ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ILO report: Global youth unemployment to rise for first time in three years

ஐஎல்ஓ அறிக்கை: மூன்றாண்டுகளில் முதல் முறையாக இளைஞர் வேலையின்மை உயரவிருக்கிறது

By Niles Niemuth
27 August 2016

15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடையிலான உலகரீதியாக உள்ள வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 71 மில்லியனாக உயர இருப்பது, 2013க்குப் பின்னர் முதல்தடவையாக அதிகரிக்கிறது. இதுதான் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO) இந்தவாரம் வெளியிடப்பட்ட உலக வேலையின்மை மற்றும் சமூகப் பார்வை பற்றிய ஆண்டுஅறிக்கையிலிருந்து வெளிவரும் செய்தியாகும்.

ஐக்கியநாடுகள் சபையின் தொழிலாளர் முகமை உலக இளைஞர் வேலையின்மையின் கடந்த ஆண்டு வீதம் 12,9 சதவீதத்திலிருந்து 13.1 சதவீதம் உயரும் மற்றும் 2017 முழுதும் அப்படியே உறுதியாக செல்லும் என்று மதிப்பிடுகிறது.

பிராந்தியம் உடைந்ததாலே, அரபு அரசுகளிலும் வட ஆபிரிக்காவிலும் வசிக்கும் இளைஞர்களை பொறுத்தவரை வேலையின்மை வீதம் மிகவும் மோசம், அங்கே முறையே 30.6 மற்றும் 29.3 சதவீதத்தினர் வறுமையில் வாழ்கிறார்கள். வேலை இல்லா இளைஞர்களின் பெரும் எண்ணிக்கை ஆசியாவில்தான் காணப்படுகிறது, அங்கு 33 மில்லியன் பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள் ஆனால் வேலைதான் கிடைக்கவில்லை.

உலக நிதியநெருக்கடி வெடித்து எட்டு ஆண்டுகளுக்கப் பின்னர் மற்றும் அடுத்து வந்த ஆண்டுகளில் சிறிதளவே பொருளாதார வளர்ச்சி இருக்க, உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையின்மைக்கும் வறுமைக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் அரசாங்கங்கள் கடந்த பத்தாண்டாக கடுமையான சிக்கன பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகுகளின்மேல் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர் வேலையின்மையில் அதிகரிப்பானது, உலகரீதியாக, குறிப்பாக எழுந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதாரங்களில் பொருளாதார வள்ர்ச்சியானது மெதுவாகவும் ஒரேயடியாக பின்னோக்கித் திரும்புதலாலும் உந்தப்படுகின்றது.

2016க்கான உலகப் பொருளாதார வளர்ச்சியானது தற்போது 3.2 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகின்றது, இது கடந்த ஆண்டு பொருளியலாளர்களால் கணிக்கப்பட்ட புள்ளிக்கு கிட்டத்தட்ட அரைசதவீத புள்ளி கீழாகும். வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் ஆகும், இது 2003க்குப் பின்னரான மிகக்குறைந்த வீதமாகும்.

மாபெரும் பொருளாதாரப் பின்னடைவு பற்றிய ஆழமான ஆய்வில், முன்னணி பொருளியலாளர்கள் வளர்ந்துவரும் பொருளாதாரங்கள், குறிப்பாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்காவில் உலக முதலாளித்துவ அமைப்பை புதுப்பிக்கும் பொருளாதார எந்திரங்களாக சேவைசெய்யும் என முன்கணித்திருந்தனர்.

ஆயினும், அறிக்கையானது சீனப்பொருளாதாரத்தில் தொடர்ந்த மெதுவான கீழிறக்கம், ரஷ்யா மற்றும் பிரேசிலில் எதிர்பார்த்திருந்த பொருளதார பின்னடைவுகளைவிட ஆழமானதாக இருப்பது, உலக இளைஞர் வேலையின்மை உயர்வுக்கு காரணமாக இருக்கின்றது என சுட்டிக்காட்டுகிறது.

ரஷ்ய பொருளாதாரமானது, எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட பொறிவினாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அமல்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளாலும் பாதிக்கப்பட்ட பின்னர், 2015ல் 3.7 சதவீதம் சுருங்கியதை அடுத்து, இந்த ஆண்டில் 1.2 சதவீதமாக சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய இளைஞர் வேலைவாய்ப்பின்மையானது 2013ல் 13.9 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 15.5 சதவீதமாக உயர்துள்ளது கவனிக்கத்தக்கது.

மாபெரும் பொருளாதார தாழ்விற்குப் பின்னர், தற்போது அதன் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்துவரும் பிரேசில், அதன் இளைஞர் வேலையின்மை வீதத்தை கடந்த மூன்றாண்டுகளில் 15.1 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 18 சதவீதமாக உயர்ந்ததைக் கண்டுள்ளது.

சீனப் பொருளாதாரம் உத்தியோக ரீதியில் இன்னும் வளர்ந்துகொண்டு இருந்தாலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தில் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மெதுவாகி வருகிறது. சீனாவில் வேலைதேடி கிடைக்காத இளைஞர்களின் பங்கு கடந்த மூன்றாண்டுகளில் 11.8 சதவீதத்திலிருந்து 12.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

71 மில்லியன் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மேலே, இன்னொரு 156 மில்லியன் இளைஞர்கள் வேலையில் இருந்தாலும் அதிவறுமைக்கு மிதமான வகையில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று ஐஎல்ஒ அறிவிக்கிறது. இதன்பொருள் உலக இளைஞர்களில் சராசரியாக 38 சதவீதம்பேர், வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், மோசமான சூழ்நிலையில் உயிர்வாழ இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும்.

வேலை செய்துகொண்டு இருக்கும் வறுமைவீதம் துணை சஹாரா ஆபிரிக்காவில் மிக மோசம் அங்கு வேலை செய்யும் 70 சதவீத இளைஞர்கள் வறுமையில் வாழ்கிறார்கள். இந்த நாடுகளில் உள்ள வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவே வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களின் கூலிகள் இந்த செலவுகளுக்கே போதாது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உட்பட ஐக்கிய நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகள் என்று வரையறுக்கும் நாடுகளில் மிகவும் வறுமை ஆபத்தில் உள்ள குழுவான வயதானவர்களை, 15 மற்றும் 24 வயதிற்கு இடையிலான இளைஞர்கள் பதிலீடு செய்துள்ளனர்.

ஐஎல்ஓ அறிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 12.9 சதவீத இளம்தொழிலாளர்கள் வறுமையின் உயர்ந்த ஆபத்தில் இருக்கிறார்கள், இதன் பொருள், அவர்கள் சராசரி வருமானத்தில் 60 சதவீதத்திற்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள். இளம் தொழிலாளர்களுக்கான வறுமை வீதம், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே நாட்டுக்குநாடு வேறுபடும், செக் குடியரசில் 5 சதவீதத்திற்கும் குறைவு, ருமேனியாவில் 35 சதவீதம் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள இளைஞர்கள் அதிகரித்த அளவில் பகுதிநேர வேலை எடுக்கத் தள்ளப்படுகிறார்கள். அந்தவேலை குறைந்த சம்பளத்தை கொண்டிருப்பதும், பாரம்பரிய முழுநேர வேலைக்குள்ள பயன்பாடுகளைக் கொண்டிராததும் அங்கே உயர்ந்த வறுமைவீதத்திற்கு வழிவகுக்கிறது. கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்ச்சுக்கல் உள்பட, 2008 லிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தாலும், சர்வதேச நாணைய நிதியத்தாலும் தொழிலாளர் விரோத கெடுபிடிப் பொருளாதாரக் கொள்கை கொண்ட ஆட்சிகளுக்கு ஆளான நாடுகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது நிச்சயமற்று இருக்கிறது.

முழுநேர வேலைவாயப்பை பெற முடியாததால், தற்காலிக வேலை வாய்ப்பைப் பெற நிர்ப்பந்திக்கப்படும் இளைஞர்களின் பங்கு, போர்ச்சுக்கல், கிரீஸ், போலந்து மற்றும் இத்தாலியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும். இத்தாலியில் உள்ள அனைத்து பகுதிநேர வேலைவாய்ப்பில் விருப்பில்லாத பகுதிநேர வேலைகள் இத்தாலியில் 70 சதவீதம், கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் 60 சதவீதம் ஆகும்.

அமெரிக்காவில் இளைஞர் வேலையின்மை வீதம் கடந்த ஆண்டிலிருந்து அதிகரித்து, 12 சதவீதமாக இருக்கிறது என ஐஎல்ஓ மதிப்பிடுகிறது. கணிசமான எண்ணிக்கையில் இளம் அமெரிக்கர்கள் கற்றலிலும் இல்லை, வேலைப் பயிற்சியிலும் இல்லை, கிட்டத்தட்ட 20 சதவீதத்தினர் 25-29 வயதிற்கு இடையிலானவர்கள் இந்த வகையினத்தில் வருகிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் உள்ள இளம் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தங்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து வசிக்கும் இளைஞர்களின் அதிகரித்த பங்கில் மேலும் எதிரொலிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க சிந்தனைக் குழுமமான Pew ஆல் வெளியிடப்பட்ட அறிக்கை நவீன அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக 18வயதிலிருந்து 34 வயதிற்குள்ளானவர்கள் தங்களின் துணைகள் அல்லது துணைவிகளைவிட பெற்றோர்களுடன் வசிப்பதற்கே மிகவும் விரும்புகிறார்கள் என்று கூறுகிறது.

ஐஎல்ஓ அறிக்கை, இளம் தொழிலாளர்களுக்கான வாழ்க்கைத்தரங்கள் நாட்டுக்குநாடு வேறுபடுகின்றன என்பதைக் காட்டுகின்ற அதேவேளை, அவர்கள் துணை சஹாரா ஆபிரிக்கா, ரஷ்யா அல்லது அமெரிக்காவில் வசித்தாலும் சரி வேலை செய்தாலும் சரி முதலாளித்துவ சமூக அமைப்பில் பொது எதிரியைத்தான் எதிர்கொள்கின்றனர்.

முதலாளித்துவத்தை தூக்கிவீசி,, தனியார் இலாபத்திற்கு அல்லாமல் மனித தேவையை நிறைவேற்றுதற்கு சமுதாயத்தை மறு ஒழுங்கு செய்வதற்கு, வயது மற்றும் சர்வதேச எல்லைகளின் வேறுபாடுகளைக் கடந்து, தொழிலாள வர்க்கத்தினால் ஆன ஐக்கியப்பட்ட போராட்டம் இன்றி, உலகம் முழுவதும் இளைஞர்களை நிர்பந்திக்கும் நிச்சயமற்ற வேலைவாய்ப்புக்கும் வறுமையின் துன்பத்திற்கும் முடிவு கிடையாது.