சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

2016 will be a year of escalating class struggle

2016 தீவிரமடைந்துவரும் வர்க்கப் போராட்ட வருடமா இருக்கும்

By Jerry White 
4 January 2016

Use this version to printSend feedback

அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கம், உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் முடிவற்று விரிவடையும் யுத்தத்திற்கும் தொழிலாளர்கள் விலைகொடுக்க வேண்டும் என்று கோருவது போல, 2016ல் வாழ்வின் என்றுமிரா அளவு மேலாதிக்கம் செய்யும் அம்சமாக வர்க்கப் பகைமை இருக்கும்.

கடந்த ஆண்டானது சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பின் ஆரம்ப வெளிப்பாடுகளின் மூலம் குறிப்பிடப்பட்டது. மிகவும் முக்கியமான போராட்டங்களில் ஒன்று உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் உள்ள வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டமாகும்.

வருடத்தின் பிந்தைய மாதங்களில், கார்ப்பொரேட் நிறுவனங்களும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கமும் (UAW) ஃபியட் கிறைஸ்லர் (FCA), ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்ட் நிறுவனத்திற்கு சார்பான ஒப்பந்தங்களுக்கு எதிரான பரந்த எதிர்ப்பை, பொய்ப்பிரச்சாரம், ஆத்திரமூட்டல் மற்றும் கள்ளவோட்டு ஊடாகவே கடந்துவர முடிந்திருந்தது. அப்படி இருந்தும் கூட, 32 ஆண்டுகளில் முதல் முறையாக ஃபியட் கிறைஸ்லர் (FCA) தொழிலாளர்கள் UAW ஆதரித்த ஒரு தேசிய ஒப்பந்தத்தை வாக்களித்து தோற்கடித்தார்கள்.

வாகனத்துறை தொழிலாளர்களின் கோபம், வெறுப்பிற்குரிய இரண்டு அடுக்கு சம்பளம் மற்றும் பயன் முறை அமைப்பைப் பராமரிக்கும் மற்றும் உழைப்புச் செலவு அதிகரிப்பை பணவீக்க வீதத்திற்கு கீழாக வைத்து கட்டுப்படுத்தும் புதிய நான்கு ஆண்டு ஒப்பந்தங்களுக்கு குரோதத்தை மட்டும் காட்டவில்லை, வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மை, சம்பளத்தில் தேக்கநிலை, சுகாதார பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய வசதிகளில் முடிவிலா தாக்குதல்களால் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான அதிருப்தியையும் எதிரொலித்தது.

அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டம், சர்வதேச அளவிலான வர்க்கப் போராட்டத்தின் ஒரு பரந்த புதுப்பிப்பின் பாகமாகும். கடந்த ஆண்டானது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடாவிலும், அதேபோல சீனா, பிரேசில், இந்தியா மற்றும் துருக்கி என எழுச்சி பெற்றுவரும் சந்தைகள் என்ற அழைக்கப்படுவனவற்றிலும் பிரதான வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களைக் கண்டது.

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட China Labour Bulletin இன் படி, பெரிய பொருளாதார சரிவை எதிர்கொள்கையில், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் ஜவுளி, எலெக்டிரானிக்ஸ், சுரங்கத்தொழில் மற்றும் கட்டுமானத்தொழில் இவற்றில் நவம்பர் 2015ல் 301 சம்பவங்களின் மட்டத்தை அடைந்தன. தொழிலாளர்கள் நடவடிக்கையின் பெரும்பகுதி, ஒன்றிணைப்புக்களால் மூடப்பட்ட அல்லது கபளீகரம் செய்யப்பட்ட நிறுவனங்களில், பழைய சம்பளம், சலுகை மற்றும் ஓய்வூதிய கடப்பாடுகள் ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் பற்றியதாக இருந்தன.

பிரேசில் 1930 களுக்குப் பின்னர் இரண்டாவது தொடர்ச்சியான பொருளாதார சுருக்கத்தை எதிர்கொள்கையில், பெரும் வேலைகுறைப்பும் கூட அங்குள்ள வாகனத்துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களை தூண்டிவிட்டன மற்றும் இதர வெளிநடப்புக்கள் வங்கி மற்றும் அரசுக்கு சொந்தமான பெட்ரோலியம் துறைகளை தாக்கின. கடந்த ஆண்டு கிரீஸ், இந்தியா, அர்ஜெண்டினா, உருகுவே மற்றும் பர்க்கினா பாஸோவில் பொதுவேலைநிறுத்தங்கள் வெடித்தன.

ஜேர்மனியில், நவம்பரில் லுஃப்தான்சா விமானசேவை தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அமெரிக்காவிற்கு சொந்தமான ஆன்லைன் சில்லறை வணிக அமேசானால் இயக்கப்படும் சரக்ககங்களில் ஏற்பட்ட வேலை நிறுத்தங்களுடன் ஆண்டு முடிவடைந்தது மற்றும் இரயில் ஓட்டுநர்கள், அஞ்சல் தொழிலாளர்கள், மழலைகள் நிலையம் மற்றும் சிறுவர் பள்ளிகளின் ஆசிரியர்கள் இவர்களாலான பொதுத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்த ஆண்டாக இருந்தது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் வளர்ந்து கொண்டிருந்த தொழில்துறை நடவடிக்கையுடன் பொருந்திய வேலைநிறுத்தங்கள், நீண்டகால தொழிலாளர்-நிர்வாக உறவுகளின்ஜேர்மன் மாதிரிக்குஒரு அச்சுறுத்தலாக விவரிக்கப்பட்டன.

ஃபைனான்சியல் டைம்ஸ் ஆல் வாக்களிக்கப்பட்ட யூரோப்பகுதி பொருளியலாளர்கள் தொழிலாளர் சந்தையின்கட்டமைப்பு சீர்திருத்தங்கள்என்றழைக்கப்படும் ஒரு புதுப்பிக்கப்பட்ட உந்துதலுக்கான அழைப்புடன் கடந்த வாரம் புத்தாண்டிற்கான நிகழ்ச்சிநிரலை வகுத்தனர். இதன் அர்த்தம் சம்பளங்களை நிர்வகிக்கும் எஞ்சிய ஒழுங்குமுறைகளையும் வேலைநிலைமைகளையும் வெட்டுவதும் தொழிலாளர்களை மலிவான கூலியுழைப்பு சக்தியாக குறைப்பதுமே ஆகும்.

ஒவ்வொருநாட்டிலும், வர்க்கப் போராட்டத்தின் எந்த வெளிப்பாட்டையும் கட்டுப்படுத்துவதற்கு வேலை செய்யும் மற்றும் முதலாளித்துவ அமைப்புடன் அது ஒரு மோதலுக்கு அபிவிருத்தி அடைவதை தடுக்கும், தேசியபெருநிறுவன தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்கள் மோதலுக்கு வருகின்றனர். கிரேக்கம் மற்றும் இதர நாடுகளில் வங்கிகளின் ஆணைகள் மற்றும் பொருளாதார சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான பரந்த குரோதமானது தொழிலாளர்களை சிரிசா போன்ற போலி இடது கட்சிகளுடன் ஒரு மோதலுக்கு தள்ளுகின்றன.

வர்க்கப் போராட்டமானது அதிகரித்த அளவில் பிற்போக்கு தொழிறசங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளால் திணிக்கப்பட்ட கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரமாக உடைக்க வேண்டும். இந்த போக்கானது, அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் அதன் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டது. அங்கே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள த்திற்கு திரும்பினர் மற்றும் அதன் வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டம் குறித்த செய்தியறிக்கைகள் ஆனது நிறுவனங்களின் எதிர்ப்புக் கும்பல், பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள ஊடகம், UAW மற்றும் ஒபாமா நிர்வாகம் இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு மூலோபாயத்தையும் உண்மையையும் கொண்டு தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கியது.

அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது சர்வதேச தாக்கங்களை கொண்டுள்ளது. பூகோளரீதியாய் உலகை மறுபங்கீடு செய்தலை முன்னெடுத்துச் செல்லும் அமெரிக்க ஆளும் வர்க்கமானது, தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பின் காரணமாக உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை தாக்குவதற்கு நீண்டகாலமாக சுதந்திரமாக விடப்பட்டிருக்கிறது. ஆயினும், வோல் ஸ்ட்ரீட் இன் நிதி ஆதிக்க ஆட்சிதனது வீட்டையேஒழுங்கில் வைக்க முடியாதுள்ளது என்பது அதிகரித்த அளவில் அம்பலப்பட்டு வருகிறது.

வாகனத்துறை தொழிலாளர்களது போர்க்குணமும், USW தொழிற்சங்க நாசவேலை எதிர்கொள்கையில் மாதக்கணக்கில் வேலைநிறுத்தத்தை தொடுத்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் உள்பட அமெரிக்க தொழிலாளர்களின் இதர பகுதியினரின் போர்க்குணமும் சக்திமிக்க பொருளாதார மற்றும் சமூக துடிப்புக்களால் தூண்டப்பட்டிருக்கிறது. இவை மட்டுமே புத்தாண்டில் உக்கிரமடையப் போகின்றன. இதில் 2008 நிதியியல் நெருக்கடி மற்றும் அதி செல்வந்தர்களை மட்டும் ஆதாயமடையவைக்கும்பொருளாதார மீட்சிஎன்று சொல்லப்படுவதன் நடந்து கொண்டிருக்கும் பாதிப்பும் உள்ளடங்கும்.

தனியார் துறை தொழிலாளர்களின் பெயரளவிலான கூலியானது 2015ல் மற்றும் 2009ல் உத்தியோகபூர்வ மீட்சி தொடங்கியதிலிருந்து இதர ஒவ்வொரு ஆண்டும் 2 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதத்திற்கு இடையில் மட்டுமே உயர்ந்தது. உண்மைக் கூலியானது தொடர்ந்து ஒரே மட்டத்தில் இருந்தது. மாபெரும் பொருளாதார தாழ்விற்கு பின்னர் கூலி தேக்க நிலையின் நீண்ட காலகட்டத்தினூடாக அமெரிக்க தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, 2009 க்குப் பின்னர் இருந்து கிட்டத்தட்ட அனைத்து வருமான ஈட்டமும் மக்கள் தொகையின் உயர்மட்ட ஒரு சதவீதத்தினருக்கே சென்றிருக்கிறது.

2015-16ல் ஒப்பந்தங்கள்  காலாவதி ஆவதால் மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்களால்கூலி நெருக்குதல்பற்றிய ஆபத்து பற்றி சிந்தனைக்குழாமினர், ஊடகம் மற்றும் பல்வேறு வணிக மற்றும் அரசியல் நபர்கள் ஆகியோரால் செய்யப்பட்ட எச்சிரிக்கைகளுடன் கடந்த ஆண்டு தொடங்கியது. வாகனத்துறை தொழிலாளர்களுடன் சேர்ந்து, இது தொலைத்தொடர்பு, இரும்பு எஃகு, விமானசேவை, மளிகைசாமான் மற்றும் சுகாதாரத்துறைகளில் உள்ள தொழிலாளர்களையும், அதேபோல அமெரிக்க அஞ்சல் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் ஏனைய பொதுத்துறை தொழிலாளர்களையும் உள்ளடக்கும்.

ஒபாமா நிர்வாகத்துடன் வேலைசெய்துகொண்டு, AFL-CIO மற்றும் இதர தொழிற்சங்கங்கள் எந்த போராட்டத்தையும் வேண்டுமென்றே தடுத்தன, கடந்த ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்ட 11 வேலை நிறுத்தங்களில் மட்டும்தான் 1000 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். 2015 வேலைநிறுத்த எண்ணிக்கை 2014 உடன் சேர்ந்து 1947க்குப் பின்னரான இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவானது.

US Steel மற்றும் ArcelorMittal இன் 30,000 தொழிலாளர்களால் வாகனத்துறை தொழிலாளர்கள் பாணியில் கிளர்ச்சி ஏற்படுமென அஞ்சி, USW தொழிற்சங்கமானது, பென்சில்வேனியா மற்றும் ஏனைய பல மாநிலங்களிலும் உள்ள Allegheny Technology தொழிலாளர்களது கிட்டத்தட்ட ஐந்து மாத கதவடைப்பை வேண்டுமென்றே தனிமைப்படுத்தியதுடன் புத்தாண்டானது ஆரம்பமானது. USW தொழிற்சங்கமானது US Steel உடன் ஒரு உடன்பாட்டை எட்டியதாக அறிவித்தது, ஆனால் எந்தவிவரமும் அறிவிக்கப்படவில்லை மற்றும் அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் ஒரு ஒப்பந்தம் மூலம் தள்ளுவதற்கு திரைக்குப் பின் வேலை செய்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையில், வெரிசோன் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள், சிகாகோ ஆசிரியர்கள் மற்றும் அரை மில்லியனுக்கும் மேலான அமெரிக்க அஞ்சல் அலுவலக தொழிலாளர்கள் ஒப்பந்தங்கள் ஏதுமின்றி அல்லது நீட்டிக்கப்பட்ட உடன்படிக்கையுடன் தொடர்ந்து வேலைசெய்து வருகிறார்கள்.

பிரதான ஊடகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட அதேவேளை, எதிர்ப்பின் வளர்ந்துவரும் மனோபாவமானது பல வெளிப்பாடுகளைக் கண்டிருக்கிறது. கடந்த மாதம் 12,000 Southwest Airlines விமானப் பணியாளர்கள் 87 சதவீதம் வாக்களித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தால் மீண்டும் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்தனர். அவர்களது பழைய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே காலாவதி ஆகிவிட்டது. United flight attendants க்கான ஒப்பந்தம் பிப்ரவரி 28லேயே காலாவதியாகிய அதேவேளை, தங்களது தொழிற்சங்கம் நடுவராக இருந்து சமரசம் செய்து தீர்க்கவேண்டிய நிலையை ஏற்கும் முன்னர், அமெரிக்க விமான சேவை விமான பணியாளர்கள் ஒப்பந்தத்தை இருமுறை வாக்களித்து தோற்கடித்தனர்.

சௌத்வெஸ்ட்டில் எட்டாயிரம் விமானிகள் நவம்பரில் இரண்டுக்கு ஒன்று என்ற அளவு வேறுபாட்டில் தங்களின் ஒப்பந்தத்தை தோற்கடித்தனர், அதேவேளை டெல்டாவில் 65 சதவீத விமானிகள் புதிய மூன்று வருட ஒப்பந்தத்தை நிராகரிக்க வாக்களித்த பின்னர், பேச்சுவார்த்தைகள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. யுனைட்டெட்டில் விமானிகளும் தொழில் நுட்பவியலாளர்களும் பேரங்கள் மீதாக தற்போது வாக்களித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, UPS விமானிகள் வேலைநிறுத்தத்தை அங்கீகரித்துள்ளனர்.

வோல்வோ டிரக் மற்றும் 75,000 நியூயோர்க் மாநில பணியாளர்களைப் போலவே, அனைத்து பிரதான சரக்கு, இருப்புப்பாதை சேவைகளின் ஒப்பந்தங்களும் இந்த ஆண்டு முடிவடைகின்றன.

AFL-CIO மற்றும் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களை உள்ளடக்கி இருக்கும் நிறுவன சார்பு தொழிலாளர் அமைப்புக்களின் கட்டமைப்பிற்குள் இந்த போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட முடியாது. கீழ்மட்ட அணியின் தொழிற்சாலைக் குழுக்கள் உள்ளடங்கிய, தங்களது பிரதிநிதித்துவம் மற்றும் போராட்டத்தின் புதிய அமைப்புக்கள் தொழிலாளர்களுக்கு தேவைப்படுகின்றன.

அனைத்திற்கும் மேலாக, தொழிலாளர்கள் போராட்டங்களின் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைகையில் முக்கிய அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். போராடுவதற்கு விருப்பும் உறுதிப்பாடும் போல முக்கியமானது, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தாலும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளாலும் பின்பற்றப்படும் போர் மற்றும் சிக்கன கொள்கைகளை எதிர்ப்பதற்கு, தொழிலாளர்கள் முற்றிலும் தயாரிக்கப்பட்ட அரசியல் மூலோபாயத்தை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவில், இதன் அர்த்தம் ஒபாமா நிர்வாகத்திற்கும் இரு பெருமுதலாளித்துவ கட்சிகளுக்கும் அவர்கள் பேணும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கத்தின் வளர்ச்சி ஆகும்.

அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டங்கள், சர்வதேச சோலிசத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் நனவுபூர்வமாக கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.