ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers and youth speak out against French labour law reform

பிரெஞ்சு தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

By our reporters
1 April 2016

பிரான்சின் தொழிலாளர் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக வியாழனன்று அந்நாடு எங்கிலுமான ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) கலந்துரையாடியது. தொழிலாளர் நலத்துறை மந்திரி மரியம் எல் கொம்ரி இன் பெயரிடப்பட்ட அச்சட்டம், விடுமுறை சம்பளம், ஓய்வூ இடைவேளைகள் மற்றும் இதர வேலையிட பாதுகாப்புகளை நீக்குவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடியதாகும்.

மார்சைய்யில் ஒரு மாணவர் அந்நடவடிக்கை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைக் கண்டித்தார்: “அச்சட்டம் எங்களை நிலைகுலைய செய்கிறது, ஏனென்றால் அது பாரிய வேலைநீக்கங்களை எளிதாக்குகிறது. நிர்வாகத்திற்கு எல்லா விதமான ஆதாயங்களையும் வழங்குகின்ற அச்சட்டம், ஆனால் தொழிலாளர்களுக்குச் சிலவற்றை தான் வழங்குகிறது. ஏற்கனவே முதலாளிமார்களிடம் தான் அதிக உரிமைகள் உள்ளன, ஆகவே அவர்களுக்கு இன்னும் அதிகமாக வழங்கினால், மொத்தத்தில் வேலைக்கு போவதில் எந்த சந்தோஷமும் இருக்காது. நான் தொழில்நுட்ப பட்டம் பெற இருக்கிறேன் ஆகவே எனக்கு விரைவிலேயே ஒரு வேலை கிடைக்கக்கூடும், ஆனால் அது அதன் நன்மைகளை இழந்து வருகிறது … படித்த பின்னர் உங்களுக்கு மோசமான சம்பளம் தான் கிடைக்கும் என்றால் படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்றார்.

அவர் கூறுகையில், “எங்களிடம் இருந்து விடயங்களை அவர்கள் பறித்து கொண்டே இருந்தார்கள் என்றால், மக்கள் பேச தொடங்கி இருப்பதைப் போல இங்கே ஓர் உள்நாட்டு போர் ஏற்படும். அடுத்த சில ஆண்டுகளுக்கும் இது தொடர்ந்தால், அது தான் நடக்கும்,” என்று எச்சரித்தார்.

மார்சைய்யில் நடந்த மற்றொரு போராட்டத்தில் ஓர் உயர்நிலை பள்ளி மாணவர் வில்லியம் பேசுகையில், அவர் "அனைத்திற்கும் மேலாக வேலையிட நிலைமைகளில் பின்னோக்கி திரும்புவதை" எதிர்த்தார். “ '100 ஆண்டுகளுக்கு முன்னர் [முதலாம் உலக போரில்] நாங்கள் பீரங்கிகளுக்கு இரையானோம், இப்போது இலாபங்களுக்கு இரையாகி கொண்டிருக்கிறோம்',” என்றார்.

அவசரகால நெருக்கடி நிலை மற்றும் உளவுவேலைகள் மற்றும் பிரான்சில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் திணிக்கப்பட்ட பொலிஸ் சட்டங்களை வில்லியம் விமர்சித்தார்: “இது பொருத்தமற்றது, ஜனாதிபதியால் யார் ஒருவரையும் உளவு பார்க்க முடியும். அவசரகால நெருக்கடி நிலைக்காக பயங்கரவாதத்தை ஒரு சாக்காக பயன்படுத்துவது நியாயமில்லை என்று நினைக்கிறேன். நாம் போய் ISIS இன் பிராந்தியங்களைக் கைப்பற்றினாலும் கூட, அங்கே அப்போதும் பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்துபவர்கள் இருப்பார்கள்,” என்றார்.

அமியானில், Valeo தொழிலாளர்கள், உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக போராடினர்.

எட்வார்ட் காண்ட் உயர்நிலை பள்ளி மாணவர் ஒருவர் கூறுகையில், அந்த சீர்திருத்தம் தொழிலாளர்களுக்கு ஆதாயமாக இருக்கும் என்ற ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) வாக்குறுதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை: “முதலாளிமார்கள் மிகவும் போட்டித்தன்மைக்கு மாறி நிறைய இலாபங்களைக் குவித்தால், அவர்கள் அவர்களுக்காக மட்டுந்தான் அவற்றை வைத்துக் கொள்வார்கள். ஹோலாண்ட் முதலாளிமார்களை மட்டுந்தான் பாதுகாக்கிறார்,” என்றார்.

பாரிஸில், எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் அணிவகுத்து செல்ல முடிவெடுத்த, வேலை தேடும் ஒருவருடன் உலக சோசலிச வலைத் தளம் பேசியது.

தொழிற்சங்கங்கள் குறித்து அவரது கருத்தைக் கேட்ட போது, அவர் இவ்வாறு கூறினார், “பாரம்பரிய தொழிற்சங்கங்கள் முதலாளிமார்களுடன் சேர்ந்துள்ளன, இன்று அவை ஒன்றையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பது தான் பிரச்சினை. அவை ஒரு காரணத்திற்காக, ஒரேயொரு காரணத்திற்காக மட்டுந்தான் இருக்கின்றன: அவற்றின் அதிகாரத்துவம் உயிர்பிழைத்திருக்கும் பொருட்டு அரசிடமிருந்து அல்லது வியாபாரங்களிடமிருந்து அதிகபட்ச ஆதரவு நிதிகளைப் பெறுவது தான் அவற்றின் நோக்கம், அவை யாரைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமோ, அதாவது சம்பளம் வாங்கும் மற்றும் கூலி வாங்கும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதை, அவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. நிறைய தொழிற்சங்கங்கள் உள்ளன, இவை எல்லாம் மொத்தத்தில் யாரையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை,” என்றார்.

அவர் பலமாக சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக பேசினார். அவர் கூறுகையில், “அது தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது, 1980 களுக்குப் பின்னர் இருந்து தான் அதை அவை செய்து வருகின்றன. ஆனால் இப்போது அவை அதை மொத்தமாக ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. 1980 களில் அவை திக்குத்தெரியாமல் இருந்தன, ஆனால் இப்போது அவை வெளிப்படையாக வலதிற்கு அல்லது ஜனநாயக-விரோத சட்டங்களுடன் தீவிர வலதிற்கே கூட நகர்ந்துள்ளன. ஆகவே என்னைப் பொறுத்த வரையில் அவை ஒன்றும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, அவை இப்போது இருப்பிலேயே இல்லை. அவை தங்களைத்தாங்களே காலடியில் போட்டு நசுக்கி கொண்டதாக நான் நினைக்கிறேன். அவை வலதுசாரி வாக்காளர்களை ஈர்க்க முயன்று வருகின்றன, ஆனால் அது வேலைக்கு ஆகாது. நமக்கு ஒரு புதிய, நிஜமான சமூக இயக்கம், சோசலிஸ்ட் கட்சியிலிருந்து (PS) சுயாதீனமான ஒன்று தேவைப்படுகிறது,” என்றார்.

ஒரு பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில் இருந்து கொண்டு, வெறுமனே பிரான்சின் தேசிய உள்ளடக்கத்திலிருந்து தொழிலாளர்களுக்கான சமூக உரிமைகளுக்கு போராடுவது சாத்தியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், “நாம் வெளிநாட்டு தொழிலாளர்களைப் புறக்கணித்துவிட்டு, வெறுமனே பிரான்ஸ் தொழிலாளர்களின் நலனை மட்டும் கருத்தில் எடுக்க முயல முடியாது. இன்று, நம்மீது அவர்கள் திணிக்க முயற்சிக்கும் வேலையிட நிலைமைகள், பெரிதும் உலகெங்கிலும் நிலவுகின்றன, அல்லது சில இடங்களில் இதைவிட மோசமான வேலையிட நிலைமைகள் உள்ளது. நமது எல்லைகளுக்கு வெளியே இருக்கும் உண்மை, எந்த விதத்திலும் சிறப்பாக இல்லை,” என்றார்.