ஏனைய மொழிகளில்

Print Version|Feedback
The Hague ruling: A dangerous step toward war

ஹேக் நீதிமன்ற தீர்ப்பு : யுத்தத்தை நோக்கிய ஒரு ஆபத்தான அடி

Peter Symonds
14 July 2016

தென்சீனக் கடலில் சீனாவின் கடல்சார் உரிமை கோரல்கள் அனைத்தையும் மறுத்து, ஹேக்கில் செவ்வாய் அன்று மத்தியஸ்த்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்பை அடுத்து, அங்கு “நீதிமன்றத் தீர்ப்புக்கு பெய்ஜிங் கீழ்ப்படிய வேண்டும் என கோரும், மற்றும் தீர்ப்பை நிலைநாட்டுவதற்கு அமெரிக்க இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அழைப்புக்கள் விடுக்கும், சீனாவின் “சட்டவிரோத நடவடிக்கைகள்” பற்றி அமெரிக்கா தலைமையிலான கண்டனங்களின் பல்லவி இருந்து வருகிறது.

“தென்சீனக் கடலில் “சட்டத்தின் ஆட்சியை சோதித்தல்” என்று தலைப்பிடப்பட்ட, நியூயோர்க் டைம்ஸ் ஆசிரிய தலையங்கம், “பெய்ஜிங் சர்வதேச மத்தியஸ்த்துக்கான நீதிமன்றத்தின் சட்ட அதிகாரத்தை எதிர்த்து நிராகரித்துள்ளது” மற்றும் “முன்னோடி தீர்ப்பினை” அது ஏற்காது என்ற “சமிக்கைகள் கவலை தருகின்றன” என்று அறிவித்தது. அது ஒபாமா நிர்வாகம் “ஆசிய நாடுகளுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை” கட்டி எழுப்புவதற்கும் “சீனாவின் உறுதிப்பாட்டை” எதிர்கொள்ள அதிகரித்த அளவில் கடல் கண்காணிப்பு ரோந்துகள் செய்யவும் அதன் அங்கீகார முத்திரையை வழங்கியது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஐ.நா தீர்ப்பாயம் சீனாவின் இறையாண்மை கோரல்களுக்கு “ஒரு தேவையான கண்டித்தலை” செய்தது மற்றும் ஆசியாவில் “சட்ட அடிப்படையிலான ஒழுங்கிற்கு அச்சுறுத்தல்” என்று “அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீவிரமாய் முயற்சிகளை” செய்ய வேண்டும் என்று அறிவித்தது தென்சீனக் கடலில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள குட்டித்தீவுகளைச் சூழ உள்ள நீர்ப்பரப்பில் அத்துமீறல் செய்யும் அமெரிக்க கடற்படையின் ஆத்திரமூட்டும் “கடல் வழி சுதந்திரம்” என்பதில் “செயற்பரப்பிலும் எண்ணிக்கை அளவிலும் அதிகரிப்புக்கு” அது அழைப்பு விடுத்தது.

இதில் சம்பந்தப்பட்டுள்ள பாசாங்கானது தள்ளாட்டம் காண்கிறது. அமெரிக்காவானது சர்வதேச சட்டத்தை அவமதிப்பதை தவிர வேறொன்றையும் செய்யவில்லை, மில்லியன் கணக்கானோர் இறப்பில் முடிந்திருக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் அதன் சட்டவிரோத யுத்தத்திற்காக பதில் சொல்ல வேண்டும் என்று எந்த ஐ.நா தீர்ப்பாயத்தாலும் அமெரிக்கா ஒருபோதும் அழைக்கப்பட்டதில்லை. சீனாவிற்கெதிரான அதன் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” என்பதன் பகுதியாக, ஒபாமா நிர்வாகமானது தென்சீனக் கடலில் உள்ள குறைந்த முக்கியத்துவமுடைய, நீண்டகாலமாய் நிலவும் பிராந்திய சர்ச்சைகளை புதிய மிக அழிவுகரமான யுத்தமாக உருமாற்றும் ஒரு ஆபத்தான கட்டத்திற்கு பிரதானமாய் பொறுப்புடையதாகும்.

ஹேக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கின் கீழ் - ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட சாசன (UNCLOS) சர்வதேச சட்டத்தை ஆதரித்து அதனை அதிகாரபூர்வமாக ஏற்புடையதாக்க வாஷிங்டன் மறுத்துவிட்டது. அந்தவகையில், அமெரிக்காவானது ஐ.நா நீதிமன்றத்தின் முன்னர் நின்றதில்லை. அதன் முன்னாள் காலனியான பிலிப்பைன்ஸை, ஒரு பினாமியாக பயன்படுத்திக் கொண்டது. இந்த வழக்கானது வாஷிங்டனை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனமான Foley Hoag ஆல் வாதாடப்பட்டது, அது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் வெள்ளை மாளிகையின் மிக நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்பட்டது.

பிலிப்பைன்ஸின் முறையீடுகளை ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடானது, உண்மையில் முற்றிலும் முன்கூட்டியே அறியத்தக்க ஒன்றாக இருந்தது. நீண்ட தீர்ப்பானது, தீர்ப்பாயத்திற்கு எல்லைத் தகராறுகளின் மீது தீர்ப்பளிப்பதற்கு —அதாவது, தென்சீனக் கடலில் நிலம், வளம் மற்றும் நீர்நிலைகளை யார் உண்மையில் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவதற்கு— அதிகாரமில்லை என்ற வெளிவரையைச் சுற்றி கவனமாக சூழ்ச்சியுடன் கையாளப்பட்டது. ஆனால் அது அதனைச் சரியாக சக்திமிக்க வகையில் செய்யுமாறு ஒரு முடிவை உருவாக்கியது. நீதிமன்றமானது தென்சீனக் கடலில் உள்ள பெரும் பகுதிகளுக்கு வரலாற்று ரீதியாக சீனா உரிமை கோரல்களை நிராகரித்தது மட்டுமின்றி, அதன் கட்டுப்பாட்டில் உள்ள குறுந்தீவுகள், திட்டுக்கள் மற்றும் நீர்நிலைகளில் அதன் உரிமை கோரல்களைக் கடுமையாக வெட்டிக் குறைத்தது, மற்றும் நிலத்தை சீர்படுத்தி சாகுபடிக்கு கொண்டுவருவது உள்பட அதன் பல்வேறு நடவடிக்கைகளை சட்டவிரோதம் என்று கண்டனம் செய்தது.

தீர்ப்பானது, ஐ.நாவும் அதன் பல்வேறு அங்கங்களும் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் -அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவின் ஒரு “திருடர்களின் சமையலறை” யாக தொழிற்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.

வாஷிங்டனைப் பொறுத்தவரை, எல்லைத் தகராறுகள் மற்றும் “கடல்வழி சுதந்திரம்” என்பதற்கான அதன் கோரிக்கைகள் தென்சீனக் கடலில் பெரும் இராணுவக் கட்டி எழுப்பலுக்கான மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மூலோபாயக் கூட்டுக்களையும் பங்காளர்களையும் வலிமைப்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக வசதியாக இருந்து வருகிறது. அமெரிக்கா கடந்த ஐந்து ஆண்டுகளில், வட ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸில் புதிய தள ஏற்பாடுகளை ஸ்தாபித்திருக்கிறது, சிங்கப்பூரில் நீர்நிலைகளில் ஏராளமான போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது, வியட்நாம், மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவுடன் உறவுகளைப் பலப்படுத்தி, இந்தப் பிராந்தியம் முழுவதும் அதன் கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு பாதை வாகுத்துள்ளது.

“கடல் வழி சுதந்திரம்” மீதான அமெரிக்காவின் வலியுறுத்தல் பிராந்திய வர்த்தகத்தை பாதுகாப்பதுடன் தொடர்புபட்டதல்ல, இன்னும் சொல்லப்போனால் சீன பிரதான நிலத்திற்கு அருகாமையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நீர்நிலைகளில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு வழிகிடைப்பதை உறுதிப்படுத்துவதை நாடுவதாக உள்ளது. சீனாவுடன் யுத்தத்திற்கான வாஷிங்டனின் மூலோபாயம் - மேற்கு பசிபிக்கில் உள்ள தளங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்களிலிருந்து பேரளவில் வான் வெளி ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதல்களைக் காட்சிப்படுத்தும் – அது சீனப் பொருளாதாரத்தை முடமாக்கும் ஒரு கடற்படை முற்றுகையால் கூடுதலாய் சேர்க்கப்படும், வான்கடல் யுத்தம் – ஒன்றைக் காட்சிப்படுத்துகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இராணுவத்தைக் கட்டி எழுப்பலானது சீனாவை சுற்றி வளைப்பதை இலக்காகக் கொண்ட பரந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதி ஆகும். 2020 அளவில் 60 சதவிகித அமெரிக்க இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் இந்தோ-பசிபிக்கில் நிறுத்தப்படும்.

அமெரிக்க அரசாங்கமானது சீனாவுடன் ஒரு யுத்தத்தின் அவசியத்தை விரும்பாதும் இருக்கலாம், ஆனால் இருக்கின்ற ஒவ்வொரு வழிமுறைகளையும் பயன்படுத்தி அதன் உலக மேலாதிக்கத்தைப் பேணுவதில் அது உறுதியாக இருக்கிறது மற்றும் சீனாவை அது பிரதான தடையாகப் பார்க்கிறது. அதன் அதிகரித்த அளவிலான சீனா மற்றும் ரஷ்யாவுடனான ஈவிரக்கமற்ற மோதலானது, அவற்றை உடைத்து காலனித்துவ துண்டுப் பிரதேசங்கள் அந்தஸ்திற்கு குறைப்பதன் மூலம், அவற்றை அமெரிக்க நலன்களுக்கு கீழ்ப்படியச்செய்வதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

ஹேக் தீர்ப்பானது, பெய்ஜிங்கில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் முற்று முழுதான அரசியல் திவாலைக் கோடிட்டுக் காட்டுகிறது. அவ்வாட்சியானது பரந்த பெரும்பான்மை கொண்ட உழைக்கும் மக்களின் நலன்களை அல்லாமல் மிகச்சிறிய அதி செல்வந்த முதலாளித்துவத் தட்டின் நலன்களை பாதுகாத்து நிற்கிறது. சீன தேசியவாதத்தை தட்டி எழுப்புவதன் மூலமும், அதன் ஆயுதப் படைகளை விரிவுபடுத்துவதன் மூலமும், தென் சீனக் கடலின் மீதாக வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை திணிப்பதற்கான அச்சுறுத்தல் மூலமாகவும், சீன தலைமையானது நேரடியாகவே அமெரிக்க ஏகதிபத்தியத்தியம் கீறிய கோட்டிற்குள் செயற்படுவதோடு, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் பிளவுகளையும் விதைக்கிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பானது, அது வேண்டுமென்றே இருந்தாலும் இல்லாவிட்டாலும், தென்சீனக் கடலில் உள்ள உரிமை கோருவோர் சம்பந்தப்படும் சிறு சம்பவமும் கூட கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு அணுஆயுத வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலைத் தூண்டிவிடும் தவிர்க்கவியலாத ஆபத்தைக் கொண்டுள்ள ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி மோசமடைகையில், திவாலாகிப்போன இலாப அமைப்பு முறை மற்றும் உலகம் பகை கொண்ட தேசிய அரசுகளாக காலத்துக்கு ஒவ்வாத முறையில் பிளவுற்றிருத்தல் இவற்றால், மனிதகுலமானது மீண்டும் ஒருமுறை, உலக யுத்தத்தில் மூழ்கடிக்கப்படுகிறது.

ஒரு சில அதி செல்வந்தர்களின் இலாபத் தேவைகளுக்காக அல்லாமல் பெரும்பான்மையினரின் உடனடி சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முதலாளித்துவத்தை ஒழித்து அடிப்படை ரீதியாக சோசலிச வழிகளில் சமூகத்தை மறு கட்டமைப்பு செய்வதற்கான ஒரு ஒன்றிணைந்த போராட்டத்தின் அடிப்படையில், யுத்தத்தை நோக்கிய உந்தலைத் தடுத்து நிறுத்தக்கூடிய திறனுள்ள ஒரே சமூகசக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுயேமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதன் பகுதிகளையும் ஆதரிக்குமாறு, நாம் எமது வாசகர்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். அவை மட்டுமே இந்த சோசலிச சர்வதேசிய முன்னோக்கிற்காக போராடுவதற்கு தொழிலாளர்களின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்பும் பிரச்சாரத்தில் இருக்கின்றன.