சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Oil price fall brings significant losses for big producers

எண்ணெய் விலை வீழ்ச்சி பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் இழப்புகளைக் கொண்டு வருகின்றது

By Nick Beams
5 February 2016

Use this version to printSend feedback

கடந்த 20 மாதங்களில்ஜூன் 2014 இல் பேரலுக்கு $110 டாலராக இருந்ததில் இருந்து சரிந்து $30 என்ற அளவை எட்டி வருகிற எண்ணெய் விலை சரிவுக்குச் "சம்பிரதாயமான" பொருளாதார "விளக்கமளிப்பின்" ஆரம்ப பிரதிபலிப்பு, எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு எவ்விதமான தாக்கம் இருந்தாலும் அது உலக பொருளாதாரத்திற்குத் தான் உதவும் ஏனென்றால் அது நுகர்வையும் மற்றும் ஏனைய செலவுகளையும் அதிகரிக்கசெய்யும் என்பதாக இருந்தது.

சரிந்துவரும் எண்ணெய் விலை ஓர் உலகளாவிய மந்தநிலைக்கு சாத்தியமான அளவுக்கு முன்னறிவிப்பாக இருக்காது என்றும் ஏனென்றால் கடந்த 70 ஆண்டுகளின் முந்தைய கீழ்நோக்கிய சரிவுகள்குறிப்பாக 1974-75 மற்றும் 1981-82 மந்தநிலைகள் எண்ணெய் விலை அதிகரிப்புகளுக்கு முன்னதாகவே  நடந்திருந்தன என்றும், அதேவேளையில் 1990 களின் வளர்ச்சிக் காலக்கட்டம் எண்ணெய் விலை சரிவுகளால் குணாம்சப்பட்டிருந்ததாகவும் வாதிடப்பட்டது.

அத்தகைய அமைதிப்படுத்தும் காரணம் காட்டுதல்களை சமீபத்திய காலக்கட்டம் சிதைத்துள்ளது. அந்த வாதத்தைச் சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் கிட்டத்தட்ட முழுமையாக கைவிட்டிருந்தது. அது, “எண்ணெய் விலை வீழ்ச்சிகளின் கடந்தகால அத்தியாயங்கள் எடுத்துக்காட்டி இருக்கக்கூடிய சான்றுகளை விட எண்ணெய் இறக்குமதியாளர்களின் நுகர்வு அதிகரிப்பு இதுவரையில் சற்று பலவீனமாகவே உள்ளது,” என்று தெரிவித்தது.

உலக பொருளாதாரத்திற்கு ஊக்குவிப்பை வழங்குவதிலிருந்து வெகுதூரம் விலகி, ஏனைய பிரதான தொழில்துறை பண்டங்களுடன் சேர்ந்து, எண்ணெய் விலை படுபாதாளத்திற்கு வீழ்ச்சி அடைந்திருப்பது ஆழ்ந்த மந்தநிலை போக்குகளுக்கு அறிகுறியாகும்.

அந்த "சம்பிரதாயமான விளக்கமளிப்பு" கடந்த தசாப்தத்தில் உலகளாவிய பொருளாதார கட்டமைப்பில் நடந்திருந்த இரண்டு பிரதான மாற்றங்களைப் புறக்கணித்திருந்தது. முதலாவதாக, எழுச்சியடைந்துவரும் சந்தைகள் என்றழைக்கப்படுவதில் பல நாடுகள் எண்ணெய் மற்றும் ஏனைய தொழில்துறை பண்டங்களின் ஏற்றுமதியைச் சார்ந்துள்ள நிலையில், இவை 1990 இல் வகித்த பங்கை விட இரண்டு மடங்கு அதிகமாக உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றன, அவற்றின் வருவாய்களில் ஏற்படும் ஏதேனும் வீழ்ச்சி முந்தையவற்றை விட மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அடுத்து இரண்டாவதாக, 2008-2009 நிதி நெருக்கடியானது வர்த்தக சுழற்சியில் வெறுமனே சந்தர்ப்பச்சூழலால் ஏற்பட்ட கீழ்நோக்கிய திருப்பம் அல்ல மாறாக உலகளாவிய பொருளாதாரத்தின் செயல்பாட்டில் ஒரு நிலைமுறிவாகும்.

ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கப்பட்டவாறு ஐபோன் விற்பனையில் முன்பில்லாத அளவிலான முதல்முறை சரிவுக்கு ஒரு காரணமாக எழுச்சி பெற்றுவரும் சந்தைகளின் தேவை சரிந்திருப்பதைச் சுட்டி காட்டியது. எண்ணெய் விலைகளின் கீழ்நோக்கிய திருப்பம் உலகளாவிய தேவை குறைவுக்கு மட்டும் பங்களிப்பு செய்யவில்லை, அது, எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அவற்றின் கடன்களை செலுத்தமுடியாத நிலையை அடைந்தால் ஒரு புத்தம் புதிய நிதியியல் நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்கவும் வேலை செய்கிறது.

வெனிசூலா அந்த வரிசையில் முதலில் இருக்கக்கூடும். எண்ணெய் விலைகள் அவற்றின் ஜனவரி வீழ்ச்சிகளையே தொடர்ந்தால், இந்தாண்டுக்கான வெனிசூலாவின் ஏற்றுமதி வருவாய்கள் $18 பில்லியனாக இருக்கும், அதனுடன் ஒப்பிட்டால் கடன் சேவை கட்டணங்கள் 10 பில்லியன் டாலராக இருக்கும். இது வெறுமனே 8 பில்லியன் டாலர் நிதியைக் கொண்டு வருகிறது, இதுவே கடந்த ஆண்டு 37 பில்லியன் டாலராக இருந்தது. 2014 இல் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்த அந்த பொருளாதாரம், அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 10 சதவீதம் சுருங்கியது.

ஏனைய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளும் விலைகளின் சூறாவளியில் சிக்கி உள்ளன. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அஜர்பைஜான் உடன் $4 பில்லியன் பிணையெடுப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, உலக வங்கி மற்றும் ஆபிரிக்க அபிவிருத்தி வங்கியிடமிருந்து நைஜீரியாவும் அதேமாதிரியான ஒரு கடனைக் கோரி வருகிறது.

உலகின் பிரதான எண்ணெய் நிறுவனங்கள் வேலைகள் மற்றும் மூலதன முதலீட்டு திட்டங்களை வெட்டி வருகையில், அவற்றின் இலாப-நஷ்ட அறிக்கைகளில் எண்ணெய் விலை வீழ்ச்சியும் இப்போது எடுத்துக்காட்டப்படுகின்றன. இரண்டாவது மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் குழுமமான அமெரிக்க உற்பத்தி நிறுவனம் செவ்ரோன், 2002 க்குப் பின்னர், கடந்த மாதம் அதன் முதல் காலாண்டு இழப்பை அறிவித்தது.

செவ்ரோன் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் $588 மில்லியன் இழப்பைச் சந்தித்தது, 2014 இல் இதே காலாண்டுடன் ஒப்பிட்டால் அப்போது அது $3.5 பில்லியன் இலாபம் ஈட்டியிருந்தது. அந்நிறுவனத்தின் சர்வதேச ஆலைகளை விட அமெரிக்காவில் அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிக உற்பத்தி செலவுகளைக் கொண்டிருக்கும் நிலையில் அது மிகவும் பலவீனமான பகுதியாக இருந்தது. 2014 இல் அதன் 3.3 பில்லியன் டாலர் இலாபத்துடன் ஒப்பிடுகையில், அது 4.1 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்தது. அமெரிக்காவிற்கு வெளியே உற்பத்தியிலிருந்து $2.1 பில்லியன் இலாபங்கள் வந்தன, ஆனால் இது முந்தைய ஆண்டுகளின் முடிவுகளை விட 85 சதவீதம் சரிவாகும்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ExxonMobil அதன் போட்டியாளர்களை விட இலாபங்களில் ஒரு சிறிய சரிவைப் பதிவு செய்தது. அதன் இலாபங்கள் $2.78 பில்லியனாக இருந்தது, இது 2014 உடன் ஒப்பிடுகையில் 58 சதவீத வீழ்ச்சியாகும். ஆனால் அந்நிறுவனம் 2015 இல் அதன் மூலதன செலவுகளில் 19 சதவீதம் குறைத்ததைத் தொடர்ந்து, இந்தாண்டு மூலதன செலவுகளில் கூடுதலாக 25 சதவீதத்தைக் குறைக்க பொறுப்பேற்றிருந்தது.

ஷெல் நிறுவனம் 1.9 பில்லியன் டாலர் வருடாந்தர இலாபங்களில் 87 சதவீத வீழ்ச்சியைத் தொடர்ந்து, $10 பில்லியன் சொத்துக்களை அது விற்க இருப்பதாக அறிவித்தது. ஷெல் நிறுவன தலைமை நிர்வாகி பென் வான் பெவூர்ட்ன் கூறுகையில், எண்ணெய் விலை வீழ்ச்சியை முகங்கொடுத்திருப்பதால் அந்நிறுவனம் "குறிப்பிடத்தக்க மாற்றங்களை" செய்யவிருப்பதாக தெரிவித்தார். அது 7,500 வேலைகளை இல்லாதொழித்துள்ளதுடன், இன்னும் கூடுதலாக 2,800 வேலைகளை வெட்ட இருக்கிறது.

ஷெல் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான BG 35 பில்லியன் பவுண்ட் மதிப்பு உடன்படிக்கையுடன் வாங்குவதிலிருந்து இன்னும் கூடுதல் "சீர்திருத்தங்கள்" வரக்கூடும். கச்சா எண்ணெய் விலை தற்போதைய பேரலுக்கு $30 அண்மித்த மட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் $60 இருக்கும் என்ற கணக்கீடு மற்றும் ஒரு கணிசமான காலத்திற்கு அதே மட்டங்களில் இருக்கும் என்ற முன்அனுமானங்களின் மீது அந்த ஒருங்கிணைப்பு அமைந்துள்ளது.

பிரதான எண்ணெய் நிறுவனங்களிலேயே மிகவும் மோசமான இடத்தில் இருப்பது BP ஆக தெரிகிறது. 2014 இல் அதன் $8.1 பில்லியன் இலாபத்துடன் ஒப்பிடுகையில், 2015 இல் $5.2 பில்லியன் இழப்பைப் பதிவு செய்தது, இது முன்பில்லாத அளவில் மோசமான விளைவாகும். தற்போதைய விலைகளின் கீழ் பல நடவடிக்கைகளில் இலாபமின்றி இருக்கும் அதன் வடக்கு கடல் எண்ணெய் வயல்களின் மதிப்பை விட குறைவாக, அது நான்காம் காலாண்டில் மட்டும் $2.2 பில்லியன் இழப்பைச் சந்தித்தது, 2014 இன் அதே காலாண்டில் அது $969 மில்லியன் இழப்பைக் கண்டிருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் BP அதன் செயல்பாடுகள் எங்கிலும் இருந்து சுமார் 7,000 வேலைகளை வெட்ட இருப்பதாக அறிவித்தது, இது அதன் தொழிலாளர் சக்தியில் 9 சதவீதமாகும்.

மொத்தத்தில் எரிசக்தித்துறை 2015 இல் $595 பில்லியனாக 22 சதவீதம் செலவினங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து, இந்தாண்டு $522 பில்லியன் செலவினங்களை வெட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது 1986 க்குப் பின்னர் முதல்முறையாக இருக்கும், அப்போது இத்தொழில்துறை வரிசையாக இரண்டு ஆண்டுகள் செலவினங்களைக் குறைத்தது.

எண்ணெய் விலைகளின் கீழ்நோக்கிய சரிவானது, செவ்ரோன் உட்பட முன்னணி அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் கடன்பெறுவதற்கான மதிப்பை ஸ்டாண்டர்டு & புவர்ஸ் வெட்டுவதற்கு முடிவெடுக்க இட்டுச் சென்றுள்ளது. அந்த மதிப்பீட்டு நிறுவனம் மூன்று அமெரிக்க ஷெல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின்—Continental Resources, Southwestern Energy மற்றும் Hunt Oil—கடன்பெறுவதற்கான மதிப்பை முதலீட்டைப் பெறுவதற்குரிய அந்தஸ்தில் இருந்து "பெறுமதியற்ற" அந்தஸ்திற்குக் குறைத்தது.

Exxon நிறுவனம் அதன் மூன்று அடுக்கு A கடன்பெறும் மதிப்பைத் தக்க வைத்துக் கொண்ட போதினும் எஸ்&பி அதை மதிப்பிறக்கத்திற்கான சாத்தியக்கூறு பட்டியலில் வைத்துள்ளது, அது குறித்து அடுத்த 90 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படுமென அது தெரிவிக்கிறது. திடீர்வீழ்ச்சியின் தாக்கம் முன்கணிப்புகளிலும் காண முடிந்தது. எஸ்&பி, டிசம்பர் 2014 இல், இலகுரக கச்சா எண்ணெய்க்கான விலையை நீண்டகால அடிப்படையில் பேரலுக்கு $85 ஆக நிர்ணயித்து அதன் கணக்கீடுகளைச் செய்திருந்தது. அது இந்தாண்டு $40 ஆக வெட்டப்பட்டுள்ளது, 2018 வாக்கில் $50 ஆக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

கடன்பெறுவதற்கான மதிப்பு குறைக்கப்பட்டதற்கு அப்பாற்பட்டு, எண்ணெய் விலை வீழ்ச்சி நிதியியல் அமைப்புமுறை மீதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக அமெரிக்க வங்கிகள் வழியாக, அதுவும் குறிப்பாக ஷெல் எண்ணெய் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியுள்ள சிறிய பிராந்திய வங்கிகளினூடாக. வோல் ஸ்ட்ரீட் இன் எஸ்&பி 500 பங்குக் குறியீட்டின் 5 சதவீத வீழ்ச்சியில் வங்கித்துறை பங்குகளின் வீழ்ச்சியே பிரதான பங்களிப்பாளராக இருந்ததை ஜனவரி மாத புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

விலைகள் குறைந்ததன் தாக்கம் முழுமையாக இன்னும் உணரப்படவில்லை ஏனென்றால் எண்ணெய் உற்பத்தியாளர்களால் தற்போதைய சந்தை விலைகளை விட எதிர்கால விற்பனை ஒப்பந்தங்களை கூடுதல் விலைக்கு செய்துவைத்திருப்பதால் அதைக் கொண்டு அவற்றின் நிலையை சமாளித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் அத்தகைய ஒப்பந்தங்கள் காலாவதியானதும், எண்ணெய் விலைகளில் குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய திருப்பம் இருந்தால் ஒழிய, சில நிலக்கீழான கற்களிலிருந்து எடுக்கப்படும் shale எண்ணெய் உற்பத்தியாளர்கள் இலாபமின்றி போவார்கள்.