ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mobilize European workers to defend French strikers!

பிரெஞ்சு வேலைநிறுத்தக்காரர்களை பாதுகாக்க ஐரோப்பிய தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்!

By Alex Lantier
26 May 2016

பிரான்ஸ் எங்கிலும் கலகம் ஒடுக்கும் பொலிஸ் இன் தாக்குதல்களை எதிர்த்து, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மறியல்களுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும், துறைமுக தொழிலாளர்களின் வெளிநடப்புகளுக்கும் அத்தோடு அதிக வேலைநிறுத்த நடவடிக்கைக்கான அழைப்புகளுக்குக்கும் இடையே, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் முன்னணி படையாக எழுச்சி அடைந்து வருகிறது. இந்த இயக்கம் சர்வதேச அளவில் பரவத் தொடங்கி உள்ளது. பெல்ஜியத்தில் வேலைநிறுத்த அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. அங்கே செவ்வாயன்று 60,000 பேர் வலதுசாரி அரசாங்கத்தின் சமூக வெட்டுக்களை எதிர்க்க புரூசெல்ஸில் அணிவகுத்தனர்.

ஐரோப்பா எங்கிலும் பெருந்திரளானவர்கள் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளை நிராகரிக்கின்ற நிலையில், அக்கண்டத்தில் நடக்கும் சம்பவங்கள் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை வேகமாக வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

பாரிய எதிர்ப்புக்கு இடையிலும் தேசிய சட்டசபை மூலமாக அச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாக மற்றும் அதன் பின்னர் தொடர்ந்த போராட்டங்களை நசுக்கியதன் மூலமாக, சோசலிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் தீவிரமயப்படலை தணிக்கலாம் என நம்புகின்றது. சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட அதன் சட்டத்திற்கு எதிராக வெடித்து வரும் எதிர்ப்பின் ஆழத்தால் இப்போது அது அதிர்ச்சியடைந்துள்ளது. பிரெஞ்சு மக்களின் எழுபது சதவீதத்தினர், சோசலிஸ்ட் கட்சி தொழிலாளர் சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென விரும்புகின்றனர், மேலும் அந்த இயக்கத்தை கடுமையான ஒடுக்குமுறையைக் கொண்டு தடுப்பதற்கான அரசாங்கத்தின் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

செவ்வாயன்று புரூசெல்ஸில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் நீர் பீய்ச்சிகளை பிரயோகித்த நிலையில், சோசலிஸ்ட் கட்சி Fos-sur-Mer இன் எண்ணைய் ஆலைகளை ஆக்கிரமித்த தொழிலாளர்கள் மீது ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவதற்கும், கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர் பீய்ச்சிகளைப் பிரயோகிப்பதற்கும் நூற்றுக் கணக்கான கலகம் ஒடுக்கும் பொலிஸை அனுப்பியது. நேற்று Douchy-les-Mines இல் பொலிஸ், ஒரு எரிபொருள் கிடங்கை ஆக்கிரமித்திருந்த ஆக்கிரமிப்பை கலைத்துவிட்டது. எது எவ்வாறிருந்த போதினும், சமூக செலவினக் குறைப்பு திட்டங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அணிதிரள்வது தொடர்ந்து பரவி வருகிறது.

சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்குப் பிந்தைய இருபத்தி ஐந்தாண்டுகள், இடது கட்சிகள் என்றழைக்கப்பட்ட அனைத்தினது வலதுசாரி திருப்பத்திற்கு எரியூட்டி இருந்தன, அரசியல் நோக்குநிலை பிறழ்ந்த ஒரு நீட்சிக் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கம் எழுச்சி கண்டு வருகிறது. ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியால் 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர் நடுத்தர வர்க்க புத்திஜீவித வட்டாரங்களில் மேலாதிக்கம் செலுத்தி வந்த, ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தையும், மார்க்சிசத்தையும் மற்றும் சோசலிசத்தையும் நிராகரித்தபோக்கு, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் நெருக்கடியினதும் மற்றும் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியின் புறநிலை அபிவிருத்தியால் மறுத்துரைக்கப்பட்டு வருகிறது.

முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவிலும் உலகளாவிய நெருக்கடியிலும் வேரூன்றியுள்ள இந்த போராட்டம், 2008 நிதியியல் பொறிவால் முன்னறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, குறிப்பாக ஐரோப்பாவில், தொழிலாள வர்க்கம் பழமைவாதத்திலிருந்து சமூக ஜனநாயகம் வரையில் கிரீஸில் தீவிர இடது சிரிசா அரசாங்கம் என்றழைக்கப்படுவது வரையில் முதலாளித்துவ அரசாங்கங்களின் அனைத்து பிரிவுகளுடனும் அதனுடைய எண்ணற்ற கடுமையான அனுபவங்களைக் கண்டுள்ளது. அவற்றில் ஒவ்வொன்றும் வங்கிகளிடம் இருந்து அதன் உத்தரவாணைகளைப் பெற்று, அதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவரின் சிக்கன கொள்கைகளை இன்னும் ஆழப்படுத்தி இருந்தன.

தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த சர்வதேச தாக்குதல் ஒரு பலமான மற்றும் அதிகரித்த எதிர்வினையை தூண்டிவிட்டு வருகிறது: அமெரிக்க தொலைத்தொடர்பு துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆசிரியர்களின் வெளிநடப்புக்கள், பிரிட்டனில் மருத்துவத்துறை செலவின வெட்டுகளுக்கு எதிராக இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தம், சிரிசாவின் சிக்கன முறைமைகளுக்கு எதிரான கிரேக்க தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம், இந்தியா மற்றும் சீனாவில் அரசு மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் போன்றவற்றை உதாரணமாக கொள்ளலாம்.

நிதி மூலதனத்தின் அமைப்புரீதியிலான பிரதிநிதிகளாக விளங்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் கோரப்பட்ட "கட்டமைப்பு சீர்திருத்த" வேலைதிட்டத்தை பிரான்சில் நடைமுறைப்படுத்துவது தான் இந்த தொழிலாளர் சட்டம். இது, பேர்லின் உடன், குறிப்பாக ஜேர்மனியில் தொழிலாளர்களது கூலிகள் மற்றும் சமூக நிலைமைகளைக் குறைக்க ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் அங்கே திணிக்கப்பட்ட ஹார்ட்ஸ் சட்டங்களை எழுதியவரும், தொழிற்சங்க நடவடிக்கையாளரும், சமூக ஜனநாயகவாதியுமான பீட்டர் ஹார்ட்ஸ் உடன் நெருக்கமாக கூடி ஒத்துழைத்து இயற்றப்பட்டதாகும். மார்ச்சில் இந்த தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடங்கிய போது, இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதை விவாதிக்க ஜேர்மனி, இத்தாலி மற்றும் போர்ச்சுக்கல் இன் சமூக ஜனநாயக நிர்வாகிகள் ஒன்று கூடினர்.

பிரான்சில் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் ஒடுக்குமுறை, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும். சமூக பதட்டங்களின் அதிகரிப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு, வேகமாக சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வது தான் பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இதற்கான ஆளும் உயரடுக்கின் அடிப்படை பதிலாக உள்ளது.

கடந்த ஆண்டு பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் உடனடியாக பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அவசரகால நெருக்கடி சட்டம், எல்லா விதத்திலும் சிரியாவில் நேட்டோவின் வெளியுறவு கொள்கையினது கருவிகளாக சேவையாற்றுகின்ற இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்புகளுக்கு எதிராக நோக்கம் கொண்டதல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தை மையமாக கொண்ட உள்நாட்டு எதிர்ப்பை மையமாக கொண்டது. சோசலிஸ்ட் கட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் மற்றும் அமைதியாக போராடும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதற்கும், நீண்டகால சிறை தண்டனைகளைக் கொண்டு அச்சுறுத்துவதற்கும் அதே அவசரகால நெருக்கடி சட்ட அதிகாரங்களைப் பிரயோகித்து வருகிறது.

பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் சிக்கன திட்டத்திற்கு ஆதரவான அரசாங்கங்களை பதவியிலிருந்து இறக்க, தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர பாதையை ஏற்பதைத் தவிர அது எவ்வாறு வேறு வாய்ப்பின்றி விடப்பட்டுள்ளது என்பதையே பிரான்ஸ் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. போராட்டங்கள் பரவுகின்ற நிலையில், பிரான்ஸ் மற்றும் முழு ஐரோப்பாவும் புரட்சிக்கு முந்தைய நிலைமைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.

இந்த போராட்டத்தில் பிரெஞ்சு, பெல்ஜிய மற்றும் கிரேக்க தொழிலாளர்களின் இன்றியமையாத கூட்டாளியாக இருப்பது, ஐரோப்பா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். பிரான்சில் சோசலிஸ்ட் அரசாங்கத்தால் தொல்லை படுத்தப்படுவதற்கு எதிராக அவர்களது வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளை ஆதரிப்பதும் மற்றும் பாதுகாப்பதும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் ஓர் அடிப்படை அரசியல் பணியாகும்.

பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் போராட்டங்களைக் கவனமாக கவனித்து வரும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களுக்கு பிரெஞ்சு தொழிலாளர்கள் ஒரு பலமான அழைப்பை விடுக்கவேண்டும்.

தொழிலாளர்கள் தேசிய வழியில் அவர்களது போராட்டங்களைப் பிளவுபடுத்தும் சகல முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும். வலதுசாரி குடியரசு கட்சியினரின் பிரிவுகள் மற்றும் தீவிர வலது தேசிய முன்னணி (FN) ஆகியவற்றால் பிரான்சில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஆளும் வர்க்கத்தின் அதிக வெறி பிடித்த தேசியவாத கன்னைகள், அதிகாரத்திற்கு வருவதற்காக தொழிலாள சட்ட நெருக்கடியைச் சுரண்டும் மற்றும் ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தை உருகுலைக்கும் முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கி வருகின்றன. நேற்று தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தைத் திரும்ப பெற்று, புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென கோரினார்.

பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஐரோப்பிய ஒன்றியம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சிறைகூடமாகும் மற்றும் தேசிய பேரினவாதம், இராணுவவாதம் மற்றும் போருக்கான உற்பத்தி தளமாகவும் உள்ளது. அது தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால் பிரெஞ்சு, ஜேர்மன், பிரிட்டிஷ், கிரேக்க அல்லது வேறு எந்தவொரு பேரினவாத அடிப்படையில் தேசிய எல்லைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது என்பது பிற்போக்குத்தனமானது மட்டுமல்லாது, உழைக்கும் மக்களின் நலன்களைச் சீரழிப்பதும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரே முற்போக்கான மாற்றீடாக இருப்பது, தொழிலாளர்களது அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்காக ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களது ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலமாக ஒரு புதிய, புரட்சிகர மற்றும் சமத்துவ அடிப்படையில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவதாகும்.

தொழிலாளர்கள் இந்த அல்லது அந்த குறிப்பிட்ட பிற்போக்குத்தனமான சட்டத்தை திரும்ப பெறுவதற்கு, அல்லது சிக்கன திட்டத்திற்கு ஆதரவான இந்த அல்லது அந்த அரசாங்கத்தை பிரதியீடு செய்வதற்கு கோருவதற்காக அவர்களது இயக்கத்தை தொழிலாளர்கள் மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துதல் என்பது ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் சோசலிசத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் ஆளும் உயரடுக்கின் பிரதிநிதிகளிடம் இருந்து சுயாதீனமான போராட்ட அங்கங்களை உருவாக்குவது உட்பட, இதற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு விரிவான அரசியல் மற்றும் மூலோபாய நிலைநோக்கு மாற்றம் அவசியப்படுகிறது.

அனைத்திற்கும் மேலாக, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் முன்னோக்கை முன்னெடுக்க, ஐரோப்பா எங்கிலுமான நாடுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய மார்க்சிச தலைமையைக் கட்டியெழுப்புவது இதற்கு அவசியமாகும்.