ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Green Party platform: Reformist politics in the service of imperialism

பசுமைக் கட்சியின் கொள்கைப் பிரகடனம்: ஏகாதிபத்தியத்திற்கான சேவையில் சீர்திருத்தவாத அரசியல்

By Tom Hall
4 August 2016

அமெரிக்காவில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் தெரிவு மாநாடு டெக்சாஸின் ஹூஸ்டனில் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக ஜில் ஸ்ரைனை உத்தியோகபூர்வமாக தேர்வுசெய்வதே அதன் பிரதான பணியாகும். 2014 இல் ஏற்கப்பட்டிருந்த கட்சியின் தற்போதைய கொள்கைப் பிரகடனத்தில் சிறு திருத்தங்கள் செய்வது குறித்தும் இந்த மாநாடு விவாதிக்கும்.

ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில் வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸை ஆதரித்துப் பரப்புரை செய்த சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு மற்றும் சோசலிச மாற்று போன்ற நடுத்தர-வர்க்க போலி-இடது அமைப்புகள் பலவும் ஸ்ரைன் மற்றும் பசுமைக் கட்சியைச் சுற்றி இப்போது ஒருங்கிணைகின்றன. தற்போதைய நிலைமையின் ஒரு வலது-சாரி அடையாளமாகவும், அத்துடன் வோல்ஸ் ஸ்ட்ரீட் உடனான ஊழலடைந்த உறவுகளுக்காகவும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மூர்க்கத்தனமான போர்கள் மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர்க்கூச்சல் ஆகியவற்றை ஆதரிப்பதற்காகவும், வெறுக்கப்படுகின்ற ஹிலாரி கிளிண்டனை சாண்டர்ஸ் சரணாகதி அடைந்து ஏற்றுக் கொண்டதன் பின்னர், இந்த அமைப்புகள் இப்போது, ஒரு முதலாளித்துவக் கட்சியான பசுமைக் கட்சியை, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கான ஒரு உண்மையான “இடது” மாற்றாக புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன.

இவ்வகையில், தீவிரமயப்பட்டுக் கொண்டிருக்கின்ற மற்றும் இராணுவவாதம், கொடுமை, மற்றும் முதலாளித்துவத்தின் சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்ப்பதற்கான ஒரு வழியை எதிர்நோக்கியிருக்கின்ற தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவை இன்னுமொரு பொறியை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஸ்ரைன் மற்றும் பசுமைக் கட்சியை ஊக்குவிப்பதென்பது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கம் எழுவதை முன்கூட்டியே தடுக்கும் இலக்குடையதாகும். முதலாளித்துவ அரசியலில் இருந்து தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் உடைவை மேற்கொள்வதற்கு எதிரான அடுத்த கட்ட பாதுகாப்பாக பசுமைக் கட்சி இருக்கிறது.

பசுமைக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் அறிமுகப் பகுதிகளைக் கையாளுகின்ற முந்தைய ஒரு கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதைப் போல, இந்தக் கட்சி வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கின்ற ஒரு முதலாளித்துவ-ஆதரவு குழுவாக்கம் என்பதோடு இது உயர் நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளின் சமூக நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒரு குறுகிய தேசியவாதக் கண்ணோட்டத்தில் மூழ்கி நிற்கின்ற அது, நடப்பு முதலாளித்துவக் கட்சிகள் மீது, குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் மீது, வெளியிலிருந்து அழுத்தமளிக்கிறதான ஒரு குழுவாக சேவை செய்வதற்கு மேலாக வேறொரு இலக்கையும் கொண்டிருக்கவில்லை.

இந்த கொள்கைப் பிரகடனத்தின் குறிப்பிட்ட கூறுகள் வார இறுதியில் மாற்றப்பட இருக்கின்ற அதேநேரத்தில், இந்த ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை நோக்குநிலையானது மாற்றமில்லாமலேயே இருக்கப் போகிறது. எப்படி இருந்தாலும், வேட்பாளர் தெரிவு மாநாட்டில் வாக்களிக்கப்பட இருக்கும் திருத்தங்கள் எந்த கோட்பாட்டுரீதியான நோக்கத்தையும்  அடிப்படையாகக் கொண்டவையல்ல. முன்னாள் சாண்டர்ஸ் ஆதரவாளர்களை கவர்ந்துகொள்வதற்கேற்ப ஒரு மேம்பட்ட நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வார்த்தை மேம்படுத்தல்களாகவே இவை பெரும்பாலும் இருக்கின்றன.

பசுமைக் கட்சியினரது கொள்கைப் பிரகடனம் மீதான ஒரு மேலதிக ஆய்வு முந்தைய WSWS கட்டுரையில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வையே ஊர்ஜிதம் செய்வதாக இருக்கிறது. ”ஜனநாயகம்” என்ற தலைப்பில் இக்கொள்கைப் பிரகடனத்தின் முதலாவது பிரதான பகுதியாக இருப்பது, சீர்திருத்தவாதத்திற்கான ஊக்குவிப்பை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான ஆதரவுடன் ஒன்றுகலக்கிறது. இதில் இரண்டாவதாய் குறிப்பிடப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு என்பது கட்சி முன்மொழியும் அமைதிவாதத்தின் தகுதிகளின் வடிவத்தில் மேலேழுகிறது.

சீர்திருத்தவாதமும் வர்க்கப் போராட்டத்தின் நிராகரிப்பும்

“நவீனகால ஜனநாயகத்தின் மாபெரும் முதல் பரிசோதனையாக நமது தேசம் பிறந்தது” என்று இந்தப் பகுதியின் அறிமுகத்தில் பசுமைக் கட்சியினர் எழுதுகின்றனர். “குடிமக்கள் பங்கேற்பு தேய்ந்துபோவதிலிருந்து அந்த பாரம்பரியம் அழிந்து விடாமல் மீட்க நாங்கள் முயல்கிறோம்.”

அவர்கள் தொடர்ந்து எழுதுகின்றனர்: “மேலும், அரசாங்கம் என்பது இயல்பிலேயே விரும்பத்தகாதது மற்றும் சுதந்திரத்தை அழிப்பது என்ற கருத்தாக்கம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சுதந்திரம் என்ற பேரில் சமூக வேலைத்திட்டங்கள் மீதான அத்தனை செலவினங்களையும் வெட்டி ‘அரசாங்கத்தைப் பட்டினி போட்டாக வேண்டும்’ ஆகிய கருத்தாக்கங்களின் பிடியை இல்லாமல் செய்வதற்கு நாங்கள் முனைகிறோம். மக்களால், மக்களுக்கான, மற்றும் மக்களின் அரசாங்கம் என்பதன் அர்த்தத்தை அமெரிக்கர்கள் அனைவரும் ஆழமாய் சிந்திக்க அழைப்பு விடுப்பதன் மூலமாக அந்த கருத்தாக்கங்களின் தந்திரோபாயத்தை நாங்கள் சவால் செய்கிறோம். ஒரு ஜனநாயகத்தில், பொது நன்மையைப் பாதுகாக்கின்ற மற்றும் முன்னெடுக்கின்ற ஆட்சிக் கட்டமைப்புகளை உருவாக்க தனிமனிதர்கள் ஒன்றுதிரள்கின்றனர். மக்களாகிய நாம் தான் அரசாங்கம்....”

வர்க்கப் பகுப்பாய்வின் ஒரு சிறு குறிப்பும் கூட அங்கு இல்லை, அல்லது முதலாளித்துவத்தின் கீழான ஜனநாயக போலி பகட்டுக்கள் அதன் மிகச் சிறந்த நிலைமைகளிலும் கூட நப்பாசைமிக்கவை என்பதோடு, உற்பத்தி சாதனங்கள் மீதான தனது உரிமையையும் இந்த பொருளாதார உறவுகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை தாட்சண்யமில்லாமல் சுரண்டுவதையும் அடித்தளமாய்க் கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார சர்வாதிகாரத்தின் கீழமைந்திருக்கும் யதார்த்தத்தின் அடித்தளம்வரை  வரை சமசரத்திற்குட்பட்டவை என்கிற சூசகமான குறிப்பும் கூட அதில் இல்லை. அரசு என்பது மேலாதிக்கமான பொருளாதார வர்க்கத்தின் ஒரு ஒடுக்குமுறை சாதனமாகும் - தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் போலிஸ் வன்முறை மற்றும் பரந்த சிறை வளாகங்களைக் கொண்ட “நீதி அமைப்புமுறை” என்று அழைக்கப்படக் கூடிய நசுக்குகின்ற எந்திரம் ஆகியவற்றின் வடிவில் இது அன்றாடம் நிகழ்கிறது - என்ற மார்க்சிச உண்மையானது நிராகரிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாய், ஒருவருக்கு தாராளவாதம் என்ற பேரில் இன்று கையளிக்கப்படுவதாய் இருக்கின்ற வழக்கமான வெற்றுத்தனங்களும் மற்றும் கட்டுக்கதைகளின் மாயக் கலவை தான் கிடைக்கிறது.

பரந்த மக்களின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் அமெரிக்காவின் அரசியல் அமைப்புமுறை முழுவதுமாய் செயற்படமுடியாது  போனது ஏன் என்பதற்கான எந்த விளக்கத்தையும் பசுமைக் கட்சியால் வழங்க முடியவில்லை. அப்படியொரு பதில் வருவதாக இருந்தாலும், இந்த சூழ்நிலையே மக்களின் உணர்ச்சி தேய்ந்து போனதின் விளைவு என்றும் மக்கள் பழமைவாத சித்தாந்தத்தின் பிடியில் இருக்கின்றனர் என்பதான “உண்மை”யுமே பதிலாய் இருக்கிறது.

அமெரிக்க ஜனநாயகம் செயலிழந்திருக்கும் தன்மை குறித்த பசுமைக் கட்சியினரின் கவலை எல்லாம், அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் பெரும்பாலும் அப்பட்டமான குற்றவியல்தன்மையானது அதன் நியாயபூர்வமான தன்மை பற்றிய  நெருக்கடியை உருவாக்குகிறது. அது அமெரிக்க முதலாளித்துவத்தின் அதிகாரத்தைக் கீழறுத்து, அடிமட்டத்திலிருந்தான ஒரு புரட்சிகர சவாலுக்கு எண்ணெய் வார்க்கிறது என்ற அச்சத்தாலேயே பிரதானமாய் ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் தான் அவர்கள் எழுதுகிறார்கள்: "நிலவும் நிலை பராமரிக்கப்படுவதற்கு ஆதரவாக இருக்கும் அதிகாரத் தரகர்கள் மூலம் குடிமக்களிடையே வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிற அந்நியப்படல் மற்றும் உணர்ச்சியின்மை ஆகியவற்றை குணப்படுத்த நாங்கள் முனைகிறோம். நமது ஜனநாயகம் முடக்கப்படுவது குறித்த நியாயமான கோபம் மண்ணில் பெருகிக் கொண்டிருக்கிறது, பசுமைக் கட்சியினர் ஆக்கபூர்வமான மாற்றீடுகளை வழங்குகின்றனர் [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது].”

“இது தவிர”, அவர்கள் தொடர்ந்து எழுதுகின்றனர், “சமீப வருடங்களில் நமது ஆணவமான, சுயநலமான வெளியுறவுக் கொள்கையின் காரணத்தால், சர்வதேச சமூகத்தில் அமெரிக்கா குறித்து வீழ்ச்சி கண்டிருக்கும் அபிப்பிராயத்தை திருத்திக்கொள்ள நாங்கள் முனைகிறோம்... “[தேசங்களின் சமுதாயத்தில்] அமெரிக்கா நிச்சயம் ஒரு தலைமைப் பாத்திரத்தை ஆற்ற முடியும் தான், ஆனால் அமைதி, தேசிய சுய-நிர்ணயம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை குறித்த ஒரு சூழல்-சமூகவியலுக்கு நாம் உறுதிபூண்டவர்களாக ஆகும்போது மட்டுமே அதற்கான தகுதி வாய்க்கும்.”

ஆக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றவியல் தன்மை குறித்து அவர்கள் கவலை கொள்ளவில்லை, மாறாக அமெரிக்காவின் “ஆணவம்” ”உலகின் ஒரு தலைமையாக” அமெரிக்காவின் சர்வதேசத் தரநிலை மீது எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துவதே அவர்களின் கவலை. அமெரிக்கப் போர்க் குற்றங்களுக்குக் காரணமான, இந்நாள் அல்லது முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் எவரையும் கைது செய்வதற்கோ அல்லது தண்டிப்பதற்கோ பசுமைக் கட்சியினர் அழைப்பு விடுக்கவில்லை.

வர்க்கப் போராட்டத்திற்கு பதிலாக அமெரிக்காவின் பசுமைக் கட்சியினர் வர்க்க சமரசம் என்ற பிற்போக்குத்தனமான கற்பனாவாதத்தையே ஊக்குவிக்கின்றனர். “உள்ளூர்” மற்றும் “சமுகம்” சார்ந்த அரசியலை பசுமைக் கட்சி ஊக்குவிப்பதும் கூட அதன் ஒரு வடிவமே ஆகும். சமுதாயம், பரஸ்பர குரோதமுடைய சமூக வர்க்கங்களாகப் பிரிந்து கிடப்பதில்லையாம் பிரச்சினை, மாறாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அதிகாரம் “மையப்படுத்தப்படுவது” தான் பிரச்சினை என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆகவே, “எப்போதும் நமது ஜனநாயகத்தின் குணாதிசயமாக இருந்து வந்திருக்கின்ற சமுதாய அளவிலான பல மத்தியஸ்த ஸ்தாபனங்கள் உள்ளிட, நமது பொதுசமூகத்தை வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளதாய்” அவர்கள் எழுதுகின்றனர்.

“சமூகம்” (Community) என்ற தலைப்பிலான துணைப்பிரிவு B ஆனது, உள்ளூர் சமூகங்களுடன் சமூக நல்லிணக்கம் என்ற பிரமையை ஊக்குவிப்பதற்காய் அர்ப்பணிக்கப்படுகிறது. உள்ளூர் மட்டத்தில், “முதியவர்களும் இளையவர்களும், பணக்காரர்களும் ஏழைகளும், மற்றும் அனைத்து இனங்கள் மற்றும் நம்பிக்கைகளையும் சேர்ந்த மக்களும் தனித்தனியாய் கலந்துரையாடி ஒருவருக்கொருவர் அக்கறை காட்ட கற்றுக் கொள்ள முடியும் [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது].”

அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியானது, ஏறக்குறைய முழுக் கவனத்தையும் தேர்தல் சீர்திருத்தத்தின் மீது குவித்திருக்கும் பசுமைக் கட்சியினரை விடவும் மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அமெரிக்க ஜனநாயகம் வெறுமனே ஜனநாயகத்தை “சீர்குலைத்துக் கொண்டு” அல்லது “ஊழலடையச் செய்து கொண்டு” இருக்கவில்லை. அது மேலும் மேலும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களைத் திணித்துக் கொண்டிருக்கிறது.

பதவிக்காலம் முடியும் தறுவாயில் இருக்கும் பராக் ஒபாமாவின் நிர்வாகமானது சட்டவிரோதமான கண்காணிப்பு வலை, அமெரிக்கக் குடிமக்கள் உள்ளிட எவரையும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு படுகொலை செய்வதற்கு ஜனாதிபதி கொண்டிருக்கும் “உரிமை”யை திட்டவட்டம் செய்வது, மற்றும் உள்ளூர் காவல் துறைகளை ஒரு துணைராணுவப் படையாக உருமாற்றுவது ஆகியவற்றின் நடைமுறைவிளக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஒபாமாவின் ஆளில்லா விமான போர் முறை குறித்து பசுமைக் கட்சியின் கொள்கைப் பிரகடனமானது எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் குற்றவியல் நடவடிக்கைகளை வெளிப்படுத்தியதற்காக கொடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கக் கூடிய விழிப்பூட்டிகளான செல்ஸியா மேனிங் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டென் ஆகியோரை அல்லது விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்சை பாதுகாத்து எந்த இடத்திலும் அது குறிப்பிடவில்லை.

தேர்தலானது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளின் ஏகபோகத்திற்கு ஆட்படுத்தப்பட்டிருப்பதில் பகுதியாக அமெரிக்க அரசியலின் ஜனநாயகமற்ற தன்மை வெளிப்படுகிறது என்பது உண்மையே, ஆனாலும்  ஜனநாயகக் கட்சியை குடியரசுக் கட்சிக்கு குறைந்ததல்ல. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் கிரீஸ் போன்று இன்னும் தாராளமான வாக்களிக்கும்  சட்டங்களையும் குறைந்த பணப் புழக்கத்தையும் கொண்டிருக்கும் நாடுகளிலும் அடிப்படையில் அதே அனுபவம் தான் கிடைக்கிறது: அதாவது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீதான பாரிய தாக்குதல்கள் பரந்த வெகுஜன எதிர்ப்பை மீறி பலவந்தமாய் திணிக்கப்படுகின்றன, அத்துடன் சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

The Citizens United அமைப்பின் தீர்ப்பானது அமெரிக்க ஜனநாயகம் அழுகிப் போயிருப்பதிலும் ஒரு அதிகார வர்க்கம் வலுப்பட்டிருப்பதிலும் ஒரு முன்னேறிய கட்டத்தைக் குறிக்கிறது என்பதில் சந்தேகமில்லை, ஆயினும் அமெரிக்க அரசானது எப்போதுமே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களை தாட்சண்யமற்றுப் பாதுகாத்தே வந்திருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றிலுமே, பாரிய போராட்டங்களில் ஈடுபட்டிருந்திருக்கக் கூடிய அமெரிக்கத் தொழிலாளர்கள் அரசின் முழு ஆக்ரோஷத்திற்கு முகம் கொடுத்து வந்துள்ளனர் என்பதோடு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களும், போலிசும் மற்றும் இராணுவமும் கட்டவிழ்த்து விடப்பட்டு வந்திருக்கிறது.

பசுமைக் கட்சியினர் வாதிடுவது போல, அரசு என்பது, புதிய கட்சிகளைத் தேர்வு செய்வதன் மூலமாக மக்களால் கைப்பற்ற இயலக் கூடிய ஒரு நடுநிலைக் களம் கிடையாது. ஜேர்மனியின் பசுமைக் கட்சியின் அனுபவம் ஒரு பாடமாக இருக்கிறது. 1998 இல் “சிவப்பு-பச்சை” கூட்டணியில் கூட்டரசாங்கத்தில் அவர்கள் நுழைந்தபோது, ஜேர்மன் முதலாளித்துவமானது அதன் இராணுவரீதியான ஒதுங்கியிருப்பைக் கைவிடுவதற்கு முன்னெடுக்கையில் புதிதாக மறுஇணைவு கண்டிருந்த ஜேர்மன் அரசை ஜேர்மன் தொழிலாளர்களின் ஊதியங்களையும் வேலைநிலைமைகளையும் வெட்டுவதற்கும் அவர்கள் மீதான சுரண்டலை அதிகப்படுத்துவதற்குமான ஒரு சாதனமாக உருமாற்றியும் கூர்மையாக வலது நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அச்சமயத்தில், அதன் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பொறுப்பை பசுமைக் கட்சி கையிலெடுத்துக் கொண்டது. தனது வேலைத்திட்டத்தின் “நான்கு தூண்களில்” இரண்டு தூண்களாக “வன்முறையற்ற தன்மையையும் “சமூக நீதி”யையும் பிரகடனம் செய்த கட்சியானது பால்கன்களிலான போரில் ஜேர்மன் பங்கேற்பதற்கும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மன் துருப்புகள் முதன்முதலாய் வெளிநாட்டுமண்ணில் நிலைநிறுத்தப்படுவதற்கும், போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் வரலாற்றில் சமூக செலவினங்களிலான மிக ஆழமான வெட்டுகளை அமல்படுத்துவதற்கும் தலைமை தாங்கியது.  

போர்-ஆதரவு “அமைதிவாதம்”

“பசுமைக் கட்சியின் 73 பக்க கொள்கைப் பிரகடனத்தில் அதன் வெளியுறவுக் கொள்கையானது வெறும் நாலரைப் பக்கங்கள் மட்டுமே வருகிறது, முதல் பிரிவின் ஒரு உபதலைப்பாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளது. பசுமைக் கட்சியினர் தமது வெளியுறவுக் கொள்கையை போருக்கு எதிரானது என்றும் ”வன்முறையற்ற” கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றும் சித்தரிக்கின்றனர். உதாரணமாய், அவர்கள் எழுதுகின்றனர், “தேசிய-அரசுகளின் இறையாண்மையையும் சுய-நிர்ணயத்திற்கான அவற்றின் உரிமையையும் அமெரிக்கா அங்கீகரித்தாக வேண்டும்.” “முன்கூட்டித் தாக்கும் படையெடுப்பு நடவடிக்கையை நியாப்படுத்தும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை” என்றும் திட்டவட்டம் செய்யும் அவர்கள் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அகற்றுவதற்கு வலியுறுத்துகின்றனர்.

ஆயினும் அமெரிக்கா கடந்த கால் நூற்றாண்டு காலத்தை தொடர்ச்சியான போரில் ஏன் செலவழித்திருக்கிறது என்பதை விளக்க எந்த முயற்சியும் இல்லை. சீனா-விரோத “ஆசியாவை நோக்கிய முன்னிலை” மற்றும் ரஷ்யா மீதான நேட்டோவின் சுற்றிவளைப்பு உள்பட அமெரிக்காவினால் பின்பற்றப்படுகின்ற உண்மையான வெளியுறவுக் கொள்கைகளைக் குறிப்பிடுவதை பசுமைக் கட்சியினர் தவிர்த்து விடுகின்றனர். ஒபாமாவின் கீழ், மத்திய கிழக்கில் தொடக்கப்பட்ட போர்கள் எதனையும் அது குறிப்பிடவில்லை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலான போர்கள் வெறும் சம்பிரதாயமாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதற்குப் பதிலாய், சர்வதேச சட்டத்திற்கு இணங்கி நடப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தார்மீக கோரிக்கைவிடுவதன் மீதே பசுமைக் கட்சி தனது “வன்முறையற்ற” வேலைத்திட்டத்திற்கு அடித்தளமிடுகிறது.

“இராணுவமயமாக்கல் அகற்றம்” தொடர்பான அதன் ஒரே உறுதியான  கோரிக்கை என்றால் அமெரிக்காவின் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பாதியாகக் குறைக்க அது வைக்கும் கோரிக்கை மட்டுமே.  அமெரிக்க இராணுவத்தின் வருடாந்திர ஒதுக்கீடு 600 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம்,  அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்படும் பல்வேறு போர்களுக்கான நிதி ஒதுக்கீடு இதில் சேராது. இந்த ஒதுக்கீட்டில் பாதியைக் குறைத்தாலும் கூட அப்போதைய நிலையிலும் அமெரிக்காவே உலகின் மிகப்பெரும் இராணுவ ஒதுக்கீட்டைச் செய்கின்ற நாடாக இருக்கும்.

அத்துடன், வன்முறை, கொலை மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பின் பாரிய எந்திரத்தில் கைவைக்காது என்பதும் தெரிந்ததே.

ஆயினும் பசுமைக் கட்சியின் ‘அமைதிவாதத்திற்கு’ செவிமடுக்கச் செய்யும் எச்சரிக்கை வாசகங்களும் கொள்கைப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, தேசங்களின் இறையாண்மையை அங்கீகரிப்பதற்கு அமெரிக்காவிற்கு விடுக்கப்படுகின்ற ஒரு அழைப்பு என்பதன் நேர் கீழே காணப்படக் கூடிய “வெளியுறவுக் கொள்கை” என்பதன் கீழான பத்தி 1.d, “இனப்படுகொலை நடவடிக்கைகள் அல்லது.... இடைவிடாத மீறல்கள் மற்றும் ஒரு இன அல்லது மதக் குழுவிற்கு அதன் எல்லைகளுக்குள்ளாக மனித உரிமைகள் மறுக்கப்படுவது” ஆகியவற்றை எதிர்ப்பதான பேரில் ஒரு நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலுடன் படையெடுப்பதற்கு ஆதரவை அறிவிக்கிறது.

பின்வரும் பத்தி கூறுகிறது: “ஐநா பாதுகாப்பு குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக இராணுவ உதவியை வழங்குவதற்கு அல்லது ஐ.நா உத்தரவின் கீழ் சேவை செய்வதற்கு அமெரிக்கா கடமை கொண்டிருக்கிறது.” லிபியாவில் 50,000 பேருக்கும் அதிகமான பேரை கொலை செய்து நாட்டை இரத்தம் பாய்ந்தவொரு குழப்பநிலைக்குள் அமிழ்த்திய ஆட்சிமாற்றத்திற்கான போர் உட்பட 1990களில் இருந்தான பல தரப்பான ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கான சட்டரீதியான நியாயமாக சேவை செய்திருக்கும் “பாதுகாப்பதற்கான பொறுப்பு” என்ற சித்தாந்தத்தை வெளிப்படையாய் வழிமொழிவதற்கு நிகரானதாய் இது இருக்கிறது. “மனித உரிமைகளை” பாதுகாப்பதற்கெல்லாம் எட்டாத்தூரத்தில், இத்தகைய போர்கள் உலகெங்கும் 65 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை உருவாக்கியிருக்கிறது, இது இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

ஏகாதிபத்திய “திருடர்களின் சமையலறை” என்று லெனின் நியாயமாக அழைத்த தேசங்களின் சங்கத்தின் (League of Nations) நவீன அவதாரமாக இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபைக்கு பசுமைக் கட்சியினர் காட்டும் நெகிழ்ச்சியான மரியாதையே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவர்கள் காட்டும் விசுவாசத்திற்கான சான்றாய் திகழ்கிறது.

குறிப்பானதொரு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றிக் குறிப்பிடுகின்ற வெகுசில இடங்களில் ஒன்றான, ஈரான் குறித்த ஒரு துணைப்பிரிவில், பசுமைக் கட்சி எழுதுகிறது: “தடைகளைக் குறைக்கின்ற அல்லது அகற்றுகின்ற ஒரு அமைதித் தீர்மானத்திற்கு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஆதரிக்கிறோம்...அதேநேரத்தில்  அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்திற்கு இணங்கி நடப்பதை உறுதி செய்வதற்காக பரிசோதிப்பு ஆய்வுகள் தொடரப்பட வேண்டும் அல்லது வலுவூட்டப்பட வேண்டும்.” வேறுவார்த்தைகளில் இதைச் சொல்வதானால், 1979 இல் ஷாவின் கொடுங்கோன்மை அமெரிக்க கைப்பாவை ஆட்சிக்கு எதிரான புரட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியை காலில் விழச் செய்வதற்காக, தண்டிக்கின்ற தடைகளையும் மூக்கை நுழைக்கும் பரிசோதனைகளையும் பயன்படுத்தி வந்திருக்கின்ற, ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையை பசுமைக் கட்சியினர் வழிமொழிகின்றனர்.

நடுத்தர-வர்க்க அமைதிவாதம் குறித்து லியோன் ட்ரொட்ஸ்கி வெளிப்படுத்திய சுட்டெரிக்கும் மதிப்பீடு அமெரிக்காவின் பசுமைக் கட்சிக்கு முழுமையாகப் பொருந்துகின்றது: “இந்த சில வார்த்தைகளில் குட்டி-முதலாளித்துவ அமைதிவாதத்தின் மொத்த வேலைத்திட்டமும் நமக்குக் கிடைக்கிறது” என்று அவர் எழுதினார். ”போர் வரும் சமயத்தில் அரசாங்கத்திற்கு அதன் வழியில் அமைதிவாத எதிரணியால் எந்த குறுக்கீடும் இருக்காது என்ற ஒரு உத்தரவாதத்தை அதற்கு வழங்குவதாய் அமைகின்ற தீங்கற்ற செயல்திட்ட அறிக்கைகளின் வடிவத்தில் பாரிய மக்களின் எதிர்ப்பினை திசைதிருப்புவது தான், போரைத் தடுப்பதற்கு நமது கைவசம் இருக்கக் கூடிய மொத்தமும் என்பதே அதன் அர்த்தமாக இருக்கிறது.”