சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Were French intelligence forces complicit in the Charlie Hebdo attacks?

சார்லி ஹெப்டோ தாக்குதல்களில் பிரெஞ்சு உளவுத்துறை சக்திகள் உடந்தையாய் இருந்ததா?

By Anthony Torres
20 January 2016

Use this version to printSend feedback

ஜனவரி 2015 இல் சார்லி ஹெப்டோ மற்றும் ஹைபர் காச்செர் (Hyper Cacher) அங்காடியில் குவாச்சி சகோதரர்கள் மற்றும் அமெடி குலிபாலி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர், பிரெஞ்சு உளவுத்துறை அவர்கள் மீது மேற்கொண்டிருந்த தீவிர கண்காணிப்பு குறித்து வெளிவந்துள்ள புதிய செய்திகள் அத்தாக்குதல்களின் அரசியல் மூலங்களைக் பற்றி ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகின்றன.

உளவுத்துறை சேவைகளுக்கு தெரிந்தவர்கள் எவ்வாறு கண்டறியப்படாதவாறு அதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடிந்தது என்பதைப் புரிந்து கொள்வது ஏற்கனவே கடந்த ஆண்டே மிகவும் சிரமமாக இருந்தது. நவ-பாசிசவாத மற்றும் முஸ்லீம்-விரோத தேசிய முன்னணியுடன் (FN) சம்பந்தப்பட்ட ஒரு பொலிஸ் உளவாளியான Claude Hermant வசமிருந்து குலிபாலி ஆயுதங்களைப் பெற்றார் என்ற செய்தி, பிரான்சில் அரசியல் சக்திகளே அவர்களால் ஆதாயமடைந்துள்ளன என்பதால், இந்த அரசியல் சக்திகளே அதில் உடந்தையாய் இருந்திருக்குமோ என்பதன் மீது கூடுதலாக கேள்விகளை எழுப்புகிறது. அத்தாக்குதல் தேசிய முன்னணியை சாதாரண முதலாளித்துவ கட்சிபோல வழமையாக்குவதை மட்டும் தீவிரப்படுத்தவில்லை, மாறாக ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) கொள்கையின் ஒரு முக்கிய கூறுபாடான பொலிஸ் சக்திகளையும் மீளப்பலப்படுத்தியது.

எவ்வாறிருப்பினும் ஜனவரி 2015 தாக்குதல்களை விசாரணை செய்துவரும் புலனாய்வு நீதிபதிகளுக்கு கிடைத்த ஆவணங்கள், பிரெஞ்சு அரசுக்குள் உள்ள சக்திகளும் உடந்தையாய் இருந்திருக்குமோ என்பது குறித்து முன்பினும் அதிக கேள்விகளை எழுப்புகின்றன.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்குப் பின்னர், நேட்டோ பாதுகாப்பு சக்திகளால் உலகின் மிகவும் அபாயகரமானதாக பொதுவாக வர்ணிக்கப்படும் அல் கொய்தாவினது ஒரு கிளை அமைப்பான அரேபிய வளைகுடாவின் அல் கொய்தா அமைப்பு (AQAP) தலைவர்களுடன் குவாச்சி சகோதரர்கள் நேரடியான தொடர்பில் இருந்தமைக்காக அவர்கள் 2010 மற்றும் 2015 க்கு இடையே நெருக்கமாக கண்காணிக்கப்பட்டார்கள். Le Monde க்கு கிடைத்த உள்துறை பாதுகாப்பு பொது இயக்ககத்தின் சுமார் 40 ஆவணங்களின்படி, பிரெஞ்சு உளவுத்துறை உண்மையில் அத்தாக்குதல்களுக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னதாக செரிஃப் மற்றும் சாய்த் குவாச்சி மீதான கண்காணிப்பை நிறுத்தியிருந்தது.

AQAP தலைமையுடன் தொடர்புபட்டவர்களை கண்காணிப்பதில்லை என்ற முடிவு விளங்கப்படுத்த இயலாது உள்ளது. AQAP அங்கத்தவர்கள் யேமனில் வழமையாக அமெரிக்க டிரோன் தாக்குதல்களின் இலக்கில் வைக்கப்படுகிறார்கள். ஐரோப்பா அல்லது அமெரிக்காவிலிருந்து அவர்கள் செயல்படுவதை தடுப்பதற்காக இக்குழு மீதான ஒரு போர் அவசியப்படுவதாக அது கூறப்பட்டது.

பிரெஞ்சு உளவுத்துறை ஏற்கனவே செரிஃப் குவாச்சி மற்றும் அமெடி குலிபாலியை மார்ச் 2010 இல் இருந்து விசாரித்து வந்திருந்தது. Le Monde செய்தியின்படி, அப்போதிலிருந்து தொடங்கி அவ்விருவரும் வழமையாக Djamil Beghal ஐ சந்தித்து வந்தனர். "பிரெஞ்சு ஜிஹாதிஸ்டின் கடுமையான பிரிவுடனான" குலிபாலியின் தொடர்பை, இது அதிகாரிகளின் "அலட்சியத்தைத் தவிர வேறெதையும் காட்டவில்லை" என்பதாக Le Monde காண்கிறது.

மறுபுறம், அதேகாலத்தில் குவாச்சி சகோதரர்களை பிரெஞ்சு உளவுத்துறை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தது. ஐரோப்பாவில் அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்களுக்கு திட்டமிட்டதற்காக பேகல் பத்தாண்டு காலம் சிறையில் இருந்ததற்குப் பின்னர் வீட்டுக் காவலில் நிறுத்தப்பட்டிருந்தார். பேகல் உள்நாட்டு உளவுத்துறையின் மத்திய இயக்ககத்தால் (பின்னர் இது DGSI என்று பெயர் மாற்றப்பட்டது) கண்காணிக்கப்பட்டு அதன் பொறியில் வைக்கப்பட்டிருந்தார் மற்றும் நீதித்துறை பொலிஸின் மத்திய இயக்ககத்தின் (DCPJ) ஒரு விசாரணையின் இலக்கிலும் நிறுத்தப்பட்டிருந்தார்.

2011 மற்றும் 2013 க்கு இடையிலான DGSI இன் ஆவணங்கள், குவாச்சி சகோதரர்கள் பீட்டர் செரிஃப்க்கு நெருக்கமாக இருந்ததை எடுத்துக்காட்டுகிறது, இவர் 2000களின் தொடக்கத்தில் “Buttes-Chaumont” இஸ்லாமிய குழுவின் பாகமாக ஈராக் போரில் இணைய சென்றதற்காக செரிஃப் குவாச்சி உடன் சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவராவார். பீட்டர் செரிஃப் மார்ச் 2011 இல் தண்டனைக்கு ஆளாவதற்கு முன்னதாக, அவரால் அங்கிருந்து வெளியேறி AQAP க்குள் ஒரு தலைமை பாத்திரம் வகிக்க முடிந்திருந்தது. மறுபுறம் செரிஃப் குவாச்சி விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டார்.

நீதித்துறை ஆதாரங்களை மேற்கோளிட்டு, Le Monde குறிப்பிடுகையில், “ஜனவரி 2012 இல் இருந்து, அங்கே பீட்டர் செரிஃப் உடன் தொலைபேசி தொடர்பு இருந்தது. சாய்த் குவாச்சி பல்வேறு சிம் கார்டுகள் மற்றும் தொலைபேசி சாவடிகளைப் பயன்படுத்தி, மிகக் கவனமாக அவர்களை மறைத்து வைக்க முயன்றார். அது தான் அவரையும் DGSI இன் பார்வையில் கொண்டு வந்தது. பின்னர் வெளியுறவு பாதுகாப்புத்துறையின் பொது இயக்ககம் (DGSE), அவர் அனேகமாக 2011 இன் கோடையில் யேமனில் நேரத்தைச் செலவிட்டிருக்கலாம் என்று கூறி அதன் கவலைகளை மீளவலியுறுத்தியது.

அது தொடர்ந்து குறிப்பிட்டது, “ஏப்ரல் 2012 இல் தொடங்கி, குவாச்சி சகோதரர்கள் DGSE-DGSI இன் கூட்டு விசாரணைகளது இலக்கில் வைக்கப்படும் அளவுக்கு அவர்கள் மிகவும் அபாயகரமானவர்களாக கருதப்பட்டார்கள். ஒரு மாதத்திற்குப் பின்னர், DGSI அதன் 'முன்னுரிமை நபர்கள்' (priority objectives) பட்டியலில் செரிஃப்பையே கூட கொண்டு வந்தது. குறிப்பாக அவரது சந்தேகத்திற்கிடமான மனோபாவம் மற்றும் "பிராங்க்பேர்ட் குழுவின்" இந்த முன்னாள் அங்கத்தவர்களுடனான அவரது சந்திப்பு ஆகியவற்றை குறித்து விசாரணையாளர்கள் கவலை கொண்டிருந்தார்கள். இந்த ஆப்கான் போர் முன்னாள் அங்கத்தவர்கள், 2000 இல் Strasbourg கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்கள் நடத்த திட்டம் தீட்டியதற்காக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். சாய்த் குவாச்சி, அவரது பங்கிற்கு, காலமறிந்து “Buttes-Chaumont” வலையமைப்பின் தலைவர் Farid Benyettou உடன் தொடர்பை மீள்ஸ்தாபிதம் செய்திருந்தார். ஊடுருவி எடுக்கப்பட்ட குவாச்சி சகோதரர்களது இணைய தகவல் பரிமாற்றம், அவர்களது தொடர்ச்சியான, AQAP மற்றும் யேமனுக்கான அதிகரித்த ஆர்வத்தை எடுத்துக்காட்டியது.

“முன்னுரிமை" இலக்குகளாக, குவாச்சி சகோதரர்கள் தீவிர கண்காணிப்பிற்காக இலக்கில் வைக்கப்பட்டிருந்தனர், பின்னர் இதை உளவுத்துறை அதிகாரிகள் எதற்காகவோ கைவிட்டுவிட்டனர். சாய்த் இன் தகவல் பரிவர்த்தனைகள், 2012 இல் எட்டு மாதங்களும் மற்றும் 2014 இல் பெப்ரவரியில் இருந்து ஜூன் வரையில் இரண்டு மாதங்களும் பின்தொடரப்பட்டிருந்தன. அதேபோல செரிஃப் இன் தகவல் பரிவர்த்தனை 2011 இல் இருந்து 2013 வரையில் இரண்டு ஆண்டுகள் பின்தொடரப்பட்டது.

குவாச்சி சகோதரர்கள் மீதான கண்காணிப்பை நிறுத்துவதென்று உளவுத்துறை சேவைகளை முடிவெடுக்க உந்தியது எது என்று ஒருவர் கேட்கலாம். இந்த முடிவை "மோசமான நெளிவு சுளிவுகளின் கதி" என்றும் மற்றும் "தவறவிட்ட சந்திப்பு" என்பதாகவும் வர்ணித்து, Le Monde இன் பகுப்பாய்வு முற்றிலும் ஒன்றையும் விவரிக்கவில்லை.

உளவுத்துறை சேவைகளின் கருத்துப்படி, “வன்முறை நடவடிக்கைக்கான மிகச்சிறிய தயாரிப்பை கூட எந்தவொரு ஸ்தூலமான அல்லது நுட்பமான கண்காணிப்பு அனுமதிப்பதில்லை,” என்று Le Monde கூறுகிறது. ஆனால் இந்த நிலைப்பாடு குவாச்சி சகோதரர்களின் மற்றும் குலிபாலியின் தஸ்தாவேஜூகளின் உள்ளடக்கத்துடன் அப்பட்டமாக முரண்படுகிறது. பிரெஞ்சு உளவுத்துறையால் "அதிதீவிர அபாயம்" என்று கருதப்பட்ட மற்றும் பிரான்சில் AQAP இன் வலையமைப்பின் இதயதானத்தில் இருந்ததாக கருதப்பட்ட "முன்னுரிமை நபர்களில்" குவாச்சி சகோதரர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள்.

குவாச்சி சகோதரர்கள் உடனும் மற்றும் அதேபோன்ற ஒரு பரந்த பின்புலத்துடனும் குலிபாலி தொடர்புகள் கொண்டிருந்த போதினும், அவர் ஒரு முன்னுரிமை கூறுபாடாக ஒருபோதும் கருதப்படவில்லை. Le Monde செய்தியின்படி, பாரிஸில் 1995 இல் Musée d'Orsay பிராந்திய போக்குவரத்து நிலையத்தில் தாக்குதல் நடத்தியதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த “மற்றொரு முக்கிய பயங்கரவாதி Smaïn Aït Ali Belkacem திட்டமிட்டு சிறையிலிருந்து தப்பிப்பதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக", குலிபாலி 2010 இல் இருந்து 2014 வரையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பிரான்சில் ஒரு முன்னணி அல்ஜீரிய இஸ்லாமிய பயங்கரவாதி சிறையில் இருந்து தப்பிக்க திட்டமிடுவதில் குலிபாலி உதவியிருந்த போதினும் கூட, உளவுத்துறை சேவைகள் அவரை ஓர் இஸ்லாமியவாதியாக கருதவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். “அமெடி குலிபாலி ஒருபோதும் தீவிர இஸ்லாமிய போக்கின் ஓர் அங்கத்தவராக DGSI ஆல் பார்க்கப்படவில்லை. அதனால் தான் அவர் ஒருபோதும் இலக்கில் வைக்கப்படவில்லை … கடைசி வரையில், அவர் ஒரு சிறிய பங்குவகிப்பாளராக தான் பார்க்கப்பட்டார், ஒரு ஒழுக்கமில்லாத சிறிய சிறிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளியாக கையாளப்பட்டிருந்தார்,” என்று Le Monde எழுதுகிறது.

இது பிரெஞ்சு உளவுத்துறை எவ்வாறு குலிபாலியை ஓர் இஸ்லாமியர் இல்லை என்ற முடிவுக்கு வந்தது என்பதன் மீது கேள்வி எழுப்புகிறது. அவர் ஒரு பெண் பொலிஸ் அதிகாரியுடன் (adjutante gendarme) காதல் உறவைப் பேணி வந்தார் என்ற நிலையில், Le Canard Enchaîné மற்றும் Le Figaro செய்திகளின்படி அவர் பெயர் Emmanuelle, பிரெஞ்சு பொலிஸிற்காக குலிபாலி வேலை செய்ய ஒப்புக் கொண்டிருந்தாரா என்றும் ஒருவரால் கேள்வி எழுப்ப முடியும்.

அத்தாக்குதல்களுக்கு பல மாதங்களுக்கு முன்னர், அக்டோபர் 2014 இல், செரிஃப் குவாச்சி சார்லி ஹெப்டோ அலுவலகங்களின் முன்னால் நின்றவாறு யாருடனோ புகைபிடித்தவாறு பேசிக் கொண்டிருந்தார். இஸ்லாமை தாக்கிய அந்த இதழை குவாச்சி ஆக்ரோஷத்துடன் விமர்சித்ததுடன், Premières Lignes ஒலி-ஒளி நிறுவனத்தின் ஓர் இதழாளரான அந்நபரிடம் நீங்கள் சார்லி ஹெப்டோவில் வேலை செய்பவரா என்று வினவினார். அதனையடுத்து அந்த இதழாளர் சார்லி ஹெப்டோ பாதுகாப்பிற்கான பொலிஸ்காரர்களில் ஒருவரிடம் அச்சம்பவத்தை விவரித்து குவாச்சியின் லைசென்ஸ் எண்ணை வழங்கினார், அந்த பொலிஸ் அதிகாரி அதை ஆவணப்படுத்திக் கொண்டார் என்று Le Canard Enchaîné இல் வெளியான தகவல்கள் மேற்கொண்டும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

ஆனால் இந்த தகவல் பொலிஸால் நீதித்துறை விசாரணையாளர்களுக்கு வழங்கப்பட்ட விசாரணை தஸ்தாவேஜூகளில் காணவில்லை மற்றும் அதுகுறித்து எந்த உத்தியோகபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிகுறியும் அங்கே இல்லை.

இதற்கு அடுத்து தான், Ingrid Brinsolaro, இவரது கணவர் Frank தான் அத்தாக்குதல் நடந்த நாளன்று சார்லி ஹெப்டோவின் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கொல்லப்பட்டவர், DGSI மற்றும் ஏனைய உளவுத்துறை அமைப்புகளுக்கு எதிராக விருப்பமின்றி ஆட்கொலை குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.

பிரான்ஸை இலக்கில் வைத்திருப்பதாக அறியப்பட்ட அல் கொய்தாவின் மிகவும் வீரியமான கிளையுடன் பிணைந்த தனிநபர்களை பிரெஞ்சு அரசு சகிப்புத்தன்மையுடன் கையாண்டமை, பகுப்பாய்வின் இறுதியில், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான நெருக்கமான உறவுகளிலிருந்து மேலெழுகிறது.

நவம்பர் 13 தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்லாமிய அரசு போன்ற ஏனைய இஸ்லாமிய குழுக்களையும் மற்றும் அல் கொய்தாவையும், 2011 க்குப் பின்னர், பிரான்ஸூம், அமெரிக்கா மற்றும் ஏனைய நேட்டோ அதிகாரங்களும் ஒன்றுசேர்ந்து, மத்திய கிழக்கின் நவ-காலனித்துவ போர்களில் பயன்படுத்தின. அத்தகைய முதல் போராக இருந்தது 2011 லிபியா போராகும். லிபிய ஆட்சி வீழ்ந்தவுடன், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைக் கவிழ்க்க மற்றும் ஈரானைத் தனிமைப்படுத்த மீண்டும் அதே சக்திகள் சிரியாவில் பயன்படுத்தப்பட்டன. ஏகாதிபத்திய சக்திகள், குறைந்தபட்சம் ஆரம்பகட்டத்திலாவது, லிபியா மற்றும் சிரியாவில் சண்டையிட்டு வந்த அவர்களது பினாமி சக்திகளை ஜனநாயக தன்மை மற்றும் முற்போக்குத்தன்மை கொண்டவை என்று வாதிட்டன.

நேட்டோ நாடுகளது உளவுத்துறை சேவைகள் குவாச்சி சகோதரர்களை மற்றும் குலிபாலியை தீவிரமாக இலக்கில் வைக்கவில்லை, ஏனென்றால் பகுப்பாய்வின் இறுதியில், அது ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு உரியதாக இருக்கவில்லை. இந்த பயங்கரவாதிகள் லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய போர்களில் ஒன்றுதிரட்டப்பட்டிருந்த அதே வலையமைப்பின் பாகமாக இருந்தனர்.

அதேநேரத்தில், குவாச்சி சகோதரர்கள் மற்றும் குலிபாலியின் குற்றங்கள், சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் ஒட்டுமொத்த பிரெஞ்சு நிதியியல் பிரபுத்துவமும் நடைமுறைப்படுத்த விரும்பிய ஓர் உள்நாட்டு கொள்கையை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டன. 2014 இன் இறுதியில், சோசலிஸ்ட் கட்சி கடுமையான சூழலில் இருந்தது, கருத்துக் கணிப்புகளின்படி அதன் சிக்கனத் திட்ட கொள்கைகள் 3 சதவீதமாக இருந்தது, 2017 ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சி முழுமையாக உடைந்து போகக்கூடும் என்று அது அஞ்சியது. பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் பிரான்சில் "இடது" “மரணம்" அடையும் அபாயத்தைக் குறித்து எடுத்துரைத்தார்.

அரசியல் சூழலை இன்னும் அதிகமாக வலதிற்கு நகர்த்தி, வீதிகளில் 10,000 சிப்பாய்களை நிறுத்தி, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி மற்றும் பிரதான அரசியல் ஓட்டத்திற்குள் தேசிய முன்னணியை ஒருங்கிணைத்து என இவற்றின் மூலமாக, ஜனவரி 2015 தாக்குதல்கள், சோசலிஸ்ட் கட்சியைக் குறுகிய காலத்திற்குச் சற்றே ஸ்திரப்படுத்திக் கொள்ள அனுமதித்தது.

130 உயிர்களைப் பறித்த நவம்பர் 13 தாக்குதல்கள், ஓர் அவசரகால நெருக்கடிநிலையைத் திணிப்பதற்கும், பாரியளவில் நீதிமுறைக்கு அப்பாற்பட்ட தேடல்கள் மற்றும் பறிமுதல்களை நடத்துவதற்கும், தேசிய முன்னணி ஆதரிக்கும் ஒரு நடவடிக்கையான இரட்டை குடியுரிமை கொண்டவர்களது பிரஜா உரிமையைப் பறிக்க முன்மொழிவதற்கும் என இத்தகைய பொலிஸ் நடவடிக்கைகளை மீளப்பலப்படுத்த சோசலிஸ்ட் கட்சியை அனுமதித்தது. இவ்விதமாக பயங்கரவாத தாக்குதல்கள் பொலிஸ் மற்றும் தேசிய முன்னணி உடன் நெருக்கமாக பிணைந்திருந்த அரசியல் சக்திகளுக்கு ஆதாயமளித்தது மற்றும் ஏதேச்சதிகார அரசை நோக்கி உந்துவதை நியாயப்படுத்த சேவையாற்றியது. அதற்குப் பின்னர் ஹோலாண்ட் "போர் ஜனாதிபதி" என்ற புதிய வெளிச்சத்தில் காட்டப்பட்டார்.

அத்தகைய ஜனநாயக விரோத பரிசீலினைகள் குலிபாலி மற்றும் குவாச்சி சகோதரர்கள் மீதான கண்காணிப்பை கைவிடுவதென்ற முடிவிலும், அவ்விதத்தில் அவர்களது தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்ய அவர்களை அனுமதிப்பதிலும் ஒரு பாத்திரம் வகித்திருக்காதா என்று ஒருவரால் கேள்வி எழுப்ப முடியும்.