சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Stalinist leaders divided over alliance with big business Congress Party

இந்திய ஸ்ராலினிச தலைவர்கள் பெருவணிக காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடர்பாக பிளவுண்டனர்

By Arun Kumar and K. Ratnayake 
23 January 2016

Use this version to printSend feedback

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம். ன் தலைவர்கள், இந்த இளவேனிற்கால மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அரசாங்க கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் அவர்களது கட்சி இணைந்து போட்டியிட முயல்வது பற்றி இந்த வாரம் மறுப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

சி.பி.எம். பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி திங்கட் கிழமையன்று இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் "தற்போது தேர்தல் கூட்டணிகள் நிகழ்ச்சி பட்டியலில் இல்லை" எனக் கூறினார். மேலும், காங்கிரஸ் உடன் கூட்டு வைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி எக்ஸ்பிரஸ் கேட்டபோது, அவர் "காங்கிரஸ் உடன் முன்னணி அல்லது கூட்டணி எதுவும் இல்லை" என்பதே கட்சியின் கொள்கை எனவும் கூறினார்.

சி.பி.எம். அரசியற்குழு உறுப்பினர் பிருந்தா காரத்தும், "மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ் உடனான தேர்தல் கூட்டணி பற்றி பேசப்பட்டுக் கொண்டிருப்பது எதுவாக இருந்தாலும் அவை எல்லாம் ஊகமே அதில் எவ்வித உண்மையும் இல்லை" என்பதுபோன்ற ஒரே மாதிரியான கருத்துக்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளார்.

இந்த மறுப்புக்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானது ஆகும். அவை, சி.பி.எம். உயர்மட்ட தலைவர்கள் மற்றும் மாநில அளவிலான அலுவலர்களுடன் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணிக்கான சாத்தியம் தொடர்பாக பல வாரங்கள் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் தான் வந்தனசனிக்கிழமையன்று, முன்னாள் மேற்கு வங்க சி.பி.எம். முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி சிங்கூரில் நடைபெற்ற ஒரு கட்சி பேரணியில் சி.பி.எம். மற்றும் அதன் இடதுசாரியுடன் அணிசேர காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார். "நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள்? மேற்கு வங்கத்தை காப்பாற்ற நாம் இணைந்து இருக்கவேண்டும்." என "நாங்கள் காங்கிரஸை கேட்கிறோம்," எனவும் பட்டாச்சார்ஜி கூறினார்.

யெச்சூரி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், ஆணவத்தோடு இந்த அறிக்கைக்கு "மறு விளக்கம்" அளிக்க முயன்றார். மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை சி.பி.எம். "அகற்றுவதில் தீர்மானமாக" உள்ளது என்பதை மட்டுமே பட்டாச்சார்ஜி அடிக்கோடிட்டுக் காட்டுவதில் முனைப்புடன் இருந்தார் என அவர் நேரடியாக கூறினார். பட்டாச்சார்ஜியின் கருத்துக்கள், தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸுக்கு அறைகூவல் விடுவது பற்றிய எதுவும் கிடையாது என யெச்சூரி வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு சி.பி.எம். ன் 21வது காங்கிரஸின் அரசியல் பாதைக்கேற்ப கட்சியின் நிலைப்பாடு உள்ளது என சி.பி.எம். பொதுச் செயலாளர் தெரிவித்தார், மேலும் "பா... (பாரதிய ஜனதா கட்சி) அதிகாரத்தில் உள்ளபோது அதற்கு எதிராக எங்களது முக்கிய தாக்குதல் இருக்கும், ஆனால் அதுவே காங்கிரஸுடன் ஒரு தேர்தல் உடன்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதற்கான சாத்தியம் எனக் கருதமுடியாது" எனவும் சி.பி.எம். அறிவித்தது.

எனினும், சி.பி.எம். காங்கிரஸைப் பற்றிய தகவலில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போலவும், முதலாளித்துவ செய்தி ஊடகங்களே அதன் சமீபத்திய பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளது போலவும், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பெருவணிக காங்கிரஸ் கட்சி உடனான அவர்களது உறவுகளைப் பொறுத்தவரை தங்களுக்காக "தப்பிக்கும் உட்கூறு" ஒன்றை விட்டு வைத்துள்ளனர். "அரசியல் சூழ்நிலையில் மிகத் தீவிரமான மாற்றங்கள் நிகழ முடியும். முதலாளித்துவ கட்சிகளுக்கு மத்தியில் மற்றும் அவர்களுக்கிடையில் புதிய முரண்பாடுகள் தோன்றக் கூடும்.... சூழ்நிலையை சமாளிக்க வளைந்துகொடுக்கும் தந்திரோபாயங்களை உருவாக்க வேண்டியிருக்கும்" என யெச்சூரி மேற்கோள் காட்டிய அதே கொள்கை ஆவணம் அறிவிக்கிறது. (அரசியல்-அமைப்புக்கள் ரீதியிலான நெருக்கடிகளின் மத்தியில் இந்திய ஸ்ராலினிஸ்ட்டுக்களின் சந்திப்பு என்ற செய்தியைப் பார்க்கவும்)

சமீபத்திய வாரங்களில், மேற்கு வங்க மாநில தேர்தல்களில் கட்சியின் அணுகுமுறை பற்றிப் பேசும்போது "வளைந்துகொடுக்கும் தந்திரோபாயங்கள்" எனும் இச்சூத்திரத்தை யெச்சூரி உட்பட பல சி.பி.எம். தலைவர்கள் மீண்டும் மீண்டும் பிரயோகித்தனர்.

பொதுச் செயலாளராக யெச்சூரியின் முன்னோடி பிரகாஷ் காரத் அவரது பங்கிற்கு, டிசம்பர் 30ம் தேதி கட்சி அமைப்பு குறித்த நான்கு நாள் பேரவை அமர்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸுடன் ஒரு தேர்தல் கூட்டு என்பது வெகுவாக தவிர்க்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார். "திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தினை வெளியேற்றுவதற்கு ஒரு பொதுவான மனநிலை இருக்கிறது" என்றும் "தேர்தல் தந்திரோபாயங்கள் பற்றி நாங்கள் விவாதிக்கும்போது காங்கிரஸ் உடனான கூட்டணி பற்றி கணக்கில் எடுத்துக்கொள்வோம்." எனவும் காரத் அறிவித்தார்.

சி.பி.எம். ன் உச்சக்கட்ட சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தும் வகையில், "அரசியலில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் எதுவும் கிடையாது. .... ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருவாகும் சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப தந்திரோபாயங்கள் மாறும்" என காரத் கூறினார். மேற்கு வங்கம் ஒரு "அசாதாரண சூழ்நிலை"யில் இருந்ததையும் சி.பி.எம். அதன் தேர்தல் மூலோபாயத்தை வகுப்பதில் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பின்னர் வலியுறுத்தினார்.

யெச்சூரிக்கு முற்றிலும் மாறான வகையில் காங்கிரஸ் கட்சியுடன் முறையாக கூட்டுசேருவது தொடர்பாக பொதுவாக எதிர்க்கும் சி.பி.எம். இன் "கடுமையான" பிரிவின் தலைவராக காரத் அடையாளம் காணப்பட்டார், பிராந்திய மற்றும் சாதிய அடிப்படையிலான கட்சிகளின் "மூன்றாவது முன்னணி" கூட்டணியில் சேர விரும்பினார். இருப்பினும், காரத்தின் தலைமையின் கீழ்த்தான் மத்தியில் 2004 லிருந்து -2008 வரை காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை (UPA) ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் அவர்களது இடதுசாரிகள் தாங்கிப் பிடித்திருந்தன, அப்போது அது இந்தோ-அமெரிக்க "மூலோபாய கூட்டை" ஏற்படுத்தியது, மற்றும் "நவீன தாராளமய" சீர்திருத்ததை முன்னோக்கி அழுத்திச்சென்றது.

காங்கிரஸ் உடனான ஒரு தேர்தல் கூட்டணிக்கு சி.பி.எம். தலைமை பரிசீலித்து வருவது அதன் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரிடமிருந்து அந்நியப்பட்டு இருப்பது மற்றும் அவற்றை நோக்கிய விரோதப் போக்கின் அறிகுறியே ஆகும்.

பூகோள முதலாளித்துவத்தின் ஒரு அடிமை உழைப்பு கூடமாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு இளைய பங்காளியாகவும் இந்தியாவை மாற்ற முனையும் முதலாளித்துவ வர்க்கத்தினை கடந்த கால் நூற்றாண்டு காலமாக தலைமையேற்று வழிநடத்திவந்த காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் உள்ளது. 2014 தேசிய தேர்தலில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு பெரும் ஆட்டக்காரன் என்ற நிலையிலிருந்து அது வெளியேற்றப்பட்டது மற்றும் உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கு வேண்டிய போதுமான இடங்களை கூட வெற்றிகொள்ள தவறியது.

தானே "முதலீட்டாளர் சார்பு" கொள்கைள் என்று விவரித்ததை, மேற்கு வங்கத்தில் சி.பி.எம். பின்தொடர்ந்தது மற்றும் புது டெல்லியில் பெரும்வணிக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு துணை நின்றது போன்றவற்றின் விளைவாக 2009ம் ஆண்டிலிருந்து நிகழ்ந்த ஒரு தொடரான தேர்தல் படுதோல்விகளினால் பாதிப்பிற்கு உள்ளானது. மேற்கு வங்கத்தில் 34 வருடங்களாக மாநில அரசாங்கத்தை தலைமையேற்று நடத்திய பின்னர் 2011ல் இக்கட்சி அதிகாரத்திலிருந்து வீழ்ந்தது, மேலும் 2014ம் ஆண்டு தேசிய தேர்தல்களில் மேற்கு வங்கத்தின் 42 இடங்களில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வெற்றிகொண்டது.

மேற்கு வங்க தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் ஒரு முறையான தேர்தல் கூட்டணி அமைத்துக்கொள்வதில் சி.பி.எம். தலைமை பின்வாங்கியதற்கு குறைந்தபட்சம் இப்போதைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக, சி.பி.எம். தலைமையேற்று அரசாங்கம் நடத்திய மற்றொரு முக்கிய மாநிலமாக எப்போதும் கேரளா இருந்த நிலையில், அங்கேயுள்ள சி.பி.எம். பிரிவில் இதுபோன்றதொரு கூட்டணிக்கு கணிசமான எதிர்ப்பு உள்ளது.

இந்த இளவேனிற்காலத்தில் மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள கேரளாவிலும், சி.பி.எம். தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) க்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) முக்கிய போட்டியாளராக உள்ளது.

2011 முதல் ஐக்கிய ஜனநாயக முன்னணி, அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டதுடன், தொடர் மோசடிகள் மற்றும் வேறொருவகையில் அதன் வலதுசாரி சமூகப் பொருளாதார கொள்கைகளினால் செல்வாக்கிழந்தது ஆகியவற்றின் மூலம் பெரும் அதிர்வுகளை சந்தித்தது. இதனால் கேரள மாநில சி.பி.எம். தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து பயனடைய முடியும் என நம்பிக்கொண்டிருக்கிறது, அந்த இலக்கினை அடைய, இடது ஜனநாயக முன்னணி அணிகளில் இணைய காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்களை வரவேற்பது மற்றும் மற்ற வலதுசாரி சக்திகளுடன் கூட்டுசேர முயல்வது எனத் தொடர்கிறது.

இருந்தபோதிலும், மேற்கு வங்கத்தில் சி.பி.எம்.-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்படுமாயின், ஐக்கிய ஜனநாயக முன்னணி மீதான தனது தாக்குதல் முனையை அது மழுங்கடிக்கும் மற்றும் கேரளாவில் காங்கிரஸுக்கு "உண்மையான எதிர்கட்சி" என பா... தன்னைத்தானே பெருமையடித்துக் கொள்ள வழிவகுக்கும் என்பவை குறித்து அது அஞ்சுகிறது. "கேரளா அல்லது மேற்கு வங்கத்தில் எந்தவிதமான தேர்தல் தந்திரோபாய பாதையை நாங்கள் பின்பற்றினாலும் அது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவோ அல்லது தீங்கிளைக்க கூடியதாகவோ இருக்கக் கூடாது" என கேரள ஸ்ராலினிசத் தலைவர் எம்..பேபி அறிவித்தார்.

சோனியா மற்றும் ராகுல் காந்தி தலைமையிலான உயர்மட்ட கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து இந்திய காங்கிரஸ் இதுபோன்ற கூட்டணியை எதிர்ப்பதனால், சி.பி.எம். தலைமை, காங்கிரஸ் உடனான ஒரு தேர்தல் கூட்டினை பகிரங்கமாக தொடர்வதில் இருந்து வெளிப்படையாக பின்வாங்கிவிட்டது என்பது இரண்டாவது காரணம் ஆகும்.

செய்தி ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு இறுதியில் மேற்கு வங்க காங்கிரஸ் தலைமை, சி.பி.எம். மற்றும் அதன் இடது முன்னணியுடன் ஒரு தேர்தல் கூட்டு உருவாக்கிட அங்கீகாரம் கோரி தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியது. "அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச  பொது செயல்திட்டத்துடன் காங்கிரஸ்-இடது முன்னணிக்கான இடஒதுக்கீட்டு அனுசரிப்பினால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசாங்கமானது ஆட்சியிலிருந்து வீழ்த்தப்படும் மற்றும் மேற்கு வங்கத்தில் ஒரு காங்கிரஸ் இடதுசாரி முன்னணி கூட்டணியில் அரசாங்கம் அமையும்" என மேற்கு வங்க காங்கிரஸ் பொதுச் செயலர் .பி.மிஸ்ரா, காந்திக்கு தெரிவித்தார்.

ஆனால் எந்தவொரு அங்கீகாரமும் வந்துகொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக, மம்தா பானர்ஜி இந்த மாதம் புது டெல்லி வந்தபோது சோனியா காந்தியை சந்தித்தார், இதனை டெக்கான் ஹெரால்டின் அறிக்கை ஒரு நட்பு ரீதியிலான பரிமாற்றமே என தெரிவித்தது.

செய்தி அறிக்கைகளின்படி, தேசிய காங்கிரஸ் தலைமை 2019 தேசிய தேர்தலை எதிர்நோக்கியுள்ளது மற்றும் திரிணாமுல் காங்கிரஸுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பா... அரசாங்கத்தினை வெளியேற்ற உதவும் என கணக்குப் போடுகிறது.

காங்கிரஸ் கட்சி தேசிய தலைமை, 2004 முதல் 2008ம் ஆண்டுகளுக்கிடையில் தன்னுடன் மிக நெருக்கமாக பணியாற்றிய ஸ்ராலினிஸ்டுகளைப் பற்றியும் அளவீடு செய்து வைத்திருந்தது, அப்போது காங்கிரஸ் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளத் தேவையான வாக்குகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இடதுசாரி முன்னணி வழங்கியது. அதேபோல் பா...வை எதிர்ப்பதில் தமது நலன்களை கருத்திற்கொண்டு ஸ்ராலினிஸ்டுகளின் உதவியை நாடும்போது இம்மாதிரியான உதவி வந்து சேரும் என்ற விதத்தில் காங்கிரஸ் உயர்மட்டம் கணக்கிடுகிறது. இந்நாள் வரை, இந்து மேலாதிக்கவாத பா...வுக்கு எதிரான "மதசார்பற்ற" பாதுகாப்பு அரணாக காங்கிரஸை ஸ்ராலினிஸ்டுகள் மேம்படுத்துகின்றனர்.

சி.பி.எம்.க்கு சங்கடம் உண்டாக்குகின்றவாறாக, மேற்கு வங்கத்தில் இடது முன்னணியின் மூன்று கூட்டணி கட்சிகளில் ஒரு முக்கிய கட்சியான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உடனான ஒரு கூட்டுக்கு ஆதரவளிக்க தயாராக இருந்தது. மற்றொரு முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் (AIFB) ஆகிய இரண்டு கட்சிகளும் காங்கிரஸுடன் அணிசேர தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து குரல் எழுப்பின, ஏனென்றால் இம்மாதிரியான ஒரு கூட்டு அவர்களுக்கு செல்வாக்கையும், சாத்தியமுள்ள சட்டமன்ற இடங்களையும் இல்லாமல் செய்யும் என்பது குறைந்தபட்சம் ஒரு பகுதிக்காரணமாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

உக்கிரமடைந்துவரும் வர்க்கப் போராட்டங்களுடன் கூடிய நிலைமையின்கீழ் இந்த இளவேனிற்கால மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும்.

கடந்த தசாப்தத்தின் உயர் வளர்ச்சி விகிதங்களை திரும்பப் பெறத் தவறிய நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் உள்ளபோது, சமூக ரீதியிலான கெடுநோக்குள்ள முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை இன்னும் தீவிரமாக முன்னெடுக்கும்படி மோடிக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனங்கள் அழுத்தம் கொடுக்க ஆரவாரமாய் கூக்குரலிடுகின்றன.

மோடி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தினரின் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த செப்டம்பரில், பா... அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான பாரிய கோபத்தை திசை திருப்பும் முயற்சியாக ஸ்ராலினிஸ்டுகளினால் கட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் உட்பட அழைப்புவிடுக்கப்பட்ட ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் பல மில்லியன் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

சி.பி.எம். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி உடனான அதன் சமீபத்திய காதல் விளையாட்டு எடுத்துக்காட்டாய் விளக்குவது போன்று, பீகார் அடிப்படையிலான ஜனதா தளம் (ஐக்கிய) மாதிரியான பல பிராந்திய மற்றும் சாதிய கட்சிகளின் ஆதரவு உட்பட பெரும்பாலான பா...வின் முன்னாள் நெருங்கிய கூட்டுக்கள் பெரும் ணிக கட்சிகளுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட வேலை செய்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் பட்டாசார்ஜியின் தலைமையில் பின்பற்றப்பட்டுவந்த "தொழில்மயமாக்கல்" கொள்கையை சி.பி.எம். தொடர்ந்து பாதுகாத்தும் ஊக்குவித்தும் வருகின்றது. அந்தக் கொள்கையின் பெயரால், சி.பி.எம். தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கம் பெரு வணிகத்திற்கு பாரிய வரிச் சலுகைகளை அளித்தது, நுட்பவியல்-தொழில்களில் வேலைநிறுத்தங்களை தடைசெய்தது, மற்றும் பெருவணிக திட்டங்களுக்காக நில அபகரிப்புகள் குறித்த விவசாயிகளின் எதிர்ப்பை ஒடுக்க காவல் மற்றும் குண்டர் வன்முறையை பயன்படுத்தியது. சி.பி.எம். உடன் காங்கிரஸ் இணைய பட்டாச்சார்ஜி விண்ணப்பம் செய்த அந்த சனிக்கிழமை நடந்த பேரணியின் முக்கிய கருத்தாக இருந்தது என்னவென்றால், ஸ்ராலினிஸ்டுகளை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரவேண்டிய தேவையிருக்கிறது, அப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் தங்களது முதலீட்டாளர்-சார்பு "தொழில்துறை மயமாக்கல்" முயற்சியை முன்னெடுத்து செல்ல முடியும்.