ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Musician-singer M.I.A dropped from Afropunk festival for criticizing Black Lives Matter

இசை அமைப்பாளர்-பாடகர் M.I.A., Black Lives Matter அமைப்பை விமர்சித்ததால் Afropunk  விழாவிலிருந்து நீக்கிவிடப்பட்டார்

By David Walsh and Zac Corrigan
18 July 2016

Afropunk இசைவிழா ஒழுங்கமைப்பாளர்கள் செப்டம்பர் 24 அன்று லண்டன் அலெக்ஸாண்ட்ரா மண்டபத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதிலிருந்து பிரிட்டிஷ்-சிறிலங்கா ஹிப் ஹாப் கலைஞர் M.I.A. நீக்கிவிடப்படுவதாக வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தனர்.

உலகம் முழுவதிலும் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரது தலைவிதி தொடர்பாக அமெரிக்காவிலுள்ள Black Lives Matter அமைப்பின் குறுகியபார்வை மற்றும் அலட்சியப்படுத்துதலுக்காக அதனை M.I.A. விமர்சித்தபொழுது இனவாத சக்திகளின் கண்டனத்திற்கு ஆளான பின்னர் விழா ஏற்பாட்டாளர்கள் இம்முடிவை எடுத்தனர்.


M.I.A. (Photo credit: Interscope Records)

ஏப்ரலில், M.I.A. (1975 இல் பிறந்த மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம்) London Evening Standard பத்திரிகைக்கு கூறியதாவது: “அமெரிக்காவில் நீங்கள் Black Lives Matter பற்றி பேசுவதை அனுமதிப்பது பிரச்சினையாகவுள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது. பியோன்ஸே (Beyoncé) அல்லது கென்ட்ரிக் லாமர் (Kendrick Lamar - முன்வரிசை ராப் பாடகர்) முஸ்லிம் வாழ்க்கை விஷயங்கள் பற்றி ஏதும் கூறப்போகிறார்களா? அல்லது சிரிய வாழ்க்கை விஷயங்கள் பற்றி? அல்லது பாக்கிஸ்தான் விஷயங்களின்  இவ்வாறான நிலை பற்றி ஏதும் கூறப்போகிறார்களா? அதுதான் மிகவும் ஆர்வமூட்டும் கேள்வி. நீங்கள் ஆப்பிளில் உள்ள ஒரு பாட்டாக அதனைக் கேட்க முடியாது, ஒரு அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதைக்கேட்க முடியாது, டுவிட்டரில் அந்த தகவல் பின்னொட்டை (tag) உருவாக்க முடியாது, மிஷேல் ஒபாமா உங்களை தோளில் தூக்கிக்கொள்ளப்போவதில்லை”.

இந்த விமர்சனம் ஐக்கிய இராஜ்ஜியத்தில் பிற்போக்கு சக்திகளை நடவடிக்கை எடுக்குமாறு தூண்டிவிட்டது. ஜூன் 15 அன்று “எம்.ஐ.ஏ லண்டனில் Afropunk இல் பங்கேற்கக் கூடாது” என்று ஒரு ஆசிரிய தலையங்கம் வெளியிடப்பட்டது. பிரிட்டிஷ் வாழ்க்கை முறை இதழ் Black Ballad இன் டோபி ஒரேடெய்ன் (Tobi Oredein), அவரது அதீத இனவாத கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்: “நான் அது என்னவிதமான விழாவாக இருக்க வேண்டும் என கற்பனைசெய்து வைத்திருந்தேன், அங்கு வடிகட்டப்படாத கறுப்புத்தன்மையின்…… அனைத்து கறுப்பின கொண்டாடல்……. எப்பொழுது Afropunk லண்டன் வரும் என்று அந்த நாளை எண்ணி கனவு கொண்டிருந்தேன்….., எனவே நான் கறுப்பின பெண்கள் மத்தியில் நிற்பேன், நாம் திறந்தவெளியில் நமக்குள் கொண்டாடிக்கொள்வதைப் போல விழாவின் பிரிட்டிஷ் கத்தல் இரைச்சல்களைக் கேட்பேன்.” (இவ்விழாவானது ஆண்டுதோறும் நியூயோக், புரூக்ளினில் 2005லிருந்து நடைபெற்று வருகின்றது).

கோடீஸ்வர அமெரிக்க அரங்கேற்றக்காரர்கள் மற்றும் அவர்களது சுய-பிரபல்யப்படுத்தல் பற்றிய M.I.A. வின் விமர்சனமானது வெளிப்படையாகவே ஒரேடெய்ன் இனது தற்புகழ்ச்சியின் கற்பனை நடப்புகளை தொல்லைக்காளாக்கியது. அவர் தமிழ்ப் பாடகியை சாடினார், ஏனெனில் அவர் “கருப்பித்தவர்களின் போராட்டத்தை விமர்சிப்பதற்கு துணிவை” கொண்டிருந்தார். அவர், M.I.A. “(அதேபொருளில்) இனரீதியாக கறுப்பின பெண் அல்ல அல்லது கறுப்பு மூலத்தைக் கொண்ட பெண்ணும் அல்ல” என்று புகார் செய்தார். இருப்பினும் அவர் “விழா இலக்கு வைத்திருக்கும் பார்வையாளர்களின் வாழ்வைக் காப்பாற்ற முயலும் ஒரு இயக்கத்தின் (அதாவது Black Lives Matter) மீதான வன்மம் மற்றும் வெறுப்பிலிருந்து பேசுகிறார். அவர் தொடர்ந்தார், “Afropunk உண்மையில் எமக்கானதாக இருந்தால், மேடையில் எங்களைப் போன்ற ஆட்களை நிறுத்துங்கள்” என்றார்.

இது ஒரு அருவருக்கத்தக்க விஷயம், வெள்ளை மேலாதிக்க சாக்கடையில் காணப்படும் அழுக்கிலிருந்து இது பெரிதும் மாறுபட்டதல்ல.

பல்வேறு தனிநபர்கள் டுவிட்டரில் தாம் Afropunk விழாவைப் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக பதிவு செய்துள்ளனர். ஆரம்பத்தில், விழா ஏற்பாட்டாளர்கள் M.I.A. இன்னும் முதன்மை முன்வரிசை பாடகராக இருப்பதாக கூறிக்கொண்டனர். திரைமறைவில் அவர்களின் சரணாகதியை வெளிப்படையாகவே சிறந்த முறையில் ஒழுங்கு செய்யக்கூடிய மற்றும் முன்வைக்க வேலைசெய்தனர்.

தனது பங்கிற்கு, M.I.A. அதிலிருந்து வெறியேறுவதற்கான அவரது முடிவை அந்நேரம் அறிவித்தார். ஜூன் 19 மற்றும் 20 அன்று அவர் டுவிட்டரில் ஒரேடெய்னுக்கு பதில் அளித்தார்: “அமெரிக்கவால் உருவாக்கப்படும் போர் தொடர்கையில் பலர் அவர்களால் இன்னும் கொல்லப்படுகையில், பயங்கரவாதத்திற்காக குற்றம்சுமத்தாது என்னை இனவாதம் என்று குற்றம் சுமத்துவது சிறந்தது அல்ல…….” எனது வார்த்தைகள் திரிக்கப்படுவது இது முதல்தடவை அல்ல – நீங்கள் டிரோன் குண்டுவீச்சு விமானங்களைப் பார்க்கையில் அதில் பறப்பவர் எந்த நிறத்தவர்? என்று நாம் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் அமெரிக்காவை பார்க்கிறோம், இறுதியில், “மன்னிக்கவும் Afropunk இல் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது பாதையில் நிற்குமாறு நான் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். ஹா, 65 மில்லியன் அகதிகளுக்கு பாதை இல்லை, அவர்களின் பாதைகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன.”

அவர்களது ஜூலை 15 அறிக்கையில், விழா ஏற்பாட்டாளர்கள் போலிப் பாசாங்குடன் தங்களது மெக்கார்திய பாணியிலமைந்த தணிக்கையினை, கணிசமான துணிவு மற்றும் தார்மீக நடுநிலை பிறழாமையாகக்கூட முன்வைத்தனர். (பாலினவாதம், இனவாதம், “இயலுமைவாதம்”, வயதானவாதம், ஓரினச்சேர்க்கையாளர் பற்றி வெறுப்பு, “உடம்புபெருத்தல் பற்றிய வெறுப்பு”, பாலினமாறுதலுக்கான வெறுப்பு மற்றும் பொதுவில் “வெறுப்பு” இவற்றுக்கு எதிராக நிற்பதாக தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளும் விழா இது.)

அறிக்கை பின்வருமாறு பிரகடனம் செய்தது: “AFROPUNK அடிப்படைப் பண்பின் முக்கிய பகுதி எப்போதும் ஒருவருக்கொருவர் கல்வியூட்டலாக இருந்து வருகிறது, எல்லைகளை உடைப்பதாக, இனம், பாலினம், மதம், பால், கலாச்சாரம் பற்றிய உரையாடலை தூண்டிவிட்டு வாழ்க்கையை வாழ்வதற்கு மதிப்புள்ளதாக ஆக்குவதாய் இருந்துவருகிறது. இந்தப் பரிவர்த்தனை, அறிவுடைமை ஆதல் என அர்த்தப்படுகின்றது. அதேபோல இயன்றவகையில் நமது இரசிகர், படைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களின் ஒட்டுமொத்த சமூகத்தின் பங்கேற்புடன், மிகவும்  மரியாதைக்குரிய வழியில் அதில் பங்களிப்பு செய்தல் ஆகும். இந்த சமுதாயம்தான், நாம் நம்பமுடியாத வகையில் ஏதோஒன்றாக பெருமைப்படுவது மற்றும் இந்த சமுதாயம்தான், நமக்கு எப்போதும் முதன்மைக்குரியதாக இருக்கும்.

“எமது முதலாவது AFROPUNK விழாவை லண்டனில் செய்வதற்கு மற்றும் அதனை சரியாக நடத்துவதற்கு நாம் ஆர்வமும் பெருமையும் கொண்டுள்ளோம். கலைஞர் மற்றும் சமூகத்துடன் நிலைமையை விவாதித்த பின்னர், அதில் சம்பந்தப்பட்ட அனைவராலும் உடன்பட்டு எடுக்கப்பட்ட ஒருமுடிவு என்னவெனில், AFROPUNK லண்டன் முதன்மை முன்வரிசையில் M.I.A இனி இருக்கமாட்டார்.”

மறைமுகமாக, இந்த இரட்டைப்பேச்சில் ஊடுவிக் காணப்படுவது, M.I.A இன்  தாக்குதல் அவரது அறிவுடைமையை இயன்றவரை மிகவும் மரியாதைக்குரிய வகையில் “பகிர்ந்துகொள்ளுதல்” பற்றிய பிரச்சினை அல்ல. வேறுவிதமாக கூறினால், அவர் உண்மைகளைப் பேசினார், அவை வலதுசாரி இனவாத சக்திகள் உள்பட “ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்” ஏற்புடையதாக இல்லை.

மாதங்கி அருள்பிரகாசம் இயக்கத்தின் (M.I.A) லண்டனில் 1975ல் இலங்கை தமிழ்ப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். அவர் இளம்பிராயத்தில் இருந்தபொழுதே, அவரது பெற்றோர் இலங்கைக்கு திரும்பிச்சென்றனர். அவரது தந்தை அருள்பிரகாசம் தமிழ் செயற்பாட்டாளரும், ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பின் (ஈரோஸ்) இணைநிறுவனருமாவார். அவ்வமைப்பினது ஆரம்பகால அங்கத்தவர்களில் பெரும்பாலானோர் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்தனர். M.I.A இன் குழுத்தைப்பருவம் வட இலங்கையில் யாழ்ப்பாணத்தில் அரச ஒடுக்குமுறைக்கு மத்தியில் கழிந்தது. அவரது குடும்பம் இராணுவத்தின் கண்ணில் படாது மறைந்து இருந்தது. இறுதியில், அவரது தாய் தனது குழந்தையுடன் இந்தியா சென்றார், பின்னர் 1986ல் அவர் லண்டன் திரும்பினார்.

M.I.A குறுங்குழுவாத இனவாத யுத்தத்தின் விளைவுகள் பற்றி சிலவற்றை அறிவார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து பதவிக்குவந்த கொழும்பு அரசாங்கங்களின் 26 ஆண்டுகால யுத்தத்தில் நூறாயிரக்கணக்கானோர் இறந்தனர். டுவிட்டரில், இலங்கை பயங்கரவாத ஆட்சியால் 1,47,000 தமிழ் குடிமக்கள் கொல்லப்பட்டதை அவர் கண்டித்துள்ளார்.

அவர் விக்கிலீக்ஸ்கின் ஜூலியன் அசாஞ்சையும், இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்நோவ்டெனையும் பாதுகாத்திருக்கிறார். மற்றும் 9/11க்குப் பின்னர் 1.3 இலிருந்து 2 மில்லியன் மக்கள் வரை இறக்க நேரிட்ட, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்காவின் யுத்தங்களுக்காக அதனைக் குற்றம் சாட்டினார்.

நவம்பர் 2013ல் நியூயோர்க் நகரில் நடைபெற்ற M.I.A இன் இசைநிகழ்ச்சி, இணைய வீடியோ மாநாட்டு வழியாக, அசாஞ்சிடமிருந்து நேருரை ஆற்றப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. அவையினருக்கு ஆற்றிய பத்து நிமிட உரையில் அசாஞ், ஸ்னோவ்டெனை ஆதரித்ததுடன் NSA உளவுபார்ப்பது பற்றியும் எச்சரித்தார், மற்றும் பாடகியின் இரசிகர்களை உலகை சிறந்தவிதமாக மாற்றுவதற்கான முயற்சியில் அரசியல் விழிப்புடனும் செயலூக்கத்துடனும் இருக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

பியோன்ஸேயையும், கென்ட்டிரிக் லாமரையும் விமர்சிக்க M.I.A க்கு எல்லா உரிமையும் உண்டு. முன்னாள் பாடகரும் அவரது கணவருமான ராப் பாடகர் Jay-Z ஆகிய இரு மில்லியனர்களும் பலமுறை ஒபாமா குடும்பத்தினர் மற்றும் முன்னணி  ஜனநாயக கட்சி நபர்களை சுற்றி அமைந்த சலுகைமிக்க வட்டாரங்களில் பயணம் செய்துள்ளனர். பெயோன்ஸே பாராக் ஒபாமாவின் 2013 தொடக்க விழா நடன நிகழ்ச்சி மற்றும் மிஷேல் ஒபாமாவின் ஐம்பதாவது பிறந்ததின நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கெடுத்திருந்தார்.

கென்ட்டிரிக் லாமாரின் பிரசித்தி பெற்ற பாடல் “Alright”, இது Black Lives Matter இன் ஊர்வலங்களில் அதிகாரபூர்வமற்ற கீதமாக ஆகியிருக்கிறது. 2015 BET (கறுப்பு பொழுதுபோக்கு தொலைக்காட்சி) பரிசளிப்பு விழாவில், அவர் பெரிய அமெரிக்க கொடியின் முன்னால், ஒரு போலீஸ் வண்டியின் மேலே அமர்ந்து பாடும் காட்சியில் தோன்றினார். ஒபாமா, அவரது “விருப்பத்திற்குரிய ராப் பாடகர்” லாமரை, ஓவல் அலுலகத்தில் சந்தித்தார், மற்றும் அவரை வெள்ளை மாளிகையின் “My Brother’s Keeper” எனும் சேவை நடவடிக்கை முன்னெடுப்பின் முகமாக இருக்குமாறு சேர்த்துக் கொண்டார்.

M.I.A இன் 2015 இல் வெளிவந்த “Borders” பாடல் போரினால் சீரழிக்கப்பட்ட அல்லது பொருளாதாரரீதியில் அழிக்கப்பட்ட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களில் இருந்து வெளியேற முயற்சிப்போருடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அது சுருள் கம்பி வேலியின் பின்னால் சிக்கிக்கொண்ட மற்றும் அதனைத்தாண்ட முயற்சிக்கும் இளைஞர்களின் காட்சியை மற்றும் அகதிகளால் நிரம்பி வழியும் படகுகளின் காட்சிகளையும் காட்டுகிறது. ஜூன் 19 அன்று, அவர் டுவிட்டரில் பின்வருமாறு எழுதினார், “உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக நான் நிற்கும்பொழுது – ஒருவர் இன்னொருவரை விட மிகவும் முக்கியமானவர் என்று சொல்வது முடியாது, நிச்சயமாக சமத்துவம்தான் பிரதானமானது.”