சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 
Socialism and the Fight Against War
Build an International Movement of the Working Class and Youth Against Imperialism!

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்

ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!

Statement of the International Committee of the Fourth International
18 February 2016

PDF | Print version | Send feedback

1. "பயங்கரவாதத்தின் மீதான போரை” அமெரிக்கா ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகளின் பின், ஒட்டுமொத்த உலகமும் ஏகாதிபத்திய வன்முறையின் விரிந்து செல்லும் சுழலுக்குள் மேலும் மேலும் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட படையெடுப்புகளும் தலையீடுகளும் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவை நாசம் செய்திருக்கின்றன. ரஷ்யாவுடன் யுத்தத்திற்கான தயாரிப்பில் நேட்டோ, ஒரு பாரிய மறுஆயுதபாணியாக்கல் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இடைவிடாத அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நவ-காலனித்துவ சூழ்ச்சிகளின் இலக்காக ஆபிரிக்கா இருக்கிறது. கிழக்கு ஐரோப்பா, காகசஸ் இடையிலான பகுதிகள், இந்திய துணைக்கண்டம் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் அண்டை அரசுகளுடனான எல்லைப் பிரச்சினைகள் பதட்டங்களையும் வெளிப்படையான மோதல்களையும் தூண்டிக் கொண்டிருக்கின்றன. ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்”, கிழக்கு ஆசியாவில், ஒட்டுமொத்த பிராந்தியத்தையுமே சீனாவுடனான அமெரிக்காவின் மோதலுக்குள் சிக்கிக் கொள்ளச் செய்திருக்கிறது.

2. ஏகாதிபத்தியத்தின் ஏமாற்றுவேலையும் அதன் வரம்பற்ற கபடநாடகமும் பின்னிப்பிணைந்த “பயங்கரவாதத்தின் மீதான போர்” எண்ணுக்கணக்கற்ற மில்லியன் கணக்கானோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, முடமாக்கியிருக்கிறது, கொலை செய்திருக்கிறது என்பதுடன் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்திலான மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியையும் தூண்டியிருக்கிறது. நப்பாசையுடன் உயிருக்கு ஆபத்தான பயணங்களைச் செய்து ஐரோப்பாவில் காலடி வைக்கும் நூறாயிரக்கணக்கிலானோர், தடுப்பு மையங்களில் மந்தைகள் போல் அடைக்கப்பட்டு, மிகப் பரிதாபகரமான நிலைமைகளில் வாழத் தள்ளப்படுகின்றனர், அவர்களின் சொற்பமான உடைமைகளும் அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்துவதற்காக, ஏகாதிபத்திய அரசாங்கங்களும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் மற்றும் ஊடகங்களும் தேசிய பேரினவாதத்தையும் இனவாத மத வெறியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. 1930களில், யூதர்கள் பிற்போக்குத்தன அரசியலுக்கு பலிகடாக்கள் ஆக்கப்பட்டனர். இன்று, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில், ஊடக பொய்ப்பிரச்சாரங்களுக்கும், அரச-ஆதரவிலான இனப்பாகுபாடு மற்றும் இனவாதத்திற்கும், மற்றும் பாசிச வன்முறைக்கும் முஸ்லீம்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

3. 15 ஆண்டுகளாக, எந்த அரசாங்க அதிகாரிகளும் அல்லது இராணுவ-உளவு அதிகாரிகளும் பொறுப்பாக்கப்படாத குற்றங்களில் “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஈடுபட்டு வந்திருந்தது. சர்வதேசச் சட்டம், ஒரு முகவரியில்லாத கடிதம் போல் ஆக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த சட்ட நிகழ்முறைகளும் இல்லாமல், தான் இலக்கு வைப்பவர்களைக் கடத்துவதற்கும், சிறையிலடைப்பதற்கும், சித்திரவதை செய்வதற்கும் மற்றும் படுகொலை செய்வதற்குமான “உரிமையை” திட்டவட்டம் செய்வதில் வெள்ளை மாளிகை முன்னிலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதான போலியான சாக்கு ஏகாதிபத்திய நாடுகளுக்குள் ஒரு அதிமுக்கிய அரசியல் செயல்பாடாக சேவை செய்து வருகிறது. பெரும்பாலும் அரச கண்காணிப்பின் கீழ் இருந்து வந்திருக்கின்ற தனிநபர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்டுவதற்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொஸ்டன், ஃபேர்குசன் மற்றும் பிற நகரங்களில் நடந்த ஊரடங்கு சட்ட நடவடிக்கைகள் இராணுவச் சட்டத்தின் ஒத்திகை போல கருதத்தக்கவையாக இருக்கின்றன. 2015 நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களை தொடர்ந்து ஒட்டுமொத்த பிரான்சும் இப்போது “அவசரகாலநிலை”யின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையே இருக்கிறது. உளவுத்துறை முகமைகள் கடிவாளமற்ற உளவுவேலைகளில் ஈடுபட்டு, பல பத்து மில்லியன் கணக்கில் மக்கள் குறித்த பரந்த தரவுத்தளங்களை திரட்டிக் கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கமானது சமூக சமத்துவமின்மையால் உருவாக்கப்படுகின்ற வெடிப்புமிக்க பதட்டங்களை கட்டுப்படுத்துகின்ற முனைப்பில் நிரந்தரமான போலிஸ்-அரசு ஒடுக்குமுறையை கொண்டு எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்க தயாரிப்பு செய்கின்ற நிலையில், போலிஸ் மிருகத்தனங்களும், கொலைகளும் தொழிலாள வர்க்க பிராந்தியங்களில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகியிருக்கிறது.

4. உலகம் ஒரு பேரழிவுகரமான உலக மோதலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அரசாங்கங்களின் தலைவர்களது அறிக்கைகள் நாளுக்குநாள் மூர்க்கத்தனம் அதிகரித்துச் செல்கின்றன. உக்ரேனிலும் சிரியாவிலுமான பினாமிப் போர்கள் நேட்டோவையும் ரஷ்யாவையும் ஒரு முழு-அளவிலான மோதலின் மிக அருகாமையில் கொண்டு சென்றுள்ளது. நேட்டோவின் ஒரு அங்கத்துவ நாடான துருக்கி ஏற்கனவே ரஷ்யப் போர்விமானங்கள் மீது சுட்டிருக்கிறது. 2016 இன் தொடக்கத்தில், சுவீடனின் ஒரு முன்னணி இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஆண்டர்ஸ் பிரான்ஸ்ரோம் தனது உத்தரவுக்குக் கீழ்ப்பட்ட துருப்புகளுக்கு பின்வரும் எச்சரிக்கையை வழங்கினார்: “நாம் கண்டுவருகின்ற உலக நிலைமையானது....ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாக நாம் ஒரு போரில் ஈடுபட்டிருப்போம் என்பதற்கான ஒரு முடிவிற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.” 1914 இன் முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கும் மற்றும் 1939 இன் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கும் முந்தைய சமயங்களில் போலவே, பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு போர் என்பது நீண்ட தொலைதூரத்தில் சாத்தியமான ஒன்றல்ல, மாறாக அதிகம் சாத்தியமானதும் மற்றும், இன்னும் சொன்னால், தவிர்க்க முடியாததும் ஆகும் என்ற முடிவுக்கு அரசியல் தலைவர்களும் இராணுவத் திட்டமிடலாளர்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.

5. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், இத்தகைய இராணுவ விதிவசவாதமே போர் வெடிப்பதில் ஒரு முக்கியமான பங்களிப்புக் காரணியாக ஆகிவிடுகிறது. சர்வதேச உறவுகள் தொடர்பான நிபுணர் ஒருவர் சமீபத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்: “போர் தவிர்க்கமுடியாது என்று அனுமானிக்கப்பட்டு விட்டால், உடனே தலைவர்களின் மற்றும் இராணுவங்களின் கணக்குகள் மாறி விடுகின்றன. அதன்பின் ஒரு போர் நடக்குமா அல்லது நடக்காதா என்பதெல்லாம் ஒரு கேள்வியாக இருக்காது, மாறாக போரை மிக நன்மை பயக்க கூடிய வகையில் எப்போது நடத்த முடியும் என்பதே கேள்வியாக இருக்கும். போரின் மீது ஆர்வமோ அல்லது நம்பிக்கையோ கொண்டிராதவர்களும் கூட தவிர்க்கமுடியாமையின் கட்டமைப்புக்குள் செயல்படும்போது போரிட தெரிவுசெய்ய வேண்டியதாகலாம். [அடுத்த மாபெரும் போர்: முதலாம் உலகப் போரின் வேர்கள் மற்றும் அமெரிக்க-சீன மோதலின் ஆபத்து, edited by Richard N. Rosencrance and Steven E. Miller (Cambridge, MA: The MIT Press, 2015), p. xi.]

6. போர் முனைப்பு என்ற முதலாளித்துவ உயரடுக்கின் சதியானது, ஜனநாயகரீதியான விவாதத்தின் பாவனையும் கூட இல்லாமல், அரசாங்கத்தின் உயர்மட்டங்களாலும், இராணுவ-உளவு எந்திரத்தாலும், பெருநிறுவன-நிதிப்பிரபுத்துவத்தாலும் அத்துடன் ஒரு ஊழலடைந்த வலது-சாரி ஊடகத்தாலும் ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் பாரிய உழைக்கும் மக்களிடையே, அமைதிக்கான ஒரு பெரு விருப்பு உள்ளது. அவ்வாறிருந்தும், வேண்டுமென்றே நெருப்பூட்டும் ஏகாதிபத்தியத்தினது பொறுப்பற்ற கொள்கைகளை எதிர்ப்பதற்கு எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச அரசியல் இயக்கமும் இல்லாதிருக்கிறது.

7. ஆனால் மூன்றாம் உலகப் போரை நோக்கிய உந்துதல் தடுத்துநிறுத்தப்பட்டாக வேண்டும். முதலாளித்துவத்திற்கும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்குமான எதிர்ப்பில் பாரிய உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தி, போருக்கு எதிரான ஒரு புதிய சர்வதேச இயக்கம் கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும். போர் என்னும் வெறித்தனத்தை உருவாக்குகின்ற அதே முதலாளித்துவ நெருக்கடி, சமூகப் புரட்சிக்கான உந்துதலையும் உருவாக்குகின்றது. ஆயினும், போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராய் உலகெங்குமான பில்லியன் கணக்கான மக்களிடையே பெருகிவரும் கோபமும் எதிர்ப்பும் ஒரு புதிய அரசியல் முன்னோக்கினாலும் வேலைத்திட்டத்தாலும் வழிநடத்தப்பட்டாக வேண்டும்.

8. இந்த அறிக்கையின் மூலமாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தின் அத்தியாவசியமான அரசியல் அடித்தளங்களாக பின்வரும் கோட்பாடுகளை முன்வைக்கிறது:

  • போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முன்நிற்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்.
  • புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்புத்தனமானதாகவும் சோசலிசத்தன்மை உடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படையான காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.
  • ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும், குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரமான போருக்கு தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு - தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதும் ஒரு உலக சோசலிசக் கூட்டமைப்பை ஸ்தாபிப்பதுமே அதன் மூலோபாய இலக்காகும் - பதிலளிக்கப்பட வேண்டும். உலகத்தின் வளங்கள் பகுத்தறிவான, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையும், அந்த அடிப்படையில், வறுமை ஒழிக்கப்படுவதையும் மனித கலாச்சாரம் உயர்ந்த மட்டங்களை எட்டுவதையும் அது சாத்தியமாக்கும்.

உலகப் பொருளாதாரம் மற்றும் தேசிய-அரசின் முரண்பாடுகள்

9. போரின் புறநிலையான மூலவேர்களை விஞ்ஞான ரீதியாக புரிந்துகொள்வது, பேரினவாதப் பிரச்சாரத்தினால் தவறாக வழிநடத்தப்படாமல் இருப்பதற்கும், குழப்பப்படாமல் இருப்பதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமானதாகும். ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய போர்-எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் முன்னோக்கானது ஏகாதிபத்திய மூலோபாயங்கள் மற்றும் பெரும் சக்திகளிடையிலான மோதல்களின் கீழமைந்திருக்கக் கூடிய பொருளாதார மற்றும் வர்க்க நலன்களின் ஒரு துல்லியமான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கமானது, போருக்கான நியாயமாக ஒவ்வொரு நாட்டின் ஆளும் உயரடுக்கினராலும் ஊக்குவிக்கப்படுகின்ற “தேசிய நலன்களுக்கு” சமரசமில்லாது எதிர்க்கின்ற தனது சுயாதீனமான வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.

10. இராணுவவாதம் மற்றும் போருக்கான முக்கிய காரணமானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமாய்-வேரூன்றிய முரண்பாடுகளில் அமைந்திருக்கிறது: 1) உலகளாவிய ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒன்றுடன் ஒன்றுதங்கியுள்ள ஒரு பொருளாதாரத்திற்கும் எதிரெதிரான தேசிய அரசுகளுக்கு இடையில் அது பிளவுபட்டு இருப்பதற்கும் இடையிலான முரண்பாடு; மற்றும் 2) உலகளாவிய உற்பத்தியின் சமூகமயப்பட்ட தன்மைக்கும், உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமையின் மூலமாக ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் தனியார் இலாபக் குவிப்பிற்கு அது கீழ்ப்படியச் செய்யப்படுவதற்கும் இடையிலான முரண்பாடு. முதலாளித்துவ வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டமைப்பானது, கச்சாப் பொருட்களையும், எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்களையும், வணிகப் பாதைவழிகளையும் மற்றும் மலிவு உழைப்புக்கான அணுகலையும் அத்துடன் இலாபக் குவிப்புக்கு இன்றியமையாததாக இருக்கின்ற சந்தைகளையும் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வணிகப் போராட்டத்தையும் மற்றும் இறுதியாய் இராணுவப் போராட்டத்தையும் நடத்துவதற்கு “தத்தமது” அரசினைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

11. போருக்கான முனைப்பு, உலக மேலாதிக்க சக்தியாக தனது நிலையைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு அமெரிக்கா மேற்கொள்கின்ற பிரயத்தனங்களில், மையம் கொண்டிருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது உலகெங்கும் கடிவாளமற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கப்பட்டது. சவால்செய்ய முடியாத அமெரிக்காவின் சக்தியானது வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களில் ஒரு “புதிய உலக ஒழுங்கை” உத்தரவிடுகின்ற நிலையைக் கொண்ட “ஒற்றைத்துருவ காலகட்டத்தை” அந்த “வரலாற்றின் முடிவு” உருவாக்கியதாக ஏகாதிபத்திய பிரச்சாரவாதிகளால் போற்றப்பட்டது. சோவியத் ஒன்றியமானது, ஐரோப்பாவின் கிழக்கு எல்லைகள் தொடங்கி பசிபிக் கடல் வரையிலும் உலகின் ஒரு பரந்து விரிந்த பகுதியை உள்ளடக்கியிருந்தது. இவ்வாறாய், பலம் இழந்திருந்த ரஷ்யாவினால் கட்டுப்பாட்டினுள்கொண்டிருந்த யூரேசியாவின் பரந்த பிராந்தியங்களும் அத்துடன் புதிதாக சுதந்திரமடைந்திருந்த மத்திய ஆசிய அரசுகளும் மீண்டும் “முற்றுமுழுதாக”, பெருநிறுவனச் சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் திறந்து விடப்பட்டது. சீனாவில் ஸ்ராலினிஸ்டுகளால் முதலாளித்துவம் மறுபுனருத்தானம் செய்யப்பட்டமை, 1989 ல் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மீதான அதன் போலிஸ்-அரசு அடக்குமுறை மற்றும் நாடுகடந்த முதலீடுகளுக்கு “சுதந்திர வணிக மண்டலங்கள்” திறந்து விடப்பட்டமை ஆகியவை மலிவு உழைப்பின் ஒரு பரந்த கையிருப்பை கிடைக்கச் செய்தது.

12. 1991 இல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடாப் போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது வெற்றியானது, போரை வெளியுறவுக் கொள்கையின் மிகத் திறம்பட்ட சாதனமாக நியாயப்படுத்துவதற்கு சர்வதேசஅளவில் ஆளும் வர்க்கங்களால் கையிலெடுக்கப்பட்டது. ”படை வேலை செய்கிறது!” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிரகடனம் செய்தது. ஒரு வருடம் கழித்து, ”முன்னேறிய தொழிற்துறை நாடுகள் நமது தலைமையை சவால் செய்வதை அல்லது, பிராந்திய அளவில் அல்லது உலக அளவில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க ஆசைப்படுவதையும் கூட” இராணுவரீதியாக ஊக்கம்குன்றச் செய்வதே அமெரிக்காவின் இலக்கு என்று கூறிய ஒரு பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தை பென்டகன் தழுவிக் கொண்டது.

13. ஆயினும், இருபத்தியைந்து ஆண்டுகால முடிவில்லாத போரானது, அமெரிக்காவின் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது உலகளாவிய உறவுகளில் ஒரு புதிய ஸ்திரமான அடித்தளத்தை உருவாக்குவதற்கோ தவறியிருக்கிறது. மாறாக, அமெரிக்காவானது —சமாளிக்க இயலாத உள்முக நெருக்கடிகளால் பின்னப்பட்டும் மற்றும் பயங்கரமான ஆயுதங்களால் தன்னை நிரப்பிக் கொண்டும்— சர்வதேச ஸ்திரமின்மையின் மிகப்பெரும் மூலவளமாக உருமாற்றப்பட்டு விட்டிருக்கிறது. ஒரு “புதிய உலக ஒழுங்கை” உருவாக்குவதற்கான முனைப்பானது உலகளாவிய ஒழுங்கின்மைக்கு உரம்போடுவதில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்கா தொடக்கிய ஒவ்வொரு போரும் முன்னெதிர்பார்த்திராத அழிவுகரமான சிக்கல்களிலேயே முடிந்திருக்கிறது.

ஏகாதிபத்திய புவி-அரசியல்

14. அமெரிக்க உளவு முகமைகளின் இடைவிடாத மற்றும் பரந்துபட்ட நடவடிக்கைகள், உலகின் எந்தப் பகுதியும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களுக்கு வெளியில் இருக்கவில்லை என்ற உண்மையின் நடைமுறை வெளிப்பாடாக அமைந்து இருக்கின்றன. ஒவ்வொரு கண்டமும் மற்றும் ஒவ்வொரு நாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் புவியரசியல் நலன்கள் என்ற பட்டகக்கண்ணாடியின் ஊடாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு உண்மையான மற்றும் சாத்தியமான சவாலையும் எதிர்கொள்வதற்கு ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது கவனத்தைக் குவித்தவண்ணம் இருக்கிறது.

15. தனது உலக மேலாதிக்கத்திற்கான மிக முக்கியமான அச்சுறுத்தலாக அமெரிக்கா சீனாவை அடையாளம் காண்கிறது. நாடுகடந்த முதலீட்டினால் தூண்டப்பட்ட அதே அபிவிருத்தியும் அத்துடன் பரந்த உற்பத்தி வசதியின் ஸ்தாபிப்பும் சீனாவை உலகின் ஏராளமான அரசுகளுடனான முக்கிய வர்த்தகக் கூட்டாளியாகவும் இரண்டாவது பெரிய உலகப் பொருளாதாரமாகவும் மாற்றிவிட்டிருக்கிறது. தனது உலகளாவிய பலம் பெருகியிருக்கும் நிலையில், சீனாவானது தற்போது அமெரிக்காவால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற முதலீடு மற்றும் வர்த்தக முறைகளுக்கான மாற்றுகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது; அதற்கு அமெரிக்காவின் ஐரோப்பிய மற்றும் ஆசியக் கூட்டாளிகள் உள்ளிட்ட சர்வதேச ஆதரவையும் எதிர்நோக்கியிருக்கிறது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank) இன் உருவாக்கம், யூரேசியாவில் சீனா தனது “பட்டுப் பாதை” (Silk Road) முன்முயற்சியை மீண்டும் தொடர்வது போன்ற அபிவிருத்திகள் உலகப் பொருளாதாரத்தில் தனது நிலையை கணிசமாகப் பலவீனமாக்கி விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.

16. இதுதவிர, சீன அரசு பெற்று வரும் வளங்கள், இராணுவத் திறன்கள் மற்றும் ஒரு உலகளாவிய அணுகல்-எல்லை ஆகியவை, தடுக்கப்படாது போனால், இன்னும் பல தசாப்தங்களில் அது அமெரிக்காவுடன் போட்டியிடக் கூடும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற குறியீடுகளைக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்திய சிந்தனைக் குழாம்கள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கின்றன. எரிசக்தி மற்றும் கச்சாப் பொருட்களின் ஸ்திரமான விநியோகங்களுக்கு சீனா தேவை கொண்டிருப்பதானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் செல்வாக்கை புறநிலையாக பலவீனப்படுத்தியிருக்கக் கூடிய அரசியல் உறவுகளுக்கு உருக்கொடுப்பதற்கு சீனாவைத் தள்ளியிருக்கிறது. பென்டகன்-உத்தரவின் பேரில் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) சமீபத்தில் ஆசியாவை நோக்கிய “திருப்பம்” அல்லது ”மறுசமநிலை” குறித்த தனது திறனாய்வில், “இந்தப் பிராந்தியத்தில் இராணுவ வலிமையின் சமநிலையானது அமெரிக்காவிற்கு எதிரானதாக மாறிக் கொண்டிருக்கிறது” என்று அப்பட்டமான குரோதத்துடன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

17. "சீனாவின் எழுச்சி” மீதான இத்தகைய மதிப்பீடுகளில் ஏகாதிபத்திய நலன்களால் தூண்டப்பட்ட கணிசமான மிகைமதிப்பிடல் இருக்கிறது. நவீன நகரங்களும் மிக நவீன தொழிலக வளாகங்களும் ஒருபுறம், அதன் அருகிலேயே வாழ்வாதாரம் போதாத சிறுவிவசாயியின் விவசாயம் மறுபுறம், மலைபோன்ற செல்வக்குவிப்பு ஒருபுறம் அதன் அருகிலேயே டிக்கன்ஸ் விவரணை போன்ற சுரண்டலும் நீண்டகால பின்தங்கியநிலையும் மறுபுறம் என அந்நாடு வெடிப்பான சமூக முரண்பாடுகளால் உலுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உத்தியோகபூர்வமாய் 55 அங்கீகரிக்கப்பட்ட இன சிறுபான்மையினரைக் கொண்ட ஒரு நாடான சீனாவிற்குள், அதன் புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகள் இடையே, சொத்து மற்றும் சலுகைகளுக்காக நடக்கின்ற மோதல்களில் இருந்து எழுகின்ற கன்னைவாத பிளவுகளும் பிராந்தியவாத பிளவுகளும் இருப்பதை நன்கு அறிந்த அமெரிக்க உளவு முகமைகள் அவற்றைச் சுரண்டிக் கொள்ள முனைகின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அங்கு முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டமையானது, அந்நாட்டை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்திற்கு அதிகம் பலவீனமானதாக ஆக்கியுள்ளது.

18. இந்த “மறுசமநிலையாக்கம்”, பசிபிக் கரையை ஒட்டிய சீனாவின் மக்கள்தொகை-அடர்த்திமிக்க தொழிற்துறை மையங்களுக்கு எதிரான அழிவுகரமான வான் தாக்குதல்கள், மற்றும், தென் சீனக் கடலில் சீனா தனது பொருளாதாரத்திற்காய் சார்ந்திருக்கக் கூடிய அதிமுக்கியமான கடல் பாதைகளை அதனிடமிருந்து பறிப்பது ஆகியவற்றைக் கொண்டு சீனாவை நிரந்தரமாக மிரட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளது இராணுவ சக்தியை நிலைநிறுத்துவதை மையமாகக் கொண்டிருக்கிறது. பென்டகனின் “வான்கடல் யுத்தம்” என்ற கருத்தால் சங்கேதம் காட்டப்படுகின்ற “திருப்பத்தின்” இராணுவப் பரிமாணங்கள், சீனாவை அமெரிக்காவின் பொருளாதார உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய நிர்ப்பந்திக்க நோக்கம் கொண்டிருக்கின்றன. பசிபிக் கடந்த கூட்டின் ஷரத்துகளும் அத்துடன் சீனா அல்ல, அமெரிக்கா தான் “21 ஆம் நூற்றாண்டின் வர்த்தகத்தின் விதிகளை எழுத வேண்டும்” என்ற ஒபாமாவின் அறிவிப்பும் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கொள்ளையிடும் நலன்களின் உருவடிவமாய் நிற்கின்றன.

19. ”ஆசியாவை நோக்கிய திருப்பம்” ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இராணுவமயமாக்கி ஸ்திரம்குலையச் செய்திருப்பதோடு அமெரிக்காவில் இருந்துவரும் பரந்த வளங்களையும் அது வற்றச்செய்து விடும். ஆயினும் ஏராளமான அமெரிக்க மூலோபாய வட்டங்களில் இது போதுமானதல்ல என்று கூறி நிராகரிக்கப்படுகிறது. முன்னாள் சோவியத் மத்திய ஆசியக் குடியரசுகள், ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் வழியாக அமைக்கப்படக் கூடியதும், மத்திய கிழக்கின் ஆதாரவளங்களுக்கும் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் கருணை அவசியப்படாமல் இருக்கும் மேற்கு ஐரோப்பாவின் சந்தைகளுக்கும் நிலவழிப் பாதைகளையும் புதிய கடல்வழிப் பாதைகளையும் உருவாக்குகின்ற “ஒரே இணைப்பு, ஒரே பாதை” திட்டத்தின் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வலைப்பின்னல்களுக்கு நிதியாதாரம் அளிப்பதற்கு சீன ஆட்சி வாக்குறுதியளித்திருக்கிறது. இத்தகைய இலட்சியங்களை எட்டுவதென்பது ஏராளமான பெரும் நிச்சயமற்ற அரசியல், நிதி, மற்றும் தொழில்நுட்பக் காரணிகளைச் சார்ந்திருக்கிறது என்றாலும் கூட, அமெரிக்காவைப் பொறுத்தவரை, இவை ஒரு உயிர்வாழ்க்கை அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றன.

20. இத்தகைய பொருளாதார அபிவிருத்திகள் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு இராணுவ மற்றும் அரசியல் கூட்டணியை வலுப்படுத்தி யூரேசியாவில் மேலாதிக்கம் செலுத்தி பின் மற்ற சக்திகளையும் இழுக்கக்கூடிய சாத்தியத்தைக் குறித்து சமீபத்திய CSIS ஆவணமானது ஊகிக்கிறது. CSIS எழுதுகிறது: "கிரெம்ளின் இறுதியில் சீனாவுடன் கோலாகலமான உறவு கொண்டாலும் சரி அல்லது தனது மிகவும் சக்திவாய்ந்த அண்டைநாட்டிற்கு எதிராய் தன்னை சமப்படுத்திக் கொள்ள முனைந்தாலும் சரி, அவற்றின் விளைவுகள் நீண்டகாலத்திற்கு எதிரொலிக்கும்.” மாஸ்கோவின் இப்போதைய நிர்வாகமும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து அதற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் மிதமிஞ்சிய இராணுவ வலிமையும் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க சக்தியை கடிவாளமின்றி பிரயோகிப்பதற்கு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளமுடியாத முட்டுக்கட்டைகளாக இருப்பதாகவே அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கு ஏற்கனவே கருதிக் கொண்டிருக்கிறது.

21. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மூலோபாய நிபுணரான ஹல்ஃபோர்ட் மக்கின்டரின் (Halford Mackinder 1861-1948) எழுத்துக்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை வகுக்கின்ற மூலோபாய மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர்கள் இடையே பரவலான மதிப்பைப் பெற்று வருகிறது. கல்வித்துறை ஆய்வுப்பத்திரிகைகளில் சமீப ஆண்டுகளில் வெளியான ஏராளமான புத்தகங்களிலும் மற்றும் கட்டுரைகளிலும் மக்கின்டர் “மத்தியதானமான பகுதி” (heartland) என்று குறிப்பிட்ட பகுதி தான் —இது ஜேர்மனியின் கிழக்கு எல்லைகள் தொடங்கி சீனாவின் மேற்கு எல்லை வரை நீண்டுசெல்வதாகும்— அமெரிக்காவிற்கும் அதன் மேற்கு ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் தீர்க்கமான மூலோபாய முக்கியத்துவம் கொண்ட பகுதியாய் கருதப்படுவதாகும்.

22. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய போலந்தின் வலது-சாரி எதேச்சாதிகார தலைவரான ஜோசப் பில்சுட்ஸ்கியின் “கடல்களுக்கு இடையில்” (Intermarium) திட்டம் போன்ற மற்ற கருத்தாக்கங்களும் மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தை ஸ்திரம்குலைப்பதற்கு பால்டிக் முதல் கருங்கடல் வரையிலும் (எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, போலந்து மற்றும் உக்ரேன் உள்ளிட) ஏகாதிபத்திய-ஆதரவுடனான வலது-சாரி அரசுகளது ஒரு கூட்டணியை உருவாக்குவதே Intermarium இன் நோக்கமாய் இருந்தது. இந்த தத்துவங்களின் சமகால ஆதரவாளர் ஒருவர் 2011 இல் எழுதினார்: “யூரேசியாவுடன், குறிப்பாக ‘புதிய கிழக்கு ஐரோப்பிய’ அரசுகளான உக்ரேன், பெலாருஸ் மற்றும் ககாசியன் அரசுகள் மற்றும் அதேபோல மத்திய ஆசிய அரசுகள் ஒன்றாய் சேர்ந்த ‘சிறிய யூரேசிய அரசுகள்’ உடன் மேற்கு ஈடுபாடு கொண்டிருப்பது அவசியமாகும். இந்த வழியில் முக்கிய யூரேசிய சக்திகளுக்கு எதிராய், ரஷ்யாவின் மென்மையான அடிவயிற்றுப் பகுதிக்கும் சீனாவின் கொல்லைப்புறப் பகுதிக்கும் இடையில் ஒரு பாதுகாப்புக் கோட்டையை மேற்கினால் உருவாக்குவதற்கு முடியும்.” [Alexandros Petersen, The World Island: Eurasian Geopolitics and the fate of the West, (Santa Barbara: Praeger), p. 114]

23. ஐரோப்பா மற்றும் ஆசியா இரண்டு இடங்களிலுமே இத்தகைய புவிமூலோபாயத் திட்டங்கள் பயன்படுத்தப்படுவது தெளிவாய் தெரிகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க மற்றும் கூட்டாளிகளது இராணுவ சக்தி கொஞ்சம்கொஞ்சமாய் பெருக்கப்பட்டுச் செல்வது நடந்தேறிக் கொண்டிருக்கிறது, அதேவேளையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா முகம்கொடுத்திருக்கிறது, அத்துடன் பால்டிக் அரசுகள் மற்றும் உக்ரேனில் அதிதீவிர-தேசியவாத ஆட்சிகளுக்கு அமெரிக்கா இராணுவ-உதவிக்கு வாக்குறுதியளிக்கிறது. சீனா மற்றும் ரஷ்யாவின் அணுஆயுத அரசுகள் மண்டியிடச் செய்யப்படும் நிலை தாமதமில்லாமல் விரைவில் கொண்டுவரப்பட்டாக வேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் வந்துசேர்ந்திருக்கிறது. சீனாவையும் ரஷ்யாவையும் அரைக்காலனித்துவ கீழ்ப்படிந்த அரசுகளின் நிலைக்கு குறைப்பதும், “இருதயப் பகுதியை” கட்டுப்படுத்துவதும், உலகை ஆளுவதுமே அமெரிக்காவின் இலக்காக இருக்கிறது.

24. யூரேசியாவையும் உலகத்தையும் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத்தில் தெற்காசியாவும் இந்திய பெருங்கடலும் இன்றியமையாத பாகங்களாய் உள்ளன. நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா இந்தியத் துணைக்கண்டமெங்கும் தனது இராணுவ-மூலோபாயப் பிரசன்னத்தை விரிவுபடுத்துவதற்கு இடைவிடாது நடவடிக்கை மேற்கொண்டு வந்திருக்கிறது: ஆப்கானிஸ்தானில் இப்போது 15-ஆண்டை தொட்டிருக்கும் ஆக்கிரமிப்பு; இந்தியாவுடன் விரிந்துகொண்டே செல்லும் இராணுவ உறவுகள் கொண்ட ஒரு “உலகளாவிய மூலோபாயக் கூட்டின்” அபிவிருத்தி; இலங்கையில் அமெரிக்காவுக்கு கூடுதலாகக் கீழ்ப்படிகின்ற ஒரு அரசாங்கத்தை அமர்த்துவதற்கு 2015 ஜனவரியில் அங்கு ஆட்சி மாற்றத்தை ஒழுங்கமைத்தமை ஆகியவையும் இதில் அடங்கும். சீனா மீதான போர் அல்லது ஒரு போர்-நெருக்கடியின் சமயத்தில் அதன் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கு கடல்வழி சந்திப்புப் புள்ளிகளைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் இந்தியப் பெருங்கடலில் அதன் மேலாதிக்க நிலையைச் சார்ந்திருக்கின்றன. அமெரிக்க இராணுவ வலிமையை கிழக்கு ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் முன் தள்ளுவதும் கூட அதையே சார்ந்துள்ளது. இறுதியாக ஆனாலும் முக்கியத்துவத்தில் சளைப்பில்லாததாய், இந்தியப் பெருங்கடல் மீதான கட்டுப்பாடு அதிமுக்கியமானதாக கருதப்படுவதன் காரணம் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கின்ற கடல்வழிப் பாதைகளின் மீது அல்லது அமெரிக்க மூலோபாயவாதி ஆர்.டி.கப்லனின் வார்த்தைகளில் சொல்வதானால், “உலகின் புகழ்மிக்க எரிசக்தி மற்றும் வர்த்தகத்திற்கான அரசுகளுக்கிடையிலான கடல்பாதை”யின் மீது அது அமெரிக்காவுக்கு கிடுக்கிப் பிடியைக் கொடுக்கிறது.

25. இந்தியாவையும் மற்றும் தெற்காசியா அனைத்தையும் தனது வேட்டையிடும் மூலோபாய ஆசைகளுடன் கட்டிப்போடுவதற்கான அமெரிக்காவின் பிரச்சாரமானது ஏற்கனவே வெடிப்புமிக்க புவி-அரசியல், தேசிய-இன மற்றும் வகுப்புவாத மோதல்களில் சிக்கி கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு பிராந்தியத்திற்கு மேலும் எரியூட்டுவதாகும். இதில் மிகத் திகிலூட்டும் விதமாக, அணுஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சக்திச் சமநிலையை குலைத்து, தெற்காசியாவில் ஒரு ஆயுதப் போட்டியை அது தூண்டியிருக்கிறது. தெற்காசியாவில் தனது மூர்க்கமான நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்ற பற்றியெரியச் செய்யும் தாக்கம் குறித்து அமெரிக்கா அலட்சியம் காட்டுவதை CSIS 2013 இல் வெளியிட்ட ஒரு அறிக்கை நன்கு விளங்கச்செய்திருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பத்து மில்லியன் கணக்கான மக்கள் - நூறுமில்லியன்கணக்கில் இல்லையென்றால் - உயிரிழக்கின்ற ஒரு அணுஆயுதப் போரானது அமெரிக்காவுக்கு “இடரார்ந்த பெரும் மூலோபாய பின்-விளைவுகளை” கொண்டிருக்க அவசியமில்லை, அத்துடன் அநேகமாக “அனுகூலங்களை கொண்டிருக்கலாம்” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

26. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக அளவிலான போர் திட்டமிடலின் கட்டுப்பாட்டுஇயக்கஅறை போல இருக்கிறது, ஆனாலும் இது ஒரு உலக அமைப்புமுறையாக முதலாளித்துவத்தின் கையாளமுடியாத நெருக்கடியின் மிகக் குவிந்த வெளிப்பாடு மட்டுமே ஆகும். அதே உள்முக மற்றும் வெளிமுக முரண்பாடுகளுக்கு முகம்கொடுக்கின்ற ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களும், இதற்குக் கொஞ்சமும் சளைக்காமல், தமது சொந்த ஆளும் வர்க்கங்களது வேட்டையாடும் மற்றும் பிற்போக்குத்தனமான நலன்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தின் உலகளாவிய மறுபங்கீட்டிற்கான ஒரு ஆக்ரோஷமான சண்டையாக சீரழிந்திருக்கின்ற ஒரு நிகழ்வுப்போக்கில் தங்களுக்கான பங்கினைப் பத்திரப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்காவின் அடாவடித்தனங்களை சுரண்டிக் கொள்ள இவை அனைத்தும் முயன்று கொண்டிருக்கின்றன. ஜேர்மனி அமெரிக்காவின் ஒரு கூட்டாளியாகத் தொடருமா அல்லது மீண்டும் ஐரோப்பியக் கண்டத்தில் அதன் பிரதான எதிரியாக மாறுமா? அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையிலான எப்போதும்-விரிசலுடன் இருக்கக் கூடிய “சிறப்பு உறவு” இனி இல்லாமல் போகுமா? கட்டவிழும் உலக மோதலில், ஏகாதிபத்திய அரசாங்கங்களின் வருங்காலச் சாய்வை திட்டவட்டமாக முன்கணிப்பது சாத்தியமில்லாதது. முதலாம் உலகப் போரின் போது லெனின் விளக்கியது போல், ஏகாதிபத்திய சக்திகள் ”தங்கள் கூட்டணி நாடுகளுடனும் மற்றும் அவற்றுக்கு எதிராகவும் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கைகளது ஒரு வலையில் சிக்குண்டிருக்கின்றன”.

27. ஹிட்லரின் மூன்றாவது குடியரசு (Third Reich) வீழ்ந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கமானது, அதன் அரசு ஐரோப்பாவின் கேள்விக்கப்பாற்பட்ட தலைமையாகவும் ஒரு உலக சக்தியாகவும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் கோரிக் கொண்டிருக்கிறது. ஜேர்மன் மக்களிடையே போர்-எதிர்ப்பு மனோநிலைகள் ஆழமாய் வேரூன்றி விட்டிருக்கும் நிலைக்கு முகம் கொடுக்கின்ற பேர்லின், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் தனது நலன்களை நிலைநாட்ட இராணுவப் படைகளை நிறுத்தி வருகிறது. மறுஆயுதபாணியாக்கத்தில் அது பணத்தை இறைத்துக் கொண்டிருக்க, ஜேர்மன் ஏகாதிபத்திய இலட்சியங்களுக்கு புத்துயிரூட்டுவதை நியாயப்படுத்துகின்ற நோக்கத்துடன் நாஜி ஆட்சியின் குற்றங்களுக்கான வக்காலத்துவாங்கல்கள் அரசியல் ஸ்தாபனங்கள், ஊடகங்கள் மற்றும் கல்வி ஸ்தாபனங்கள் எங்கும் முன்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

28. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது பங்காக, அமெரிக்க வீழ்ச்சியை ஒரு வாய்ப்பாகக் கருதி இன்னமும் இலண்டன் மாநகரை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கிகள் மற்றும் நிதியங்களது கணிசமான உலகளாவிய நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எண்ணுகிறது. பிரான்ஸ் வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் தனது முன்னாள் காலனித்துவ ஆதிக்கபிரதேச நாடுகளின் மீதான தனது பிடியை மீண்டும் பெறுவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது. இத்தாலி லிபியாவில் தனது செல்வாக்கை மறுஸ்தாபிதம் செய்யும் திட்டங்களைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் வெளிப்படையாய் “தனிச்சிறப்பான” கூட்டாளியான பிரிட்டன் சென்றபாதையில், அத்தனை முக்கிய ஐரோப்பிய சக்திகளும், சென்ற ஆண்டில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை ஸ்தாபிப்பதில் சீனாவுடன் கைகோர்த்ததின் மூலமாக அமெரிக்காவுக்கான தங்களது எதிர்ப்புணர்வை சமிக்கை செய்தன. அதே சமயத்தில், ஐரோப்பிய சக்திகளிடையே பெருகிவருகின்ற குரோதங்கள் —குறிப்பாக ஜேர்மனியின் பெருகும் மேலாதிக்க உணர்வு குறித்து பிரிட்டன் மற்றும் பிரான்சில் பெருகுகின்ற குரோதம்— ஐரோப்பிய ஒன்றியத்தை விரிசல் காணச் செய்து வருகின்றன. இக்கண்டத்தை முதலாளித்துவ உறவுகளின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தி விட முடியும் என்பதான பிரமை தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் பிரிட்டன் வெளியேறுவது குறித்த ஒரு வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முழுமையான உருக்குலைவையும் அத்துடன் இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்ற தீர்க்கப்படாத தேசிய குரோதங்கள் மீண்டும் ஐரோப்பிய அரசியலின் மத்திக்கு மீளெழுச்சி காண்பதையும் தொடக்கி வைக்கக் கூடும்.

29. ஜப்பான் அமெரிக்காவால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற ஒரு உலக ஒழுங்கிற்கு தனது முடிவில்லாத விசுவாசத்தை உறுதியளித்திருக்கிறது என்றாலும், நாட்டின் ஆளும் உயரடுக்கானது, தனது சுதந்திரமான ஏகாதிபத்திய பாத்திரத்தின் மீது விதிக்கப்பட்ட போருக்குப்பிந்தைய தளைகளை மறுதலித்துக் கொண்டிருக்கிறது, தனது சொந்த அபிலாசைகளை வன்முறையாக நிலைநாட்டுவதற்காக தனது இராணுவ வலிமையை அது பெருக்கிக் கொண்டிருக்கிறது. 1941 இல், ஆசியாவை எந்த சக்தி கட்டுப்படுத்துவது என்ற பிரச்சினை தான் அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களை இறுதியாக போரை நோக்கி செலுத்தியது. அமெரிக்க இராணுவவாதத்திற்கு கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சிறிய ஏகாதிபத்திய சக்திகள் அளிக்கின்ற ஆதரவென்பது, அதுவே தமது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாக இப்போது இருக்கிறது என்ற அவற்றின் கூலிப்படைத்தனமான முடிவில் இருந்து பிறக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் தனது கணக்குகளில் அபூர்வமாகவே இடம்பிடித்திருந்த இந்தியா, பிரேசில், ஈரான் மற்றும் இந்தோனேசியா போன்ற அரசுகளின் நிலைகளையும் இராணுவ வளங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

ஏகாதிபத்தியமும் முதலாளித்துவத்தின் முறிவும்

30. போட்டி தேசிய-அரசுகளுக்கு இடையிலான பதட்டங்களும் மோதல்களும் முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய பொறிவினால் எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது முதலாளித்துவத்தின் வெற்றியைக் குறிக்கவில்லை, மாறாக இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதன் ஸ்திரப்படலுக்கு வழிவகுத்த இன்றியமையாத அரசியல் பொறிமுறை உடைவினையே குறித்தது என்ற மதிப்பீட்டை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே செய்தது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையில் இரண்டு உலகப் போர்கள் தோன்றுவதற்கு வழிவகுத்திருந்த உட்பொதிந்த முரண்பாடுகளை அமைதியாக கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா கொண்டிருந்த திறன் தவிர்க்கவியலாமல் முடிவுக்கு வந்திருந்தமை ஆகியவை ஒரேகாலகட்டத்தில் நடந்தேறியிருந்தது.

31. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பைத் தொடர்ந்து “சுதந்திரச் சந்தை” இறுதி வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டதற்கு நேரெதிராய், கடந்த 25ஆண்டுகள் நெருக்கடிகளின் முடிவில்லாத ஒரு வரிசையையே கண்டிருக்கின்றன. 1997-1998 ஆசியப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 1998 இல் ரஷ்யக் கடன் அடைக்க முடியாமை மற்றும் நீண்டகால மூலதன மேலாண்மையின் திவால்நிலை ஆகியவை பின் தொடர்ந்து வந்தன; அதன்பின் 2001 இல் டாட்.காம் குமிழி உடைவு, உச்சமாக 2008 இன் பிற்பகுதியில் அமெரிக்காவில் அடமானக் கடன் பொறிவும் உலகளாவிய நிதிப் பொறிவும் வந்தன.

32. கடந்த ஏழு ஆண்டுகளில், அமெரிக்க கூட்டரசாங்க மத்திய வங்கி தலைமையில் உலகின் மத்திய வங்கிகள் 12 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களது நிலையை முட்டுக்கொடுத்து நிறுத்துவதற்காய் பாய்ச்சியிருக்கின்றன. பங்கு மதிப்புகளும், பெரும் பணக்காரர்களின் சராசரியான செல்வமும் கூர்மையாய் உயர்ந்து சென்றிருக்கின்ற அதேநேரத்தில், உற்பத்தி நடவடிக்கை தொடர்ந்து தேக்கமடைந்து வந்திருந்தது, உலகளாவிய கடன் 57 டிரில்லியன் டாலர் வரையிலும் அதிகரித்திருந்த போதிலும் கூட. சீனாவில், கடனால் உந்தப்படுகின்ற செயற்கைத்தூண்டல் கொள்கைகளால் பராமரிக்கப்படுகின்ற, வளர்ச்சியானது, இப்போது கூர்மையாக மந்தமடைந்து வருவதன் மூலம், பொருட்களின் விலைகளின் பொறிவுக்கு அது உந்துதலளிக்கின்றது. சவுதி அரேபியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா, பிரேசில் மற்றும் வெனிசூலா, இன்னும் கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் கூட உள்ளிட்ட பொருட்களது ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் நாடுகள் பொருளாதார மந்தநிலையை நோக்கி சரிந்து சென்று கொண்டிருக்கின்றன.

33. கூடுதல் அழிவுகரமான உலக நிதிப் பொறிவு கண்முன் விரிந்து சென்று கொண்டிருக்கிறது. “2008 நிதி நெருக்கடிமுதலாக வாராக் கடன்கள் பொருளாதார நடவடிக்கையை பின்னிழுப்பதாக இருந்து வருகின்றன” என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. அது எச்சரித்தது: ”சீனாவுக்குள்ளாக, சிக்கலில் இருக்கும் கடன்தொகையின் அளவு 5 டிரில்லியன் டாலர்களுக்கு மிகுந்து விடக் கூடும், இந்த மலைக்க வைக்கும் தொகையானது அந்த நாட்டின் வருடாந்திர பொருளாதார உற்பத்தியின் அளவில் கிட்டத்தட்ட பாதியாகும்.” 2008 இன் பின்னர் நடந்திருக்கக் கூடிய உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் பிரதான உந்துசக்தியாக இருந்து வந்திருக்கக் கூடிய சீனாவில் “செயல்படாத கடன்கள்” 4.4 டிரில்லியன் டாலர் நிதி இழப்புக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் டைம்ஸ் சேர்த்து எச்சரித்தது. தோல்வி கண்டுவரும் எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிரில்லியன் கணக்கான டாலர் கடன்களுக்கு உலகப் பொருளாதாரம் முகம்கொடுத்து நிற்பது குறித்த அபாயச்சங்கு எச்சரிக்கைகளை மற்ற பகுப்பாய்வாளர்களும் விநியோகித்துக் கொண்டிருக்கின்றனர்.

34. 1929 ஆம் ஆண்டின் வோல் ஸ்ட்ரீட் பொறிவு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் எவ்வாறு இரண்டாம் உலகப் போராக வெடித்த புவி-அரசியல் பதட்டங்களுக்கு இயக்கமளித்ததோ, அவ்வாறே, 2008 இன் பொறிவானது ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எரியூட்டியிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகள், போட்டியான நாடுகடந்த கூட்டுநிறுவனங்களிடையே, வீழ்ந்து செல்லும் சந்தைப் பங்கு மற்றும் இலாபம் தொடர்பாக அதிகரித்துச் செல்கின்ற கடுமையானதொரு சண்டையை, கண்ணுற்றுள்ளன. அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆலோசனை நிறுவனமான மெக்கன்ஸி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் சமீபத்திய அறிக்கை ஒன்று, உலகளாவிய மந்தம், உக்கிரமடைந்து வரும் போட்டி, மற்றும் தொழிலாள வர்க்கம் அதிக ஊதியங்களுக்கு கோரிக்கை வைப்பது ஆகியவற்றின் ஒரு கலவையால் பெருநிறுவன இலாபமீட்டுநிலையின் “பொற்காலம்” முடிவுக்கு வந்திருப்பது தொடர்பான அமெரிக்க அச்சங்களை வெளிப்படுத்துகிறது. 1980 மற்றும் 2013க்கு இடைப்பட்ட காலத்தில் இலாபங்களின் அளவு உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கும் அதேநேரத்தில், அடுத்த தசாப்தத்தின் போது நிலைமைகள் தீவிரமாய் மாற்றம்காணும் என மெக்கென்சி வலியுறுத்துகிறது. ஸ்தாபனமான பெருநிறுவனங்கள் “எழுச்சிகண்டு வரும் சந்தைகளை” குறிப்பாக சீனாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களிடம் இருந்து அதிகமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தொழிலாள வர்க்கத்திடம் அதிகரிக்கும் எதிர்ப்பானது உழைப்புக்காகும் செலவுகளிலான தசாப்தகால வீழ்ச்சியை இன்னும் நெருக்குகின்றது. மெக்கென்சி அறிக்கை இவ்வாறு நிறைவுசெய்கிறது: “இந்த வேகமாய்-மாறுகின்ற சூழலில் நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு ஒப்பீட்டு அனுகூலத்தை அபிவிருத்தி செய்வது என்பதன் அர்த்தம் என்ன என்ற விடயத்தில் உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்கள் புதிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்.” இந்த “ஒப்பீட்டு அனுகூலத்தை” ஈட்டுவதற்கான ஒரு வழிமுறையாக ஆளும் வர்க்கம் இராணுவ வலிமையைக் காண்கிறது.

ஏகாதிபத்தியம், ஏகபோகம் மற்றும் நிதிப் பிரபுத்துவம்

35. 2016 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போரின் படுகொலைகளுக்கு மத்தியில் விளாடிமிர் லெனின் ஏகாதிபத்தியம் குறித்து எழுதிய மகத்தான எழுத்துக்களது 100வது ஆண்டாகவும் இருக்கிறது. ஏகாதிபத்தியம் என்பது வெறுமனே ஒரு கொள்கை அல்ல, மாறாக உலக முதலாளித்துவத்தின் அபிவிருத்தியில் ஒரு குறிப்பிட்ட கட்டம் என்பதை லெனின் விளக்கினார். ”ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளித்துவம்; ஒட்டுண்ணியான, அல்லது அழுகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம்; மரணத்தறுவாயில் இருக்கிற முதலாளித்துவம்.” “சுதந்திரமான போட்டியின் இடத்தில் ஏகபோகம் அமர்த்தப்படுவதையும்”, மிகப்பெரும் நிறுவனக் கூட்டுகளாலும் வங்கிகளாலும் — ”இவை ஒட்டுமொத்த உலக சந்தையையும் கட்டுப்பாட்டில் கொண்டு அதனை தங்களுக்குள் ‘அமைதியாக’ பிரித்துக் கொள்கின்றன, போர் அதனை மறுபங்கீடு செய்கின்ற வரையில்” — பொருளாதாரத்தை மேலாதிக்கம் செய்யும் நிலையையும் கொண்டு இது குணாம்சம் காட்டப்படுவதாக லெனின் வலியுறுத்தினார். ஏகாதிபத்தியம் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம் ஆகும், அது “மேலாதிக்கத்திற்காக முனைகின்றதே அன்றி சுதந்திரத்திற்காக அல்ல” என்று லெனின் எழுதினார்.

36. கடந்த நூற்றாண்டின் காலத்தில் வெடிப்புடன் அபிவிருத்தி கண்டிருக்கக்கூடிய ஒரு நிகழ்முறையின் ஆரம்ப கட்டத்தில் லெனினின் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. முதலாளித்துவ உற்பத்தியின் உலகமயமாக்கத்தைக் கொண்டு நாடுகடந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்த புவிக்கோளத்தையும் மேலாதிக்கம் செய்யும் நிலைக்கு வந்திருக்கின்றன; உலகெங்கிலுமான தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகின்ற பரந்த உற்பத்தி வலைப்பின்னல்களையும் விநியோகச் சங்கிலிகளையும் நிலைநிறுத்தியிருக்கின்றன. நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம் மிகப்பரந்த பரிமாணங்களை எட்டியுள்ளது. சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் 2011 இல் நடத்திய ஒரு கணக்கெடுப்பின் படி, மொத்தம் 43,060 பெரிய நாடுகடந்த நிறுவனங்களில், வெறும் 1,318 மட்டும் சேர்ந்து உலகின் மிகப்பெரும் உற்பத்தி நிறுவனங்களில் பெரும்பான்மையை கையில் கொண்டிருந்தன, உலகின் வருவாய்களில் 60 சதவீதம் அவற்றின் பங்காக இருந்தது. இவற்றிலும் வெறும் 147 நிறுவனங்கள் மட்டுமே —இவை அநேகமாக அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரும் வங்கிகளாக மற்றும் மூதலீட்டு நிதியங்களாய் இருந்தன— பின்னலில் இருந்த மொத்த சொத்துமதிப்பில் 40 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தன.

37. 2008 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பெருநிறுவனங்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு உக்கிரமடையவே செய்திருக்கிறது. நிறுவனங்கள், இணைவுகள் மற்றும் கையகப்படுத்தல்களின் ஒரு அலையில் ஈடுபட்டிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு இத்தகைய வலுப்படல்களுக்கான ஒரு சாதனை ஆண்டாக 4.9 டிரில்லியன் டாலர் கூட்டுமதிப்பை எட்டியது, முன்னதாக 2007 இல் 4.6 டிரில்லியன் டாலர் கூட்டுமதிப்பு எட்டப்பட்டதே அதிகபட்சமாய் இருந்தது.

38. லெனின் எழுதினார்: ஏகாதிபத்தியத்தின் கீழ், ”மூலதனத்தின் அத்தனை வடிவங்களின் மீதும் நிதி மூலதனம் மேலாதிக்கம் செலுத்துவதென்பது முதலீட்டிலிருந்து வருவாய் ஈட்டுபவர்கள் மற்றும் நிதிப் பிரபுக்களின் மேலாதிக்கத்தைக் குறிப்பதாகும்; அதாவது ஒரு சிறிய எண்ணிக்கையிலான ‘சக்திவாய்ந்த’ அரசுகள் எஞ்சியவற்றிற்கு மேலுயர்ந்து நிற்பதைக் குறிப்பதாகும்”. நிதிமயமாக்கத்தை நோக்கிய போக்கும், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையின் அத்தனை அம்சங்களின் மீதும் “முதலீட்டு” ஊகவணிகரது மேலாதிக்கமான நிலையும் மிகப்பரந்த மட்டத்திற்கு விரிவுகண்டிருக்கிறது, வேறெங்கிலும் விட அமெரிக்காவில் அது மிக அதிகமாக நிகழ்ந்திருக்கிறது. 1980 இல் அமெரிக்காவின் பெருநிறுவன இலாபங்களில் வெறும் 6 சதவீதம் மட்டுமே நிதித்துறைக்கு பாய்ந்தது, இன்று அது 40 சதவீதத்துக்கும் அதிகமாக ஆகிவிட்டிருக்கிறது.

39. உலக மக்கள்தொகையில் சிறிய, விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் கொண்டிருக்கக் கூடிய செல்வத்தின் அளவு புரிந்து கொள்ளவும் கூட எட்டாததாக இருக்கிறது. வசதிபடைத்த 62 தனிநபர்கள், சமூகத்தின் கீழே இருக்கின்ற 50 சதவீதம் பேரை விடவும், அல்லது 3.7 பில்லியன் மக்களை விடவும் அதிகமாய், இப்போது சொத்துக்களை கொண்டுள்ளனர். அமெரிக்காவில் “பொருளாதார மீட்சி”யானது முதலாளித்துவ வர்க்கத்திற்கு மட்டுமே பயனளித்திருக்கிறது, மேலேயிருக்கக்கூடிய 0.1 சதவீதத்தினர் கொண்டுள்ள செல்வத்தின் பங்கு 2007 இல் 17 சதவீதமாக இருந்ததில் இருந்து 2012 இல் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதேகாலத்தில் ஒரு சராசரி குடும்பத்தின் வருவாய் 12 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்த ஆண்டில், உலக மக்கள்தொகையில் மேலேயிருக்கின்ற 1 சதவீதத்தினர் கட்டுப்படுத்தும் சொத்து கீழேயிருக்கும் 99 சதவீதத்தினரது உடைமையாக இருக்கின்ற சொத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

40. இராணுவவாதத்தை நோக்கிய திருப்பமானது சமூக சமத்துவமின்மையை மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்தியிருப்பதோடு, வர்க்கப் பதட்டங்களையும் அதிகப்படுத்தியுள்ளது. இராணுவ ஒதுக்கீடுகளிலான முடிவில்லாத அதிகரிப்புகள் தொழிலாளர்களது’ சமூக உரிமைகளது நேரடியான பறிப்பைக் கொண்டு தான் நிதியாதாரம் அளிக்கப்படுகின்றன. உலகளாவிய இராணுவச் செலவினமானது ஏற்கனவே 1.7 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அளவுக்கு உயர்வு கண்டிருக்கிறது, இதில் அமெரிக்க அரசின் பங்கு மட்டும் 600 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.

தொழிலாள வர்க்கமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்

41. முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் நெருக்கடியானது இரண்டு சமரசப்படுத்தவியலாத முன்னோக்குகளுக்கு தோற்றமளிக்கிறது. முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையுடன் உடன்பிறந்ததாய் இருக்கக்கூடிய பொருளாதார மற்றும் புவிமூலோபாய நலன்களின் மோதலை, ஏகாதிபத்தியமானது, ஒற்றை உலக மேலாதிக்க சக்தி தனது அத்தனை எதிரிகளையும் வெற்றிகாண்பதன் மூலமாக, வெற்றி காண்பதற்கு முனைகிறது. இதுதான் ஏகாதிபத்திய புவிமூலோபாய கணக்கீடுகளின் நோக்கமாகும், அதன் தவிர்க்கவியலாத விளைபொருளாக உலகளாவிய போர் இருக்கிறது.

42. முதலாளித்துவ வர்க்கத்தின் புவிஅரசியலுக்கு எதிராய், ஒட்டுமொத்தமாய் தேசிய-அரசு அமைப்புமுறைக்கு ஒரு முடிவுகட்டப்படுவதையும் சமத்துவம் மற்றும் அறிவியல்பூர்வமான திட்டமிடலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதையும் குறிக்கின்ற உலக சோசலிசப் புரட்சிக்கான வெகுஜன அடித்தளத்தை புறநிலையாக உருவாக்குகின்ற சமூக சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் அமைந்திருக்கிறது. ஏகாதிபத்தியமானது முதலாளித்துவ ஒழுங்கை போரின் மூலமாகக் காப்பாற்ற விழைகிறது. தொழிலாள வர்க்கம் உலக நெருக்கடியை சமூகப் புரட்சியின் மூலமாகத் தீர்க்க முனைகிறது. ஏகாதிபத்திய தேசிய-அரசு புவியரசியலின் எதிர்மறையாக புரட்சிகரக் கட்சியின் மூலோபாயம் அபிவிருத்தி காண்கிறது. ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, புரட்சிகரக் கட்சியானது “போரின் வரைபடத்தைப் பின்பற்றுவதில்லை, மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தையே பின்பற்றுகிறது.”

43. முதலாளித்துவமானது, மார்க்சிசம் விளக்குவதைப் போல, தனது சவக்குழி தோண்டுவோரை தானே உருவாக்குகிறது. உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது, முதலாளித்துவத்தின் நெருக்கடியை அதிகரித்திருக்கும் அதே நேரத்தில், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அளவில் ஒரு பிரம்மாண்டமான எண்ணிக்கை அதிகரிப்புக்கும் இட்டுச்சென்றிருக்கிறது.1980 இல் இருந்து 2010 வரையிலும், உலகின் தொழிலாளர் படையானது 1.2 பில்லியன் அதிகரித்து, சுமார் 2.9 பில்லியன் தொழிலாளர்களாக அதிகரித்துள்ளது, இதில் சீனாவிலும் இந்தியாவிலும் மட்டும் சுமார் 500 மில்லியன் புதிய தொழிலாளர்கள் உருவாகப் பெற்றுள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி எண்ணிக்கையானது ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் நூறுமில்லியன் கணக்கான புதிய தொழிலாளர்களை மட்டுமல்ல, ஏகாதிபத்திய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் மக்களின் பரந்த அடுக்குகளையும் கொண்டிருக்கிறது. உற்பத்தி சாதனங்களுக்கு உடைமையாக இருந்து அதனைக் கட்டுப்படுத்துகின்ற ஒரு சிறு எண்ணிக்கையிலான அடுக்குக்கும் தங்களது உழைப்புசக்தியை சந்தையில் விற்கத் தள்ளப்பட்டிருக்கும் பரந்த பெரும்பான்மை அடுக்கிற்கும் இடையில் ஒட்டுமொத்த உலகமும் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

44. புரட்சிகர பரிமாணங்களை தவிர்க்கவியலாமல் ஏற்கக் கூடிய போராட்டங்களுக்குள் தொழிலாள வர்க்கம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கெங்கிலும் ஆளும் வர்க்கங்கள் தங்களது “தாயக” தேசிய அரசிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து பாரிய வேலைவாய்ப்பின்மை, சிக்கன நடவடிக்கை மற்றும் வாழ்க்கைத் தரங்கள் அழிப்பு ஆகியவற்றின் வடிவில் முடிவில்லாத “தியாகத்தை” பிழிவதன் மூலம் தங்களது நிலைகளை பாதுகாத்துக் கொள்ளத் தள்ளப்படுகின்றன. இளைஞர்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையும் எதிர்காலம் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடிப்படை உள்கட்டமைப்பு சிதைவுகள், வறுமை அதிகரிப்புகள், மற்றும் சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பதிலில்லாமல் விடப்படுகின்ற அதேநேரத்தில் பரந்த ஆதாரவளங்கள் இராணுவச் செலவினங்களுக்காய் விரயம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

45. பல தசாப்த காலங்களில் பெருகிக் குவிந்திருக்கும் சமூக பதட்டங்கள் மேற்பரப்பிற்கு வெடித்து வந்து கொண்டிருப்பதான தெளிவான சமிக்கைகள் இருக்கின்றன. 2011 இல் எகிப்திலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய இயக்கமானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை சமிக்கை செய்தது. அதனைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலான சிக்கன-நடவடிக்கை எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி, சீனா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்காவிலான வேலைநிறுத்தங்களின் பெருக்கம் மற்றும் அமெரிக்காவில் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களிடையேயும் தொழிலாளர்களின் மற்ற பகுதியினர் இடையிலும் கிளர்ச்சி மனோநிலைகளது எழுச்சி ஆகியவை வரையிலும் ஒவ்வொரு நாட்டிலும் சமத்துவமின்மை மற்றும் பெருநிறுவனச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்கள் பின்தொடர்ந்து வந்திருக்கின்றன.

ஏகாதிபத்தியத்தின் போலி-இடது முகமைகள்

46. சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போருக்கு ஆழமான எதிர்ப்பு நிலவுகிறது. 2003 இல் பொய்களின் அடிப்படையில் புஷ் நிர்வாகம் ஈராக்கை ஆக்கிரமிக்க தயாரிப்பு செய்த சமயத்தில், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த உணர்வு மறைந்துவிடவில்லை. அப்படியானால், கடந்த தசாப்தத்தில், போருக்கு எதிரான அத்தனை போராட்ட வடிவங்களும் அமுக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையின் காரணம் என்ன?

47. ”இடது” என்று மோசடியாகக் கூறிக்கொள்ளக் கூடிய முதலாளித்துவ-ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய-ஆதரவு அரசியலில் தான் அதற்கான பதில் அமைந்திருக்கிறது. வியட்நாம் போரின் காலத்திலான போர்-எதிர்ப்பு இயக்கம் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் தீவிரமயப்பட்ட பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கடந்த நான்கு தசாப்தங்களில், இந்த அடுக்குகள் ஒரு ஆழமான சமூக மற்றும் அரசியல் உருமாற்றத்துக்குள் சென்றுள்ளன. பங்குமதிப்புகளிலான பரந்த அதிகரிப்பானது - தொழிலாளர்கள் மீது ஊதிய மற்றும் நலன்புரி உதவி விட்டுக்கொடுப்புகள் தொடர்ச்சியாக திணிக்கப்பட்டதன் மூலமும், சுரண்டல் விகிதம் உக்கிரப்படுத்தப்பட்டதன் மூலமும், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து முன்னெப்போதினும் மிகப்பெரும் அளவிலான உபரி மதிப்பு பிழிந்தெடுக்கப்பட்டதன் மூலமும் இதற்கு வழியேற்படுத்தப்பட்டிருந்தது - நடுத்தர வர்க்கங்களின் ஒரு சலுகைபடைத்த பிரிவுக்கு, அவர்கள் தங்களது தொழில்வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்பனை செய்தும் பார்த்திருக்கமுடியாத அளவான செல்வத்தின் ஒரு மட்டத்திற்கு அவர்களுக்கு அணுகல் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. நீடித்த பங்குச் சந்தை எழுச்சியின் மூலமாக ஏகாதிபத்தியம் உயர்-நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளிடையே தனக்கான ஒரு புதிய மற்றும் அர்ப்பணித்த பகுதியை வென்றெடுப்பதற்கு வழிகிடைத்திருந்தது. இந்த சக்திகளும், அவற்றின் நலன்களை வெளிப்படுத்துகின்ற அரசியல் அமைப்புகளும், போருக்கான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்தின் கொள்ளை நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கும் கூட, தங்களது சக்திக்குட்பட்ட அத்தனையையும் செய்தன.

48. பால்கன்களிலான தலையீடு என்றாலும், லிபியாவிலான தலையீடு என்றாலும் அல்லது சிரியாவிலான தலையீடு என்றாலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது பொய்களை “மனித உரிமைகள்” என்ற மோசடியான வாதங்களின் கீழ் மூடிமறைப்பதே போலி-இடது அமைப்புகள் மற்றும் அவற்றின் உடனிருக்கும் அமைப்புகளது குறிப்பிட்ட அரசியல் செயல்பாடாய் இருக்கிறது. பென்டகன் திட்டமிடும் ஏதேனும் ஒரு “பாதுகாப்பதற்கான பொறுப்பு" (R2P) நடவடிக்கையுடன் குறுக்கிடுவதற்காக “எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்திய-விரோதம்” காட்டும் போக்கை போலி-இடதுகளின் தலைவர்கள் கண்டனம் செய்கிறார்கள். ஜில்பேர் அஷ்கார் போன்ற போலி-இடதுகளின் பிரதான தலைவர்கள் ஏகாதிபத்திய மூலோபாய அமர்வுகளில் பங்கேற்கும் மட்டத்திற்கும் கூட சென்று விட்டிருக்கின்றனர். சுய-விளம்பரம் தேடும் பேராசிரியர் ஜூவான் கோல் லிபியாவில் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு சிப்பாயாக சேவை செய்வதற்கு பகிரங்கமாய் விருப்பம் வெளியிடுகிறார். குட்டி-முதலாளித்துவ கல்வியறிஞர்களும், மதத் தலைவர்களும் மற்றும் பலவண்ண எடுபிடிகளும் தங்களது அரசாங்கங்களின் குற்றவியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக, அறரீதியான மற்றும் தார்மீகரீதியான உயர்மனப்பான்மைகள் குறித்து சிடுமூஞ்சித்தனமாகக் குறிப்பிடுவதில் புதிதாக எதுவுமில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தின் சமயத்திலேயே, ஏகாதிபத்தியத்தின் தாராளவாத விமர்சகரான, ஜோன் ஏ.ஹாப்சன், ஆக்கிரமிப்புகளையும் ஒட்டவைப்புகளையும் மூடிமறைப்பதற்கு “ஆன்மாவின் பொய்” வகிக்கின்ற பாத்திரம் குறித்து சுட்டெரிக்கும் விதத்தில் கவனம் ஈர்த்திருந்தார். இத்தகைய பொய்களின் ஒரு விளைவாய், “தேசத்தின் அறமதிப்பு தரம்தாழ்ந்து கிடக்கிறது” என்று ஹாப்சன் எழுதினார்.

49. பென்டகன் மூலோபாயவாதிகளுடனான தங்களது கூட்டிற்கு தத்துவார்த்த மற்றும் அரசியல் நியாயத்தின் ஏதேனும் ஒரு வடிவத்தைக் கொடுக்கும் பிரயத்தனத்தில், போலி-இடது அமைப்புகளின் ஒரு அகன்ற வரிசையினர், ரஷ்யாவையும் சீனாவையும் “ஏகாதிபத்திய” சக்திகளாகப் பிரகடனம் செய்திருக்கின்றனர். ரஷ்யாவும் சீனாவும் வெறும் 25 ஆண்டுகால இடைவெளியில், அதிகாரத்துவரீதியாக சீரழிந்த மற்றும் சீர்குலைந்த தொழிலாளர்’ அரசுகளாக இருந்ததில் இருந்து ஏகாதிபத்திய சக்திகளாக ஆனதைக் காட்டுகின்ற வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை விளக்குவதற்கு ஏறக்குறைய எந்த முயற்சியும் இல்லாமல், இந்த வரையறையானது அந்தரத்தில் இருந்து பிடுங்கியதாய் இருக்கிறது.

50. சீனாவிலும் ரஷ்யாவிலும் இருக்கும் ஆட்சிகளுக்கு அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவது தான் விடயமாய் இருந்தால், “ஏகாதிபத்தியம்” என்ற வார்த்தையை பிரயோகிக்க அவசியம் இருந்திருக்காது. உலக சோசலிசப் புரட்சியின் ஒரு அத்தியாவசிய பாகமாக, ரஷ்யாவிலும் சீனாவிலும் இருக்கும் முதலாளித்துவ அரசுகள் தொழிலாள வர்க்கத்தினால் தூக்கியெறியப்படுவதற்கே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கிறது. இந்த இரு அரசுகளுமே, இருபதாம் நூற்றாண்டின் சோசலிசப் புரட்சிகளை ஸ்ராலினிசம் காட்டிக் கொடுத்து இறுதியில் அது முதலாளித்துவத்தை மீட்சி செய்ததன் விளைபொருட்களே என்று அது விளக்கியிருக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் அரசை அகற்றி தேசியமயமாக்கப்பட்ட சொத்துடைமை உறவுகளை ஒழித்ததிற்கு பின்னர், அதிலிருந்து எழுந்த நிதிப் பிரபுக்களது பிரதிநிதியாகவே ரஷ்ய அரசாங்கம் இருக்கிறது. ”மகா ரஷ்ய” தேசியவாதத்தை அது ஊக்குவிப்பது என்பதே ஸ்ராலினிசத்தின் ஒரு உச்சநிலையான விளைவுதான் என்பதோடு அது மார்க்சிசத்தின் சர்வதேசிய வேலைத்திட்டத்தை வன்முறையாகவும் எதிர்ப்புரட்சிகரமாகவும் மறுதலிப்பதாகவும் இருக்கிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியானது முதலாளித்துவ உயரடுக்கையும் 1980களில் உருவாகி சீன மக்களை பெருநிறுவனங்கள் சுரண்ட வழிவகை செய்வதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்ட போலிஸ்-அரசு அதிகாரத்துவத்தையுமே பிரதிநிதித்துவம் செய்கிறது.

51. சீனாவையும் ரஷ்யாவையும் விவரிக்க “ஏகாதிபத்திய” அடைமொழி சேர்ப்பது என்ன அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்கிறது? என்று கேட்கப்பட்டாக வேண்டும். நடைமுறை அரசியல் வார்த்தைகளில், அது திட்டவட்டமான செயல்பாடுகளுக்கு சேவை செய்கிறது. முதலாவதாய், அது அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் மையமான மற்றும் தீர்மானகரமான உலகளாவிய எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை சார்புரீதியானதாக்கி, ஆகவே ஒன்றுமில்லாது செய்து விடுகிறது. சிரியாவில் —இங்கு ஆசாத்தின் ஆட்சி ரஷ்யாவினால் ஆதரவளிக்கப்பட்டிருக்கிறது— போன்று அமெரிக்காவின் ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் செயலூக்கத்துடன் ஒத்துழைத்து வேலை செய்வதற்கு இது போலி-இடதுகளுக்கு வழிவகையளிக்கிறது. இரண்டாவதும், இன்னும் கூடுதல் முக்கியமானதும் என்னவென்றால், சீனாவையும் ரஷ்யாவையும் ஏகாதிபத்தியமாக முத்திரையிடுவது. இது ஆகவே, இனரீதியான, தேசிய ரீதியான, மொழிரீதியான மற்றும் மதரீதியான சிறுபான்மையினரை ஒடுக்குகின்ற காலனித்துவ சக்திகளாக அவற்றை மறைமுகமாக கூறுவதாயிற்று. அதனூடாக — தற்போதுள்ள அரசு எல்லைகளுக்குள்ளாக ஏகாதிபத்திய ஆதரவைப் பெற்ற “தேசிய விடுதலை” எழுச்சிகளுக்கும் “வண்ணப் புரட்சி”களுக்கும் போலி-இடதுகளின் ஆதரவிற்கு அது அங்கீகாரமளித்து விடுகிறது.

52. வெளிநாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கான ஆதரவு, தாயகத்தில் நிதிப் பிரபுத்துவத்தின் கட்டளைகளுக்கான ஆதரவுடன் இசைந்து செயல்படுகிறது. கிரீஸில் 2015 இல் சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அதிகாரத்திற்கு வந்தமையும், துரித வேகத்தில் அது தான் எதிர்ப்பதாகக் கூறிய அதே சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டமையும், சர்வதேச அளவில் போலி-இடதுகளின் தன்மையையும் பாத்திரத்தையும் அம்பலப்படுத்தியது. ஜேர்மனியில் உள்ள இடது கட்சி, பிரான்சில் உள்ள புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு மற்றும் சோசலிச மாற்று ஆகியவை போன்ற குழுக்களும் இதே செயல்பாட்டையே ஆற்றுகின்றன. பிரிட்டனில் ஜெரெமி கோர்பினின் தொழிற் கட்சிப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதானாலும் சரி அல்லது அமெரிக்காவில் பேர்னி சாண்டர்ஸின் ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தை ஊக்குவிப்பதானாலும் சரி, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் எதனையும் தடுப்பது தான் இந்த அமைப்புகளின் நோக்கமாய் இருக்கிறது. இனம், பால் மற்றும் பால் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையிலான அடையாள அரசியலை தொடர்ச்சியாக ஊக்குவித்து வந்திருப்பதே, கல்வியகங்களிலும், தொழில்வாழ்க்கைகளிலும், தொழிற்சங்கங்களிலும் மற்றும் அரசு அதிகாரத்துவத்திலும் சலுகைபடைத்த பதவிகளுக்கும் உயர் வருவாய்களுக்குமான அணுகலைப் பெறுவதற்கு இவர்களுக்கான கருவிகளாக இருந்திருக்கிறது. அவர்கள் நிதி அதிகாரத்துவத்தின் ஆடையுடன் ஆயிரக்கணக்கிலான இழைகளின் மூலம் பின்னிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் என்பதோடு தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான குரோதம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவோம்!

53. 1917 அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். உலக சரித்திரத்திலான இந்த சகாப்தச்சிறப்பான நிகழ்வு —முதலாவது சோசலிசப் புரட்சி மற்றும் தொழிலாளர்’ அரசின் ஸ்தாபிப்பு— முதலாம் ஏகாதிபத்திய உலகப் போரை சமரசமில்லாமல் எதிர்த்திருந்த, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான மார்க்சிச சர்வதேசியவாதிகளால் தயாரிப்பு செய்யப்பட்டது. அதன்பின் அக்டோபர் புரட்சியின் சர்வதேசிய வேலைத்திட்டமும் கோட்பாடுகளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டமையானது, இறுதியாக, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு இட்டுச்சென்றது. சோவியத் ஒன்றியம் துன்பியலான கதியை சந்தித்த போதும், அழிக்கவியலாத மூன்று வரலாற்று உண்மைகள் மாறிவிடவில்லை. முதலாவதாய், 1917 இன் அக்டோபர் புரட்சியானது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் மற்றும் புரட்சிகரக் கட்சியால் வழங்கப்படக் கூடிய நனவான முன்னோக்கு மற்றும் தலைமையின் இன்றியமையாமை ஆகியவை குறித்த மார்க்சிச மதிப்பீட்டை நிரூபணம் செய்தது. இரண்டாவதாய், சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டமானது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஸ்ராலினிச ஆட்சியின் அதிகாரத்துவ சீரழிவுக்கு அங்கே ஒரு புரட்சிகர மாற்று இருந்திருந்தது என்பதை விளங்கப்படுத்தியது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்ததல்ல. மூன்றாவதாய், 1914 உலகப் போருக்கும் 1917 இன் சோசலிசப் புரட்சிக்கும் வழிவகுத்த முதலாளித்துவத்தின் அடிப்படையான பொருளாதார, சமூக மற்றும் புவியரசியல் முரண்பாடுகள் இன்னும் வெற்றிகாணப்பட்டிருக்கவில்லை.

54. கடந்த நூற்றாண்டு எவ்விதமான பிரசனமுமற்று கடந்துபோய்விடவில்லை. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நனவு முடிவில்லாத போர் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தசாப்தங்களால் ஆழமாய் பாதிக்கப்பட்டிருக்கிறது. வீழ்ந்து செல்லும் வாழ்க்கைத்தரங்கள், நலன்புரி உதவிகள் மீதான தாக்குதல்கள், விரிந்து செல்லும் சமூக சமத்துவமின்மை மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போர்வையில் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் அலை உயர்ந்து செல்கிறது. தனது மிக அபாயகரமான வெளிப்பாட்டை ஏகாதிபத்திய போர் முனைப்பில் காட்டுகின்ற முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்தமான நெருக்கடி குறித்த ஒரு புரிதலை இந்தப் போராட்டங்களுக்குள் கொண்டுவருவது என்பதே இன்றியமையாத பணியாக இருக்கிறது. தனித்தனியான போராட்டங்களை ஒருமைப்படுத்தி சோசலிசப் புரட்சியின் மூலமாக ஒட்டுமொத்தமான முதலாளித்துவ சமூகப்பொருளாதார அமைப்புமுறையையும் தூக்கிவீசுவதற்கான அடித்தளத்தை அமைத்திடக் கூடிய ஒரு அரசியல் தலைமையை தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி செய்வது அவசியமானதாகும்.

55. உலகப் பொருளாதாரமும் உலக அரசியலும் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்திருக்கின்றன. கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்ட சமயத்தில் தொடங்கி சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பின் பின் உச்சம் பெற்ற முதலாளித்துவ வெற்றிக்களியாட்டத்தின் காலம் முடிந்து விட்டது. ஆளும் வர்க்கத்தின் ஒட்டுண்ணித்தனமான செல்வத்திற்கு ஆதாரமாய் இருந்திருக்கக் கூடிய ஊகவணிக சீட்டுக்கட்டுகளின் மாளிகை சரிந்து கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை மதிப்புகளின் வீழ்ச்சி என்பது வெறுமனே பங்குஅளவுகளது பணமதிப்பைக் குறைத்துக் கொண்டிருப்பதுடன் மட்டுமல்ல, முதலாளித்துவ-ஆதரவு தத்துவவாதிகள் மற்றும் அரசியல் தலைவர்களது மரியாதையையும் நம்பகத்தன்மையையும் கூட தகர்த்துக் கொண்டிருக்கிறது.

56. ஆளும் உயரடுக்கை மிரட்சிக்கும் அச்சத்திற்கும் இலக்காக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் அபிவிருத்தி காணுகின்ற அரசியல் தீவிரமயப்படலானது விரைவாக ஒரு சோசலிச நோக்குநிலையை பெற்றுக் கொண்டிருக்கிறது. சோசலிசத்தை நோக்கிய இந்த ஆரம்பகட்ட உள்ளுணர்வுரீதியான உந்துதலை அரசியல்ரீதியாய் அபிவிருத்தி கண்ட ஒரு புரட்சிகர நனவுக்கு சமப்படுத்திபார்ப்பது என்பது முற்றிலும் தவறாகிவிடும். ஆயினும் அரசியல் அபிவிருத்தியின் நிகழ்ச்சிப்போக்கு —முதலாளித்துவ அநீதிகளுக்கு எதிரான வெகுஜனக் கோபத்தின் ஆரம்பகட்ட வெளிப்பாடுகள் தொடங்கி முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து உலக சோசலிசத்தைக் கொண்டு அது இடம்பெயர்த்தப்படுவதன் அவசியத்தைப் புரிந்து கொள்வது வரை— நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

57. அரசியல் அதிருப்தியின் ஆரம்பகட்டத்தின் ஆதாயத்தைப் பெற்றிருக்கக் கூடிய கட்சிகளும் மனிதர்களும், உலக நெருக்கடி இயக்கிவைக்கக் கூடிய பாரிய சமூக சக்திகளால் அடித்துச்செல்லப்பட்டு விடுவர். சிரிசாவுக்கும் அதன் தலைவர் சிப்ராஸுக்கும் நேர்ந்த கதியே —2015 ஜனவரியில் உலகளாவ புகழப் பெற்று, ஜூலையில் வெறுக்கப் பெற்றனர்— மற்ற பல அரசியல் அரைவேக்காடுகளுக்கும் தவறாக வழிநடத்துபவர்களுக்கும் நேரும். ஆனால் செயலற்ற முறையில் காத்திருந்து, நிகழ்வுகள் துரோகிகளை அம்பலப்படுத்த அனுமதிப்பது என்பது போதுமானதல்ல. தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கின்ற கடமைகளுக்கு தோளோடு தோள் நிற்கின்ற உண்மையான புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புகின்ற பணியைக் கையிலெடுப்பது அவசியமானதாகும்.

58. இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் இலட்சிய நடவடிக்கையாக இருக்கிறது. எமது அரசியல் எதிரிகள் அனைவரும் அனைத்துலகக் குழுவை “குறுங்குழுவாதிகள்” எனக் கண்டனம் செய்கின்றனர். பல தசாப்தங்களாக இந்த அடைமொழியை மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக குட்டி-முதலாளித்துவ சந்தர்ப்பவாதிகளும் மற்றும் அத்தனை வண்ணமான அரசியல் கயவர்களும் (அதாவது, தாராளவாதிகள், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்கட்சியைச் சேர்ந்த பிழைப்புவாதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், போலி-இடதுகள், சொந்த நிழலைக் கண்டு அஞ்சுகின்ற சீர்திருத்தவாதிகள் போன்றவர்கள்) பிரயோகித்து வந்திருக்கின்றனர். சோசலிசக் கோட்பாடுகளுக்கு உறுதிப்பாடு கொண்டிருப்பதையும், ஆளும் வர்க்கத்துடன் அரசியல் கூட்டணிகளுக்குள் நுழைய மறுப்பதையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தில் சமரசமற்று இருப்பதையுமே ”குறுங்குழுவாதம்” என்று அவர்கள் உண்மையில் அர்த்தப்படுத்துகிறார்கள். இத்தகைய கண்டனங்களுக்கு ட்ரொட்ஸ்கி பரிச்சயமானவராய் இருந்தார். அவர் எழுதினார்:

நான்காம் அகிலமானது, ஏற்கனவே இன்று, ஸ்ராலினிஸ்டுகளாலும், சமூக ஜனநாயகவாதிகளாலும், முதலாளித்துவ தாராளவாதிகளாலும் மற்றும் பாசிஸ்டுகளாலும், தகுதியான விதத்தில் வெறுக்கப்படுகிறது. ... முதலாளித்துவத்தின் மேலங்கியுடன் கட்டப்பட்டிருக்கின்ற அத்தனை அரசியல் குழுவாக்கங்களுடனும் அது சமரசமில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை ஒழிப்பது அதன் கடமை. சோசலிசம் அதன் இலட்சியம். பாட்டாளி வர்க்கப் புரட்சி அதன் வழிமுறை. [முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் கடமைகளும். (இடைமருவு வேலைத்திட்டம்)]

59. இந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வின் ஒரு மிக விரிவான விவாதத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் பத்தாயிரக்கணக்கான வாசகர்கள் இதனைப் படிக்க வேண்டுமென்றும் மிகப் பரந்த மட்டத்தில் இது விநியோகிக்கப்பட போராட வேண்டும் என்றும் அழைக்கிறது. இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள கோட்பாடுகள் ஒரு புதிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக சேவை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த கோட்பாடுகளை மீண்டுமொரு முறை நாங்கள் அழுத்தம்திருத்தமாய் கூறுகிறோம்:

  • போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மிகப்பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், தனக்குப் பின்னால் மக்களின் அத்தனை முற்போக்கான கூறுகளையும் அணிதிரட்டி நிற்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும் சோசலிசத் தன்மையுடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டவும் இராணுவவாதம் மற்றும் போரின் அடிப்படைக் காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுமான போராட்டத்தின் ஊடாய் அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.
  • ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் மற்றும் குழப்பத்திற்கு இடமளிக்கா வகையிலும் சுயாதீனமானதாகவும் மற்றும் குரோதமானதாகவும் இருக்க வேண்டும்.
  • அனைத்துக்கும் மேலாய், புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் அணிதிரட்டுவதாக இருக்க வேண்டும்.

60. நடப்பு உலக நிலைமைகளில் இருந்து எழுகின்ற மாபெரும் வரலாற்றுக் கேள்விகளை பின்வருமாறு சூத்திரப்படுத்தலாம்: உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி எப்படி தீர்க்கப்படப் போகிறது? அமைப்புமுறையை உலுக்கும் முரண்பாடுகள் உலகப் போரில் முடியுமா அல்லது உலக சோசலிசப் புரட்சியிலா? எதிர்காலம் பாசிசத்திற்கும், அணுஆயுதப் போருக்கும் திரும்பவியலாமல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் சரிவதற்கும் இட்டுச் செல்லப் போகிறதா? அல்லது சர்வதேசத் தொழிலாள வர்க்கம் புரட்சியின் பாதையை கையிலெடுத்து, முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, பின் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யப் போகிறதா? இவை தான் மனித குலம் முகம்கொடுக்கும் உண்மையான மாற்றீடுகளாகும்.

61. போருக்கு எதிரான ஒரு சர்வதேச வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவசர அவசியத்தை அங்கீகரிக்கின்ற உலகெங்கிலுமான அரசியல் கட்சிகள் மற்றும் தனிமனிதர்களுடன், இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில், சகோதரத்துவரீதியான விவாதத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் பிரிவுகளும் வரவேற்கின்றன.

  • சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகப் பாடுபடுவோம்!
  • ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்!
  • சமத்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் போராடுவோம்!
  • ஏகாதிபத்திய உலகப் போருக்கான உந்துதலை உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தைக் கொண்டு தடுத்துநிறுத்துவோம்!
  • உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கை வட்டத்தை விரிவுபடுத்துவோம்!
  • தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு புதிய தலைமுறையை புரட்சிகர சோசலிச சர்வதேசியவாதத்தின் கோட்பாடுகளில் படிப்பிப்போம்!
  • நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளைக் கட்டியெழுப்புவோம்!