ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan SEP and Deeside Workers Action Committee call meeting to defend plantation workers

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் டீசைட் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க பொதுக் கூட்டதிற்கு அழைப்பு விடுக்கின்றது

15 December 2016

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் டீசைட் தொழிலாளர் நடவடிக்கை குழுவும், புதிய கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக டிசம்பர் 18 அன்று ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

தொழிற்சங்கங்கள் அக்டோபரில் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ஊதிய அதிகரிப்புக்கானதாக தூக்கிப் பிடிக்கின்றன. இது ஒரு பொய் ஆகும். ஒரு அற்ப சம்பள உயர்வுக்கு பிரதியுபகாரமாக, தொழிற்சங்கங்கள் வேலைச்சுமையை அதிகரிக்கவும் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் குத்தகை விவசாய முறையை திணிக்க வழி வகுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. அரசாங்கம் இந்த தாக்குதல்களுக்கு முழுமையாக ஆதரவு கொடுக்கின்றது.

இந்த உடன்படிக்கையின் நோக்கம், உலகப் பொருளாதார மந்த நிலையினால் உருவாக்கப்பட்ட தோட்ட தொழிற்துறையிலான நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்களின் முதுகின் மீது சுமத்துவதே ஆகும். பெருந்தோட்ட நிறுவனங்களும் அரசாங்கமும் மற்ற தேயிலை உற்பத்தி நாடுகளுடன் ஒரு பெரும் கழுத்தறுப்பு போட்டியில் ஈடுபட்டுள்ளன. அங்குள்ள தொழிலாளர்களும் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு தொழில்துறை பொலிஸ்காரனாகவே தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் கெளரவமான ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளுக்காக போராட தமது சொந்த நடவடிக்கை குழுக்களை, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக கட்டியெழுப்புமாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களும் அவர்களின் நடவடிக்கை குழுக்களும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொழும்பின் சிக்கன திட்டத்தின் கீழ் ஒரே மாதிரியான தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் பக்கம் திரும்ப வேண்டும்.

இது பெரிய தோட்டங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள் மற்றும் பெருவணிகங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும் சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த முக்கியமான பிரச்சினைகள் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் கூட்டத்தின் மையமாக இருக்கும். நாம் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த அத்தியாவசியமான கலந்துரையாடலிலும் பங்கேற்குமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

கூட்ட விவரங்கள்:

டிசம்பர் 18, ஞாயிறு, 2 மணி

இந்து கலாச்சார மண்டபம், சாமிமலை