ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Public meeting in Chennai, India: Oppose the imperialist war drive! Fight for socialist program!

ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்போம்!

சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடுவோம்!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் ஒரு பொதுக் கூட்டமொன்றை நடத்துகின்றனர், அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அறிக்கை பற்றி விவாதிக்கவும் ஏகாதிபத்திய போர் உந்துதலில் இந்திய அரசாங்கத்தின் பங்கெடுப்பை எதிர்ப்பதற்குமாகும்.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அமெரிக்கா தொடங்கி பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் உலகம் முழுவதும் ஏகாதிபத்திய வன்முறைகள் பெருகும் சூழலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது. அது ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் லிபியா உட்பட அனைத்து நாடுகளிலும் இராணுவ பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க மற்றும் பெரிய ஐரோப்பிய சக்திகள் இப்போது ரஷ்யாவுக்கு எதிரான போர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதே சமயம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், வாஷிங்டன் அதன் சீனாவிற்கு எதிரான மோதல் போக்கு கொண்ட "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" கூட்டாளிகளை பட்டியலிட்டு வருகின்றது.

உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியினால் உந்தப்படும் இத்தகைய அபிவிருத்திகள், மனித குலம் இன்னுமொரு பேரழிவான, அணு ஆயுதங்களை கொண்டு போராடப்படும் உலகப் போருக்குள் இழுத்துச் செல்லப்படும் ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

சீனாவிற்கு எதிரான ஒரு "முன்னணி களத்தில்" இருக்கும் நாடாக இந்தியாவை ஆக்க வேண்டும் என்று அமெரிக்க தீவிரமாக தள்ளுகிறது. 2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி ஆசியாவில் அமெரிக்காவின் இராணுவத்தை பலமாக கட்டியெழுப்புவதில் இந்தியாவை மேலும் இணைத்துள்ளார்.

பாகிஸ்தான் தொடர்பாக இந்தியாவின் அதிகரித்து வரும் போர் மிரட்டல் அணுகுமுறை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து அது பெற்று வரும் ஆதரவினால் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில், மோடி அரசாங்கத்தின் பங்கெடுப்பு இந்திய தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் முதுகுக்குப் பின்னால் நிகழ்கிறது. இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்தியாவில் "இடது" என்று அழைக்கப்படுபவை, பூகோள மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் பொறுப்பற்ற உந்துதலினால் எழும் பிரமாண்டமான ஆபத்துக்கள் பற்றி மூடிமறைக்கின்றன.

சர்வதேச மற்றும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பூகோள போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதன் மூலம் ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்க்குமாறு தொழிலாள வர்க்கத்துக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இராணுவவாதம் மற்றும் போர் அலைகள் எழுச்சி கண்டு வருவதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி அக்டோபர் 2 ம் தேதி சென்னை பொதுக் கூட்டத்தில் பேச்சாளர்கள் பகுப்பாய்வு செய்வார்கள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் போராட வேண்டிய அரசியல் மாற்றையும் முன்வைப்பார்கள். இந்த கூட்டத்திற்கு வருகை தந்து இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

 

தேதி: ஞாயிறு, அக்டோபர் 2, 2016, காலை 10.30 மணி

இடம்: முதல் தளம், பெரியார் ஈ.வே.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை,

277/2 சென்னை-திருவள்ளுவர் நெடுஞ்சாலை,

அம்பத்தூர், சென்னை

[அம்பத்தூர் தொலைபேசி தொடர்பகம் அருகில், HPM கல்யாண மண்டபம் எதிரில்]