சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

யுத்தகாலத்தில் அரச படைகளும் மற்றும் துணைப்டைக் குழுக்களுமே ஆட்கடத்தலில் ஈடுபட்டார்கள்

By Subash Somachandran
31 December 2015

Use this version to printSend feedback

கடந்த டிசம்பர் 11ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை நடந்த, “காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுமேற்கொண்ட விசாரணைகள், மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் பலவந்தமாக கடத்தப்பட்டதற்கும், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், இலங்கை இராணுவமும் அதனது துணைப் படைக் குழுக்களுமே பொறுப்பு என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் அதிர்ச்சியான, கொடூரமான விபரங்களை பகிரங்கப் படுத்தியுள்ளனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்குற்ற விசாரணை அழுத்தங்களுக்கு முகம் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு என்ற ஒரு கண்துடைப்பு பொறிமுறையினை 2010ல் நியமித்தார். இந்த ஆணைக்குழு, தனது அறிக்கையில் 2002ன் போர்நிறுத்த உடன்பாட்டின் உடைவிற்கும், அதைத் தொடர்ந்த போர் 2009ல் முடிவிற்கு வருகையில் ஏற்பட்ட மனித பேரழிவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு என்ற இனவாத அரசின் பொய் குற்றச்சாட்டினை உறுதி செய்தது.

இந்த ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் அதில் அங்கம் வகித்த முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலமையில் இராஜபக்ஷ ஆவணி 2013ல் ஒரு  ஜனாதிபதி ஆணைக்குழுவினை நியமித்தார். இது போற்குற்றங்களுக்கு பொறுப்பான ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், படையினர்களின் குற்றங்களை மூடி மறைத்து அரசாங்கத்தினை குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பதனை மட்டும் நோக்கமாக கொண்டிருந்தது.

ஜனவரியில் அமெரிக்க ஆட்சிமாற்ற நடவடிக்கை மூலம் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவும், அதன் பின்னரான பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமும், போர்குற்றங்கள் தொடர்பாக முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த விசாரணை நடாத்தப்படுகின்றது.

விசாரணையில் கலந்து கொண்டு சாட்சியமளித்தோரில் பெரும்பான்மையானோர் தங்களின் உறவினர்களை பலவந்தமாக கடத்திச் சென்றது அரச இராணுவமும் அதன் துணைப்படையாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலமையிலான ஈழமக்கள் ஜனநாயக் கட்சியுமே என பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

இவர்களில் சிலர், 1987ன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அமைதிப்படைஎன்ற பெயரில் வடக்கு கிழக்கினை ஆக்கிரமித்த இந்திய இராணுவத்தினரால் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். இன்னும் சிலர் தங்களது சாட்சியத்தில் தங்களது உறவுகளை போட்டி இயக்கங்களோடு இணைந்து இருந்ததற்காக 1990 இல் தமீழிழ விடுதலைப் புலிகள் கடத்தினார்கள் என தெரிவித்தனர்.

ஆறு நாட்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சங்கானை, நல்லூர் மற்றும் கோப்பாய் போன்ற இடங்களில் நடந்த விசாரணைகளில் சாட்சியமளித்தோர் எங்கே எந்த நிலைமைகளில் இந்த பலவந்த கடத்தல்கள் இடம்பெற்றன என்பதை மிகவும் துல்லியமாக நினைவில் வைத்திருந்தது தெரிய வந்தது. இவர்களில் பலர் 1989 இலிருந்து 2009 ல் யுத்தம் முடிவுபெறும் வரை நடந்த இந்த நிகழ்வுகளை ஆத்திரம் கலந்த சோகத்துடன் கண்ணீர் மல்க தங்கள் சாட்சியங்களில் விபரித்தனர்.

இனவாத யுத்தம் 2009 மே மாதம் 18ம் திகதி புலிகளின் உயர் மட்ட தலைமை முழுமையாக அழிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தபோது சரணடைந்த நூற்றுக்கணக்கான தளபதிகள், பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமையினை சாட்சிகள் உறுதிப் படுத்தியுள்ளன இவர்களில் பெரும்பாலோனோர் புலிகளின் ஆதரவாளரும் வன்னிப்பகுதியில் நன்கு தெரிந்தவருமான கிறீஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் என்பவர் தலமையில் சரணடைந்தனர்.

வரதராஜான் சாந்தினி எனும் புலிகள் அமைப்பின் அங்கத்தவர் ஒருவரின் மனைவி சாட்சியம் அளிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் நிதித்துறையில் இருந்த கருவண்ணன் எனப்படும் சூசைப்பிள்ளை வரதராஜன் ஆகிய எனது கணவரை தான் இராணுவத்திடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். கணவருடன் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகளான பாப்பா, இளம்பருதி, எழிலன், பாபு, ரூபன், வேலவன், தங்கன், லோரன்ஸ் உட்பட 50 தொடக்கம் 60 பேர் வரையில் இராணுவத்தினர் மூன்று பஸ்களில் ஏற்றி சென்றதை கண்டேன் என்றார்.

ஒரு தாயார் கூறுகையில்,பருத்தித்துறையை சேர்ந்த தங்கவேல் கிருபாகரன் எனும் எனது மகன் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி கடைக்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளார்.

மகன் காணாமல் போக முதல் அக்டோபர் மாதம் 1ம் திகதி இராணுவத்தினர் மகனின் அடையாள அட்டையினை பறித்திருந்தனர். மறுநாள் அதனை திரும்ப மகனிடம் கையளித்தனர். பின்னர் 14ம் திகதி வல்வெட்டித்துறை இராணுவத்தினர் எனது மகன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற அனுமதி பத்திரம் கொடுத்து இருந்தார்கள். இதன் பின்னரே மகன் காணாமல் போனார். மகன் காணாமல் போன பின்னர். மகனை பற்றிய தகவல் இல்லைஎன்றார்.

கடத்தப்படுகையில் 19 வயதான ஒரு இளைஞனின் தாயார் கூறுகையில், ஈச்சமோட்டையில் உள்ள எமது வீட்டுக்கு 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி சிவில் உடையில் இரவு 10 மணியளவில் வந்த 7 பேர் கொண்ட குழுவினால் இரண்டு மணித்தியாலமாக எனது மகனான முத்துலிங்கம் மலரவன் விசாரணை செய்யப்பட்டார். தாயார் அடுத்த நாள் தனது மகனை விசாரணைக்காக எங்கு வேண்டுமாலும் அழைத்து வர தயார் என்று கெஞ்சியபோதும் அவர்கள் மகன் கத்த கத்த தம்முடன் இழுத்து சென்றனர்”.

மகனை கொண்டு சென்ற மறுநாள் காலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டில் இருந்த எமது தொலைபேசியை பறித்து சென்றனர். அதில் ஒருவர் .பி.டி.பி. உறுப்பினர் அவரை அடையாளம் கண்டு கொண்டு அன்றைய தினமே யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள .பி.டி.பி. அலுவலகத்திற்கு சென்றபோது முதல் நாள் எமது வீட்டுக்கு வந்த குழுவை சேர்ந்த மூவரை கண்டேன். அவர்களிடம் எனது மகன் எங்கே என கேட்டபோது தமக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டு முகாமினுள் சென்று விட்டனர்என்றார்.

ஆணைக் குழு, “யாழில் ஆறு தினங்களில் விசாரணைக்காக 1620 அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 925 பேர் தமது சாட்சியங்களை அளித்துள்ளனர். புதிதாக 337 பேர் பதிவுகளை மேற்கொண்டு அதில் 68 பேர் சாட்சியம் அளித்தனர்எனத் தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கையிலும் பலமடங்கு அதிகமானவர்கள் நாடு தழுவிய அளவில் கைது செய்யப்பட்டு காணமல் போயுள்ளனர் என்பதை முப்பது வருடகால போரின் போது நிலவிய காட்டுமிராண்டித்தன இராணுவ அடக்குமுறையிலிருந்து அனுமானிக்க முடியும். இவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. இதற்கான கணக்கெடுப்புக்கள் இதற்கு தலைமை தாங்கிய அரசாங்களினாலோ அல்லது வேறு எந்த அமைப்புக்களாலோ மேற்கொள்ளப்படவில்லை. 

ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கனவே வெளியிட்ட ஒரு அறிக்கை வடக்கு, கிழக்கில் 18,476 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அதுபற்றி தாங்கள் விசாரணை செய்ததாகவும் தெரிவிக்கின்றது. அதன்படி, ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படல் சம்பவத்தில், பாதுகாப்பு படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள், கருணா குழு, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி, புளட் என அழைக்கப்டும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் இந்திய அமைதி படைகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக கூறுகின்றது.

கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை, இனம் தெரியாதவர்களால் சுட்டுப்படுகொலை செய்தல் என்பன யுத்த காலத்தின் சமூக வாழ்க்கையில் ஒரு தொடர்சியான அச்சுறுத்தலாக இருந்தது. இந்த குற்றசெயல்களின் பிரதான பாத்திரத்தினை மாறி, மாறி ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்களும், இந்திய ஆக்கிரமிப்பு படைகளும் வகித்தன.

தற்போதைய அமெரிக்க சார்பு ஆட்சி மாற்றத்தின் முக்கிய சூத்திரதாரியான சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகிக்கையில் 1995 ல் 600 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டது தொடர்பான முழு உண்மைகளை வெளிக்கொணர்வது இன்று மட்டும் நிறைவேற்றப்படவில்லை.

2013 டிசம்பர் மாதத்தில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று மன்னாரில் இருப்பது அம்பலத்திற்கு வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக இது தொடர்பான ஆய்வுகளும், விசாரணைகளும் உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் விரைவாக நடத்தப்படவில்லை. அண்மையில் திருகோணமலை கடற்படை முகாமில் ஒரு சித்திரவதை முகாம் இருந்ததை உறுதிப்படுத்திய ஐக்கிய-நாடுகள் சபையின் விசேட குழு இது மாதிரியான முகாம்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருப்பதற்கான சாத்தியத்தினை உறுதிப்படுத்தியது.

இராணுவத்தின் துணைப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அதனது கொடுமையான பெரும் பங்களிப்பிற்கான அவமானகரமான புகழில் முன்னணியில் இருந்தாலும் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொண்ட அனைத்து இயக்கங்களும் இந்த குற்றங்களில் பங்கு வகிக்கின்றன. புலிகள் நூற்றுக்கணக்கான தங்களது அரசியல் எதிரிகளை கடத்தி சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர்.

இன்றைய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இராணுவத்தின் துணைப்படையாக 1987 லிருந்து செயற்ப்பட்டது. அதேபோல் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கூலிப்படைகளாக செயற்பட்டன. இன்று பாராளுமன்ற அங்கத்தவர்களாகவும், தமிழ்த்தேசிய குற்ற அரசியலின் பாதுகாவலர்களாகவும் நடமாடும் இவர்களே தமது உறவினர்களை கடத்தினார்கள் அல்லது கொலை செய்தனர் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவாக தெரியும்.     

ஆணைக்குழுவுக்கு முன்னால் பாதிக்கபட்டவர்கள் தமது சாட்சியங்களைப் பதிவு செய்த போதிலும், உறவினர்களைக் கண்டுபிடிக்கவோ அல்லது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டனைகள் வழங்கப்படும் என்பதில் அவர்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்பதை மக்ஸ்வெல் பரணகமவின் பத்திரிகைச் செய்தி வெளிக்காட்டுகின்றது.

அவர் கூறுகின்றார், “விடுதலைப் புலிகள் ஒரு இலக்குக்காக போராடினார்கள் அதேபோன்று இராணுவத்தினரும் தமக்கு பணிக்கப்பட்டதற்காக யுத்தம் செய்தனர். அதன் போது சில துரதிஸ்ட வசமான விடயங்களும் கவலைக்கு உரிய விடயங்களும் இடம்பெற்று உள்ளன. அதில் மனித இனத்தை இம்சிக்கின்றவாறான குற்றங்களை இரு தரப்பில் உள்ள சிலரே செய்துள்ளனர். அதற்காக இரு தரப்பினரையும் நீதிமன்றம் கொலைகாரர்களை தண்டிப்பது போன்று தண்டிக்க முடியாது.”

நடந்து முடிந்த இந்த விசாரணைகள் இராணுவ புலனாய்வர்களின் கட்டுப்பாட்டிலேயே நடாத்தப்பட்டது. விசாரணை மண்டபங்களுக்கு வெளியே விசாரணைக்கு செல்பவர்களை அவதானித்த அவர்கள் மண்டபத்தின் உள்ளே புகைப்படங்கள் எடுப்பதற்கும், ஒளிப்பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தனர். இது சாட்சியம் வழங்கியவர்கள் மீது தொடர்ச்சியான இராணுவ கெடுபிடிகளை அதிகரிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியாகும்.