ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

President-elect Trump on flag-burning: The crisis of American democracy

கொடி எரிப்பு குறித்து ஜனாதிபதியாகவிருக்கும் ட்ரம்ப்பின் கருத்து: அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி

1 December 2016
Joseph Kishore

ஜனவரி 20 அன்று அமெரிக்க ஜனாதிபதியாகவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அன்று அரசியல்சட்டத்தின் பிரிவு 2 இல் கொடுக்கப்பட்டுள்ள மொழியில், நான் “என் திறனுக்குட்பட்டு மிகச்சிறந்த முறையில், அமெரிக்காவின் அரசியல்சட்டத்தை காத்து நிற்கவும், காப்பாற்றவும், பாதுகாக்கவும் செய்வேன்” என்று உறுதிமொழி எடுக்கவிருக்கிறார்.

இது நடப்பதற்கு இன்னும் ஏழு வாரங்களுக்கும் கொஞ்சம் அதிகமான காலம் தான் மீதி இருக்கும் நிலையில், அந்த மாதிரியான வகையில் தன் நடவடிக்கை எதுவும் இருக்கப் போவதில்லை என்பதை தெளிவாக்குகின்றதான 132 எழுத்துக்கள் கொண்ட ஒரு கூற்றை ட்ரம்ப் ட்விட்டரில் வழங்கியிருக்கிறார். “அமெரிக்கக் கொடியை எரிப்பதற்கு எவரும் அனுமதிக்கப்படக் கூடாது - அப்படி அவர்கள் செய்தால், அநேகமாக குடியுரிமை இழப்போ அல்லது ஒரு வருட சிறையோ, பின்விளைவுகள் கண்டிப்பாக அங்கே இருந்தாக வேண்டும்” என்று அவர் எழுதினார்.

கொடி எரிப்பின் அரசியல்சட்டத்தன்மை குறித்த பிரச்சினை புதிதன்று. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நீண்ட கால வழக்கத்தில் நிறுவப்பட்டிருந்த இந்த வழிமுறையை தடைசெய்வதற்கான முயற்சி விரிவான முறையில் வழக்காடப்பட்டு வந்து, இது முதலாம் சட்டத்திருத்தத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு பேச்சு வடிவம் என முதலில் 1989 இலும் பின்னர் மீண்டும் 1990 இலும் உச்சநீதிமன்றம் முடிவான தீர்ப்பளித்து விட்டிருக்கிறது.

கொடி எரிப்புக்கு பொருத்தமான தண்டனை அமெரிக்க குடியுரிமையை பறிப்பதுதான் என்று திட்டவட்டம் செய்வதானது, அரசியல்சட்ட உரிமைகளுக்கு மிகப் பெரும் அலட்சியம் கொண்டிருப்பதையே காட்டுகிறது. 1868 இல் உறுதிசெய்யப்பட்ட பதினான்காவது திருத்தமானது, “அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியந்தஸ்து அளிக்கப்பட்ட” அனைவருமே குடிமக்கள் தான் என்று அறிவிக்கிறது. சுதந்திரமடைந்த அடிமைகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்த இந்த திருத்தமானது சர்வவியாபக முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது: குடியுரிமையையோ அல்லது இந்த அந்தஸ்தினால் வழங்கப்பட்ட எந்த உரிமைகளையோ மட்டுப்படுத்துவதற்கோ அல்லது ஒழிப்பதற்கோ கூட்டரசாங்கத்திற்கோ அல்லது மாநில அரசாங்கங்களுக்கோ எந்த உரிமையும் இல்லை.

1958 இல், தலைமை நீதிபதி இயர்ல் வாரன் எழுதிய ஒரு தீர்ப்பில், தேசக்குடியுரிமைபறிப்பானது கொடூரமான மற்றும் அசாதாரண தண்டனைகளைத் தடைசெய்யும் எட்டாவது சட்டத்திருத்தத்தை மீறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. “எந்த உடல்ரீதியான தவறான நடத்தல்களோ, ஆதிகால சித்திரவதைகளோ இல்லாமல் இருக்கலாம்” என்று வாரன் எழுதினார். “அதற்குப் பதிலாய், ஒழுங்கமைந்த சமூகத்தில் தனிமனிதரின் அந்தஸ்து முழுமையாக அழிக்கப்பட்டு விடுகிறது. இது சித்திரவதையை விடவும் மிகவும் ஆதிகால தண்டனை வடிவமாகும், ஏனென்றால் நூற்றாண்டுகளாய் அபிவிருத்தி கண்டிருந்த தனிமனிதரின் அரசியல் இருப்பு என்ற ஒன்றை அவருக்கு அது இல்லாமல் செய்து விடுகிறது.”

ஒரு குற்றத்திற்கு - அல்லது, இந்த இடத்தில், பேச்சு சுதந்திரத்தை செயல்படுத்துவது - குடியுரிமையை பறிப்பதை தண்டனையாக அளிக்க வேண்டும் என்பதான ஆலோசனை ஆகமொத்தத்தில் அத்தனை அரசியல்சட்டப் பாதுகாப்புகளையும் அகற்றுவதற்கான ஒரு ஆலோசனையாக இருக்கிறது. இது எதேச்சாதிகார நிர்வாக அதிகாரத்தின் ஒரு வசனமே ஆகும். சித்திரவதையைத் தொடர்வது, முஸ்லீம்களுக்குப் பதிவேடுகள் பராமரிப்பது, உள்நாட்டு வேவுபார்ப்புகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு இருக்கக்கூடிய அத்தனை தளைகளையும் அகற்றுவது என ட்ரம்ப்பிடம் இருந்து வருகின்ற ஜனநாயக-விரோத ஆலோசனைகளின் ஒரு மொத்தவரிசையில் இதுவும் நிற்கிறது.

கொடி எரிப்பு குறித்த ட்ரம்ப்பின் ட்வீட் அரசியல்சட்ட கோட்பாடுகளுக்கு காட்டுகின்ற பகிரங்கமான அலட்சியத்திற்காக ஜனநாயகக் கட்சியின் பிரிவுகளாலும் அதன் ஊடகச் செய்தித்தொடர்பாளர்களாலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. நம்பமுடியாமல் நோக்குவது குறிப்பிட்ட மட்டத்திற்கு இருக்கின்ற அதேநேரத்தில் அடிப்படையான பிரச்சினை உதாசீனப்படுத்தப்படுகிறது: ஜனாதிபதியாகவிருக்கும் ஒரு மனிதர் இத்தகையதொரு வசனத்தைக் கூறுவதென்பது தனிமனிதரின் எதேச்சாதிகார பாங்கை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக அமெரிக்காவில் முதலாளித்துவ-ஜனநாயகத்தின் ஆழமான சிதைவையே வெளிப்படுத்துகிறது.

ட்ரம்ப் அரசியல்சட்டத்தை பாதுகாக்கப் போவதாக உறுதியெடுக்கையில், “அவர் உண்மையிலேயே தான் கூறுவதைக் குறித்து அறிந்து வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம், மக்களாகிய நமக்கு எழுவதற்கு நிறைய காரணமிருக்கிறது” என்று நியூ யோர்க் டைம்ஸ், புதனன்று அதன் தலையங்கத்தில் எழுதியது. ட்ரம்ப் குறித்து அது எழுதியது: “ட்வீட் செய்கிறார், பதிவிடுகிறார், தூண்டி விடுகிறார். கிண்டலடிக்கிறார். அவர் ஒரு உலகளாவிய களத்தின் தளபதி என்பதோடு விரைவில் அமெரிக்காவின் தலைமைத் தளபதியாக ஆகவிருப்பவர். ஆனால் மறுபடியும் கூறப்பட்டாக வேண்டும்: இது சாதாரணமானதல்ல. இது ஜனாதிபதிப் பதவியை சிறுமைப்படுத்துவதாகும்.”

ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவி என்பதில் ஏதோ புதிதாக அபாயகரமாக இருக்கிறது தான், ஆனாலும் அவரை ஏதோ அமெரிக்க ஜனநாயகம் என்னும் கறைபடாத தோட்டத்தில் தவறி ஊடுருவியவராக சித்தரிப்பதென்பது ஒரு அரசியல் கற்பனையே. அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் பல தசாப்த காலங்களில் அபிவிருத்தி கண்டு வந்திருக்கக் கூடிய ஒரு எதேச்சாதிகாரப் போக்கின் -ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்புமே இதை ஆதரித்து வந்திருக்கின்றனர்- தொடர்ச்சியாகவும் நீட்சியாகவுமே ஜனநாயக உரிமைகள் தொடர்பான ட்ரம்ப்பின் மனோநிலை அமைந்திருக்கிறது.

கொடி எரிப்பு என்ற குறிப்பான பிரச்சினையில், 2006 இல், “அமெரிக்கக் கொடியை அவமரியாதை செய்வதைத் தடைசெய்வதற்கு” நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் வகையில் -அதாவது முதலாம் சட்டத்திருத்தத்துடன் மோதுகின்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரத்தை அதற்கு வழங்கும் வகையில்- அரசியல்சட்டத்தை திருத்துவதற்கு குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட மசோதாவை செனட் ஜனநாயகக் கட்சியினர் 44 பேரில் 14 பேர் ஆதரித்தனர். நிறைவேறுவதற்குத் தேவையான பெரும்பான்மையை ஒரு வாக்கில் தவறவிட்டு இந்த மசோதா தோல்வியடைந்தது.

அப்போது செனட்டராக இருந்த ஹிலாரி கிளிண்டன் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்தார், ஆனால் கொடி எரிப்பானது “தீவிரமான வன்முறையைத் தூண்டவோ அல்லது உருவாக்கவோ அல்லது அமைதியை குலைக்கும் விதமாகவோ” அல்லது “எந்தவொரு மனிதரை அல்லது மனிதர்களை மிரட்டும் அல்லது பயமுறுத்தும் விதமாகவோ” -எது ஒன்றையும் உள்ளே கொண்டுவரக் கூடிய அளவுக்கு விரிவான மொழிப் பிரயோகம்- மேற்கொள்ளப்படுமானால் அதனை குற்றமாக்குவதற்கான ஒரு சட்டமசோதாவை இணைந்து ஆதரித்தார் (இது வாக்கெடுப்புக்கு வரவேயில்லை). அந்த செயலுக்கு அவரும் மற்ற ஜனநாயகக் கட்சியினரும் ஆலோசனையளித்த தண்டனை: ஒரு வருட சிறை. அமெரிக்க அரசாங்கத்தின் கொடியாக இருந்தால், எந்த சூழ்நிலையிலுமான கொடி எரிப்பு இரண்டு வருடம் வரை சிறைத் தண்டனை பெறத்தக்கதாகும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, ”பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது, ஒவ்வொரு முக்கியமான ஜனநாயக உரிமையையும் கொஞ்சம் கொஞ்சமாகவும் திட்டமிட்டும் பலவீனப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும், மறுதலிப்பதற்குமே புஷ் மற்றும் ஒபாமா இருவரின் நிர்வாகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

அரசியல் சட்ட உபதேசம் செய்த ஒபாமா தான், அமெரிக்காவின் ஜனாதிபதி, ஒரு ”பயங்கரவாதி”யாகவும் தேசியப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவும் தான் முடிவுசெய்கின்ற எந்தவொரு அமெரிக்கக் குடிமகனையும் எந்த நடைமுறைகளும் இல்லாமலேயே படுகொலை செய்வதற்கு அதிகாரம் படைத்திருக்கிறார் -அமெரிக்க மண்ணிலும் இது பொருந்தும் என்று அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் அறிவித்த ஒரு அதிகாரம்- என்கிற கோட்பாட்டை ஸ்தாபகம் செய்தார். அவரது நிர்வாகம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி குறைந்தது மூன்று அமெரிக்கக் குடிமக்களையேனும் கொலை செய்திருக்கிறது- உலகெங்கிலும் ஆளில்லா விமானக் குண்டுகளால் சாம்பலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து.

தேசியப் பாதுகாப்பு முகமையின் சட்டவிரோத வேவுபார்ப்பை ஒபாமா பாதுகாத்து வந்திருக்கிறார், அத்துடன் சில வழிகளில் விரிவுபடுத்தியும் வந்திருக்கிறார். அரசாங்கக் குற்றங்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களையும் விழிப்பூட்டிகளையும் அவர் தண்டித்திருக்கிறார்; நாடுகடந்து ரஷ்யாவில் வாழும் நிலையில் இருக்கும் எட்வார்ட் ஸ்னோவ்டென், இலண்டனில் ஈக்வடார் தூதரகத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஜூலியன் அசாஞ்ச், மற்றும் கொடூரமான 35 வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகி கான்சாசில் ஃபோர்ட் லெவன்போர்த்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டு பல முறை தற்கொலைமுயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கக் கூடிய செல்ஸியா மானிங் ஆகியோரும் இதில் அடங்குவர்.

புஷ் நிர்வாகத்தின் சித்திரவதையாளர்களை பொறுப்பாக்குவதற்கோ அல்லது சட்டவிரோத உள்நாட்டு வேவுபார்ப்பை சவால்செய்வதற்கோ நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் தடுப்பதற்கு, ஏறக்குறைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுமே, ஒபாமா நிர்வாக சிறப்புரிமை அல்லது “அரசு ரகசிய” கோட்பாட்டை முன்கொண்டு வந்திருக்கிறார்.

ட்ரம்பின் தலைமையிலான ஒரு அரசாங்கத்துடன், ஒரு புதிய வகையான ஆட்சி அமெரிக்காவில் அதிகாரத்தில் அமரவிருக்கிறது, இதில் போலிஸ் வன்முறையும் ஆட்சியின் எதேச்சாதிகார வழிமுறைகளும் இன்னும் பகிரங்கமாய் மேலாதிக்கம் செலுத்தவிருக்கின்றன. ட்ரம்ப் வெற்றி பெற ஒபாமா வாழ்த்துகின்ற நிலையிலும், வரவிருக்கும் நிர்வாகத்துடன் இணைந்து வேலைசெய்ய ஜனநாயகக் கட்சியினர் வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கிற நிலையிலும், ட்ரம்ப், தன்னைப் போலவே ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அலட்சியம் கொண்ட மனிதர்களைக் கொண்டு தனது கேபினட்டை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

ஆயினும், இந்த அரசாங்கமானது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் சர்க்யூட்-பிரேக்கர்களை வெடிக்கச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க சமூகத்திலான சமூக முரண்பாடுகளில் இருந்தே எழுகிறது, அவற்றையே வெளிப்படுத்துகிறது. இது சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சிக்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பாகும். கொடியை எரிப்பதற்காக மனிதர்களை சிறையில் தள்ளுவதற்கு ஆளும் வர்க்கம் தயாரித்துக் கொண்டிருக்கிறதென்றால், போர், போலிஸ் வன்முறை மற்றும் ஆரோக்கியப் பரமாரிப்பு அழிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அது என்ன செய்யவிருக்கிறது?

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பானது ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவையும் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளையும் நம்பி ஒப்படைக்கப்பட முடியாது. அரசியல் கட்டமைப்புக்கும் அது பாதுகாத்து நிற்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தின் மீதே அது முழுமையாக சார்ந்திருக்கிறது.