ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Former economy minister Macron announces French presidential election bid

முன்ளாள் பொருளாதார அமைச்சர் மக்ரோன் பிரெஞ்சு ஜனாதிபதி  தேரதலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கிறார்

By Anthony Torres 
23 November 2016

பிரெஞ்சு அரசியல்வாதி இமானுவேல் மக்ரோன் 2017ல் ஜனாதிபதி பதிவிக்கு ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக நவம்பர் 16ல் அறிவித்தது, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டின் அரசாங்கம் மற்றும் தேர்தலில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) சிறுதுண்டுபோதலின் முன்னேறிய நிலையை சுட்டிக்காட்டுகிறது. மக்ரோன் பிரதமர் மானுவல் வால்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் ஆகஸ்ட் 2014 முதல் ஆகஸ்ட் 2016 வரை பொருளாதார அமைச்சராக இருந்தார்.

மக்ரோன் தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்கு மார்சேய் நகரத்தை தேர்ந்தெடுத்தார், 2014 லிருந்து நவ-பாசிச தேசிய முன்னணி (FN) இன் Stéphane Ravier ஆல் ஆளப்படும் 13வது மாவட்டத்தில் உள்ள, நகரின் வடக்கிலுள்ள ஒரு தொழிற் பள்ளிக்கு சென்றார்.

இம் முன்னாள் அமைச்சர் “தொழில் முனைவோர்” க்கு அதிக சுதந்திரத்திற்கு அழைப்புவிடுத்ததுடன் 35 மணி வேலைநேர வாரத்தைக் கண்டித்தார். 2014ல் அவர் சேர்ந்த அரசாங்கம், லிபியாவில் அதன் இரகசிய தலையீடுகளால் முழுமையாக விளைவேற்படுத்திய லிபியப் பேரிடர், மற்றும் சிரியாவில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு அதன் ஆதரவு இவையிருந்த போதிலும், மத்தியதரைக் கடலில் அகதிகள் மூழ்கும் துயரத்தை, ஒப்புக்காக இழிவானமுறையில் குறிப்பிட்டார். மக்ரோன் கேட்டார், “இந்த மத்தியதரை நிலங்களில், கடலில் ஆணும் பெண்ணும் சாவதில் யார் பெருமைப்படமுடியும்? வெளிநாட்டுக் குடிமகன்கள் எமது மதிப்புக்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு நாட்டில் நாம்வாழ்கிறோம்.”

FN இன் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக்கு எதிராக வாயரற்றலை ஓட்டும் இம்முயற்சியானது, பின்னதின் பெயரைக் குறிக்காமலேயே, சுமார் 100 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவிற்கு அளித்த பேச்சில், அரசியல் ரீதியில் ஹோலண்டின் குற்றகரமான கொள்கைகளை மூடிமறைப்பதை அர்த்தப்படுத்தியது. ஹோலண்ட் மற்றும் நேட்டோ அரசுகளின் ஏகாதிபத்திய யுத்த உந்துதலே புலம்பெயர்ந்தோர் நெருக்கடியை தூண்டியது, அதனை PS ஆனது முஸ்லிம்களுக்கும் புலம்பெயர்ந்தோர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறையை நியாயப்படுத்த பயன்படுத்தியது. இந்த பிற்போக்குக் கொள்கையானது, FN ஐ ஊட்டி வளர்த்ததுடன் கலே மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்ள அகதிகளுக்கு எதிரான எதிர்ப்புக்களையும், ஏன் ஒரேயடியான தாக்குதல்களையும் கூட நவ-பாசிசவாதிகள் செய்வதற்குத் தூண்டியது.

எந்தவொரு அரசியல் தொடுப்பும் இல்லாமல் போட்டியிடும் மக்ரோன், “கூட்டுத் தலைமை ஆட்சியின் மதிப்புமிகு விவாதங்களை.… ஏற்பாடு செய்யும், பணம் வழங்கும் இந்தக் கட்சிகள் யார், அவை எங்கும் இல்லை!” என்று குற்றம்சாட்டி, கண்டனமும் செய்தார்.

ஹோலண்ட் பிரெஞ்சு அரசியல் அமைப்பில் குடியுரிமை பறிப்புக் கொள்கையை மற்றும் அவசரகால நிலையை பொறிக்க தங்குதடையற்று முடிவடுத்தபொழுது PS இந்த வசந்தகாலத்தில் வெடித்த நெருக்கடியை உள்வாங்க நேரிட்டது. இது ஊடகத்தை திகைப்படைய வைத்ததோடு, 2017 தேர்தலில் PS அழிவைச் சந்திக்கும் என முடிவுக்கும் வந்தது.

ஏப்ரலில், PS இன் கடும் ஒடுக்குமுறை தொழிலாளர் சட்டத்திற்கெதிரான எதிர்ப்புக்கள் ஒரு வெகுஜனப் பண்பை எடுக்கையில், மக்ரோன் தனது தேர்தல் இயக்கமான முன்னேறு! [ En Marche !] என்பதை தொடங்கினார். சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு நவீனத்தன்மை என்ற பூச்சுக் கொடுக்கும் வகையில், இந்த இயக்கம் மக்ரோனின் தனிநபர் பண்பை ஒரு இளம் தொழிலதிபர் மற்றும் முன்னாள் முதலீட்டு வங்கியாளர் என்றவாறு வலியுறுத்துகிறது.

அண்மைய மாதங்களில் மக்ரோன், பல்பொருள் அங்காடி  இணைப்புக்களில் நல்ல வளத்தை கொண்டவரும் PS உடள் இணைப்பு கொண்ட சிந்தனைக் குழாமிற்குள் இருப்பவருமான Henry Hermand (நவம்பர் 6ல் இறந்தார்) போன்ற பல தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். முன்னாள் Cŕedit Lyonnais தலைவர் Jean Peyrelevade மற்றும் Meetic dating வலைத் தளத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Marc Simoncini ஆதரவையும் பெற்றுள்ளார். அவர், வணிக கூட்டமைப்பான Medef இன் துணைத் தலைவர் Geoffroy Roux de Bézieux, மற்றும் நிதி நிறுவனமான AXA-ன் நிறுவனரும் மற்றும் Montaigne Institute இன் நிறுவனருமான Claude Bébéar ஆகியோரையும் சந்தித்தார்.

மக்ரோன் பல PS துணைத் தலைவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார் மற்றும் Lyon மேயரும் ஹோலண்டின் முன்னாள் ஆதரவாளருமான Gérard Collomb இன் ஆதரவையும் பெற்றுள்ளார்.

மக்ரோன் வேட்புமனுச் செய்தலின் உத்தியோகபூர்வ தொடக்கம், அவரது தேர்தல் வேட்பு அறிவிக்கப்பட்டு ஒரு சில நாட்களே ஆனநிலையில், அவரது பிரச்சாரம் பற்றிய பிரான்ஸ்-3 தொலைக்காட்சி ஒளிபரப்புடன் முன்ளாள் Rothschild banker க்கான பரந்த ஊடக ஆர்வத்தை தூண்டிவிட்டது.

PS இன் தேசிய செயலர் Jean-Christophe Cambadélis “இடதின் முதல்கட்டநிலை” தேர்தல் என்று அழைக்கப்படுவதில் சேருவதற்கு அழைப்பு விடுத்தார். PS எந்த வேட்பாளரை அறிவித்தாலும் பின்னர் அவர் ஆதரிப்பதற்கு இது ஒரு அறிகுறியாகும். “இன்று காலையில் இம்மானுவேல் முதல்கட்டநிலை தேர்தலில் சேருங்கள்” என்று அழைப்பு விட்டேன் என அவர் France Info விடம் கூறினார். “அவர் ஒரு முட்டாள் அல்லர், அவரது அரசியல் வாய்ப்புக்கள் சுருங்கி விடும் என்று அவருக்குத் தெரியும்” என Cambadélis மேலும் குறிப்பிட்டார்.

Cambadélis, மக்ரோனை PS இன் ஆரம்ப நிலை தேர்தலுக்குள் அவரது ஆதரவை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவரை ஆரம்பநிலையில் சேரச்சொல்வதன் மூலம், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்களில் பரவலாக எதிர்பார்க்கப்படும் PS நெருக்கடியை தடுப்பதற்கு முயற்சி செய்கிறார்.

ஹோலண்டை PS இன் “இயல்பான” தேர்வாக ஆதரிப்பதை அண்மையில் கைவிட்ட Cambadélis விளக்கியதாவது: “இது மிகவும் அசௌகரியமானது, ஏனெனில் இது இடதுகளை பிளவுவுபடுத்தும், தேர்தலுக்கு தகுதியுடையதாக ஆக்காமல் அது இடதுகளை தகுதியற்றதாக்கும். இடதுசாரி வாக்காளர் தொகுப்பு மக்ரோனின் பலமான புள்ளி அல்ல.”

எவ்வாறாயினும், மக்ரோன் Cambadélis இன் அழைப்பை நிராகரித்தது, வரும் அண்மைக் காலத்தில் PS இன் அழிவு எதிர்பார்க்கப்படுவதை விளக்கிக் காட்டுகிறது. PS சிதறுண்டதும், பாராளுமன்ற குழுக்கள், இருக்கைகள், அலுவலக பதவிகள், செல்வாக்கு வலைப்பின்னல்கள் மற்றும் அரசாங்கத்தின் கட்சி என்ற வகையில் நான்கு தசாப்தங்களாக திரண்ட இதரவளங்கள் ஆகிய இந்த துண்டு துணுக்குகளை பொறுக்கிக் கொள்ளவதற்கு ஏதுவாக தன்னை ஒரு சிறந்த நிலையில் அவர் வைத்துக்கொள்ள தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

எனினும், எல்லாவற்றுக்கும் மேலாக, மக்ரோன் நிதிய பிரபுத்துவ ஆட்சியின் பிற்போக்கு அரசியலை மரபுரிமையாக கொள்வார், அது அதிவலதுபுறம் மிகவேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. அது வெறுமனே, ஹோலண்டின் செல்வாக்கின்மை மற்றும் அவரது சிக்கனப் பொருளாதாரக் கொள்கை மற்றும் பொலீஸ்-அரசு கொள்கைகளுக்கு பரந்த குரோதம் இவற்றால் விளைந்த அண்மைய நெருக்கடி அல்ல. மாறாக 1968 மே-ஜூன் பொது வேலை நிறுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் முதலாளித்துவத்தை காப்பதற்கு ஒரு முதலாளித்துவ “இடது” கட்சியை கட்டும் முழு செயற்திட்டமும், நெருக்கடிக்கும் உக்கிரமடையும் வர்க்கப் பிளவுகளுக்கும் மத்தியில் பொறிந்து கொண்டிருப்பதாகும்.

மக்ரோன் தனது பொருளாதாரத் திறமை என்று கூறப்படுவதினை பிரான்ஸிற்கு கொடையாக வழங்கும், தன்னை உருப்படுத்திக்காட்டும் இயக்கத்தை இப்பொழுது தொடங்கியிருக்கிறார். இதில் அதிவலதுக்கான மரபுகளின் ஒரு சிறு குறிப்புக்கும் அதிகமானது இருக்கிறது மற்றும் ஜோன் லூக் மெலோன்சோன், பேர்னார் குஷ்னெர் மற்றும் ஜோன்-பியர் செவெனுமோ உள்பட PS இலிருந்து “அரை- சுதந்திர” இயக்கத்தை உருவாக்குவதற்குச் சென்றுள்ள இதர முன்னாள் PS அரசியல்வாதிகள் கடுமையாய் வலதிற்கு அல்லது இன்னும் அதிவலதிற்கும் கூடத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்ரோன், ஜோன்-பியர் செவெனுமோ இன் குடியரசு மற்றும் குடிமக்கள் இயக்கத்திற்கு (Mouvement républicain et citoyen - MRC) சிறிதுகாலம் ஆதரவு கொடுத்தது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார். இந்த இயக்கத்தில்தான் FN இன் இரண்டாம் நபரான Florian Philippot தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. செவெனுமோ தானே FN உள்பட, தேசியவாத அதிவலதுக்கும் தனக்கும் இடையில் கூட்டுக்களை உருவாக்க இப்பொழுது வெளிப்படையாகவே குரலெழுப்புகிறார்.