார்.

Frankfurter Allgemeine Zeitung (FAZ) இல், பெர்தோல்ட் ஹோலர்  “உலகிலிருந்து அமெரிக்கா விலகிச்சென்றது” என்று புலம்பி, பின்வரும் முடிவுக்கு வந்தார்: “பிளவுபட்டிருக்கும் ஐரோப்பியர்கள் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாய் சேர்ந்து வருவர் மற்றும் தங்களின்  நலன்களை கவனிப்பதற்கு தங்களையே உறுதிப்படுத்திக் கொள்வர்” என்றார். அதே செய்தித் தாளில், ஹொல்கர் ஸ்ரெல்ஷ்னர் உம் பின்வருமாறு சேர்த்தார்: “(ஐரோப்பிய ஒன்றியத்தின்) அங்கத்துவநாடுகள் உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பிற்கான தங்களின் செலவினங்களை கணிசமான அளவுக்கு அதிகரிப்பர்.”  ஹோலர்  மற்றும் ஸ்ரெல்ஷ்னர் இருவருமே FAZ இன் ஆசிரியர்களாவர்.

ஆயுதத்தளவாட தொழிற்துறை ஏற்கனவே இந்த வாய்ப்பை உணரத் தொடங்கிவிட்டுள்ளது. புதன்கிழமை அன்று ஆயுத உற்பத்தியாளர் Rheinmetall இன் பங்குகள் 6 சதவீதம் அதிகரித்திருப்பதாக சரியான நேரத்தில் பதிவு செய்தது.

வலியுறுத்துகின்ற ஒரு ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகாரக் கொள்கைக்காக அழைக்கும் ஓங்கி ஒலிக்கும் குரல்கள், எவ்வாறாயினும் பழமைவாத பத்திரிகைகளிடமிருந்து வரவில்லை, மாறாக மிதவாத பத்திரிகைகளிடம் இருந்தே வந்தது. அவர்கள் ட்ரம்ப் ஜனாதிபதி பதவித்தன்மை மீதாக ஏற்பட்ட கவலையை ஜேர்மன் இராணுவவாதத்தின் பக்கம் திருப்புதலுக்கு சுரண்டிக் கொண்டனர்.

Die Zeit இன் இணைத் தலைமை ஆசிரியர் பெர்ன்ட் உல்றிச், ஐரோப்பாவை திரும்பத்திரும்ப துரதிருஷ்டத்திற்குள் இட்டுச்சென்ற “முடியாட்சி சூதாடிகள் மற்றும் பாசிச தலைவர்கள்” உடன் ட்ரம்ப்பை ஒப்பிட்டார். அவர் ட்ரம்ப்பை “ஆணாதிக்க முட்டாள்” என்றும் அமெரிக்காவை ”வீழ்ச்சியடையும் குறிக்கோளில்லாத உலகசக்தி” என்றும் விவரித்தார். இதிலிருந்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார்: “அமெரிக்க வாதம், அப்பாவித்தனமான அட்லாண்டிக் வாதம், அமெரிக்காவை சார்ந்து எளிதில் ஏமாற்றப்படுதல் மற்றும் அமெரிக்க முன்னணிப் பாத்திரம் என்ற அனுமானத்திற்கு பின்னாலான கீழ்ப்படிதலில் இருந்து விடுபட இதுதான் சரியான நேரம்” என்றார்.

உல்றிச் மேலும் கூறுகிறார்: “உலகில் மாபெரும் மற்றும் சக்திமிக்க ஜனநாயகத்தின் அரசியல் குழப்பத்துடன், ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்ததுடன் இப்போது ஜனநாயகத்தையும் பகுத்தறிவையும் தன்னுள் பொதிந்துள்ள ஒரே ஒரு வல்லரசுதான் அங்குள்ளது. அந்த சக்திதான் ஐரோப்பா. ஆதிக்கப்போக்குடையவரும் அல்ல குழப்பநிலையை கொண்டவரும் இல்லாத உலகில் மிக சக்திமிக்க நபர் இந்த வாரத்திலிருந்து அங்கேலா மேர்க்கலாகும்.”

அத்தகைய ஒரு பைத்தியக்காரத்தனமான கட்டுரையை எண்ணி ஒருவர் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மேர்க்கெலது கொடூரமான சிக்கனக் கொள்கை மற்றும் துருக்கியுடனான அவரது பிற்போக்குத்தனமான அகதிகள் பேரம் ஆகியவற்றால் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் அனைவராலும் ஆழ்ந்து வெறுக்கப்படுபவரை “ஜனநாயகம் மற்றும் பகுத்தறிவை” உள்ளடக்கியவராக உல்றிச் மேர்க்கெலை அறிவிக்கிறார். ஐரோப்பிய பெரும் அரசுகளின், வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் ஒரு கருவி என்று மக்களில் பெரும்பான்மை பகுதியால் வெறுக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தை, “சிறப்பாக தொழிற்படும் ஜனநாயக உலக சக்தி” என்று உல்றிச் அழைக்கிறார்.

உல்றிச் அமைதிவாதத்திலிருந்து போர்வெறிக்கு சென்றுள்ள மற்றும் சமூக விமர்சனத்திலிருந்து தற்போதுள்ள நிலைமையை பாதுகாக்கும் பண்டிதத்தனமாய் கல்வி கற்ற நடுத்தர வர்க்கத் தட்டின் ஒரு  பிம்பமான பிரதிநிதி ஆவார். இந்த உணர்வுமிக்க இந்த இராணுவசேவையை நிராகரித்தவர் அராஜக-அமைதிவாத இதழான அடித்தளப் புரட்சி (Graswurzelrevolution ) இல் தனது பத்திரிகை வாழ்வை தொடர்ந்தார். அவரது ஆரம்ப காலங்களில், பசுமைக் கட்சியின் பாராளுமன்ற பிரிவின் அலுவலகத்திற்கு தலைமை வகித்தார். பின்னர் அவர் Die Zeit இல் இறங்கும் முன்னர் taz, Frankfurter Rundschau மற்றும் பிற செய்தித்தாள்களுக்காக அவர் எழுதினார்.

Die Zeit இன் வாதத்தை போலவே Süddeutsche Zeitung உம் வாதிடுகிறது. அதன் தலைமை ஆசிரியரான குர்ட் கிஸ்டர்  பின்வருமாறு எழுதுகிறார்: “முன்னர் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளிகளாக இருந்த ஐரோப்பாவிலுள்ள அரசுகள் இப்பொழுது தம்மை மறுநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். ...... ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு, போட்டித்தன்மையானது மட்டுமல்ல, மிகவும் மோதல் கொண்டதுமாகும். இக் காரணத்தினால், முக்கிய அரசுகளின் ஒரு சிறு வட்டத்தில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மூலோபாயத்தை கட்டாயம் அவிருத்தி செய்ய வேண்டும்.” இது உளவு சேவைகளுடன் நிறுத்திக்கொள்ளாது, வர்த்தக கொள்கையுடன் ஆரம்பித்து, பாதுகாப்புடன் தொடரும்.

அதே செய்தித்தாளில், ஸ்ர்பான் பிறவுண் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌவ்க் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், இராணுவக் கட்டுப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் மற்றும் மாபெரும் சர்வதேசப் பொறுப்பை எடுக்க வேண்டும் என்று வழங்கிய உரையை நினைவூட்டினார். இது இறுதியில் யதார்த்தமாகி விட்டது” என்று பிறவுண் எழுதுகிறார். “ஐரோப்பா என்றால், ஜனநாயகவாதிகளின் ஐரோப்பா, மனித உரிமைகளின் ஐரோப்பா, தாராளவாத ஐரோப்பா அதன் மதிப்புக்களை பாதுகாப்பதற்கு விரும்பினால், அது தன்னைத்தானே கட்டாயம் பாதுகாத்து ஆக வேண்டும்.”

“மதிப்புக்கள்” என்று இதன் மூலம் அர்த்தப்படுத்துவது  அமெரிக்கா முன்னர் இந்த “மதிப்புக்களை” பாதுகாத்தது என்று ஒப்புக்கொள்வதில் வெளிப்படுத்தப்படுகிறது. அது மேலோட்டமாக அர்ரத்தப்படுத்துவது யாதெனில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இடையீடு இல்லாத யுத்தங்கள், அதில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மத்திய கிழக்கின் பெரும்பகுதியை அழித்துவிட்டனர், நூறாயிரக் கணக்கான மக்களைக் கொன்று, மில்லியன் கணக்கானோரை அகதிகளாக்கி விட்டுள்ளனர். இதுதான் எடுத்துக்கொள்ளுமாறு முன்மொழியப்படும் “சர்வதேச பொறுப்புடைமை”யின் முன்மொழிவுகள் ஆகும். இது “மதிப்புக்கள்” பற்றியதல்ல, மூலோபாய செல்வாக்கு, கச்சாப் பொருட்கள் மற்றும் சந்தைகளுக்கான —ஒரு ஏகாதிபத்திய நலன்களாகும். ஒவ்வொரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு யுத்தமும், மிகக் கொடூரமானதும் கூட மேன்மை வாய்ந்த “மதிப்புக்கள்” என்ற பெயரில் நடத்தப்படுகின்றது.

அனைத்துக்கும் மேலாக, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக ஜேர்மன் பொருளாதாரம் பதட்டத்துடன் உள்ளது. இறக்குமதிகளில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பது என்ற அவரது அறிவிப்பை நடைமுறைப்படுத்தினால், ஜேர்மனி அதன் முக்கியமான ஏற்றுமதி சந்தையை இழந்துவிடும் அச்சுறுத்தலை கொண்டிருக்கிறது. 2015ல், ஆறு தசாப்தங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி என்ற நிலையை பிரான்சுக்கு பதிலாக ஜேர்மனியை இடம்பெறச் செய்தது. இந்த ஆண்டு, ஜேர்மன் தொழில்துறையானது 114 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய சரக்குகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது 2010ல் இருந்ததை விட 73 சதவீதம் அதிகமாகும் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதை விட இரு மடங்கு ஆகும். இவற்றுடன் சேர்த்து, அமெரிக்கா அனைத்து ஜேர்மன் நேரடி முதலீடுகளிலும் ஆறில் ஒரு பகுதியைக் கணக்கில் கொண்டுள்ளது.

ட்ரம்ப்பின் கீழ் இந்த சந்தைகள் பொறியுமானால், ஜேர்மன் பொருளாதாரத்திற்கு ஒரு பதிலீடு தேவை. இதுதான் ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் தீவிர வெளியுறவுக் கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும்.

இந்தப் போக்கு ஆளும் கட்சிகளிலிருந்து மட்டுமல்லாமல், பசுமைக் கட்சிகள் மற்றும் “இடது” எதிர்க் கட்சிகளிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறது. இடது கட்சி அரசியல்வாதியான Stefan Liebich தேர்தல் நாள் மாலை மிக மூர்க்கமான ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையின் வாய்ப்பு வளத்திற்காக அவரது அதி ஆர்வப் பதிலிறுப்புடன் இதனை வெளிப்படுத்தினார்.

“சுதந்திரமாகவும் மிக நம்பிக்கையுடனும் ஒரு பலம்வாய்ந்த வெளியுறவுக் கொள்கையை எதிர்காலத்தில் பின்பற்றுவதில்” ஜேர்மனியும் ஐரோப்பாவும் கட்டாயம் ஈடுபடும் என்று Liebich அறிவித்தார். அமெரிக்காவை நோக்கி ஒருவர் நிலைப்படுத்திக் கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. “வெளியுறவுக் கொள்கையையும் பாதுகாப்புக் கொள்கையையும் பலப்படுத்துவதற்கான நேரம் இப்பொழுது” என்று அவர் கூறினார். “எதிர்காலத்தில் வாஷிங்டன் விரும்புபவற்றுக்கு உரக்கவும் மிகத்தெளிவாகவும் ‘இல்லை’ என்று கூறுவோம். இது மென்மையான அணுகுமுறையின் முடிவாகும்.”

இந்தக் கொள்கைகள் “மதிப்புக்களை” பாதுகாப்பதுடன் எதையும் கொண்டிருக்கவில்லை. மனிதகுல வரலாற்றில் மிக மோசமான குற்றங்களை இழைத்த 75 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், “மதிப்புக்கள்” பற்றி மற்றவர்களுக்கு பாடம் புகட்ட ஜேர்மனியின் ஆளும் வர்க்கத்தின் அனைவரிலும் ஒருவருக்குக் கூட அருகதை கிடையாது.