சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation unions support to introduce sharecropping system

இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் பங்கு அறுவடை முறையை அறிமுகப்படுத்துவதை ஆதரிக்கின்றன

By M. Thevarajah
12 January 2016

Use this version to printSend feedback

இலங்கையில் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் வலப்பனையில் மகா ஊவா தோட்டத்தின் நிர்வாகம், தொழிற்சங்கங்களின் உதவியுடன் ஒப்பந்த ஊதிய முறைமையை செயல்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முறைமை, ஏற்கனவே தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைத்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, தொழிலாளர்களின் வேலைச் சுமையை அதிகரித்துள்ளது.

இது, பெரும் தேயிலை தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்யும், எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் நிராகரித்துள்ள பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ள ஒப்பந்த முறைமைக்கு ஏற்ப அமைந்ததாகும். ஆகிறது சங்கங்கள். இந்த திட்டமானது அற்ப நாள் சம்பள முறைமையை கூட சுரண்டி, அதற்குப் பதிலாக வருவாய் பகிர்வு முறைமையை மாற்றீடு செய்வதற்கானதாகும்.

இந்த திட்டத்தின் படி, ஒரு தொழிலாளிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலைச் செடிகள் ஒதுக்கப்படும், அவற்றை பராமரிக்கும் பொறுப்பு அவருடையது. உள்ளீட்டுச் செலவுகள் கம்பனியால் கழிக்கப்பட்ட பின்னர் வருமானத்தில் ஒரு பங்கு தொழிலாளிக்கு வழங்கப்படும். இந்த திட்டம் பங்கு-அறுவடை முறைமையை ஒத்ததாக உள்ளதுடன், கம்பனிகள் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மருத்துவ முறைமை போன்ற கடும் போராட்டத்தில் பெற்ற சமூக உரிமைகளை இல்லாமல் ஆக்குவதற்கு இதைப் பயன்படுத்துக்கொள்ள எதிர்பார்த்திருக்கின்றன.

மகா ஊவா தோட்டத்தின் நான்கு பிரிவுகளை சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் பெரும் நெக்குதலின் கீழ் இந்த ஒப்பந்த முறைமையை ஏற்றுக்கொண்டு கம்பனிகளுடன் தனிப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்த்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சுமார் 40 தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளதுடன் அவர்கள் இன்னமும் நாள் சம்பள முறைமையின் கீழ் வேலை செய்கின்றனர். இந்த தொழிலாளர்களின் வருமானத்தை விட வறுமானப் பங்கீடு முறைமையின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களின் மாத ருமானம் குறைவானதாகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 2000 முதல் 2,500 தேயிலைச் செடிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பங்கு அறுவடைக்காரர்கள் போல் தங்கள் பாகத்தை பராமரிக்க வேண்டும். கம்பனி உரம் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை வழங்குவதோடு அதற்காக  அவர்களின் மாத வருமானத்தில் 1000 ரூபாய்களை (6.96 அமெரிக்க டொலர்) வெட்டிக்கொள்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (..மு.), தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே..) மற்றும் பிரஜைகள் முன்னணி போன்ற இந்த தோட்த்தில் இயங்கும் தொழிற்சங்கங்கள், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொழிலாளர்களை நிர்ப்பந்தித்துள்ளன. .தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கத்தில் ஒரு அமைச்சரவை அமைச்சராக இருந்தார். ..மு. தலைவர் வி. ராதாகிருஷ்ணன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க தலைவர் பி. திகாம்பரமும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ளனர்.

பிரஜைகள் முன்னணியானது தொழிலாளர்களின் உரிமைகளின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தலைமையிலானதாகும். அவர் முன்னர் விக்கிரமசிங்கவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்து பின்னர் இராஜபக்ஷவின் விசுவாசியாக மாறியவர். அவர் எதிர் தொழிற்சங்கங்கள் மீதான அதிருப்தியை வஞ்சத்தனமாக சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றார்.


உலக சோசலிச வலைத் தள நிருபர் தொழிலாளர்களுடன் பேசுகிறார்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசிய மகா ஊவா தோட்டத்தின் ஒரு தொழிலாளி கூறியதாவது: "தொண்டமான் கைச்சாத்திடச் சொன்னதால்தான் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இப்போது நாம் தவறு செய்துவிட்டதாக உணர்கின்றோம். தொழிற்சங்கங்கள் எங்களை ஏமாற்றிவிட்டன. இப்போது எங்கள் மாத வருமானம் இரண்டு மூன்றாக 2,500-3,500 ரூபா வரை குறைந்துவிட்டது. முன்னர், 620 ரூபா நாள் சம்பளம் வாங்கிய போது கூட நாங்கள் மாதம் சுமார் 10,000-12,000 ரூபா பெற்றோம். நாங்கள் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் இந்த முறைமையின் கீழ் இழந்துவிட்டோம்."

"சக்தி தொலைக்காட்சி நிருபர்கள் தோட்டத்திற்குள் வந்து எங்கள் பிரச்சினைகள் பற்றி ஒரு விவரமான அறிக்கையை எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் அவர்கள் அதை ஒளிபரப்பவில்லை. நாங்கள் அது பற்றி கேட்ட போது தங்கள் நிறுவனம் அதை வெளியிட விரும்பவில்லை என்று அவர்கள் கூறினர்... " என்று அவர் மேலும் கூறினார்.

மகா ஊவா தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான நிலைமைகள் அம்பலப்படுத்தப்பட்டால் ம்பனிகள் பிரேரித்துள்ள இந்த புதிய முமைக்கு எதிராக பரந்த எதிர்ப்பு உருவாக்கக் கூடும் என்று கம்பனிகள் தெளிவாக அஞ்சுகின்றன.

டேலி எஃப்.டி. இந்த திட்டத்தைப் பாராட்டி சமீபத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரை, மகா ஊவா தொழிலாளர்கள் அவர்களது மாத வருமானம் அதிகரித்துக்கொண்டுள்ளனர், அவர்கள் புதிய முறைமை பற்றி மிகவும் சந்தோஷமாக உள்ளனர், என கூறிக்கொண்டது. எனினும், ஒப்பந்த அமைப்பின் கீழ் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ள உண்மையான நிலைமைகளையே இந்த நிலவரம் காண்பிக்கின்றது.

தானும் சக தொழிலாளர்களும் சேர்ந்து ஆகஸ்ட் பொது தேர்தலுக்கு பின்னர் அமைச்சர் திகாம்பரத்தை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்து, ஒப்பந்த முறைமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியதாக இன்னொரு தொழிலாளி கூறினார். "தான் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் தோட்டத்துக்கு வந்து முகாமையாளரை சந்திப்பதாக அவர் எங்களுக்கு வாக்குறுதியளித்தார். ஆனால் அவர் வரவில்லை. நாங்கள் இராகலையில் உள்ள .தொ.கா. அலுவலகத்துக்கு பல முறை சென்று இதில் தலையிடுமாறு அவர்களை கேட்டோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை. தொழிற்சங்கங்கள் எங்களிடம் சந்தாக்களை சேகரித்துக்கொண்டு நிர்வாகத்துக்கும் அரசாங்கத்துக்கும் சேவை செய்கின்றன" என அவர் கூறினார்.

"அரசாங்கம் மாறிவிட்டாலும் எங்களது வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக நிலைமைகள் மிகவும் மோசமாக மாறிவிட்டன. நான் தோட்டத் தொழிலாளர்களுக்கான உங்கள் அறிக்கையை வாசித்தேன். அதனுடன் முற்றிலும் உடன்படுகிறேன். நீங்கள் கூறியபடி தொழிலாளர்களின் உரிமைகளைக் காப்பதற்கு நடவடிக்கை குழுக்கள் தேவைதான். நான்
மேலும் உங்களுடன் கலந்துரையாட விரும்புகிறேன்," என அவர் மேலும் கூறினார்
.

ஏனைய தோட்டங்களில் போலவே மகா ஊவா தோட்டத் தொழிலாளர்களுக்கும், போதுமான வீட்டு வசதி மற்றும் சுகாதார வசதிகள் கிடையாது. ஒரு லயன் அறையில் 3 அல்லது 4 குடும்பங்கள் மலசல கூட மற்றும் தண்ணீர் வசதிகள் இல்லாமல் வாழ்கின்றனர். தோட்ட மருந்தகம் மூடப்பட்டுள்ளது. தோட்டத்துக்கு ஒரு வைத்தியர் இருக்கின்றார் ஆனால் மருந்துகள் இல்லை. தோட்டத் தொழிற்சாலை ஒரு வருடத்துக்கு முன்பு மூடப்பட்டதனால் 60 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

ஒரு பெண் தொழிலாளி ஒரு கற்பாறைக்கு அருகில் மண் குடிசையில் வாழ்கின்றார். தனது நிலைமையை விளக்கிய அவர், “மலையில் இருந்து கடந்த வருடம் ஒரு கல் உருண்டு வந்தது. நான் தற்செயலாக தப்பிவிட்டேன். மலைக் காலத்தில் நான் பீதியுடனேயே வாழ்கிறேன். நிர்வாகம் எங்களை கணக்கெடுப்பதில்லை. நான் மலையில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு 20,000 ரூபா செலவிட்டுள்ளேன். தொழிற்சங்கங்கள் எதுவும் செய்வதில்லை. அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் மட்டுமே வருகின்றன. அதன் பின்னர் உங்களால் அவர்களைக் காண முடியாது,” என்றார்.

களனிவெளி பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான டிக்கோயா சாஞ்சிமலைத் தோட்டத்தில் 2013ல் இந்த முறைமை "பரிசோதனைக்காக" அறிமுகப்படுத்தப்பட்டதுதோட்டத்தில் ஒரு கைவிடப்பட்ட பகுதியில் தொழிலாளர்களுக்கு 600 தேயிலை செடிகள் ஒதுக்கப்பட்டன. அந்த காணிகள் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் இந்த முறைமையை ஏற்குமாறும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வற்புறுத்தினார். அவர்கள் தோட்டத்தில் வாரத்தில் சனி, ஞாயிறு உட்பட ஒவ்வொரு நாளும் வேலைசெய்தனர். அவர்கள் நிலத்தை துப்புரவு செய்து பராமரித்தனர். நிர்வாகம் அவர்களுக்கு ஒரு கிலோ கொழுந்துக்கு 30 ரூபா மட்டுமே கொடுத்தது. எவ்வாறெனினும், இரண்டு மாதங்களுக்கு முன் நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை நிர்வாகம் எடுத்துக்கொண்டது.

களனிவெளி நிர்வாகம் கம்பனியின் ஏனைய தோட்டங்களிலும் இதை அறிமுகப்படுத்த முயன்றது. டிக்கோயாவில் உள்ள ஃபோர்டைஸ் தோட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை பயன்படுத்தி இந்த ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஜஸ்றீ தோட்ட நிர்வாகம் இதை செயல்படுத்த முயன்ற போதிலும் தொழிலாளர்களின் எதிர்ப்பின் மத்தியில் அதை நிறுத்தத் தள்ளப்பட்டது. பின்னர், இன்ஜஸ்றீ நிர்வாகம் ஏழு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து ஒரு வேட்டையாடலை கட்டவிழ்த்துவிட்டது. .தொ.கா. தொழிலாளர்களை ஒழுக்கப்படுத்துவதாக உறுதியளித்த பின்னரே, சமீபத்தில் நிறுவனம் அவர்களை மீண்டும் வேலையில் இணைத்துக்கொள்வதாக உடன்பட்டுள்ளது.

கடந்த மாதம் அரசாங்கம் பெருந்தோட்டங்கள் உட்பட தனியார்துறை தொழிலாளர்களுக்கு மாதம் 2,500 ரூபா உத்தேச ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பிரேரித்தது. எனினும், தோட்டக் கம்பனிகள் நேரடியாக இதை மறுத்துவிட்டன. ஏனைய கம்பனிகளும் இதைப் பின்பற்றக் கூடும்.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் உற்பத்தி செலவை குறைக்கவும் இந்த ஒப்பந்த முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இதன் மூலம் அது தொழிலாளர்களின் செலவில், இலங்கை தேயிலை எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உலகச் சந்தையில் போட்டித்தன்மை உடையதாக்குவதற்கு முயற்சிக்கின்றது.