ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Divisions mount in UK military over US presidential race

அமெரிக்க ஜனாதிபதிபதவிக்கான போட்டி மீதாக பிரித்தானிய இராணுவத்தில் கருத்துவேறுபாடுகள் அதிகரிப்பு

By Robert Stevens 
8 November 2016

அண்மையில் பணிஓய்வுபெற்ற பிரிட்டீஷ் படைத்தளபதி Sir Richard Shirreff  குடியரசுக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி பதவி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்க்கு தனது எதிர்ப்பை பகிரங்கமாக அறிவித்தார்.

பழமைவாத டெய்லி டெலிகிராப் இடம் பேசுகையில், 2011க்கும் 2014க்கும் இடையில் ஐரோப்பாவில் நேட்டோவின் இணை உயர் கூட்டுப்படை ஆணையர் ஆக இருந்த Shirreff, “இங்கே தேர்தலிலிருந்து சிலநாள்களே தள்ளி நிற்கிறோம், அதுதான் உண்மையில், உண்மையான அச்சுறுத்தல் —ட்ரம்ப் தான் சட்ட ஷரத்து 5 க்கு கடப்பாடுடையவராக இருக்க மாட்டார்” என்றகிறார் என்றார்.

அமெரிக்க தலைமையிலான நேட்டோ அரசியலமைப்பு சட்ட ஷரத்து 5 ஆனது, அதன் உறுப்பினர் எவர் தாக்கப்பட்டாலும் அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் இராணுவ உதவிக்கு வர கடப்பாடு கொண்டுள்ளது.

“குளிர் யுத்த காலத்தின் பொழுது ஐரோப்பாவின் பாதுகாப்பானது, ஓவல் அலுவலகத்தில் எந்த ஜனாதிபதி இருந்தாலும், எந்த கட்சியிருந்தாலும், (அமெரிக்கா) ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு வரும்” என்ற மொத்த உறுதிப்பாட்டின் மீது தங்கியிருந்தது.

Shirreff, நேட்டோவின் பாகமாக ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டுவதற்கான, பிரிட்டனின் சார்பில் குரல் கொடுக்கும் ஒரு ஆதரவாளராவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர், 2017: ரஷ்யாவுடனான போர்: மூத்த இராணுவ ஆணையகத்தினரிடமிருந்து ஒரு அவசர எச்சரிக்கை என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை வெளியிட்டார்.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் செல்வாக்கிழந்த இரு வேட்பாளர்களால் போட்டியிடப்படும் ஒரு தேர்தலின் வெளிப்பாடு மீதாக ஐரோப்பாவின் எதர்காலத்தையிட்டு பிரிட்டனின் ஆளும் தட்டு மத்தியில் ஆழ்ந்தகவலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) விட்டு நீங்குவதற்கான ஜூன் பொதுஜனவாக்கெடுப்பை அடுத்து, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முன்னோடியாய் இருந்திராதவகையில் பிரிட்டனானது ஒரு அரசியலமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் உள்ளது. அமெரிக்க தேர்தல்கள் மீதாக ஆளும் வட்டாரத்திற்குள் நடக்கும் விவாதங்கள் நேட்டோ கூட்டு, ஐரோப்பிய அரசுகளின் பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர்த் தயாரிப்பு ஆகிய அதன் விளபயன்கள் மீதாக குவிமையப் படுத்தப்பட்டிருந்தது என்றவகையில் மிக சூடான சூழ்நிலையாக இருந்தது.

Sherriff – தலையீடானது, 2010-2013 பாதுகாப்புத் தலைவராக இருந்த ஜெனரல் லோர்ட் ரிச்சார்ட்ஸின் தலையீட்டிற்கு எதிரான தலையீடாக இருந்தது. கடந்த வராம், ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் ரஷ்யாவிற்கும் எதிரான அழிவுகரமான போர் குறைவாகலாம் என்று ரிச்சார்ட்ஸ் வாதித்தார். பாராளுமன்ற  அவையின் இதழிடம் பேசியபோது, “ISIS போன்ற அரசில்லாத செயல்பாட்டாளர்களே எமது பாதுகாப்பிற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்றார். இவர்களுடன் கையாளும் நாடுகளும், அரசுகளும் ஒரே அங்கமாக திரளுமானால் —ட்ரம்ப் உள்ளுணர்வு இந்த வழியில்தான் செல்ல இருக்கிறது என நான்நினைக்கிறேன்— உலகம் நிச்சயமாய் குறைந்த பாதுகாப்புடையதாய்  இருக்காது என்று கூறுவது அங்கிருக்கும் என நான் நினைக்கிறேன். பெரிய வல்லரசுகள் என்றவகையில் ஒருவரையொருவர் புரிதல் இல்லாமையும் ஒத்துணர்வாற்றல் இல்லாமையும் எல்லா கணத்திலும் எமக்கு ஆபத்து நேர்வுக்குரியதாகும் என்பதாம் அது.”

ஹிலாரி கிளிண்டன் அதிகாரத்திற்கு வந்தால் பிரிட்டன் அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாக இருப்பதால், ரஷ்யாவுடனான உடனடி யுத்தம் பிரிட்டனை தழுவும் ஆபத்து பற்றி ரிச்சார்ட்ஸ் எச்சரித்தார். அவர் சிரியாவில் நடக்கும் போர் பற்றி குறிப்பிட்டார், அதில் பாஷர்-அல்-அசாத் ஆட்சியை ரஷ்ய அரசாங்கம் ஆதரிக்கிறது, அதேவேளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரிக்கும் படைகள் அவரை அகற்றப் போராடுகின்றன: “இதற்கு அவர் முறையாக தயார் செய்யாமல் ரஷ்யாவுடன் ஒரு யுத்தத்திற்கு செல்வது, அவரும் சரி நாமும் சரி பறக்கத்தடை மண்டலங்கள் பற்றிப் பேசவில்லை. அதனை அமல்படுத்த வேண்டுமானால் ரஷ்ய விமானத்தை சுட்டுவீழ்த்த வேண்டும். அலெப்போவில் சுடுகின்ற போருக்கு செல்ல விரும்புகிறோமா?“

அவர் எச்சரித்தார், “பறக்கத் தடை மண்டலங்களை அறிவிப்பது மேற்குலகுக்கு ஒரு மாற்றாக இருக்கிறது மற்றும் அதன் அர்த்தம் இறுதியில் ரஷ்யாவுடன் ஒரு யுத்தத்திற்கு செல்ல தயார் செய்யப்படவேண்டும். அதற்கான வேட்கையை நான் பார்க்கவில்லை, வெளிப்படையாக கூறினால் அதில் அதிக அரத்தம் இருப்பதாக நான் பார்க்கவில்லை.”

Shirreff இன் கருத்துக்களோடு சேர்ந்து, முன்னாள் கடற்பிரபு மற்றும் தொழிற் கட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர், Spithead இன் ஒரு புதிய ரஷ்ய  போர் டாங்க் பற்றி Lord West கருத்துரைத்தார். அவர் டெய்லி டெலிகிராப் இடம், “ரஷ்ய இராணுவம் பெருக்கம்” பற்றி தான் “மிகவும் கவலைப்படுவதாக” தெரிவித்தார். West, ரஷ்ய பொருளாதாரம் ஒரு போர்ப் பொருளாதாரம். அவர்கள் இத்தாலியின் GDP யை கொண்டிருக்கின்றனர், அவர்கள் அமெரிக்காவை போல அதே அளவு பாதுகாப்பிற்கு செலவழிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் செய்வது ஆதரவு இல்லாதது, ஏதாவது ஆதரவில்லாத பொழுது எதுவும் நடக்கக்கூடும்” என்று குறிப்பிட்டார். ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒருபோரை தயாரிப்பதற்காக நேட்டோவின் பிரதான வல்லரசுகள் தங்களின் சொந்த GDP இலிருந்து பெருந்தொகைகளை ஊதாரித்தனமாய் செய்கின்றன என்பதை West இன் வார்த்தைகளில் இருந்து ஒருவர் அறியமாட்டார்.

ஆகஸ்டில், வெஸ்ட் டெய்லி ஸ்டார் இடம் குறிப்பிட்டாதாவது, ஐரோப்பிய ஒன்றியம் உடைய ஆரம்பித்தால் மற்றும் ஐரோப்பாவில் விஷயங்கள் மோசமாகப் போனால், நான் நினைக்கிறேன் அவை நன்றாகப் போகும், கடந்த நூற்றாண்டில் வரலாற்று ரீதியாக நாம் இருமுறை கொண்டது போல போகவேண்டி வரும், எமது தேசத்திற்காக இரத்தத்தையும் செல்வத்தையும் கொடுத்து அதைத் தீர்த்தோம்.”

சீனா பற்றியதில், “அமெரிக்கர்கள் தங்களின் சொந்தவழியில் கையாள நாம் விடுவோம் என நான் நம்பவில்லை” என்று வெஸ்ட் குறிப்பிட்டார்.

எதிர்க் கட்சியான தொழிற் கட்சியால் ஆதரிக்கப்படும் பிரிட்டனின் ஆளும் பழமைவாதிகள், Trident ஆணுவாயுத ஏவுகணை திட்டத்தை புதுப்பித்தலில் அண்மையில் கையெழுத்திட்டனர். இது 200 பில்லியன் பவுண்ட்டுகளுக்கும் மேல் மதிப்புடையதென மதிப்பிடக்கூடியது, இது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கான ஆண்டு செலவைப்போல் இருமடங்காகும்.

உயர் இராணுவப் பிரமுகர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடல் என்பது இப்பொழுது ஒரு தொடர்நிகழ்வுகளாக ஆவது பிரிட்டிஷ் ஜனநாயகத்தின்  உடைவின் அறிகுறியாகும். செப்டம்பர் 2015ல், கட்சித் தலைமைக்கான தேர்தலில் தொழிற் கட்சி “இடது” ஜெர்ரெமி கோர்பின் (Jeremy Corbyn) ன் அண்மைய வெற்றியை உடனடியாக அடுத்து, சண்டே டைம்ஸ், கோர்பின் பிரதமராகும் நிலைவந்தால், “மூத்தவராகப் பணியாற்றும் தளபதி” இடமிருந்து ஒரு கலகத்தின் “மிக உண்மையான வாய்ப்பு” அங்கிருக்கும் என்று கருத்துக்களை தாங்கி வந்தது. இராணுவத்திற்குள்ளே உள்ள சக்திகள் “என்னென்ன வழிகள் சாத்தியமோ, நீதியாகவோ அல்லது தவறாவகோ” பயன்படுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அவ்வதிகாரி அறிவித்தார். ஒரு வராம் கழித்து, பிரிட்டனின் உயர் பதவியிலுள்ள இராணுவ அதிகாரி — பாதுகாப்பு தலைமைத் தளபதி Sir Nicholas Houghton— பிபிசி இன் ஆண்ட்ரூ மார் ஆல் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தான் ஒருபோதும் அதிகாரமளிக்கப்படவில்லை என்று கோர்பின் கூறிய கூற்று பற்றிக் கேட்கப்பட்டபொழுது, “நல்லது, இத்தகைய சிந்தனை அதிகாரத்திற்கு மாற்றப்படுமானால் என்னை கவலைக்குள்ளாக்கும்” என்று பதிலளித்தார்.

பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பால் திறக்கப்பட்ட அரசியலமைப்பு நெருக்கடி மற்றும் வாக்கை செல்லாததாக்க தோற்கடிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு முகாமினாலான முயற்சி ஆகியன உயர் இராணுவ பிரமுகர்களினாலான மேலும் அசாதாரணமான தலையீட்டை தூண்டிவிட்டுள்ளது. இராணுவத்தின் முன்னாள் தலைவர் Lord West மற்றும் Lord Dannatt ஆகியோர் பிரதமர் தெரசா மே சட்டப்பிரிவு 50 ஐ –பாராளுமன்றத்தை  அரச சிறப்புரிமையால் கடந்து செல்லும் வழியூடாக– ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நிகழ்வுகளை தொடங்கக் கூடாது என்ற கடந்த வார உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கு தங்களின் எதிர்ப்பை வெளிவிட செலவிட்டனர். அது கட்டுப்படுத்தும் அதிகாரங்களுள் “ஆயுதப் படைகளை கட்டுப்படுத்தல், ஒழுங்கு செய்தல் மற்றும் பயன்படுத்தல்” ஒன்றாகும்.

Lord Dannatt சண்டே டெலிகிராப் இடம், “இராணுவ நடவடிக்கைக்கு அதிகாரமளிப்பதை பொறுத்த மட்டில் அரச தனிச்சிறப்புரிமையை எதிர்காலப் பயன்படுத்தல் மீது இந்த தீர்ப்பானது பாதிப்பைக் கொண்டுவர அனுமதிக்கக்கூடாது. அது நடக்கலாம் என நான் அஞ்சுகிறேன, ஆனால் அது  அரசாங்கத்தை பொறுத்ததாகும், தொடர்புபடுத்துவது சட்டபூர்வமானதல்ல மற்றும் செய்யக்கூடாது என்று நன்றாய் தெளிவுபடுத்தவேண்டியது அரசாங்கத்தினுடையதாகும்.”

அவர் மேலும் குறிப்பிட்டார், “அது மனச்சாட்சி கொண்ட அரசாங்கத்தின் வகையாகும், அப்படியிருக்க முடிவுகளை எடுப்பதற்கும் அதன் விளைவுகளோடு வாழ்வதற்கும் உண்மையில் பிரதமரே தலைவர்.”

Lord West குறிப்பிட்டார், “தேசம் என்ற வகையில் உனக்கு தேவைப்படுமானால் போருக்கு விரைந்து போக மற்றும் செயல்பட அரச சிறப்பதிகாரத்தை பயன்படுத்தும் திறனை விரும்பாதவர்கள் இருக்கின்றார்கள் மற்றும் அவர்கள் தவறாகப் போகின்றனர் என்று நான் அஞ்சுகிறேன். நாம் ஒரு அரசாங்கத்தை தேர்ந்து எடுக்கிறோம் அரசாங்கத்தின் முழுக் கடமை ஆளுதலாகும். செயல்பட வேண்டியநேரம் குறுகியதாக இருக்கும்பொழுது நீங்க நடவடிக்கை எடுக்கவேண்டிய சமயங்களும் உண்டு. நீங்கள் அதைப்பற்றி பாராளுமன்றத்திற்கு சென்று விவாதிக்க முடியாது.”

பிரிட்டனில் அமெரிக்க தேர்தல்கள் பற்றி கவலை பெருகுவது ஐரோப்பா முழுவதும் வெளிப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்கள், ஹிலாரி கிளிண்டனின் வெற்றியை விரும்புகின்றனர், அவர்கள் அவரை, அட்லாண்டிக் கடந்த பொருளாதார,  அரசியல் மற்றும் இராணுவ உறவுகளில் தற்போதைக்கு மட்டிலாவது, பாதுகாப்பு என உணர்கிறார்கள். ஒவ்வொருநாட்டிலும் எதிர்ப்பு நிலைகளும் உள்ளன. பிரான்சில், அடுத்த ஆண்டு ஏப்பிரல்/ மேயில் ஜனாதிபதி தேர்தலில் முக்கியமாய் போட்டியிடக்கூடிய போட்டியாளர்களில் மரி லூ பென்னும் ஒருவர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் மிகவும் நட்புறவைக் கொள்ளவேண்டும் என்று வாதிடும் ஒருவராக, லூ பென், ட்ரம்ப் “ஹிலாரி  கிளிண்டனை விடவும் குறைந்த தீங்குடையவர்” என்று கூறி. ட்ரம்ப்பை அங்கீகரிக்கிறார், “கிளிண்டன் என்றால் ஒரு யுத்தம்” என்று மேலும் அவ்வம்மையார் குறிப்பிட்டார்.