ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In run-up to labour law protest, French rail workers stage one-day strike

தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முன்னதாக, பிரெஞ்சு ரயில்வே தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்

By Stéphane Hugues and Alex Lantier
  28 April 2016

பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF) தொழிற்சங்கங்கள், இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிலைமைகளை தாக்குகின்ற புதிய அரசு உத்தரவாணை ஒன்றை எதிர்த்து, செவ்வாயன்று ஏப்ரல் 26 இல், ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன.

SNCF உம் மற்றும் அரசாங்கமும் இரயில்வே உத்தரவாணையின் மீது இரண்டு மாதங்களுக்கு முன்னரில் இருந்தே பேரம்பேசிய பின்னர், அந்த உத்தரவாணையின் இறுதி வடிவத்தை தொழிற்சங்கங்கள் பெப்ரவரி 23 அன்றே பெற்றிருந்தது. இதே நாளில் தான் தொழிலாள நலத்துறை அமைச்சர் மரியம் எல் கொம்ரியினது தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டது. தொழிலாளர் விதிமுறைகளை மீறி நிறுவன அளவில் ஒப்பந்தங்களை பேரம்பேசவும் மற்றும் வார வேலை நேரத்தை நீடிக்கவும் தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் எல் கொம்ரி சட்டத்திற்கு, இளைஞர் மற்றும் தொழிலாளர்களிடையே கடும் கோபம் எழுந்ததால், மாணவர் சங்கங்கள் மார்ச் மாத ஆரம்பத்தில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்டன.

எவ்வாறிருப்பினும், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை தடுக்கும் தொழிற்சங்கங்களது பரந்த மூலோபாயத்தின் பகுதியாக, இரயில்வே தொழிற்சங்கங்கள் அந்த இரயில்வே உத்தரவாணைக்கு எதிராகவோ அல்லது எல் கொம்ரி சட்டத்திற்கு எதிராகவோ தொழில்துறைசார் நடவடிக்கைக்கு அழைப்புவிடுக்கவில்லை.

அந்த இரயில்வே உத்தரவாணையின் உள்ளடக்கம் வெளியானதும், தொழிலாளர்களிடையே கோபம் அதிகரித்ததும், தொழிற்சங்கங்கள் இறுதியில் செவ்வாயன்று அடையாள ஒரு நாள் வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தன. அன்றைய நாளில் அவை எந்தவித ஆர்ப்பாட்டங்களையோ அல்லது பொது கூட்டங்களையோ ஒழுங்கமைக்கவில்லை.

அந்த உத்தரவாணையின் நோக்கம், இரயில் சேவையை தனியார்மயமாக்கலுக்கு தயாரிப்பு செய்வதும் மற்றும் SNCF க்கு எதிராக ஜேர்மனியின் Deutsche Bahn (DB) மற்றும் இத்தாலியின் Trenitalia போன்ற சேவை வழங்குனர்களுக்கு போட்டியாக பிரெஞ்சு இரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்வதும் ஆகும். இத்தகைய சேவை வழங்குனர்கள், தனியார் துறை மீதான நெறிமுறைகளின் கீழ் அவர்களது செயல்பாடுகளை நடத்துவார்கள் என்பதால், SNCF ஐ விட 18 சதவீதம் குறைவான பணியாளர்களுடன் அதே வேலையைச் செய்விப்பதற்காக அவர்கள் சுரண்டலை அதிகரிப்பார்கள் என்று எதிர்நோக்கப்படுகிறது.

பிரான்சில் உள்ள சகல இரயில் தொழிலாளர்களுக்கும் பொருந்துகின்ற இந்த இரயில்வே உத்தரவாணையின் வழிவகைகளானது, இத்தொழில்துறையில் வேலையிட நிலைமைகளை வெட்டுவதற்கு தனியார்மயமாக்கல் நிகழ்முறை பயன்படுத்தப்பட்டு வருவதை தெளிவுபடுத்துகிறது. அந்த வழிவகைகளில் உள்ளடங்குபவை:

இரயில்வே தொழிலாளர்கள் செவ்வாயன்று பிரான்ஸ் எங்கிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரயில்வே பணியாளர்களில் 70 சதவீதத்தினர் உட்பட SNCF தொழிலாளர்களில் ஐம்பது சதவீதத்தினர், வேலைநிறுத்த அழைப்பில் கவனமெடுத்தனர். அதிவிரைவு இரயில்கள் (TGV) மற்றும் பாரீஸ் புறநகர் இரயில்களில் (Transilien) அரைவாசியும் மற்றும் நகரங்களுக்கு இடையிலான இரயில்களில் மூன்றில் இரண்டு பங்கு ஓடவில்லை.

ஸ்ராலினிச தொழிற்சங்கமான தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) ஒரு புதிய அத்தியாயத்திற்கு திரும்பியதன் மூலமாக மற்றும் ஓர் இராணுவவாத தோரணை ஏற்றதன் மூலமாக எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான இளைஞர் போராட்டங்களுக்கு விடையிறுத்தது, அதன் பொது செயலாளர் Philippe Martinez கூறுகையில், நடவடிக்கை தினம் ஒரு 'பாரிய எச்சரிக்கை வேலைநிறுத்தமாகும்' என்றார். அவர் 'தொழிற்சங்க ஐக்கியத்தை' பாராட்டியதுடன், 'மே மாத மத்தியில் ஏனைய [நடவடிக்கை] நாட்கள்' இருக்குமென உறுதியளித்தார்.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை நடவடிக்கையை தடுக்க, தொழிற்சங்கங்கள் அவற்றால் ஆன மட்டும் தொடர்ந்து அனைத்தையும் செய்யும் என்பதற்கும் மற்றும் அந்த உத்தரவாணை நிறைவேற்றப்படும் தறுவாய் வரையில் அடையாள ஒருநாள் வேலைநிறுத்தங்களை தாமதிக்கும் என்பதற்கும், இந்த கடைசி தகவல் ஆளும் வர்க்கத்திற்கு Martinez வழங்கிய சமிக்ஞையாகும்.

பாரீஸ் இரயில் நிலையத்தில் ஒரு தொழிற்சங்க வேலைநிறுத்த கூட்டத்திற்கு (Assemblée générale) இரயில்வே தொழிலாளர்களால் உலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த கூட்டத்தில் வெகு சிலரே கலந்து கொண்டிருந்தனர் என்பதுடன், மிக முக்கியமாக தொழிலாளர்கள் கோபத்துடன் சண்டைக்கு தயாராக இருப்பதாக கூறிய அடிமட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் தடுக்கப்பட்டிருந்தனர், ஆனால் அவர்கள் தொழிற்சங்கங்களை நம்பவில்லை என்பதுடன், அடையாள ஒருநாள் நடவடிக்கைகள் பயன்படுமென்றும் அவர்கள் நம்பவில்லை. அவர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்ட நடவடிக்கைகளுக்கான மூலோபாயத்தை அவர்களுடன் விவாதிக்க தொழிலாளர்களின் முற்றிலும் விருப்பமின்றி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நான்காண்டுகளாக சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், சமூக உரிமைகள் மீதான முன்னொருபோதும் இல்லாத தாக்குதல்களை நடத்திய நிலையில், தொழிற்சங்கங்களோ அக்காலக்கட்டத்தில் அந்த அரசாங்கத்திற்கு எதிராக எந்த தொழில்துறை நடவடிக்கைக்கும் தொழிலாளர்களை அணிதிரட்டவில்லை, அதற்குப் பின்னர் தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான சமூக இடைவெளி பகிரங்கமானது. தொழிலாள வர்க்கத்தின் மனோபாவம் அதிகரித்தளவில் போர்குணத்துடன் இருந்தாலும், இது அடையாள தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கோ அல்லது சோசலிஸ்ட் கட்சிகளின் அரசியல் கூட்டாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற போலி இடதுகளுக்கோ அதிகரித்தளவில் ஆதரவாக மாறவில்லை.

இது எழுச்சியடைந்துவரும் அரசியல் நெருக்கடியின் புரட்சிகர குணாம்சத்தின் ஓர் அறிகுறியாகும். சமூக போராட்டம், இது வெடித்தெழும்போது, உத்தியோகபூர்வ வழிமுறைகளுக்கு வெளியே அதிகரித்தளவில் ஒரு வெடிப்பார்ந்த வடிவத்தை எடுக்கும். இத்தகைய உத்தியோகபூர்வ வழிமுறைகள் மூலமாகத்தான், பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான கடந்த புரட்சிகர அனுபவமான 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பிந்தைய காலங்களில் வர்க்க போராட்டம் நெறிப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டன.

எவ்வாறிருப்பினும் தொழிலாளர்களிடையே அதிகரித்துவரும் போர்குணமானது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அடிமட்ட படிநிலைகளில் உள்ளவர்களையும் மற்றும் வர்க்க போராட்டத்தை பாதுகாப்பான தடுப்புகளால் கட்டுப்படுத்துவதற்கான இயங்குமுறைகளை தசாப்தங்களாக மேற்பார்வையிட்டவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது. அதிக 'இடது' சார்பெடுக்கும் அதிகாரிகள் நிறைய நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க விரும்புவதுடன், அவ்வாறு செய்வதற்கான அவர்களது முயற்சிகளை தொழிற்சங்க தலைமைகள் பகிரங்கமாக அடிபணிய செய்வதால் விரக்தி அடைந்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் தொழிலாளர்கள் எதன் பாகமாக இருக்கிறார்களோ அந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனப்பட்ட போராட்டத்தில் மற்றும் சோசலிஸ்ட் கட்சி என்றழைக்கப்படுவதை சுற்றி தசாப்தங்களாக வேலை செய்துள்ள சகல கட்சிகளையும் எதிர்த்து ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே அவர்களை அணிதிரட்ட முடியும் என்ற உண்மையைக் குறித்து விவாதிப்பதை தவிர்ப்பதில் அவர்கள் தீர்மானகரமாக உள்ளனர்.

அக்கூட்டத்தில் ஒரு பராமரிப்புத்துறை தொழிலாளியும் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதியுமான சேர்ஜி உடன் உலக சோசலிச வலைத் தளம் உரையாற்றியது, அவர் தொழிற்சங்க தலைமைகள் வேலைநிறுத்தத்தின் போது தொழிலாளர்களை அணிதிரட்டுவதில்லை என்று கருதுகிறார்.

“இன்றைய வேலைநிறுத்தத்திற்கு யார் போகிறார்கள் என்பதைப் பார்க்க, நேற்று காலை நான் வேலைத்தலத்திற்கு சென்றேன், முன்மொழிவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இன்று என்ன நடக்க இருந்ததோ அதை குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. இன்றைக்குத் தான் CGT நடவடிக்கையை திட்டமிட்டிருக்கிறது என்பதே, உண்மையில் எனக்கு கூடுதல் விபரங்கள் கிடைத்த போதுதான் தெரிய வந்தது, ஆனால் இந்த நாள் தொழிலாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலைநிறுத்தம் செய்வதற்குரிய நாளாகிவிட்டது, பலருக்கு அந்நடவடிக்கை போதுமானதாக இல்லை …" என்றவர் தெரிவித்தார். இவ்விதத்தில் அவரது சக தொழிலாளர்கள், CGT போராடவில்லை என்று நினைத்திருந்தார்கள் என்பதை சலிப்புடன் சுட்டிக்காட்டினார்.

“என்னை பொறுத்த வரையில், ஒரு நாள் வேலைநிறுத்தம் என்பது குறைந்தபட்சம் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, ஒன்று கூடுவதற்கு, விவாதிப்பதற்குரிய உரியதாகும். இப்போதோ, இப்போது உண்மையில் அது ஒன்றும் செய்வதில்லை,” என்றார். “அதுவொரு வெட்கக்கேடானது, ஏனென்றால் பல தொழிலாளர்களுக்கு, இந்த ஒரு நாள் [நடவடிக்கைக்கையால்] நடைமுறையில் ஒன்றுமே கிடைப்பதில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

நவம்பர் 13 பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் போர் ஆகியவற்றிற்கு தொழிலாளர்கள் மத்தியில் கணிசமாக எதிர்ப்பு இருப்பதை செர்ஜ் சுட்டிக்காட்டியதுடன், அத்தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய போராளிகளின் வலையமைப்பு, நேட்டோ அதிகாரங்களது சிரிய போரின் "அயோக்கியத்தனமான துணை அமைப்புகளாகும்" என்று குறிப்பிட்டார்.

“இந்த போரில் பிரான்ஸ் ஆழமாக உடந்தையாய் இருந்துள்ளது, உண்மையில் பயங்கரவாதம் என்பது அங்குள்ள குழப்பத்துடன் தொடர்புபட்டது. அவர்கள், அதாவது பிரெஞ்சு அரசாங்கமும் மற்றும் ஏனைய பணக்கார அரசுகளும் அப்பிராந்தியத்தில் அதைக் கொண்டு செல்கிறார்கள். வறுமை, குழப்பம் மற்றும் போரை நாம் காண்கையில், வேறெதையும் நாம் எதிர்பார்க்க முடியாது … உலகில் நிறைய போர்கள் நடக்கின்றன மற்றும் இது இன்னமும் வல்லரசு அரசியலுடன் தொடர்புபட்டுள்ளது,” என்றவர் தெரிவித்தார்.