ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French judiciary opens investigation into ex-president Nicolas Sarkozy

பிரெஞ்சு நீதித்துறை முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மீது விசாரணையை தொடங்கியது

By Stéphane Hugues and Alex Lantier
23 February 2016

கடந்தவாரம், முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அவரது 2012 ஜனாதிபதி தேர்தல் போட்டியில் அளவுக்குமீறி செலவிட்டது தொடர்பான விசாரணைக்கு வருகைதருமாறு அழைப்பாணை விடப்பட்டார். அத்தேர்தலில் அவர் தற்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டிடம் தோற்றார். ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேர்தல் செலவு வரம்பு 22.5 மில்லியன் யூரோவாக இருந்தது. ஆனால் சார்க்கோசி சராசரியாக 50 மில்லியனுக்கு மேல் செலவழித்ததாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு தலைமை வகிக்கும் நீதிபதி சேர்ஜ் துர்னேர் (Serge Tournaire) கிட்டத்தட்ட 12 மணிநேரம் சார்க்கோசியை கேள்விகள் கேட்டார். அன்று இரவு தாமதமாக சார்க்கோசி அங்கிருந்து வெளியேறும் முன், “தேர்தல் பிரச்சாரத்திற்கு முறைகேடாக நிதியீட்டியதற்காக” அவர் “விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக” துர்னேர் அவரிடம் கூறினார். மேலும், துர்னேர் இதனோடு நெருக்கமாக தொடர்புடைய பொய்மைப்படுத்தல், ஏமாற்று, பணமோசடி மற்றும் நம்பிக்கைத்துரோகம் ஆகிய குற்றங்கள் கொண்ட “பிக்மாலியோன்” வழக்கில் “துணைபுரிந்த சாட்சியாளர்” (அதாவது சட்டம் குழப்புவதில் மற்றும் அவரது வழக்கறிஞரால் உதவப்பட்டதில்) என அவருக்கு தெரிவித்தார்.

இந்த இரண்டாவது வழக்கில், சார்க்கோசியின் பிரச்சாரம் அதன் நிதிநிலை வரம்புகளுக்கு நெருக்கமாகும் வகையில் மோசடி விலைவிவரப் பட்டியல்கள் அமைக்கப்பட்ட ஒரு அறிக்கை நேரடிசான்றாக எழுந்தது. சார்க்கோசியின் பிரச்சார நிகழ்வுகளை மேற்பார்வை செய்த ஒரு நிறுவனமான பிக்மாலியோன், சார்க்கோசி பிரச்சார கணக்கில் இருந்து வரும் செலவுகளை UMP இடமிருந்து நேரடியாக வசூலிக்காது மறைப்பதற்கு – அவரது கட்சியுடன் – அப்போது Union for a Popular Movement (UMP) என்று அழைக்கப்பட்ட மற்றும் The Republicans (LR) என்று பெயர் மாற்றப்பட்டதிற்குப் பின்னர் இருந்தும் – உடன்பட்டது.

பிரச்சார கணக்குகள் மீதாக துர்னேருக்கு சார்க்கோசியின் பதிலை, L’Express மேற்கோள் காட்டியது: “எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை மற்றும் எனக்கு எதுவும் தெரியாது…. பிரச்சார கணக்குகளில் நான் கையெழுத்திட்டது எனது நிர்வாகப் பொறுப்பைக் குறிக்கிறது, எனது குற்றப்பொறுப்பை அல்ல. எனது பிரச்சார கணக்குகளில் கையெழுத்திடுவதை எந்தவகையிலும் நான் தவிர்க்கவில்லை, ஆனால் அதன் அர்த்தம் மொத்தத்தில் எனது கையெழுத்து UMPக்கும் நிகழ்வுக்கும் (பிக்மாலியோன் நிகழ்ச்சி முகவருக்கும்) இடையிலான மோசடி உடன்பாடுகளை அல்லது எனது பிரச்சார கணக்குகளில் விலைவிவரப்பட்டியல்கள் இல்லாமையை அங்கீகரிப்பதாக பொருள்படாது.

பிக்மாலியோன் விவகாரங்கள் மூலம், பிரான்சின் புகழ்பெற்ற அரசியல்மயமாக்கப்பட்ட நீதித்துறையானது சார்க்கோசி வேட்புத்தன்மை மீது செல்வாக்கு செலுத்த முடியும் என்ற நிலையானது, மிகவும் பரபரப்பு நிறைந்த 2017 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தலையிடுவதற்கு ஆளும் வர்க்கத்திற்கு இன்னொரு  நெம்புகோலை வழங்குகிறது.

பிக்மாலியோன் விவகாரத்தில் இதுவரைக்கும் சார்க்கோசி சம்பிரதாயமாக குற்றம் சாட்டப்படவில்லை என்பதால், சார்க்கோசியின் வழக்கறிஞர் Thierry Herzog இந்த தீர்ப்பை சார்க்கோசியின் வெற்றியாக வண்ணம்பூச முயன்றார். அவர் கூறினார்: “விசாரணையின் கீழ் இருப்பதானது ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக ஆவதை தடுக்காது.” எவ்வாறாயினும், தற்போதைய அரசியல் நிலைமையில் குறைந்தபட்சம், இந்த விசாரணையானது அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் முறையாக பதவிக்கு வருவதற்கு விரும்பும் சார்க்கோசிக்கு இன்னொரு முக்கிய தடையாக எழுந்து கொண்டிருக்கிறது.

கடந்த சிலவாரங்களாக, சார்க்கோசியின் நெருங்கிய ஒத்துழைப்பாளர்கள் அவரிடமிருந்து சற்று விலகி இருப்பதை பராமரித்து வருகிறார்கள். அண்மையில் விட்டோடியவர், Tourcoing மேயரும் கடந்த ஆண்டு கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான அவரது பிரச்சாரத்தில் சார்க்கோசியின் பேச்சாளராக இருந்தவருமான Gérald Darmanin ஆவார். “நான் 2007 முதல் 2012 வரையிலான சார்க்கோசிக்கு முன்னுரிமை கொடுத்தேன்” என்று குறிப்பிட்டு, தேசிய முன்னணி (FN) வாக்காளர்களுக்கு சார்க்கோசி வேண்டுகோள் விடுத்ததை சம்பிரதாயமாக குறிப்பிட்டு, Darmanin கட்சியின் தேசிய தலைமையிலிருந்து இராஜினாமா செய்தார்.

இப்போதுதான் இராஜினாமா செய்த ஏனைய இரு முக்கிய சார்க்கோசி ஒத்துழைப்பாளர்கள்: தேர்தல் இயக்குநர் Ange Sitbon மற்றும் கட்சி கூட்டமைப்புக்களின் இயக்குநர் José do Nascimento. இவர்கள் இருவரும் LR இன் மேல்மட்ட உறுப்பினராக சேர்ந்தனர்.

சார்க்கோசி வேட்புத்தன்மையில் உக்கிரமடைந்துவரும் நெருக்கடி பாரிசில் நடந்த நவம்பர் 13 தாக்குதல்களுக்கு பின்னர், பிரான்சில் முதலாளித்துவ கட்சிகளில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றங்களை எதிரொலிக்கிறது. ஹோலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அதிவலதுக்கு பலவந்தமான நகர்வுக்கு —அவசரகால நிலையை திணித்தல், பாசிச விச்சி ஆட்சியுடன் தொடர்புடைய இரட்டை குடியுரிமை கொள்கையை பறிப்பதை புணருத்தாரனம் செய்தல் மற்றும் பிரெஞ்சு தொழிலாளர் சட்டம் மீதாக வரலாற்றில் இல்லாத தாக்குதலுக்காக அழுத்தம் கொடுத்தல்— தலைமை தாங்கியது. LR ஆனது PS வலது புறத்தில் தன்னைக் கடந்து செல்லாதவாறு தடுக்க ஆற்றொணாது முயன்றது, ஆயினும் அதேவேளை நவபாசிச FN இலிருந்து வேறுபடாது இருந்தது.

டிசம்பர் பிராந்திய தேர்தல்களில் FN அதன் பலத்தை காட்டியதிலிருந்து அதிகரித்துவரும் பலமானது UMP எதிர்கொண்டு வரும் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. LR தட்டினரில் இருந்து சார்க்கோசிக்கு எழும் தந்திரோபாய எதிர்ப்பானது, ஜனரஞ்சக மற்றும் இனவெறுப்பு உணர்வுக்கு சார்க்கோசி விடுக்கும் வேண்டுதல் FN ஐ பலப்படுத்தி பிரான்சின் பிரதான வலதுசாரிக் கட்சியான LR ஐ இடம்பெயர்த்துவிடும் என்று அஞ்சும் தட்டினரிடம் இருந்து எழுகின்றது.

சார்க்கோசி FN க்கு வேண்டுதல் விடுப்பதிலேயே தொடர்ந்து தொடர்புடையவராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் முடிகையில், முகத்திரையை (burqa) தடைசெய்ததன் மூலம், ரோமாக்களை திருப்பி அனுப்பியதன் மூலம் மற்றும் பிரெஞ்சு “தேசிய அடையாளம்” மீதான ஒரு விவாதத்திற்கு வேண்டுதல் விடுத்ததன் மூலம், நவபாசிச வாக்களார்களிடமிருந்து ஆதரவைப் பெற முயற்சித்தார் மற்றும்  இனவெறி உணர்வுகளை வளர்த்தெடுத்ததன் மூலம் தொழிலாள வர்க்கத்திற்குள் எதிர்ப்புக்கள் எழுவதைத் தடுக்க முயன்றார். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் இருந்து பிரான்சின் மிக அவப்பெயர் பெற்ற ஜனாதிபதி என்றவாறு, அவரது பதவிக்காலத்தை முடித்தார், அதன் பின்னர் சார்க்கோசியை விடவும் ஹோலண்ட் மிகவும் அவப்பெயர் பெற்றவராக உள்ளார்.

சார்க்கோசி 2012 ஜனாதிபதி தேர்தல்களில் தோல்வியுற்ற பொழுது, அவர் “அரசியலை விட்டு விலகுவதாக” அறிவித்தார். ஆயினும், 2014-ன் கடைசி மாதங்களில் “திரும்ப வருவதாக” அவர் அறிவித்தார். அவரது பிரதான ஆதரவு UMP இன் கீழணி மட்டங்களில் இருந்தது. 2014-ன் முந்தைய தேர்தலில் சார்க்கோசி பெற்ற 85 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்துவிட்ட 64 சதவீத வாக்குகள் இருந்தபோதும், 2015 ஜனவரி அளவில், அவரால் கட்சி தலைமைக்கு வெற்றிபெற முடிந்திருந்தது.

சார்க்கோசியை குறுக்கே வெட்டிச்செல்ல முயன்ற LR இன் இரண்டாவது நபரான Nathalie Kosciusko-Morizet, பிராந்திய தேர்தல்களில் FN வேட்பாளர்களுக்கு எதிராக PS க்கு வாக்களிக்க சார்க்கோசி அழைப்புவிடாததற்காக அவரை விமர்சித்த பின்னர், கடந்த டிசம்பரில் LR துணைத்தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

அவ்வம்மையார் சார்க்கோசியின் ஆலோசகர் Patrick Buisson-ஐ முன்னர் தாக்கி இருந்தார். அவர், “எனது கருத்தில் அவரது இலக்கு என்பது நிக்கோலா சார்க்கோசிக்கு வெற்றியை தேடித் தருவது அல்ல, மாறாக 20ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் இருந்த பாசிச Action Française இன் தலைவர் Charles Maurras க்கு வெற்றி தேடித் தருவதாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

கடந்த மாதங்களில் LR க்குள் சார்க்கோசி தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. அண்மைய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில், ஒரு கேள்வி கேட்கப்பட்டது, “சார்க்கோசியை அவரது கட்சியான LR இன் சொத்தாக கருதுகிறீர்களா அல்லது அதற்கான ஒரு பாதிப்பு என்று கருதுகிறீர்களா? பொது மக்களில் 77 சதவீதத்தினர் அவரை பாதிப்பாக கருதுகின்றனர், வலதுசாரி வாக்காளர்கள் மத்தியில் கூட 60 சதவீதத்தினர் அவரை LR க்கான பாதிப்பு என்றுதான் கருதுகின்றனர்.

இந்த நிலைமைகளின் கீழ், LR க்குள் முன்னாள் பிரதமர் அலென் யூப்பே, சார்க்கோசிக்கு போட்டியாளராக எழுந்து வருகிறார். யூப்பே PS இன் குடியுரிமை பறிப்புக்கொள்கையை விமர்சிக்கும் விமர்சகராக காட்டிக்கொள்வதன் மூலம் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஒரு “வலிமையான அரசு” தேவை என்பதற்கான பிற்போக்கு அழைப்புக்களையும் விடுத்துக் கொண்டிருக்கிறார்.

2017 பிப்ரவரி ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாவது சுற்றில் நுழையக்கூடிய வேட்பாளர்களுள் ஒருவராக FN இன் மரின் லு பென் எதிர்பார்க்கப்படுகிறார். Harris Interactive polls இன் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் சோதித்துப்பார்க்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும், லூ பென் முதலாவது சுற்றில் 27 சதவீதம் பெறுவார், அதேவேளை  சார்க்கோசி மற்றும் ஹோலண்ட் இருவரும் 21 சதவீதத்தை ஈட்டுவர். ஆயினும், வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி அலென் யூப்பே எல்ஆர் வேட்பாளராக நிக்கோலா சார்க்கோசியை பதிலீடு செய்வாரேயானால், பெறக்கூடிய வாக்குகள் யூப்பேக்கு 29 சதவீதம், லூ பென்னுக்கு 27 சதவீதமும்  ஹோலண்டுக்கு 22 சதவீதமும் இருக்கும்.

தற்போது, இரண்டாவது சுற்றில் மரின் லு பென் எல்லா அனுமானங்களையும் இழப்பார்: அவ்வம்மையாருக்கு எதிராக யூப்பே 71 சதவீதமும், சார்க்கோசி 62 சதவீதமும் ஹோலண்ட் 60 சதவீமும் பெறுவர்.

வரவிருக்கும் LR ஜனாதிபதி முதல்நிலைத் தேர்தல்களில் யூப்பே தனிப்பெரும் முன்னிலை எடுக்க, வய்ப்புவளம் பெற்ற எல்ஆர்  முதல்நிலை வாக்காளர்கள் மத்தியில் 56 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை யூப்பேக்கு வாக்களிக்கப் போவதாக கூறுகின்றனர், அதேவேளை 30 சதவீதம் பேர் சார்க்கோசிக்கு வாக்களிக்கப் போவதாக கூறுகின்றனர். Democratic Movement இன் பிரான்சுவா பாய்ரூ அவரது கட்சி யூப்பேக்கு வக்களிக்கும் என்று சுட்டிக்காட்டுவதுடன், LR மற்றும் மைய வலதில் வளர்ந்துவரும் ஆதரவு யூப்பேக்கு இருக்கிறது.

சார்க்கோசி விசாரணைகளில் வெளிவர இருப்பதை தீர்மானிக்கப் போவது UMP/LR இவற்றின் நிதி முறைகேடுகள் அல்ல, ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் பரிணாமத்துடன் பிணைந்துள்ள அந்தக் கருதிப்பார்த்தல்கள்தான்.